PDA

View Full Version : ஒன்றுமில்லை!!



poo
03-12-2005, 10:30 AM
அநேக திருமண வீடுகளில்
நானும் இருக்கிறேன்..
வித்தியாசமொன்றுதான்...நீ பந்திக்கு பின்..
நான் பந்திக்கு முன்

அடுத்தவேளை
உணவு யார் வீட்டில்..
எனக்குள்ளும்தான் வினா..
விருந்தினன் நான்!

நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில்
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய்
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில்
சுருண்டிருப்பாய்..என்போலே..

இரு கரங்களிருப்பதாய்
எள்ளி நகைப்போரிடம் சொல்..
நான்கு வயிறிருப்பவன்படும்
வேதனைகளை..

உனக்கு வானம் கூரை..
எங்கு சென்றாலும் உடன்வரும்..
இருக்கும் கூரையை
பிரிக்கமுடியா நிலையெனக்கு..
இன்னொரு கூரைக்கு
உறுதியென்ன...

வீசியெறிந்து
வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
என் கரங்களிலிருப்பது
இரு பிஞ்சுகள்..

ஊழியமில்லாயுனக்கு
ஊறுவதைவிடவும்
குறைவென் ஊதியம்..

உம் கரங்கள் நீளுவதற்கு
யோசிப்பதில்லை..
நீளத் துடிக்குமென் கரங்களை
யாசிக்கிறேன்..
நாலெழுத்து படித்தவன் நான்..
நல்ல உடை தரித்தவன் நான்..

என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!

பென்ஸ்
03-12-2005, 01:21 PM
.................
விருந்தினன் நான்!

நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில்
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய்
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில்
சுருண்டிருப்பாய்..என்போலே..

இரு கரங்களிருப்பதாய்
எள்ளி நகைப்போரிடம் சொல்..
நான்கு வயிறிருப்பவன்படும்
வேதனைகளை..

....................................
உறுதியென்ன...

வீசியெறிந்து
வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
என் கரங்களிலிருப்பது
இரு பிஞ்சுகள்..

...................................
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!



மீண்டும் ஆதங்கம், வலி, இயலாமை என்று எல்ல உணர்வுகளையும் பிழிந்து ஒரு கலக்கல் கவிதை....
சுப்பர் அப்பு சுப்பர்
பிச்சைகாரியை விட இவள் அழகாக இருக்கிறாள்...

ஷீ-நிசி
02-03-2007, 02:52 PM
மிக அற்புதமான கவிதை இது பூ அவர்களே! நண்பர் பெஞமின் உதவியால் இதைப் படிக்க நேர்ந்தது...

நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில்
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய்
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில்
சுருண்டிருப்பாய்..என்போலே..

மனதை ஒருமுறை வலம் வந்தது இந்த வரிகள்...

அற்புதமான படைப்பு இது பூ...

அறிஞர்
02-03-2007, 03:35 PM
பெஞ்சமின் சுட்டியதால் பூவின் கவிதைக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.
---
இயலாமையின் வலிகள்.. உள்ளத்தை நெருட வைக்கிறது.....

மன்மதன்
02-03-2007, 06:09 PM
இது நேரடி பிச்சைக்காரர், ஊழியர் கவிதைதானா.. நான் புரிந்துகொண்டது அவ்வளவுதான்.. மறைமுக அர்த்தம் பொதிந்திருந்தால் நேரிடையாக சொல்லுங்க பூ..கவிதை அழகு..

அமரன்
02-03-2007, 06:14 PM
பூவின் சமூக சிந்தனை மிக்க கவிதை அருமை. இன்றைய உலகில் தேவையான கருத்து. சிந்திக்க வேண்டிய விடயம்.

ஆதவா
03-03-2007, 07:16 AM
கவிதையின் உள்ளர்த்தம் யோசிக்கவைக்கிறது.. ஒரு பிச்சைக்காரனுக்கும் விருந்தாளிக்கும் உண்டான சம்பாஷணையாக இருக்கலாம்... அல்லது திருமணத்தில் வேலைசெய்யும் ஊழியராகவும் இருக்கலாம்.. பிச்சைக்காரனின் நிலைமை அவனுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்... சில வரிகள் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.. பல கோணங்களில் யோசித்துவிட்டேன். ம்ஹீம்.... நீங்களே வந்து எல்லா வரிகளுக்கும் பொருள் கொடுங்கள்.. அல்லது மறைத்து எழுதியிருக்கும் மர்மத்தை அவிழுங்கள்....

மனோஜ்
03-03-2007, 07:21 AM
கவிதை அருமை
பாதி புரியிது பாதி உ ஷம்

இளசு
03-03-2007, 07:45 AM
ஏழை.. மணமானவன்.. இரு குழந்தைகள் = நான்கு வயிறுகள்..
வீடு - ஒழுகும் கூரை - பிரிக்க பயம் .. மாற்ற பணமில்லை..
பணி - ஆனால் பரிதாப ஊதியம்... பிச்சை போடவும் பைசா இல்லை..

கிழியாத உடை.. கண்ணியத் தோற்றம்... கனல் வயிறு..
ஊரில் யாருக்கோ கல்யாணம்.. ...
பசி பத்தையும் போக்கடிக்க
வெட்கம் விட்டு சாப்பிட்டுவிட மண்டபம் நுழைகிறான்..
வாசலில் இருக்கும் பிச்சைக்காரனைக் கண்டதும்
மனதில்.. ஒரு கீற்று..
அட இவனும் நானும் ஒரு வகையில் ஒன்று..
ஆனால் சில வித்தியாசங்கள்..

பசிக்கும்போதே எண்ணிய எண்ணங்கள்..
அதனால்தான் படிக்கும் மனதை இப்படிக் காந்துகிறது..


உணர்ச்சிக்கவிஞனின் மற்றொரு உண்மை நிகழ் சொற்பிடிப்பு..

பாராட்டுகள் பூ..

poo
03-03-2007, 08:07 AM
அண்ணா... வாய்ப்பேயில்லை... என் உள்மனம் நுழைந்து வெளிவருகிறீர்கள் ஒவ்வொரு கவிதைக்கும்..

நேற்று வீட்டில்கூட சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டேன்.. அண்ணன் எதையெழுதினாலும் என் அர்த்தத்தை சரியாய் அர்த்தப்படுத்திவிடுகிறாரென...

ஆதவன், அண்ணனின் கருத்தைமீறி ஏதேனும் வரிகளிருந்தால் சுட்டுங்கள்.. சொல்ல விழைகிறேன்!

வழக்கம்போல என்னருமை சொந்தங்களுக்கு நன்றிகள்!!

மனோஜ்
03-03-2007, 08:38 AM
இளசு அன்னா
மனிதனின் உடைலை மட்டும் அல்ல
உள்ளத்தையும் ஆரய்பவர் தான் அருமை விளக்கம் நன்றி

இளசு
03-03-2007, 09:51 AM
இளசு அண்ணா
மனிதனின் உடலை மட்டும் அல்ல
உள்ளத்தையும் ஆராய்பவர் தான் அருமை விளக்கம் நன்றி

மிகப்பெரிய பாராட்டு இது...

மனங்களை அறியும் ஆசை அதிகம்..
திறமை ?

நன்றி மனோஜ்...

ஆதவா
21-06-2008, 10:39 AM
கவிதையின் உள்ளர்த்தம் யோசிக்கவைக்கிறது.. ஒரு பிச்சைக்காரனுக்கும் விருந்தாளிக்கும் உண்டான சம்பாஷணையாக இருக்கலாம்... அல்லது திருமணத்தில் வேலைசெய்யும் ஊழியராகவும் இருக்கலாம்.. பிச்சைக்காரனின் நிலைமை அவனுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்... சில வரிகள் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.. பல கோணங்களில் யோசித்துவிட்டேன். ம்ஹீம்.... நீங்களே வந்து எல்லா வரிகளுக்கும் பொருள் கொடுங்கள்.. அல்லது மறைத்து எழுதியிருக்கும் மர்மத்தை அவிழுங்கள்....

இந்தக் கவிதை வந்த காலத்தில் சுத்தமாகப் புரியாமல் இருந்தேன். இப்போது,,,,,,,,,,,,,......

மன்றப்பள்ளியின் அடுத்த வகுப்பில் நான்..........

kulakkottan
16-09-2012, 03:03 PM
அருமையாய் இருக்கிறது !
ஆதவன் அண்ணாவின் வழிகாட்டல் இந்த அருமையான கவிதைக்கு என்னை கொண்டு வந்து சேர்த்தது !
நான்கு வயிறு என்பதன் அர்த்தம் மட்டும் புரிய வில்லை ?

கீதம்
16-09-2012, 11:57 PM
பூ அவர்களின் இக்கவிதையைக் கண்ணுறும் வாய்ப்பளித்த ஆதவாவுக்கும் மேலெழுப்பிய குளக்கோட்டனுக்கும் மனமார்ந்த நன்றி.

இருப்பவன் விலைகொடுத்துப் பெறுகிறான்
இல்லாதவன் யாசித்துப் பெறுகிறான்
இருந்தும் இல்லாதவன்
விலைகொடுத்துப்பெற பணமுமற்று
யாசித்துப்பெற மனமுமற்று
எக்காலமும் ஏங்கித் தவிக்கிறான்.
இலவசத்தின்பேரில் தன்னையே
விற்கும்நிலைக்கும் தள்ளப்படுகிறான்.

நடுத்தரவர்க்கத்தின் வெளிச்சொல்லவியலாத அவலத்தை பிச்சைக்காரனின் நிலையோடு ஒப்பிட்டு எழுதிய வரிகள் யாவும் யதார்த்தத்தின் வெளிப்பாடு. மனம் நிறைந்த பாராட்டுகள் பூ அவர்களுக்கு.

கீதம்
16-09-2012, 11:59 PM
அருமையாய் இருக்கிறது !
ஆதவன் அண்ணாவின் வழிகாட்டல் இந்த அருமையான கவிதைக்கு என்னை கொண்டு வந்து சேர்த்தது !
நான்கு வயிறு என்பதன் அர்த்தம் மட்டும் புரிய வில்லை ?

இளசு அவர்களின் பின்னூட்டத்தைக் கவனியுங்கள் குளக்கோட்டன். அதில் அவர் சொல்லியிருப்பதாவது, ஒரு குடும்பத்தலைவன், அவன் மனைவி, இரு குழந்தைகள் ஆகிய நால்வருக்கான வயிற்றை நிரப்பும் பொறுப்பும் அவன் ஒருவனுடையதே என்னும் பொருளில் குறிப்பிடப்பட்டதாகக் கூறுகிறார்.

கலைவேந்தன்
17-09-2012, 03:12 AM
என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!

இந்த வரிகள் போதும் முழுக்கவிதையின் பரிமாணம் காட்டிட.. அற்புதமான கவிதை பூ..!

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 08:21 AM
என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!

நளினமாடும் கவிதை வரிகளில் லயித்துவிட்டேன்.கண்முன்னெ இரவலன் மற்றும் குடும்பதலைவன் நிலையும் தெளிவுற தெரிகிறது..வாழ்த்துக்கள் பூ அவர்களே....