PDA

View Full Version : சிங்கப்பூரில் உரிமையற்று தவிக்கும் பணிப



AJeevan
07-12-2005, 05:34 PM
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை உரிமை கூட இல்லை
http://newsimg.bbc.co.uk/media/images/41092000/jpg/_41092308_maidsap203index.jpg
வீட்டுப் பணிப் பெண்கள்

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் வெளி நாட்டுப் பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளைக்கூட உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு தவறுவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் , மனித உரிமைகள் கண்காணிப்பு, ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச், என்ற அமைப்பு கூறுகிறது.

வெளிநாட்டுப்பெண்கள் , தாக்கப்படுவது, நிர்ப்பந்தமாக தடுத்துவைக்கப்படுவது, அடிக்கடி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்றவை நடப்பதாக இந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறுகிறது.

இந்த துஷ்பிரயோகங்கள், சிங்கப்பூரின் சட்டதிட்டங்களின் படி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் தொழில் சட்டத்திலிருந்து விலக்கிவைக்கப்படுவதாலேயே நடக்கிறது என்று இந்த அறிக்கை கூறியது.

இந்த மாதிரி குற்றங்கள் இழைப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு கடுமையான தண்டனை அளிக்கிறது ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் தரப்படவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

-BBC தமிழ்

அறிஞர்
08-12-2005, 02:27 AM
இது மாதிரியாக பல நாடுகளில் நடக்கிறது அன்பரே.....

குறிப்பாக பெண்கள் வெளிநாடுகளில் பாலியியல் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்..

இந்நிலை மாறவேண்டும்.....