PDA

View Full Version : சென்னை-தீவு



அறிஞர்
06-12-2005, 02:22 AM
சென்னையை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. சமீப காலத்தில் பெய்த பலத்த மழை இது தான் என நினைக்கிறேன்.

குளம், ஏரிகள் வீடானது. இன்று அனைத்தும் மிதக்கிறது.

சென்னையின் கூவத்தில் இது வரை காணாத தண்ணீர். மதுராவயல், போரூர் தண்ணீர் திருப்பிவிடப்பட்டு... தண்ணீர் வெள்ளம். கூவத்தை ஒட்டியுள்ள வீடுகளில் தண்ணீர் கீழ்தளத்தை ஆக்கிரமித்தது.

ஐ.டி. நகரம் வரப்போகிறது என பள்ளிக்கரனை, தெற்கு வேளச்சேரி, கிழக்கு தாம்பிரத்தில் உள்ள பிளாட் விலைகளை 5 வருடத்தில் 10 மடங்கு அதிகமாக்கி விற்றனர். ஆனால் இன்று 40 நாட்களாக தண்ணீர் தீவாக உள்ளது அந்த பகுதி.

இந்த நிலையில் பில் கேட்ஸ் 9ந்தேதி சென்னை வருகிறார். நிலைமையை பாருங்கள்....

அரசியல்வாதிகள் உருப்படியாக டிரைனேஜ் அமைக்காதவரையில் சென்னையில் தொழில் பெருகுவது சந்தேகமே.

aren
06-12-2005, 03:21 AM
நான் சமீபத்தில் சென்னை சென்ற பொழுது கண்கூடாக இதைக் கண்டேன். ஐடி கம்பெனிகள் அத்தனையும் சென்னையை நோக்கி படையெடுக்கினறன. ஆனால் இந்த் மாதிரி மழை காலங்களில் ஏற்படும் நிலமையை கொஞ்சம் அரசாங்கம் கவனித்தால்தான் பிற்காலத்தில் வளர்ச்சி கிடைக்கும். இல்லையேல் வந்தவர்களும் சென்னையைவிட்டு ஓடிவிடுவார்கள்.

அறிஞர்
06-12-2005, 04:48 AM
நான் சமீபத்தில் சென்னை சென்ற பொழுது கண்கூடாக இதைக் கண்டேன். ஐடி கம்பெனிகள் அத்தனையும் சென்னையை நோக்கி படையெடுக்கினறன. ஆனால் இந்த் மாதிரி மழை காலங்களில் ஏற்படும் நிலமையை கொஞ்சம் அரசாங்கம் கவனித்தால்தான் பிற்காலத்தில் வளர்ச்சி கிடைக்கும். இல்லையேல் வந்தவர்களும் சென்னையைவிட்டு ஓடிவிடுவார்கள்.தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.... குறிப்பாக தெற்கு வேளச்சேரி, கிழக்கு தாம்பரம், பழைய மகாபலிபுரம் சாலை....