PDA

View Full Version : தடுமாற்றம்



Indian
02-12-2005, 09:03 AM
ஒரு நாள் பெய்த மழைக்கு
நனைந்தது தாயகத்தின் தலைநகரம்.

தேங்கியது தண்ணீர் வீதியெங்கும்
ரோட்டில் நடக்க இயலவில்லை.

கரண்ட் கட் செய்து தொலைத்ததால்
வீட்டில் இருக்க முடியவில்லை.

சாக்கடை நீர் குடிநீரில் கலந்ததால்
குழாய்நீரும் குடிக்க இயலவில்லை.

பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டதால்
வேலைக்கும் செல்ல வழி தெரியவில்லை.

சிங்காரச் சென்னை என பெயர் மாற்றம்
ஆனால் சகிக்கவில்லை இங்கே துர்நாற்றம்.

அறிவியல் ஆற்றலுக்கு இது ஏமாற்றம்
அதுதான் எம் தாயகத்தின் தடுமாற்றம்.