PDA

View Full Version : இதயத்தைத் தொட்ட காதல்...



Shanmuhi
30-11-2005, 01:34 PM
இதயத்தைத் தொட்ட காதல்...

கொழும்பில் உன்னை நேருக்கு நேராக பார்த்தேனோ... அன்று கண்களில் தொடங்கிய காதல் இதயத்தை தொட்டு, தொட்டு சென்றதை இன்னும் மறக்கத்தான் முடியுமா...?

விடுமுறைக்காக லண்டன் நாட்டிலிருந்து வந்தபோது தான் என் கண்களை கைது செய்தாய். காதல் தேசம் அதில் அகதியாய் இருப்பதாய் கூறி, என் சம்மதம் கேட்டு... என் விழி வாசல் தேடி நீ கேட்டபோது என் மௌனங்கள் சம்மதங்களாக தந்தபோது என்னையே உன்னுள் தொலைத்து நின்றேன்.

உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.

என் மனதில் சலனமே இல்லாமல் நானும் என் வேலையுமாக இருந்த வேளையில்தான் சுள்ளானாக வந்து என் மனதை சுண்டி இழுத்து காதல் சுகமானது என்பதை எனக்குள் ஏற்படுத்திவிட்டாய்.

ஆட்டோகிராப் நினைவுகளாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டு என்னை லண்டன் அழைப்பதாய் கூறி, நீயும் லண்டன் பறந்தாய்.

காதல் பிரிவின் வேதனை அன்று உணர்ந்தேன். உன் புகைப்படம் பார்த்து, உன்னுடன் தொலைபேசியில் கதைத்து, என் வேதனை தீர நீ மருந்தாய் இருந்தாய். சில மாதங்களின் பின்னே லண்டன் நோக்கிய என் பயணம் ஆரம்பமாகியது.

விமானநிலையத்தில் உன்னைக்கண்டபோது... கொழும்பில் பார்த்தமாதிரியே நீ இருந்தாய். ஆனால் நான் தான் மெலிந்து விட்டேன் என்றாய். உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றே கோயில் கோயிலாக ஏறி ஏறி சாமிக்கு அர்ச்சனை செய்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் என்றேன். நீயும் தலையை அழகாக சிலிர்த்து விட்டு "ஆஹா எல்லாம் இறைவன் தந்த வரம்" என்று தலை அசைத்தபோது என் உடம்பில் மின்சார அலைகள் ஊற்றெடுத்தன.

வீடு வந்த போது, வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.

ஆஹா எத்தணை அழகு. வைக்கவேண்டிய பொருட்களையெல்லாம் என்ன லாவகமாக அடுக்கி வைத்திருக்கும் ஓவ்வொன்றையும் பார்த்தேன் ரசித்தேன்.

மெய்மறந்து நின்றதில் சிறது நேரம் உன்னைக் காணமால் துடித்து அறையேங்கும் தேடினேன். உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன். ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக... காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே... என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.

ஆனால்... சொல்லத் துடித்த வார்த்தைகள் வர மறுத்தன. காதல் கண்களில் தோன்றி இதயத்தைத் தொட்ட காதலாயிற்றே... இந்த டோப் முடியை விட இந்த மொட்டை தான் உனக்கு ஜோர் என்று கூறி என் மனதைக் கவர்ந்த அந்த டோபாவை எடுத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தேன்

பாரதி
30-11-2005, 01:43 PM
நன்றாக இருக்கிறது சண்முகி. கதையின் ஆரம்பத்தை படிக்கும் போது முடிவு இப்படியாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் நகைச்சுவை போலத் தெரிந்தாலும் காதலின் வீரியம் எல்லாவற்றையும் மறைத்து விடும் என்பது உண்மைதான் போலும். தொடர்ந்து உங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறோம் சண்முகி.

இளசு
30-11-2005, 10:42 PM
திரைப்படப்பெயர்களாலேயே கதையை நகர்த்தி
விக் -காலே ஒரு 'க்' வைத்து சட்டென முடித்த கதை.

ரசித்தேன்.. பாராட்டுகள் ஷண்முகி அவர்களே.

gragavan
01-12-2005, 06:05 AM
நல்ல கதை ஷண்முகி. ரசித்துப் படித்தேன்.

kavitha
01-12-2005, 09:54 AM
உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.

....
உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன். ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக... காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே... என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.


ஹாஹ்ஹா! நீண்ட நாட்களுக்குப்பின் வாய்விட்டுச் சிரித்தேன் ஷண்முகி. :) இன்னும் செறிவாக்கி நல்ல நகைச்சுவைக்கதைகள் தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

(நிறைய திரைப்படம் பார்ப்பீர்களா?)

Shanmuhi
01-12-2005, 06:30 PM
கருத்து சொன்ன பாரதி, இளசு, ராகவன்,
கவிதா ஆகியோருக்கு நன்றிகள்.

Shanmuhi
01-12-2005, 06:35 PM
ஹாஹ்ஹா! நீண்ட நாட்களுக்குப்பின் வாய்விட்டுச் சிரித்தேன் ஷண்முகி. :) இன்னும் செறிவாக்கி நல்ல நகைச்சுவைக்கதைகள் தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

(நிறைய திரைப்படம் பார்ப்பீர்களா?)

நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். கதைக்கு மேலும் படங்கள் பெயர் தேடினேன் நினைவில் வராமல் போய் விட்டது.

Narathar
11-12-2005, 11:45 PM
ஷண்முகி அசத்திட்டீங்க......................
பாவம் அவனுக்கு லண்டன் குளிர் தாங்காமல் முடியெல்லாம் உதிர்ந்திருக்கும்....

சரி யாருடைய உண்மைக்கதையிது?

நாராயணா!!!!

aren
02-01-2006, 11:03 PM
அருமையான ஜோடனையுடன் கூடிய அழகான கதை. நான் இந்த முடிவை எதிர்ப்பார்க்கவில்லை. நான் நினைத்தேன், அவனுடைய உண்மையான மனைவி - ஒரு வெள்ளைக்காரி வந்து வரவேற்பாள் என்றுதான். இது எதிர்பாராத முடிவு.

தொடருங்கள் சண்முகி.

நன்றி வணக்கம்
ஆரென்

Iniyan
04-01-2006, 08:49 PM
எதிர்பாராத நகைக்ச்சுவை விருந்து.

ஓவியா
29-08-2006, 08:03 PM
சிரிப்பில் ஆரம்பித்து அதிர்ச்சியில் முடிந்த கதை....

ரசித்துப் படித்தேன்.

நன்றி

Isaiprabhu
30-08-2006, 06:05 AM
அய்யோ சிரிப்பு தாங்கல:D . நானும் லன்டன் தான் ஆன எனக்கு டோப்பா இல்ல தலயில நிரய முடி இருக்கே:p

Shanmuhi
04-09-2006, 07:09 PM
ஷண்முகி அசத்திட்டீங்க......................
பாவம் அவனுக்கு லண்டன் குளிர் தாங்காமல் முடியெல்லாம் உதிர்ந்திருக்கும்....

சரி யாருடைய உண்மைக்கதையிது?

நாராயணா!!!!


கதையினை வாசித்து கருத்துக் கூறிய நாரதருக்கு நன்றிகள்
நாராயணா இது உண்மைக்கதை இல்லை வெறும் கற்பனை கலந்த கதை.
பின்னர் ஒருநாள் அறிந்தேன் இப்படி உண்மையாக நடந்தது என்று

Shanmuhi
04-09-2006, 07:13 PM
அருமையான ஜோடனையுடன் கூடிய அழகான கதை. நான் இந்த முடிவை எதிர்ப்பார்க்கவில்லை. நான் நினைத்தேன், அவனுடைய உண்மையான மனைவி - ஒரு வெள்ளைக்காரி வந்து வரவேற்பாள் என்றுதான். இது எதிர்பாராத முடிவு.

தொடருங்கள் சண்முகி.

நன்றி வணக்கம்
ஆரென்


எதிர்பார்க்காத மாதிரி முடிவு இருந்தால் தான் கதையில் சுவாரசியம் இருக்கும் இல்லையா...? தங்கள் பதிவிற்கும் நன்றிகள் ஆரென்.
கூடியகெதியில் மேலும் ஒரு சிறுகதை அல்லது கவிதையுடன் இணைவேன்.

Shanmuhi
04-09-2006, 07:17 PM
எதிர்பாராத நகைக்ச்சுவை விருந்து.


நகைச்சுவை விருந்தை சுவைத்ததில் மகிழ்ச்சி சுடர்.

Shanmuhi
04-09-2006, 07:19 PM
சிரிப்பில் ஆரம்பித்து அதிர்ச்சியில் முடிந்த கதை....

ரசித்துப் படித்தேன்.

நன்றி


சிரிப்பில் ஆரம்பித்து, அதிர்ச்சியுடன் ரசித்து படித்த தங்களுக்கும் நன்றிகள் ஓவியா....

paarthiban
07-09-2006, 09:06 AM
அழகாய் சின்ன சஸ்பென்ஸ் வச்சு அருமையா இருக்கு கதை. ஷண்முகி அவர்களுக்கு சபாஷ்.

leomohan
10-03-2007, 01:02 PM
எதிர்பாராத நகைக்ச்சுவை விருந்து.

யாருப்பாது என் அவதார் போட்டிருக்கறது?

மனோஜ்
10-03-2007, 02:02 PM
கதை நகைசுவைதான் ஆனால் இது 2005 ல் பதிந்தது பேல...