PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
05-12-2005, 03:24 PM
பூமியும் நீயும்
ஒன்று தான்.
விலக நினைக்கும் போதெல்லாம்,
உன்னை நோக்கியே
இழுக்கிறாய்.
------------------------------
கோவில்களுக்கு செல்லும் போது
ஓரிடத்தில் கூட
நின்று விடாதே,
நீயும் ஒரு சிலை என்று
எல்லோரும்
வணங்க போகிறார்கள்.
------------------------------
இன்றாவது வெளியில் வராதே.
தினமும் நீ
அதிகம் வேலை கொடுப்பதாக
இறைவனிடம்
அழுகிறது
உன் வீட்டு திருச்டி பொம்மை.
------------------------------
சோசியக்காரனிடம் கேட்டேன்
என் ஆயுள் எவ்வளவு என்று.
எங்கே உன் ஆயுள் ரேகை என்று
அதிர்ச்சியுடன் கேட்டான்.
அப்பொதுதான் உரைத்தது,
அது
உன் கையிலல்லவா ஓடிக் கொண்டிருக்கிறது.
-----------------------------------------
இதய மாற்று
கடினம் என்கிறது
இம் மானுடம்.
இவர்களுக்குத் தெரியுமா பெண்ணே,
நம் இதயம்
எப்போதே மாறிப் போனதென்று.
----------------------------------------
பெண்ணே,
கடற்கரையில் ஏன் கால் பதித்தாய்,
உன் நினைவுகளையே
மீண்டும் மீண்டும் தேடும்
என் உள்ளம் போல்
உன் பாதம் தேடி
கரை வருகின்றன அலைகள்
ஓய்வில்லாமல்.
-----------------------------------------

பென்ஸ்
05-12-2005, 03:27 PM
மிஸ்டர் பாரதபிரியன்....

நீங்களா உங்களை பற்றி ஒரு அறிமுகம் கொடுங்கள்.. இல்லைனா, நான் உங்களை பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டி வரும்:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

bharathappriyan
05-12-2005, 03:42 PM
நண்பா,
என்னை பற்றி சொல்ல என்ன இருக்கிறது.
நீயே சொல் உனக்கு தெரிந்தவற்றை.

பென்ஸ்
05-12-2005, 03:57 PM
மன்ற நண்பர்களே... பாரதபிரியன் என்னுடைய பொறியியல் கல்லூரி நண்பன்... சிலகாலம் அறை தோழன்.. என் அருமை உயிர் நண்பன்... :) :)

பெயர் செல்வராஜு, செல்வா என்று அழைப்போம்...
மன்றத்திக்கு பாரதபிரியன்...
வாழ்க்கையில் விவேகானந்தர் பிரியன்...
கண்ணாம்மூச்சி விளையாடும் போது கூட இவன் பின்னால் பதுங்க முடியாது.. பொய் சொல்லாததால் காட்டிகொடுத்துவிடுவான்... :D :D

சேலத்து மண்.. சென்னையில் வாசம்...
பொறியியல் தொழில்..
ஜோக் சொல்லுவதர்க்கு முன்னாலேயே சிரித்தது போல் இருக்கும் முகம்... :D :D
காதல் கவிதைகள் அதிகம் எழுதுவார்... (இது அப்புறமா சொல்லுறேன்...):p :p :D :D :D

நான் இவர் கவிதைகளை திருடி கொன்டு போயி கல்லூரி பெண்களிடம் சொல்லி "வாவ் வாவ்... பென்ஞ்.. கலக்குறிங்க" என்று பாராட்டு வாங்கி இருக்கிறேன்பா... :rolleyes: :rolleyes: :rolleyes:

பின்ன.. இவ்வளவு நல்ல கவிதைகள் மக்களை சென்று அடையாவிட்டால் தமிழுக்கு இழுக்கு அல்லவா????:D :D :D

pradeepkt
06-12-2005, 03:58 AM
பாரதப் பிரியன்,
பெரிய தில்லாலங்கடியா இருப்பீங்க போல...
ஆனாலும் பென்ஸோட நண்பர் அப்படிங்கறதாலயே நாங்க உங்களைத் தப்பா நினைச்சிருவோமின்னு பயந்துட்டீங்க இல்ல...
கவலைப் படாம உங்க கவிதைகளை அரங்கேற்றுங்க
:D

gragavan
06-12-2005, 04:12 AM
வாங்க பாரதப் பிரியன். நலமா? உங்களை இந்த மன்றத்துக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி.

பெஞ்சமீன் ஒங்களப் பத்தி ரொம்பவே ஒயர்வா சொல்லீருக்காரு. ஆகையால வந்து கலக்குங்க.

பென்ஸ்
06-12-2005, 07:54 AM
பூமியும் நீயும்
ஒன்று தான்.
விலக நினைக்கும் போதெல்லாம்,
உன்னை நோக்கியே
இழுக்கிறாய்.

அந்த புவியீப்பு தான்யா காதல்...
கடைசியில் அவளுள்ளே உன்னை அடக்கியும் விடுவாள், ஆறடியில்...


இதய மாற்று
கடினம் என்கிறது
இம் மானுடம்.
இவர்களுக்குத் தெரியுமா பெண்ணே,
நம் இதயம்
எப்போதே மாறிப் போனதென்று.

ம்ம்ம்ம்... அப்பிடியே கிட்னியையும் மாத்திட வேன்டியதுதானே...


பெண்ணே,
கடற்கரையில் ஏன் கால் பதித்தாய்,
உன் நினைவுகளையே
மீண்டும் மீண்டும் தேடும்
என் உள்ளம் போல்
உன் பாதம் தேடி
கரை வருகின்றன அலைகள்
ஓய்வில்லாமல்.


சூப்பர்பா...
நோ கம்மென்ட்ஸ்

இளசு
07-12-2005, 06:18 AM
அடடா, பாரதப்ரியன் பென்ஞ்சோட நண்பரா?

வாங்க வாங்க நண்பரே

உள்ளங்கவர் கள்வனின் நண்பர் - அப்ப நீங்க கூட்டுக்களவாணி.

காதல் கவிதைக்குரிய நெஞ்சத்தை ( நெஞ்சங்களை?) ஒருபக்கம் அங்கே களவாடி..

இரசிக்க வரும் எங்கள் மனதை மன்றத்தில் களவாடி..

கூட்டுக்களவாணிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்.

இன்னும் கூட்டிவாருங்கள்.. கள்வர்களை..கள்வர்களின் (காதலி)காதல் கவிதைகளை....

பாரதி
11-12-2005, 02:19 PM
சின்ன சின்ன கவிதைகளால் எங்களின் பிரியத்திற்குரியவரான அன்பிற்குரிய செல்வா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அன்பு நண்பரே, எந்தத்தயக்கமும் இன்றி, மன்ற விதிகளுக்கு உட்பட்டு உங்கள் கவிதைகளை மன்றத்தில் அரங்கேற்றுங்கள். உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்கிறது. ஆவலுடன் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நண்பரே.