PDA

View Full Version : நான் கிருபா... மல்லூரிலிருந்து...kiruba_priya
30-11-2005, 10:12 AM
எல்லாருக்கும் வணக்கம். எனது பதிவுகளை ஏற்கனவே பதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனாலும் என்னை பற்றி இன்னும் அறிமுகம் செய்யல. இதோ என்னை பற்றிய சிறு அறிமுகம்...

னான் கிருபா... கிருபாசங்கர். 'மல்லூர்' எனதூர் (சேலம் மாவட்டத்தில் உள்ளது). நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஒரு ஊர். (நகரம் - சேலத்திலிருந்து நீங்கள் திருச்சி செல்லும்போது எங்களூர் தான் முக்கிய நிறுத்தம். கிராமம் - கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளி தான், எங்கு நோக்கினும்)

அப்பா, அம்மா, நான், தங்கை என அளவான குடும்பம்.

அப்பா - 'Handloom Society'-இல் மேனேஜர். (டிபிக்கல் அரசு ஊழியர்)
அம்மா - House Wife.
தங்கை - கல்லூரி விரிவுரையாளராக. (என்னை விட நன்கு படிப்பவள்)

னான் - HCL Technology-இல் Software Engineer. எனது Tool 'Data Warehousing'. HCL-இல் சேர்ந்து 5 மாதம்தான் ஆகிறது. சேர்ந்த உடனே 'Noida' அனுப்பிவிட்டனர். தற்போது எனது வாசம் 'Noida'-இல். எனது ப்ராஜெக்ட் நல் முறையில் முடிந்தது.

(எப்படா ஊருக்கு (சென்னைக்கு) போவேன் என தோன்ருகிறது. காரணம் எனது மாடியில் நான் ஒருவன் தான் தமிழ் ஆள். பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லை. இங்கு 'Hindi' மட்டுமே பேசுகிறார்கள். எனக்கு hindi தெரியாததால் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன்; நல்லவேளை நான் தங்கி இருப்பது தமிழ் பசங்களுடன். அதனால் இவ்வளவு நாள் ஒட்டினேன்)

இரண்டுவாரங்களுக்கு முன்புதான் இந்த '.com' பற்றி தெரிந்தது. உடனே ஒட்டிக்கிட்டேன்.

விருப்பங்கள் - கன்னா பின்னாவென புத்தகம் படிப்பது (தமிழ் புத்தகங்கள்தான்); பாடல்கள் கேட்பது; கிரிக்கெட், வாலிபால், ஷட்டில் ஆட பிடிக்கும் (நன்கும் விளையாடுவேன், நிறைய கப்பும் வைத்துள்ளேன்);
எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் நிரைய... (சுஜாதா, சுபா, பாலகுமாரன்...) நிறைய சொல்லலாம். போதும்.

ஆசை - 10 வருடம் களித்து, Software Company ஒன்று கட்டவேண்டும் என்பது. (என்னை போன்ற கிராமத்து இளைனர்களுக்காக).
னிச்சயமாக கட்டுவேன்!!

வேறு என்ன சொல்ல....

ஏதேனும் விட்டிருந்தால் தெரியப்படுத்தவும்....

Iniyan
30-11-2005, 01:23 PM
வாங்க கிருபா. இங்கே இங்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். 'ந' தட்டச்ச w தட்டினால் போதும்.

பாரதி
30-11-2005, 01:34 PM
வாருங்கள் கிருபாசங்கர். இவ்வளவு தெளிவாக அறிமுகம் செய்யும் முதல் நபர் நீங்கள்தான் என்பதை மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 'நோய்டா' என்ன நண்பரே..- பல அயல் தேசங்களிலும் வசிக்கும் பலரும் தனியாக இருப்பதை உணராமல் இருப்பது போன்ற உணர்வை தமிழ்மன்றம் தந்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

மன்மதன்
30-11-2005, 05:34 PM
கிருபா......... பாரதி சொன்னது போல் ஆச்சரியமான/வித்தியாசமான அறிமுகம்... அன்புடன் வரவேற்கிறேன்...........

இளசு
30-11-2005, 11:44 PM
அருமையான அறிமுகம்.

கிருபா சங்கர் -- எனக்கு பிடித்த பெயர்.

அன்பான வரவேற்புகள் கிருபா.


பாரதி சொன்னதுபோல் - அயல்தேச உணர்வைப்போக்கும் அரிய சோலை நம் மன்றம்.. வாருங்கள்..வாழ்த்துகள்..

pradeepkt
01-12-2005, 06:13 AM
வணக்கம் கிருபா.
உங்கள் அறிமுகத்தை ரசித்தேன்.
நீங்களும் ரசிப்புக்குரிய ஆள் என்பதில் சந்தேகமில்லை.
நிறைய பேசுவோம்

பரஞ்சோதி
01-12-2005, 06:19 AM
வாங்க வாங்க கிருபா.

நம்பிக்கையாளரான உங்களை தமிழ்மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அருமையான அறிமுகம். உங்களைப் போன்று வாழ்க்கையில் உயர நினைக்கும் நண்பர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேற இறைவன் அருள் புரிவார்.

gragavan
01-12-2005, 06:24 AM
வாங்க கிருபா. இங்க பலவூருக்காரங்க இருக்காங்க. பல நாட்டுல இருக்குறவங்க இருக்காங்க. நீங்க பாட்டுக்குப் புகுந்து வெளையாடுங்க. உங்கள் மனம் மகிழ்ச்சியால் நிறைய எனது வாழ்த்துகள்.

kiruba_priya
01-12-2005, 06:25 AM
நன்றி சுடர் அவர்களெ. நேற்றே அதற்கு வேறு 'உபயம்' கண்டுபிடிச்சுட்டேன். மீண்டும் நன்றி.

என்னை பாராட்டிய பாரதி, மன்மதன், இளசு அனைவருக்கும் எனது நன்றி.

நான் இன்னும் தர நினைத்தேன். அதிகமாக இருக்குமோ என எண்ணி விட்டு விட்டேன்.

தங்களின் கூற்று முற்றிலும் உண்மைதான் பாரதி. தனிமையை போக்க, 'தமிழ்மன்றம்' எனக்கு 'tonic' போல உதவுகிறது. நிச்சம் எனது பங்களிப்பு இருக்கும்

அறிஞர்
01-12-2005, 04:48 PM
வாருங்கள் கிருபா... சிரிப்பு பகுதியில் தங்கள் பதிவுகள் கலக்குகின்றன..

தெளிவான அறிமுகம். நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.. தங்கள் படைப்புக்களையும் கொடுங்கள். நல்ல பொழுதுபோக்கு இடம்.

Shanmuhi
01-12-2005, 07:48 PM
வணக்கம் வாருங்கள் கிருபா.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
எப்படி நலமா....? ? ?

மதி
02-12-2005, 04:38 AM
வாருங்கள் கிருபா..!
தங்கள் வரவு நல்வரவாகட்டும்....!

அறிமுகமே வித்தியாசமாய் உள்ளது..

நண்பன்,
மதி

இளந்தமிழ்ச்செல்வன்
02-12-2005, 03:25 PM
வாருங்கள் கிருபா சங்கர். உண்மையில் இவ்வளவு தெளிவான, விரிவான முதல் அறிமுகம் உங்களுடையதான் என்று நண்பர் பாரதி சொன்னது முற்றிலும் சரியே.

உங்களை இருகரம் நீட்டி அன்புடன் அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கனவு விரைவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நீங்கள் கூறியதுபோல் தனிமையை சரியான வழியில் போக்க இதைவிட சிறந்த இடம் வேறெங்கும் இல்லை. உள்ளூரில் இருந்த எனக்கும் மிக முக்கியமான காலகட்டங்களில் உற்றதுணை மன்றம்தான்.

மாலினி மில்லும், சம்மந்தம் மில்லும் செளக்கியமா?

உங்களிடமிருந்து நிறைய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள்

aren
03-12-2005, 06:26 AM
வாருங்கள் கிருபா அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நீங்கள் இங்கே உங்களுக்கு எங்கெல்லாம் அனுமதியிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று உங்களுடைய பங்களிப்பை அளியுங்கள்.

உங்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுக்கும் இங்கே உதவிட உங்கள் நண்பர்கள் இருப்பார்கள். அதே போல் உங்களுக்குத் தெரிந்தததையும் மற்றவர்களுக்கு அளித்திடுங்கள்.

தமிழ்மன்றம் ஒரு குடும்பம். உங்களையும் தமிழ்மன்றம் குடும்பத்தில் இனைப்பதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. தொடருங்கள்.

நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்திட என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

poo
03-12-2005, 09:19 AM
வருக நண்பரே....

உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும்!!

Narathar
08-12-2005, 05:35 PM
என்ன ஒரு தெளிவான விளக்கம்!

பேசாமல் சொப்ட்வெயார் வேலையை விட்டுவிட்டு நீங்கள் சினிமாவுக்கு திரைக்கதை எழுத போகலாம். (வாங்கி கட்டிக்கொள்ள போகிறேன்.............. இது நமக்கு அத்துப்படி!!)

வாழ்த்தி வரவேற்கின்றேன்...............

ilanthirayan
09-12-2005, 11:35 PM
உங்களைப் போன்ற இளைஞர்களின் ஆசைகள் தமிழ் இனத்தைத் தலை நிமிர்த்தி வைக்கும்... வாருங்கள்...

உதயா
13-12-2005, 04:11 AM
எல்லோரும் நல்ல வரவேற்பு கொடுத்துவிட்டார்கள், நான் என்ன சொல்ல இருக்கிறது... வருக வருக.

தாமரை
15-06-2006, 10:28 AM
னான் கிருபா... கிருபாசங்கர். 'மல்லூர்' எனதூர் (சேலம் மாவட்டத்தில் உள்ளது). நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஒரு ஊர். (நகரம் - சேலத்திலிருந்து நீங்கள் திருச்சி செல்லும்போது எங்களூர் தான் முக்கிய நிறுத்தம். கிராமம் - கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளி தான், எங்கு நோக்கினும்)


நம்மூரு சேலமுங்க.. மல்லூரப் பத்தி நல்லா தெரியுமுங்க.அப்புறம் மா..ன் பத்தியும் தெரியுமுங்க... உங்கூருக்கும் நம்மூருக்கும் மத்தியில இருக்கறது பொய்மான் கரடுங்க..
எப்பயாவது அந்த மானைப் பாத்திருக்கிங்களா?

tya
15-06-2006, 12:39 PM
வாங்க கிருபா உங்க வலது காலை எடுத்துவச்சு:p மன்றம் சார்பாக உங்களை வரவேற்கிறேன்

ஓவியா
15-06-2006, 12:52 PM
வாங்க கிருபா உங்க வலது காலை எடுத்துவச்சு:p மன்றம் சார்பாக உங்களை வரவேற்கிறேன்

30-11-2005, 11:12 AM
kiruba_priya இளையவர் Join Date: Sep 2005
Location: Chennai - Tamilnadu
Posts: 81

தயா..............
கிருபா வந்து ஒரு வருடம் ஆகபோகிறது.....:)

தாழ்மையான வேண்டுகோள்
அம்மாடி ராஜத்தி.....முடிந்தால் பதிப்பை முதல்பக்கதில் இருந்து படிக்கவும்....மன்ற நன்பர்களின் கருத்துக்கலும்...அவர்கள் அடிக்கும் லூட்டியும் படிக்க சுவையாக இருக்கும்...

பின் குறிப்பு : பாட்டுக்கு பாட்டை தவிர்த்து...அதை பாடி முடிக்கறதுகுள்ளே......:eek: :eek:
பாய்மரகப்பலில் லன்டனில் இருந்து மலேய்சியாவே போய் சேர்ந்து விடுவேன்:D :D :D :D

மதி
15-06-2006, 01:05 PM
30-11-2005, 11:12 AM
kiruba_priya இளையவர் Join Date: Sep 2005
Location: Chennai - Tamilnadu
Posts: 81

தயா..............
கிருபா வந்து ஒரு வருடம் ஆகபோகிறது.....:)

தாழ்மையான வேண்டுகோள்
அம்மாடி ராஜத்தி.....முடிந்தால் பதிப்பை முதல்பக்கதில் இருந்து படிக்கவும்....மன்ற நன்பர்களின் கருத்துக்கலும்...அவர்கள் அடிக்கும் லூட்டியும் படிக்க சுவையாக இருக்கும்...

பின் குறிப்பு : பாட்டுக்கு பாட்டை தவிர்த்து...அதை பாடி முடிக்கறதுகுள்ளே......:eek: :eek:
பாய்மரகப்பலில் லன்டனில் இருந்து மலேய்சியாவே போய் சேர்ந்து விடுவேன்:D :D :D :D
யக்கா கலக்கறீய..போங்க..!

இனியவன்
15-06-2006, 02:11 PM
கிருபா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
எனக்குப் பிடித்தமான நாவலாசிரியர்களை நீங்களும் வாசிக்கிறீர்கள், மகிழ்ச்சி, மன்றத்தில் நிறையப் பேசுவோம் மனம் திறந்து.....

அறிஞர்
15-06-2006, 03:11 PM
நம்மூரு சேலமுங்க.. மல்லூரப் பத்தி நல்லா தெரியுமுங்க.அப்புறம் மா..ன் பத்தியும் தெரியுமுங்க... உங்கூருக்கும் நம்மூருக்கும் மத்தியில இருக்கறது பொய்மான் கரடுங்க..
எப்பயாவது அந்த மானைப் பாத்திருக்கிங்களா? இது என்ன பழைய பதிப்பை தேடி கண்டுபிடித்தீரா...

பிறந்த நாள் காணும் கிருபா இப்பொழுது தளம் பக்கம் வருவதில்லையே

இணைய நண்பன்
16-06-2006, 11:22 AM
அன்புடன் வரவேற்பதுடன் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்