PDA

View Full Version : நான் பிறந்த நாடு

Indian
01-12-2005, 02:31 PM
யானை கட்டி போரடித்து செந்நெல்
யாத்திட்ட சோழவள நாடு என்றார்.
முல்லைக்கு தேர்கொடுத்த வள்ளல்
பாரியும் வாழ்ந்த நாடு இது என்றார்.

வட்டிக்கு கடன் வாங்கி கடல் கடந்து
சிங்கை வந்து - முறுக்குக் கம்பி
வளைத்து கையொடிய - கால்வயிறு
அரைவயிறு என பசியாறுகையிலே !

என் பாட்டன்,பூட்டன் பாடியதனைத்தும்
கற்பனையில் தோன்றிய யானையும்
கனவினில் வந்திட்ட பாரியும்தானோ??
ஐயம் வந்து மனதை நெருடுகிறது.

பென்ஸ்
02-12-2005, 07:29 AM
அருமையான கவிதை ... பாராட்டுகள்...

ஆதங்கத்தின் வேளிபாடு... ஆனால்... யானை தான்
இல்லாமல் போய்விட்டதா.. இல்லை பாரிகள்
பரதேசம் போய்விட்டார்களா????

இல்லை வியர்வைகளை வேளியேற்றும்
சோம்பலா??? திரைகடல் ஓடி திரவியம் தேடும் நாம்,
வீடு வந்தால் திண்ணையில் மட்டுமே இருந்து
விடுகிறோமோ????

அருமையான சிந்தனைகள் மேலும் எழுதுங்கள்
நண்பரே....

Indian
02-12-2005, 08:04 AM
நன்றி பெஞ்சமின் அவர்களே !

ஆம், எந்நாட்டில் யானைகள் சுகவாச தலத்துக்கு போய்விட்டன.
பாரிகள் அனைவரும் அரசியலில் சேர்ந்து காணாமல் போய்விட்டர்கள்.

இரத்தத்தை வியர்வைகளாக்கி திரைகடல் ஓடி திரவியம் தேடும்
எங்களுக்கு - சோம்பலா ? அப்படியென்றால் என்ன ??????

வீடு வருவதற்குமுன் விமான நிலையத்திலேயே எங்கள் ஆர்வம்
பாதி கரைந்துபோய், மீதி, வீடுவந்து ரேஷன்கார்டு புதுப்பித்தலில்
கரைந்து போய் திண்ணையில் மட்டுமே இருந்துவிடுகிறோம்.

உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே, நண்பரே !!

இந்தியன்.

Indian
02-12-2005, 08:06 AM
நன்றி பெஞ்சமின் அவர்களே !

ஆம், எந்நாட்டில் யானைகள் சுகவாச தலத்துக்கு போய்விட்டன.
பாரிகள் அனைவரும் அரசியலில் சேர்ந்து காணாமல் போய்விட்டர்கள்.

இரத்தத்தை வியர்வைகளாக்கி திரைகடல் ஓடி திரவியம் தேடும்
எங்களுக்கு - சோம்பலா ? அப்படியென்றால் என்ன ??????

வீடு வருவதற்குமுன் விமான நிலையத்திலேயே எங்கள் ஆர்வம்
பாதி கரைந்துபோய், மீதி, வீடுவந்து ரேஷன்கார்டு புதுப்பித்தலில்
காணாமல்போய் திண்ணையில் மட்டுமே இருந்துவிடுகிறோம்.

உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே, நண்பரே !!

இந்தியன்.