PDA

View Full Version : காதலிக்க நேரமில்லை!

மதி
03-12-2005, 07:52 AM
எப்பொழுது எழுதியதென்று தெரியவில்லை. கணினியை குடைந்த போது கிடைத்தது. படித்தபின் சூடான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
----------------------------------------------------

சட்டென சொல்லிவிட்டார் அப்பா..
உன் வாழ்க்கைத் துணையை
நீயே காதலித்து
தேர்ந்தெடு என்று...

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று....

நெரிசல் மிகுநகரின் நெருக்கடியில்
காலையில் பயணம்..
பின்
அலுவலகப் பணிகளில் போராட்டம்..
இடையிடையில்
வீடு எங்கு வாங்கலாம்..
ஷேர் நிலவரம் என்ன?..
விசாரிப்புகள்..
நடுநிசியில் வீடு திரும்பல் படலம்...
நடுவில் யாரைப் போய் காதலிக்க..

பயமாய் உள்ளது
இனி யாரையுமே காதலிக்க முடியுமா என்று..

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று....

poo
03-12-2005, 08:15 AM
நன்றாக எழுதியுள்ளீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஏனப்பா சூடான விமர்சனமென்றால் எப்படி??!

-------
உம் இயந்திர வாழ்வில்
இதயம் தொலைத்துவிடுவாயோ..
உம் தேடலில்
தொலையும் உணர்ச்சி விலாசங்களை
உணர்வதில்லையோ..
மனிதனாய் கவலையில்லை..
மறுதிசையில் நானும்தான்..
அப்பாவாய்..தாத்தாவாய்
நினைத்துப் பார்க்கையில் பயமெனக்கு
நிறையவே..

---

பென்ஸ்
03-12-2005, 01:12 PM
ஐயோ ஐயோ... எப்பிடிதான் கண்டுபிடிக்கிறாங்களோ???:confused: :confused: :D :D
நான் என் கதையை என்னும் உம்மகிட்ட சொல்லவே இல்லையே.. பின்ன எப்படி ஓய்....:rolleyes: :rolleyes: :rolleyes:
"காதல் என்பது என் வாழ்வில் கனவாகி விடுமோ" என்று என் நண்பன் ஒருவன் தன் குறிப்பேட்டில் எழுதியது நியாபகம் வருதுப்பா.... நீங்கள் அதில் காதல் என்பதை மாற்றி கல்யாணம் என்று இடும்:p :p :p

pradeepkt
03-12-2005, 04:23 PM
பென்ஸு...
உம்ம கதைதானா இது?
பேசாம உங்க வீட்டு நம்பர் குடுங்க, நாங்களே பேசிடுறோம்...

கவிதை நன்றாக இருக்கிறது ஐயா!

மதி
05-12-2005, 11:10 AM
ஐயோ ஐயோ... எப்பிடிதான் கண்டுபிடிக்கிறாங்களோ???:confused: :confused: :D :D
நான் என் கதையை என்னும் உம்மகிட்ட சொல்லவே இல்லையே.. பின்ன எப்படி ஓய்....:rolleyes: :rolleyes: :rolleyes:
"காதல் என்பது என் வாழ்வில் கனவாகி விடுமோ" என்று என் நண்பன் ஒருவன் தன் குறிப்பேட்டில் எழுதியது நியாபகம் வருதுப்பா.... நீங்கள் அதில் காதல் என்பதை மாற்றி கல்யாணம் என்று இடும்:p :p :p

உங்க கதையும் இதே தானா..?
இது தான் டெலிபதி-னு சொல்ராங்களோ?
இது என் நிலை இல்லை....வேறொவரால் ஈர்க்கப்பட்டு எழுதியது.

இளசு
06-12-2005, 06:41 AM
எப்படிப்பா இதெல்லாம்?

எத்தனை பேரோட நிலையை டக்குனு நாடி பிடிச்சு ராஜேஷ்குமார் இப்படி பொட்டுனு போட்டு .....

பெஞ்சமின் அணியில் நானும்... எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ............

பாராட்டுகள் ராஜேஷ்குமார், மிக யதார்த்தம் ..இன்றைய வேக வாழ்க்கையில் இது ...

மதி
06-12-2005, 08:11 AM

நன்றி இளசு..அவர்களே!
தங்கள் பாராட்டுக்கள் ஊக்கப்படுத்துகிறது.

kavinila
06-12-2005, 10:00 AM
மிக யதார்த்தமான கவிதை.தொடர்ந்து எழுதுக்கள்.உம் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்

அறிஞர்
06-12-2005, 03:05 PM
சட்டென சொல்லிவிட்டார் அப்பா..
உன் வாழ்க்கைத் துணையை
நீயே காதலித்து
தேர்ந்தெடு என்று...

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று..

சிறு வயதில் காதலித்திருந்தால் ஆப்படித்திருப்பார்கள்.. படிப்பு காலியாகிவிடும் என்ற பயம் இருக்கும் பெற்றோருக்கு.

வளர்ந்து, நல்ல வேலையில் அமர்ந்தவுடன்.. சரியான துணையை கண்டுபிடிக்க முடியுமோ என்ற கவலையில்.. நீயோ தேடிக்கொள் என்று தப்பித்துக்கொள்கிறார்கள்.

இரண்டு சூழலிலும் வெற்றிப்பெறுவோர் பெற்றோரே....

நம்ம பாடு திண்டாட்டம்தான்..... என்னத்த சொல்லுறது.

சீக்கிரம் காதலிக்காட்டி... அப்புறம் கிழவியை பார்த்து தலையில கட்டிருவாங்க.....

mukilan
06-12-2005, 03:28 PM

இப்படி ஒரு டேஞ்சர் காத்திருக்கா??:confused: உஷாருங்கோ! உஷாரு! தனிக்கட்டைங்க உஷாரு!

அறிஞர்
06-12-2005, 03:45 PM
இப்படி ஒரு டேஞ்சர் காத்திருக்கா??:confused: உஷாருங்கோ! உஷாரு! தனிக்கட்டைங்க உஷாரு! உஷாராகி... குளிருக்கு.. கனடாவில் எதையாவது பார்த்து செட்டிலாகிவிடாதீர்கள்.....

மதி
07-12-2005, 02:59 AM
சிறு வயதில் காதலித்திருந்தால் ஆப்படித்திருப்பார்கள்.. படிப்பு காலியாகிவிடும் என்ற பயம் இருக்கும் பெற்றோருக்கு.

வளர்ந்து, நல்ல வேலையில் அமர்ந்தவுடன்.. சரியான துணையை கண்டுபிடிக்க முடியுமோ என்ற கவலையில்.. நீயோ தேடிக்கொள் என்று தப்பித்துக்கொள்கிறார்கள்.

இரண்டு சூழலிலும் வெற்றிப்பெறுவோர் பெற்றோரே....

நம்ம பாடு திண்டாட்டம்தான்..... என்னத்த சொல்லுறது.

சீக்கிரம் காதலிக்காட்டி... அப்புறம் கிழவியை பார்த்து தலையில கட்டிருவாங்க.....
அறிஞரே,
நீங்க சொல்றதும் உண்மை தான்..
கடைசியில் நமக்குத் தான் ரெண்டுங்கெட்டான் நெலம...:confused: :confused: :confused:
வேலைக்கு போனதுக்கப்பறம் யாரையாவது பார்த்தால்..குலம் கோத்திரம் எல்லாத்தையும் பார்த்தபிறகே...விரும்புகிறோம்....
பல சமயங்களில் கட்டாயங்கள் அப்படி..:mad: :mad:

ஆனா சத்தியமா இது என் அனுபவம் இல்லீங்கோண்ணா......:eek: :eek: :eek:

mukilan
07-12-2005, 03:42 AM

நமக்குன்னு ஏனுங்க அறிஞரைச் சேர்த்துக்கிறீங்க. :D :D

mukilan
07-12-2005, 03:44 AM
உஷாராகி... குளிருக்கு.. கனடாவில் எதையாவது பார்த்து செட்டிலாகிவிடாதீர்கள்.....

நீங்க நினைக்கிறது போல அவ்வளவு ஈசியா அது? இந்தியாவுக்கு திரும்பி வரணும்னு ஆசையா இருக்கு. அதனால ஊருப்பக்கம் ஏதாவது தேறுமானு பார்க்க வேண்டியதுதான்.!

மதி
07-12-2005, 04:00 AM
நமக்குன்னு ஏனுங்க அறிஞரைச் சேர்த்துக்கிறீங்க. :D :D
வாஸ்தவம் தான்..
நமக்கு இல்ல..எங்களுக்கு..!

அறிஞர்
07-12-2005, 04:13 AM
வாஸ்தவம் தான்..
நமக்கு இல்ல..எங்களுக்கு..! நன்றி அன்பரே.. இல்லாட்டி என் பையன்கள் அடிக்க வந்துருவாங்க... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
07-12-2005, 04:14 AM
நீங்க நினைக்கிறது போல அவ்வளவு ஈசியா அது? இந்தியாவுக்கு திரும்பி வரணும்னு ஆசையா இருக்கு. அதனால ஊருப்பக்கம் ஏதாவது தேறுமானு பார்க்க வேண்டியதுதான்.!நல்லது.. நினைத்தது நடக்கட்டும்... குளிரு ஜாலியாயிருக்குமே...

அறிஞர்
07-12-2005, 04:15 AM
ஆனா சத்தியமா இது என் அனுபவம் இல்லீங்கோண்ணா......:eek: :eek: :eek: திரும்ப திரும்ப.. அடிச்சு சொல்றத பார்த்தா.. சந்தேகமா இருக்குங்கோ.... :confused: :confused: :confused:

mukilan
07-12-2005, 04:26 AM
நல்லது.. நினைத்தது நடக்கட்டும்... குளிரு ஜாலியாயிருக்குமே...

குளிரு ஜாலியாயிருக்கா? உங்களுக்கு மாற்றலாகி நீங்க இங்க வந்திடனும்னு வேண்டிக்கிறேன். மைனஸ் 25 டிகிரி, ஆனால் மைனஸ் 35 போல இருக்கும். எழுந்து கல்லூரிக்குப் போகவே இமயமலை போகறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ண வேண்டியிருக்கு. முகமெல்லாம் மறைச்சுகிட்டு முகமூடியாத் திரியிறாய்ங்க.
http://www.theweathernetwork.com/weather/cities/can/Pages/CASK0276.htm

அறிஞர்
07-12-2005, 05:40 AM
என்ன அன்பரே.. நானும் மைனஸ்ல தான் இருக்கேன்..... உங்க நிலையிலும் கொஞ்சம் பெட்டர் அவ்வுளவுதான்....

mukilan
07-12-2005, 05:45 AM
என்ன அன்பரே.. நானும் மைனஸ்ல தான் இருக்கேன்..... உங்க நிலையிலும் கொஞ்சம் பெட்டர் அவ்வுளவுதான்....

எங்கு இருக்கிறீர்கள் அறிஞரே. MIT, Massachussets?

pradeepkt
07-12-2005, 08:02 AM
அதுக்குப் பக்கத்துலதான் இருக்காரு...

தாமரை
04-07-2006, 12:11 PM
எப்பொழுது எழுதியதென்று தெரியவில்லை. கணினியை குடைந்த போது கிடைத்தது. படித்தபின் சூடான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
----------------------------------------------------

சட்டென சொல்லிவிட்டார் அப்பா..
உன் வாழ்க்கைத் துணையை
நீயே காதலித்து
தேர்ந்தெடு என்று...

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று....

நெரிசல் மிகுநகரின் நெருக்கடியில்
காலையில் பயணம்..
பின்
அலுவலகப் பணிகளில் போராட்டம்..
இடையிடையில்
வீடு எங்கு வாங்கலாம்..
ஷேர் நிலவரம் என்ன?..
விசாரிப்புகள்..
நடுநிசியில் வீடு திரும்பல் படலம்...
நடுவில் யாரைப் போய் காதலிக்க..

பயமாய் உள்ளது
இனி யாரையுமே காதலிக்க முடியுமா என்று..

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று....

காதல் எங்கே தோற்கிறது தெரியுமா?
என்று ஒருத்தி
உன் மனங்கவர்ந்து
உன் உள்ளம் புகுந்து
உட்கார்ந்து விடுகிறாளோ
அன்றுதான்..

ஏனென்றால்
காதலை
சொல்வதை விட்டுவிட்டு
இழந்து விடுவோமோ
என்ற பயத்தில்
இழந்து விடுகிறாய்
சொல்லாமலே!

ஒரு சின்ன இதயப் பரிசோதனை..
உனக்குப் பிடித்த
ஒரு பெண்ணிடம்
உன்னை எனக்குப் பிடித்திருக்கு
என்று சொல்ல
தைரியமுண்டா..

இல்லை
ஏனென்றால்
இப்பொழுதெல்லாம் இதயம்
கணக்கு பார்க்க ஆரம்பித்து விட்டது

இனி
காதலிக்க முடியாது..
கணக்கு பண்ணத்தான் முடியும்

காதலுக்கு இன்னும்
வாய்ப்பிருக்கிறது..
இதையெல்லாம் செய்தால்

நல்லனவற்றை பாராட்டு
கனிவுடன் விசாரி
இதயத்தை சற்றே
திறந்து வை..
அன்பாயிரு..
தயாராயிரு..
மனிதர்களை
படிக்கத் துவங்கு

எங்கோ ஒரு இதயம்
உன்னை
கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறது
என்பதில்
நம்பிக்கை கொள்...

மதி
04-07-2006, 01:26 PM
அடடா...
எங்கிருந்துங்க புடிச்சீங்க இத..
நல்லாருக்கு விமர்சனம்...

தாமரை
04-07-2006, 01:34 PM
அடடா...
எங்கிருந்துங்க புடிச்சீங்க இத..
நல்லாருக்கு விமர்சனம்...

நீர் சொல்லாமல் விட்ட
வார்த்தைகளை
கண்ணீர் சொல்லிவிடும்
காலம் கடந்த பின்..

மதி
04-07-2006, 01:45 PM
நீர் சொல்லாமல் விட்ட
வார்த்தைகளை
கண்ணீர் சொல்லிவிடும்
காலம் கடந்த பின்..
என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது...ஆனா புரியல..
ஆனா..உங்க கவிதை சூப்பரா இருக்கு..

தாமரை
04-07-2006, 01:50 PM
என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது...ஆனா புரியல..
..

இந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் என்று நினைத்த பெண் கல்யாண அழைப்பிதழ் தருவது.

இல்லைன்னா இன்னொன்னும் இருக்கு.. பென்ஸைக் கேளுங்க!!!

மதி
04-07-2006, 01:57 PM
இந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் என்று நினைத்த பெண் கல்யாண அழைப்பிதழ் தருவது.

இல்லைன்னா இன்னொன்னும் இருக்கு.. பென்ஸைக் கேளுங்க!!!

அப்படி போடுங்க...!
சின்ன பய கிட்ட கல்யாணம் அது இதுன்னு பேசறீங்க ...
பென்ஸ் வாழ்க்கையில ஏதோ இருக்குனு தெரியுது.. கேட்டுப்போம்..

pradeepkt
05-07-2006, 04:54 AM
சின்னப்பையன் பேசுற பேச்சா இதெல்லாம்...???
நீ வெம்புன பையன் :D

தாமரை
05-07-2006, 05:02 AM
சின்னப்பையன் பேசுற பேச்சா இதெல்லாம்...???
நீ வெம்புன பையன் :D

இன்று தோன்றுகிறது.
சிறு வயதிலேயே காதலித்திருக்கலாமென்று....

இதன் உள்ளர்த்தம் என்ன? அப்போதே ஏதோ இருந்திருக்கிறது என்பது தானே.. அதைத்தானே நான்

நீர் சொல்லாமல் விட்ட
வார்த்தைகளை
கண்ணீர் சொல்லிவிடும்

அப்படின்னு சொன்னேன்...

மதி
05-07-2006, 05:24 AM
சின்னப்பையன் பேசுற பேச்சா இதெல்லாம்...???
நீ வெம்புன பையன் :D
அய்யோடா...
யாரும் சின்னவங்களா இருக்க விட மாட்டீங்களே..!
கண்டதையும் சொல்லி மனச கெடுத்துட வேண்டியது..;) ;) ;)

pradeepkt
05-07-2006, 06:27 AM
பென்ஸூ,
நீங்க பொங்கி எழ வேண்டிய நேரம் நெருங்கிருச்சு... இவன் ரொம்பப் பேசுறான்.
கவலைப் படாதீங்க, மதி இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் பண்ணிருக்கான். அந்தப் பணத்தை வச்சே உங்களைக் கோரமங்கலா ஸ்டேஷன்ல இருந்து ஜாமீன்ல எடுத்துருவேன்... :D

மதி
05-07-2006, 06:41 AM

அப்படி என்னங்க ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப பேசிட்டேன்..! ஏதோ சின்ன பையன்னு விட்டுட்டு போவீங்களா..! சின்னபயலுககிட்டெல்லாம் மல்லுகட்டிகிட்டு..
சின்னபுள்ளத்தனமாயில்ல இருக்கு..!
ஐயா..பிரதீப்...சும்மா கிடந்த சிங்கத்த உசுப்பற மாதிரி எப்பவும் பென்ஸ நீங்க தான் உசுப்பேத்திவுட்டுட்டு இருக்கீங்க.. அவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு..:D :D :D :D

பென்ஸ்..பிரதீப் எப்ப பாத்தாலும் உங்களையும் கோரமங்களா போலீஸ் ஸ்டேஷனையும் இணைச்சே பேசறார். இங்க குறி நானில்ல..அது மட்டும் தெரியுது..:confused: :confused:

மயூ
05-07-2006, 09:51 AM
திருப்பி திருப்பி சின்ன சின்ன என்று சொல்றது..............:D :D :D :D

மயூ
05-07-2006, 09:54 AM
இளைஞனே காதல் செய்
அவளைக் காவல் செய்யாதே
காதலால் காவல் செய்
அவளைக் காவலால் காதல் செய்யாதே

ஏதோ சொல்லோனும் என்று தோண்றியது சொல்லிவிட்டேன்....

pradeepkt
05-07-2006, 10:01 AM
ஏம்ப்பா உனக்கு இதெல்லாம் சொல்லோணும்னு தோணுது????

மயூ
05-07-2006, 10:06 AM
ஏம்ப்பா உனக்கு இதெல்லாம் சொல்லோணும்னு தோணுது????
நேற்று கம்பஸில் என் நண்பன் தன் காதலியுடன் சண்டையிட்டு பிரிந்து விட்டான்
ஒரே காரணம் நம்பிக்கையின்மை.......:confused:
தற்போது ரொம்பவுமே நொந்துபோய்.... தெரியனுமா என்ன????

இளமையில் காதல் நீரில் எழுத்து...... :D :D :D

எனக்கு ஏதும் நடந்திட்டதா நினைக்காதீங்க. ஏனென்றால் எங்கட வகுப்பில ஒரு தமிழ் பெட்டை கூட இல்ல எல்லாம் சிங்களம்தான். பார்த்தா பீலிங்வராது ................ :eek: :eek:
டேடிங் போகத்தான் சரி......:p :p :rolleyes: :rolleyes: B)

கலாச்சாரம் முதல் பழக்கவழக்கம் வரை நமக்கு ஒத்து வராது.
எல்லாத்துக்கும் முதல் வீட்டில அம்மா கேள்விப்பட்டானா......
மாச செலவுக்கு காசும் வராது....:eek:
அதனால காதல் வேண்டாம்
சும்மா ஜாலியா இருந்திடுங்க.....:D :D

ஓவியா
05-07-2006, 11:41 AM
மதி சார்
செல்வன் சார்
இரண்டு கவிதைகளும் அருமை

மதி
05-07-2006, 11:48 AM
மதி சார்
செல்வன் சார்
இரண்டு கவிதைகளும் அருமை
நன்றி.
ஓவியா..அக்கா (வருத்தமில்லையே)

ஓவியா
05-07-2006, 12:21 PM
நன்றி.
ஓவியா..அக்கா (வருத்தமில்லையே)

ஐயோ
இல்லாப்பா நிலவு மன்னனே மதி

ஒவியானு கூப்பிடலாம்,
அப்படி நீளமாக இருந்தால் ஓவினும் கூப்பிடலாம்

:) :) :)

தாமரை
05-07-2006, 12:22 PM
ஐயோ
இல்லாப்பா நிலவு மன்னனே மதி

ஒவியானு கூப்பிடலாம்,
அப்படி நீளமாக இருந்தால் ஓவினும் கூப்பிடலாம்

:) :) :)

மத்ததெல்லாம் கூப்பிட ரொம்ப பெரிசா இருக்கு.

மதி
05-07-2006, 12:25 PM

மத்ததெல்லாம் கூப்பிட ரொம்ப பெரிசா இருக்கு.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ