PDA

View Full Version : சின்ன சின்ன ஆசைகள்



ilanthirayan
07-12-2005, 01:16 PM
அலை சுமக்கும்
நுரைப் பூப்போல
மனம் மிதந்து
சிரிக்கும் வரம் வேண்டும்

தலை தடவும்
தென்றல் போல
துயர் படரும்
மனம் தடவித்
தேற்றும் தரம் வேண்டும்

பட்டினிப் பானைதனை
பந்திச் சந்தையில்
போட்டுடைத்துப்
பசியாற்றும் மனம் வேண்டும்

அசைந்தாடும் தென்றலின்
கொண்டையில் பூச்சூடி
வாழ்க்கையின் விளக்கம்
வழிசொல்லும் நிலை வேண்டும்

அல்லா யேசு புத்தன் ஈசன்
அருகிருந்து தவம் செய்யும்
அருங்காட்சி நான் காணும்
நாளொன்று வர வேண்டும்

இளசு
09-12-2005, 07:27 AM
பாரமில்லா மனம்
பாரம் பகிரும் குணம்
பசிக்கே பந்தி
தென்றலுக்கே பூ
சமயங்களின் சங்கமம்..


சின்ன சின்ன ஆசைகள்????

அப்போ

உங்கள் பெரிய ஆசைகள் எப்படி?

அப்பாடி!!!!


அசத்தல் இளந்திரையன்..


பாராட்டுகள்.... பெரிய கனவு(கள்) மெய்ப்படட்டும்..

aren
09-12-2005, 09:24 AM
அழகான கவிதை. இதுதான் ஒவ்வொருவரும் மாபெரும் கனவு. உங்கள் ஆசைகள் பூர்த்தியாகட்டும்.

kavinila
09-12-2005, 01:10 PM
அல்லா யேசு புத்தன் ஈசன்
அருகிருந்து தவம் செய்யும்
அருங்காட்சி நான் காணும்
நாளொன்று வர வேண்டும்

ilanthirayan
09-12-2005, 10:53 PM
[QUOTE=ilasu]சின்ன சின்ன ஆசைகள்????

அப்போ

உங்கள் பெரிய ஆசைகள் எப்படி?


பூமிப் பந்து - ஒரு
புத்தகமாக வேண்டும்
வருவோருக்கெல்லாம்
(வெளியிலிருந்து)

பாடப்புத்தகமாக அல்ல - ஒரு
வேதப் புத்தகமாக ....

( உங்கள் அனைவரின் கருத்துகளிற்கும் நன்றிகள் )

பாரதி
11-12-2005, 01:50 PM
கவிதை நன்றாக இருக்கிறது இளந்திரையன். தொடர்ந்து தாருங்கள்.