PDA

View Full Version : பெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இரgragavan
05-12-2005, 07:50 AM
பெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்கு......

இது நடந்து ஆறு வருஷம் இருக்கும். இப்ப நெனச்சாலும் கொஞ்சம் திக்கு இருக்கும்.

ஒரு பிரச்சனை. பெங்களூர் சிட்டி பஸ் டிரைவர் ஒருத்தன ஏத்திக் கொன்னுட்டான். விபத்துதான். அதுக்கு அந்த டிரைவருக்கு கோர்ட் தண்டனை கொடுத்திருச்சு. அத எதுத்துதான் போராட்டம். எல்லா பஸ் டிரைவர்களும் கண்டெக்டர்களும்.

எந்த பஸ்சும் ஓடல. எல்லாம் அப்படியே நிக்குது. அப்போ ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரனும். சிவாஜி நகர் பஸ்டாண்ட் வரைக்கும் நடந்து வந்தாச்சு. அங்கயிருந்து சஞ்ஜய நகருக்குப் பஸ் பிடிக்கனும். ஆனா பஸ் இல்லை. ஒரே கூட்டம். கொஞ்ச நேரங்கழிச்சி பஸ் கிளம்புமுன்னு பெருங் கூட்டம் காத்திருக்குது.

ஆட்டோக்கள்ல ஏறிப் போறவங்க போய்க்கிட்டே இருக்காங்க. கையில இருந்தது கொஞ்சப் பணம்தான். மீட்டர் போட்டுப் போனா போயிறலாம். ஆனா யாருமே அன்னைக்கு மீட்டர் போட மாட்டேங்குறாங்க. அதுனால ரெண்டு மூனு பேரு சேந்து ஆட்டோல போறாங்க.

ஒவ்வொரு ஆட்டோக்காரனும் ஏரியா பேரச் சொல்லிக் கத்துறான். ஆனா சஞ்ஜய நகருக்கு எவனும் கத்த மாட்டேங்குறான். எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு சஞ்ஜய நகரு போகனுமுன்னு சொன்னேன். டிரைவரு முடியாதுன்னு சொல்லீட்டாரு. கங்கா நகர் வரைக்கும் போனா அங்கிருந்து நடந்துரலாமுன்னு கங்கா நகருக்குக் கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா குடுக்கனுமுன்னு சொன்னாரு. அதுக்கு நானும் ஒத்துக்கிட்டேன்.

வண்டி என்னைய ஏத்திக்கிட்டு கொஞ்சம் முன்னாடி போச்சு. அப்ப இன்னொருத்தன் வண்டிய நிறுத்தி சுல்தான்பாளையான்னு கேக்குறான். போறவழிதான். ஆனா கொஞ்சம் விலகனும். ஆட்டோ டிரைவர் ஒத்துக்கிட்டு அவனையும் ஏத்தியாச்சு.

ஏறுனதுக்குப் பெறகுதான் தெரிஞ்சது அவன் தண்ணி போட்டிருக்குற விஷயமே. அப்பவே எனக்குக் கொஞ்சம் பயம். ஒருவேளை ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்ட ஆளுங்களோன்னு. அடிச்சுப் போட்டுட்டா? கடத்தீட்டுப் போயிட்டா! எதுக்கு வம்புன்னு நான் பேசாம வெளிய பாத்துக்கிட்டு வந்தேன். மழை வேற தூறிக்கிட்டேயிருந்தது.

பக்கத்துல உக்காந்திருந்தவன் பேச்சத் தொடங்கினான். கன்னடத்துலதான். கர்நாடகா போனதுமே வெளியில கன்னடம் பேசனுமுன்னு முடிவு செஞ்சி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டிருந்தேன். அதுனால அரைகொற கன்னடத்தில் நானும் ரெண்டொரு பேச்சு பேசினேன்.

ஆட்டோக்காரர் ஒரு இஸ்லாமியர். ஏறுனவன் குடிவெறியில தாறுமாறா அவரப் பேசுறான். மொதல்ல ஒருத்தர தாறுமாறா பேசுறதே பிடிக்காது. அதுல இப்படி ஒரு பேச்சு தேவையா.

"பாயினு மூச்சுகொண்டு சும்னே பன்னீ"ன்னு சொன்னேன். (வாய வெச்சுக்கிட்டு சும்மா வாங்க)

"ஹே! ஏனு மாடு பிடுத்தானே? பாம் ஹாக்தானா! நாவு சும்னே இரல்லா. கொத்தா?" (ஹே! என்ன செஞ்சிருவான்? குண்டு போடுவானா? நாங்க சும்மா இருக்க மாட்டோம். தெரியுமா?)

நா முடிவே பண்ணீட்டேன். வீட்டுக்கு ஒழுங்கா முழுசா போய்ச் சேந்தா போதுமுன்னு. அதுலயும் வழியில இருக்குற ஆர்.டீ.நகரும், அந்த ஆள் போக வேண்டிய சுல்தான் பாளையாவும் இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் இடங்கள். இவன் எக்கச்சக்கமா பேசி ஏதாவது ஒரு பிரச்சனையானா என்ன பண்றதுன்னு பயந்துகிட்டு இருந்தேன். ஏன்னா! கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கிரிக்கட் விவகாரத்துல இந்து-முஸ்லீம் பிரச்சனையாயிருச்சு. அந்த ஏரியா வழியாத்தான இப்பப் போகனும்.

ஆனா அந்த ஆட்டோ டிரைவர் பொறுமையா வந்தாரு. நான் பேசாம இருந்தேன். கொஞ்ச நேரங் கழிச்சு பேச்ச எங்கிட்ட திருப்புனான் அந்த குடிகாரன்.

"நீவு யாவூரு சார்? தெலுகா?" (நீங்க எந்த ஊரு சார்? தெலுங்கா?) என்னையப் பாத்து தெலுங்கான்னு கேட்ட மொத ஆளு இவந்தான். என்னையப் பாத்ததுமே டிபிக்கல் தமிழியன்னு எல்லாரும் சொல்லீருவாங்க. நெத்தீல எழுதியிருக்கும் போல.

அந்தக் குடிகாரன் கேட்டதும் தமிழ்நாடுன்னு துணிச்சலா சொல்லீருப்பேன்னு நெனைக்கிறீங்க? ஏற்கனவே காவிரி பிரச்சனை. அதுல இப்படி ஒரு ஆளு. நானும் ஊருக்குப் புதுசு. ஒரு பயந்தான். பொய்யச் சொன்னேன்.

"நாவு பெளகாமு." (எனக்கு பெளகாம்.)

"ஒள்ளேதாயுத்து சார். ஈக எல்லாக்கடேயிந்தனும் பர்த்தாரே. அதுக்கே கேளிதே!" (நல்லதாச்சு சார். இப்ப எல்லாப் பக்கத்துலயிருந்தும் வர்ராங்க. அதுக்குதான் கேட்டேன்.)

எப்படியோ ஒரு அஞ்சு நிமிசம் பொழுத ஓட்டுனேன். அதுக்குள்ள சுல்தான் பாளையா வந்துருச்சு. ஆட்டோவ விட்டு எறங்குன குடிகாரன் டாடா சொல்லீட்டு போய்க்கிட்டேயிருக்கான். ஆட்டோ டிரைவர் எறங்கி அவனப் பிடிச்சுக் காசு கேக்குறாரு. அவன் நடுரோட்டுல நின்னுகிட்டு கத்துறான். அவனோட ஏரியான்னு சொல்லி மெரட்டுறான்.

நான் ஒடுங்கிப் போயிருந்தேங்குறது உண்மைதான். பைய மடியில வெச்சுக்கிட்டு கம்முன்னு உக்காந்திருந்தேன். இறங்கிப் போயிறலாமுன்னும் நெனச்சேன். ஆனா முடியலை. ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கனுமே.

குடிகாரங் கிட்ட என்ன நியாயம் எதிர் பார்க்க முடியும். ஆட்டோ டிரைவர் வெறுத்துப் போய் வந்தாரு. அவன திட்டிக்கிட்டே ஆட்டோவ ஓட்டுனாரு. நான் கங்கா நகருல எறங்கிக்கிட்டு பேசுன காசக் குடுத்துட்டு நடந்தே வீடு வந்து சேந்தேன்.

இப்ப இத்தன வருசம் இங்க இருந்தப்புறம் துணிச்சலும் இருக்கு. கன்னடப் பழக்கமும் நல்லாயிருக்கு. ஆனா அந்த சமயத்துல புதுசா அப்படி ஒரு அனுபவம். இன்னைக்கு நெனச்சாலும்....சும்மா திக்குன்னு இருக்கு......

இப்ப நான் கேக்க வர்ரது என்னன்னா? நான் செஞ்சது சரியா? நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவ்வளவுதான் கேள்வி. விடைகள அள்ளி வீசுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
05-12-2005, 08:09 AM
ஆஹா.......... அனுபவிச்சு எழுதியிருக்கே.. என்னே சுகமான அனுபவம்...ஹிஹி.....:D :D

gragavan
05-12-2005, 08:36 AM
ஆஹா.......... அனுபவிச்சு எழுதியிருக்கே.. என்னே சுகமான அனுபவம்...ஹிஹி.....:D :Dஎன்னது சுகமான அனுபவமா? சொல்லுவய்யா சொல்லுவ..........

poo
05-12-2005, 08:44 AM
உங்களுக்கு இப்படி அடிக்கடி அனுபவங்கள் ஏற்பட்டா நல்லதுதான்போல.. கன்னடம் கத்துக்க முடியுதே!!

pradeepkt
05-12-2005, 08:52 AM
ஆமாய்யா...
முதல்ல உங்க கேள்விக்குப் பதிலு. முடிஞ்ச அளவு ஊமையா நடிச்சிருப்பேன்... ஏன்னா எனக்கு ஏற்பட்ட சின்னச் சின்ன அனுபவங்களால எப்பவுமே என் பேரு அட்ரஸைக் கன்னடத்தில எழுதி வச்சிக்கிற பழக்கம் எனக்கு உண்டு. அதைக் காட்டீருப்பேன் :D

எனக்கு "சும்மா திக்குனு இருக்கு" அனுபவங்கள் இருக்கு.
நானும் முதல் முறையா பெங்களூரு போனவுடனேயே கன்னடம் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். முக்கியமா எழுதப் படிக்க!
போயி ஒரு வருஷத்துக்குப் பொறவு ஒரு நாள் காலையில ஆபீசுக்குப் போனா ஒரே அல்லோலகோலம்... வீரப்பரு கன்னடக் கண்மணி :D ராசுக்குமாரை நோகாமக் கடத்தீட்டாரு... என்னடா எழவு, நான் வர வரைக்கும் ஒண்ணும் தெரியலையேன்னு திக்குனு ஆயிப் போச்சு... அதிலயும் பைக்கு வாங்கி 2 மாசம்தான் ஆயிருந்துச்சு. என் சம்பாத்தியத்தில மொத மொத பைக்கு... சரி எப்படியாச்சும் போயிருவோமின்னு தெரிஞ்ச சந்து பொந்தெல்லாம் தாண்டி அல்சூருக்கு வந்தேன். அங்க தமிழ் மக்கள் அதிகமின்னு தெரியும்.

ஆனால் விதிதான் ரெக்கார்டு டான்ஸ் ஆடுமே நம்மளக் கண்டா! அல்சூரு வாசல்லயே நிக்கிறாய்ங்க திமுதிமுன்னு டயருகளை எரிச்சிக்கிட்டு. நான் அப்பத்தான் என் ரூம் மேட்டு அஷோக்கை அல்சூரு மெயின் ரோடு ஆபீசுல இருந்துக் கூட்டிட்டுப் போறேன். அவன் கொஞ்சம் ஷோக்காளி... தமிழர் பெருமைகளைப் பாடிக்கிட்டே வரான். அவனுக்குக் கன்னடம் வேற தெரியாது. நான் அவன்கிட்ட வாய மூடச் சொல்றேன். நானே புது வண்டியக் காப்பாத்தப் படாதபாடு பட்டிட்டு இருக்கேன்... முன்னாடி ஒரு தமிழ்நாடு பதிவு மாருதி (800ஆ அல்ல வேறெதாவதான்னு கண்டுபுடிக்க முடியலை) எலும்புக் கூடா இருக்கு... அந்த டயரைத்தான் பெருங்குடி மக்கள் எரிச்சிட்டு இருக்காங்க.

ஒருத்தன் நேரா என்கிட்ட வந்தான்... "யாவூருலே நீனு?", நான் பே பேங்குறேன்... சட்டுனு ஒரு போர்டைக் காட்டினான். "ஏனு பரேத்தாயிதே அல்லி!" ஆண்டவா! அது ஒரு அரசாங்க வெளம்பரம், வீட்டுக்கு மூணு பேரு போதுமுன்னு! படிச்சிக் காமிச்சேன். அதில ரெண்டொரு வார்த்தைய எழுதச் சொன்னான்... அதுக்குள்ள அவன் சேக்காளிக ரெண்டு பேரு கட்டைய வச்சு லேசா என் பைக்கைத் தட்டிப் பாக்குறாய்ங்க! வேக வேகமா பையில இருந்த விசிட்டிங் கார்டுக்குப் பின்னால எழுதிக் காட்டுறேன்... கப்புனு ஒரு கர்நாடகக் கொடிய (இந்தியத் திருநாட்டில் மாநிலத்துக்குன்னு கேப்டன் கட்சிக் கொடி மாதிரி ஒரு கலரில தனிக்கொடி இங்க மட்டும்தான்யா) என் பைக்குல கட்டிப் போவச் சொல்றான்.

நான் அஷோக்குகிட்ட பத்திரமா இருக்கேல்லன்னு சந்திரமுகி வடிவேலு மாதிரி கேட்டுக்கிட்டே வந்து ஒரு கிலோமீட்டர் கழிச்சுத் திரும்பிப் பாத்தா அவனைக் காணோம். அலறி அடிச்சுத் திரும்பி வந்தா இங்க அவன் டயரை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கான்யா பல்லைக் காட்டிக்கிட்டே... இருந்த ஆத்திரத்தை வச்சி விட்டேன் ஒரு அறை!

அப்புறம் வீட்டுக்கு வந்து சமாதானப் படுத்தி அடுத்த ரெண்டு நாளைக்கு வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடந்து படாத பாடு பட்டது வேற கதை!

உங்க திக்குனு இருக்கு அதை நினைவு படுத்திருச்சு ராகவா!

மதி
05-12-2005, 08:58 AM
ஆஹா...! இப்படி எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா????
எனக்கு கன்னடம் கொஞ்சம் புரியும்..
சுத்தமா எழுதப் படிக்கத் தெரியாது.....

பயமுறுத்தரீயளே.....!

பென்ஸ்
05-12-2005, 09:06 AM
பயப்படாதே தோழ எனக்கும் கன்னடம் தெரியாது... :p :p :p ம்ம்ம் 5 வருஷம் இருந்து "ஊட்ட ஆயித்தா?" மட்டும் தெரியும்...:D :D :D வேற ஒன்னும் தெரியாது... :rolleyes: :rolleyes:

என்ன ஒருத்தன் ரெண்டு பேர இருந்த பைட்டு(fight) இல்லைன பிளைட்டு(flight).... அப்பிடிதானே கம்னகள்ளீயில் இருந்து லிங்கராஜபுரம் வரை ஓடினேன்... எதுக்கு அது எல்லாம் நியாபக படுத்திட்டு...:angry: :angry: :angry:

மதி
05-12-2005, 09:10 AM
பயப்படாதே தோழ எனக்கும் கன்னடம் தெரியாது... :p :p :p ம்ம்ம் 5 வருஷம் இருந்து "ஊட்ட ஆயித்தா?" மட்டும் தெரியும்...:D :D :D வேற ஒன்னும் தெரியாது... :rolleyes: :rolleyes:

என்ன ஒருத்தன் ரெண்டு பேர இருந்த பைட்டு(fight) இல்லைன பிளைட்டு(flight).... அப்பிடிதானே கம்னகள்ளீயில் இருந்து லிங்கராஜபுரம் வரை ஓடினேன்... எதுக்கு அது எல்லாம் நியாபக படுத்திட்டு...:angry: :angry: :angry:
இது வேறேயா?
உம்ம அனுபவம் என்னவோய்....!

ஹ்ம்ம்ம்ம் சரி..நானாவது வந்து 1.5 வருசம் தான் ஆகுது..
நானே தேவல போலருக்கே...!

எனக்கும் company குடுக்க ஒரு ஆள்..
நன்றி பென்ஸ்..

gragavan
05-12-2005, 09:15 AM
ஆகா பிரதீப்பு.........ராசுக்குமார கடத்துனப்போ அங்கதான் இருந்தீகளா? அந்த சமயத்துல நான் பெல்ஜியத்துல இருந்தேன். திடீருன்னு பாத்தா காலைல நியூசு. வீரப்பன் ராசுக்குமார கடத்தீட்டான்னு ஏற்கனவே எறந்து போயிருந்த ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ஃபோட்டாவப் போட்டிருந்தாங்க. நாந் திரும்பி வர்ரதுக்குள்ள பிரச்சன தீந்ததுன்னு வெச்சுக்கோங்களேன்.

பென்ஸ்
05-12-2005, 09:15 AM
கம்பெனி கொடுத்ததால் வந்த வினை தானே அது... பின்ன எப்பிடி ஓய்.... ம்ம்ம் அப்புறம சொல்லுறேன்...

gragavan
05-12-2005, 09:17 AM
கன்னடா தெரிஞ்சுக்கிறது கர்நாடகாவில் இருக்குறவங்களுக்கு நல்லது.

இவ்வளவு பேசுறோம். தமிழ் கொஞ்சம் கூடத் தெரியாம யாராவது தமிழ் நாட்டுல குப்ப கொட்ட முடியுமா?

pradeepkt
05-12-2005, 09:21 AM
எப்புறம் சொல்றீரு...
நாங்கல்லாம் அடிவாங்கினத மறைக்காம சொல்லிப்புட்டோமில்ல?
ஆனா இதே மாதிரி ஒரு தடவை ஜெயலலிதா திடீருன்னு உண்ணாவிரதம் இருந்தாப்புல...
அப்ப நாங்க எங்க அப்பா கூட வேலை பாக்குறவுகளோட குடும்பமும் குஞ்சும் குளுவானுமா மேட்டூருக்குப் போயிருந்தோம்.
திரும்பி வர வழியில அந்த ரத்தத்தின் ரத்தங்கள் செஞ்ச கூத்து.... யப்பா ராஜ்குமார் கடத்தல் எல்லாம் ஜுஜுபி! சேலம் அவுட்டரில் இருந்து துவாக்குடி, திருச்சிக்கு வந்து சேரும் வரை அத்தனை பேருக்கும் பி. பி.
தமிழ் நாட்டிலேயே நடந்த இந்தக் கூத்தும் எனக்கு தமிழ்நாட்டு அரசியல் மீது இன்னும் வெறுப்பு வரக் காரணம்!

பென்ஸ்
05-12-2005, 09:22 AM
இருக்கலாம் ராகவன்... ஆனால் பெங்களுரை ஒரு Cosmopolitan சிட்டி என்று சொல்லி விட்டு இப்படி காட்டுமிரான்டிதனம் காட்டுவது சரி இல்லை அல்லவா...

gragavan
05-12-2005, 09:53 AM
இருக்கலாம் ராகவன்... ஆனால் பெங்களுரை ஒரு Cosmopolitan சிட்டி என்று சொல்லி விட்டு இப்படி காட்டுமிரான்டிதனம் காட்டுவது சரி இல்லை அல்லவா...காஸ்மோபாலிட்டன் சிட்டியென்று யார் சொல்கின்றார்கள்? அளவிற்கு அதிகமான வெளியாட்கள் வருவதால் பெங்களூரின் பண்பாடே மாறிவிட்டது என்று நினைப்பவர்களும் இருக்கின்றார்கள்.

நமக்கும் எது எப்படிப் போனாலும் தமிழ்ப் பண்பாடு முக்கியமில்லையா. சுருங்கச் சொன்னா வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த விஷயத்துல வந்தாரை வாழ வைக்கும் தமிழகமும் கஸ்தூரி கன்னடமும் ஒன்னுதான்.

poo
05-12-2005, 10:15 AM
படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்தியனாக வெட்கப்பட வேண்டியிருக்கிறது!!

ilanthirayan
05-12-2005, 11:48 PM
படிக்க ஜோராகீது...ஆனா...,
அவ அவன் அண்டவெளி எல்லாம் போய்க்கினு இருக்கான்...
நாம அடுத்த ஸ்டேட்டு போரதுக்கே என்னா பாடு படுரோம்... அடிப்படையிலேயே ஏதோ கோளாறுப்பா....