PDA

View Full Version : நான் புதியவன்



ilanthirayan
03-12-2005, 08:25 PM
உங்களில் ஒருவனாக உங்களுடன் கலக்க (அதாங்க உங்களைக் கலக்குவதற்கு கலகலப்பாக) வந்துள்ளேன். வரலாமா சார்வாள் ?

இளையவன்
03-12-2005, 10:19 PM
வணக்கம் இளந்திரையன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

mukilan
03-12-2005, 11:20 PM
வாருங்கள் இளந்திரையன். அருமையான தமிழ்ப்பெயரோடு உள்ள நீங்கள் தமிழ்மன்றத்தில் கலந்திட (கலக்கிட, கலங்கிட) வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

அறிஞர்
04-12-2005, 04:17 AM
வாருங்கள் இளந்திரையன்... தங்கள் வரவு மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கட்டும்.....

பரஞ்சோதி
04-12-2005, 05:22 AM
வாங்க வாங்க இளந்திரையன், என்ன அருமையான தமிழ் பெயர்.

அசத்தலான பெயரோடு அசத்த வந்த உங்களை வரவேற்கிறேன். அது என்ன கடைசியில் ஒரு வாள் சேர்த்து இருக்கீங்க, அதை இடுப்பிலேயே வைத்திருங்க.

இளசு
04-12-2005, 06:23 AM
வருக வருக இளந்திரையன் அவர்களே..

பல பதிவுகளுடன் கலகலப்பான நுழைவு. வாழ்த்துகள்.

பென்ஸ்
04-12-2005, 01:38 PM
வந்தாசில்ல... பின்ன என்ன ... குட்டைய கலக்குங்க... நான்னும் சந்தடி சாக்கில மீன் பிடிக்கிறேன்...:D :D :D :D :D

ilanthirayan
04-12-2005, 02:20 PM
வந்தாசில்ல... பின்ன என்ன ... குட்டைய கலக்குங்க... நான்னும் சந்தடி சாக்கில மீன் பிடிக்கிறேன்...:D :D :D :D :D

ஹீ... ஹீ... மொத ....குட்டை ..சிரிப்பு / விடுகதை தான் போய்ப் பாருங்க மீன் ஏதாச்சும் தேறுதான்னு... ஹீ.. ஹீ...

ilanthirayan
04-12-2005, 02:34 PM
வாங்க வாங்க இளந்திரையன், என்ன அருமையான தமிழ் பெயர்.

அசத்தலான பெயரோடு அசத்த வந்த உங்களை வரவேற்கிறேன். அது என்ன கடைசியில் ஒரு வாள் சேர்த்து இருக்கீங்க, அதை இடுப்பிலேயே வைத்திருங்க.


பிளேடு தாம்ல வைச்சிருக்கேன்... சும்மாதாங்காட்டியும் ஒரு கெளரதைக்கு வாள்னு....சொல்லிக்கிரது பரம்ஸ் அண்ணாச்சி...ஹி...ஹி...

Indian
04-12-2005, 02:45 PM
வருக இளந்திரையன் அவர்களே ! உங்கள் வரவு நல் வரவாயிருக்கட்டும்.
நானும் இம்மன்றத்திற்கு புதியவனே. நீங்கள் வந்தது எனக்கு ஒரு துணை
கிடைத்தது போல் உள்ளது. வணக்கம். வாழ்த்துக்கள்.

ilanthirayan
04-12-2005, 03:00 PM
புதிய மன்றம்... புதிய அங்கம்.... எங்கும்

வாழ்த்து மழை பொழிகின்றது...

என்னை வரவேற்க ....எங்கும் பூ மழை

பொழிகின்றது.....ஹி...ஹீ

(புதிய வானம் புதிய பூமி ..பாடல் மெட்டில் படிக்க)


வரவேற்ற அன்புள்ளங்கள் இளையவன், முகிலன், அறிஞர், பரம்ஸ், இளசு,பெஞ்ஜமின் ,இந்தியன்......ஹ் ஹா.. ஹா ... கொஞ்சம் பொறுங்க மூச்சு வாங்குது.... அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்னிகள்....

mukilan
04-12-2005, 04:11 PM
வருக இளந்திரையன் அவர்களே ! உங்கள் வரவு நல் வரவாயிருக்கட்டும்.
நானும் இம்மன்றத்திற்கு புதியவனே. நீங்கள் வந்தது எனக்கு ஒரு துணை
கிடைத்தது போல் உள்ளது. வணக்கம். வாழ்த்துக்கள்.

வாங்க இந்தியன். உங்களுக்கு மன்றத்தின் பழைய உறுப்பினர்களும் துணைதான். பூந்து வெளாடுங்க:D :D

pradeepkt
05-12-2005, 03:46 AM
இளந்திரையன்,
வந்தவுடனே அப்படியே ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க...
ஹ்ம்ம்... நம்ம மன்றத்தின் தூண்களில் ஒருவராக வாழ்த்துகள்.

poo
05-12-2005, 06:06 AM
வணக்கம் நண்பரே...

நல்ல தமிழ்ப்பெயர்..

நல்ல பதிவுகள் பலதந்து எங்களை மகிழ்வித்து, நீங்களும் மகிழ வாழ்த்துக்கள்!

Narathar
08-12-2005, 04:31 PM
இளம் திரையன்......................
கல்கியனதோ சாண்டில்யனதோ நாவலில் படித்த பெயர்! இப்போது மன்றத்தில். கலக்குங்கள்

Shanmuhi
08-12-2005, 07:14 PM
வணக்கம் வாருங்கள் இளந்திரையன்....

பாரதி
09-12-2005, 12:11 AM
வணக்கம் நண்பரே... உங்களை வரவேற்பதில் நண்பர்களுடன் இணைந்து நானும் மகிழ்கிறேன்.

ilanthirayan
09-12-2005, 10:10 PM
என்னை அன்புடன் வரவேற்கும் ப்ரதீப், பூ , நாரதர், ஷண்முகி,பாரதி அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

என்னா ப்ரதீபு என்னை தூணாக்கிட்டீங்க ..... கவனம் நரசிம்மர் உள்ளிருந்து வந்திடுவார்....


அதாங்க தூணிலுமிருப்பார் துரும்பிலும் ...அவருதாங்க...