PDA

View Full Version : இந்தியா-இலங்கை டெஸ்ட்

Pages : [1] 2

அறிஞர்
29-11-2005, 04:41 PM
தொடரும் கிரிக்கெட் விழாவில்

இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட இலங்கை அணி வந்துள்ளது.

போட்டிகளின் விவரம்

1. டிசம்பர் 2-6 சென்னை
2. டிசம்பர் 10-14 டெல்லி
3. டிசம்பர் 18-22 கான்பூர்

இந்திய அணி

ராகுல் டிராவிட் (தலைவர்), சேவாக் (துணை தலைவர்), டெண்டுல்கர், யுவராஜ் சிங், லஷ்மண், கங்குலி, கைப், டோனி, ஹர்பஜன்சிங், முரளி கார்த்திக், இர்பான் பதான், அகார்கர், கும்ப்ளே காம்பீர், ஆர்.பி.சிங்.

இலங்கை அணி
அட்டப்பட்டு (தலைவர்), சமிந்தாவாஸ் (துணைத்தலைவர்), மகிள ஜெயவர்த்தனே, சங்க காரா, தில்சான், தரங்கா, சமரவீரா, மகரூப், தில்காரா பெர்னாண்டோ, முரளீதரன், குணவர்த்தனே, மலிங்கா, வீரகூன், முபாராக்.

அறிஞர்
29-11-2005, 04:46 PM
கங்குலி, லஷ்மண், கும்ப்ளே மீண்டும் அணிக்கு வந்துள்ளனர். தங்கள் திறமையை காட்டவேண்டிய கட்டாயம் உள்ளது.

கார்த்திக்குக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது.. சந்தேகமே...

டோனி முதல் முறையாக டெஸ்ட் அணியில் களமிறங்குகிறார். தினேஷ் கார்த்திக் பாவம்.
----------
இலங்கை அணியிலும் மாற்றம் உள்ளது. ஜெயசூர்யா, சோய்ஷா, அர்ணால்ட் போன்றவர்கள் இடம்பெறவில்லை.

முரளிதரன்... டெண்டுல்கரை குறி வைப்பதாக கூறியுள்ளார். டெண்டுல்கர் மட்டையால் பதிலளிப்பார் என நம்புவோம்

அறிஞர்
29-11-2005, 04:59 PM
2001ல் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை வெற்றி பெற்றது. அதற்கு இந்தியா சரியாக பதிலடி கொடுக்கும் என எதிர் பார்க்கலாம்.

ஒரு நாள் போட்டியில் தோல்வியுற்ற இலங்கையும் பதிலடி கொடுக்க ஆயத்தமாகிறது.
------
இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்தியா..

கத்துக்குட்டிகளான ஸிம்பாவேயை 2-0 என்ற கணக்கிலும், பங்களாதேஸை 2-0 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
---------
இலங்கை அணி

தங்கள் நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர்களில்

பங்களாதேஷை 2-0 என்ற கணக்கிலும், மேற்கு இந்தியாவை 2-0 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை 1-1 எனத்தொடரை சமன் செய்துள்ளது.

நியூசிலாந்தில் நியூசிலாந்திற்கு எதிராக, இலங்கை (0-1) தோற்றுள்ளது

இளையவன்
29-11-2005, 07:28 PM
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினர் சந்தித்த மோசமான தோல்வியை அடுத்து இலங்கை அணியின் துணைத்தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை துணைத்தலைவராக இருந்த மகேல ஜெயவர்த்தன நீக்கப்பட்டு வேகப் பந்து வீச்சாளர் சமிந்தவாஸிடம் அப்பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறிஞர்
29-11-2005, 08:28 PM
இது என்ன புதுக்கதை அன்பரே...

ஜெயவர்த்தனே என்ன தவறு செய்தார்.

தகவலுக்கு நன்றி

aren
30-11-2005, 02:46 AM
இது என்ன புதுக்கதை அன்பரே...

ஜெயவர்த்தனே என்ன தவறு செய்தார்.

தகவலுக்கு நன்றி

உணமைதான் அறிஞரே. குழுவிற்கு கொஞ்சம் அனுபவசாலிகளின் அனுகூலம் தேவையென்பதால் வாஸ் அவர்களுக்கு உபதலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்னால் இந்த பதவி ஜெயவர்தனேக்கு ஏன் கொடுத்தார்கள் என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. அவருக்கு இன்னும் அனுபவம் தேவை.

நல்ல தலைவர் என்று விருதுவாங்கிய அட்டபட்டுவே இந்தியாவில் வழி தெரியாமல் தடுமாறினார். ஆகையால் கொஞ்சம் அனுபவசாலிகள் முடிவெடுத்தால் போட்டி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.

aren
30-11-2005, 02:50 AM
முரளிதரன் பந்தை டெஸ்ட் மாட்சுகளில் ஆடுவது மிகவும் கடினம். அதிலும் அவர் டெண்டுல்கரை குறி வைத்திருப்பது கண்டு கொஞ்சம் பயமாகவே உள்ளது.

மேற்கு இந்தியத் தீவின் லாரா இப்படி போடு போடு என்று போடுகிறார். ஆனால் டெண்டுல்கர் அதை ஈடுகட்டி ஆடுவாரா என்று தெரியவில்லை.

டெண்டுல்கர் சரியாக ஆடவில்லையென்றால் இந்தியா இலங்கையை வெல்வது கொஞ்சம் கடினமே. ஏனெனில் திராவிடைத் தவிற வேறு யாரும் முரளி பந்துவீச்சை சமாளிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

இந்த டெஸ்ட் தொடர் திராவிட் மற்றும் சாப்பலுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்.

தென் ஆப்பிரிக்கா நன்றாகவே ஆப் அடித்துவிட்டு போயிருக்கிறது. ஆகையால் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டியது இந்தியாவின் முனைப்பாகவேயிருக்கும்.

ஆனால் முடியுமா??

ஜெயசூரியா இல்லாதது ஒரு விதத்தில் நல்லதாக இருந்தாலும், குழுவில் அட்டபட்டு, ஜெயவர்தனே, சங்காகரா மற்றும் தில்ஷான் ஆகிய திறமாகையாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்று என்னும்பொழுது வயிற்றில் புளியைக் கரைத்ததுபோலுள்ளது.

பரஞ்சோதி
30-11-2005, 03:27 AM
ஆரென் அண்ணா அளவுக்கு அதிகமாக பயப்படுகிறார்கள்.

முரளிதரன் இதுவரை இந்தியாவில் பிரகாசித்தது இல்லை, மேலும் டெஸ்ட் போட்டிகளில் லட்சுமணன் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அங்கே எப்படி முரளியோ அப்படி நமக்கு பதான் பயமுறுத்தும் பந்து வீச்சாளர். டெஸ்ட் கிங் கும்ளே இருக்கிறார்.

இலங்கை அணியினர் மனதளவில் தளர்ந்து போயிருக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் கூட அவர்களது பந்து வீச்சை உத்தப்பா, தவான், ஸ்ரீராம், வேணு கோபால் ராவ் அடித்து நொறுக்கினார்கள்.

சச்சினை பொறுத்த மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கவனமாக ஆடுகிறார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் சச்சின் அதிக ரன் எடுக்காதற்கு காரணம், அளவு சரியாக வீசப்பட்ட பந்து, தொடர்ந்து 5 பந்துக்கள் அடிக்கமுடியவில்லை என்றால் ஆறாவது பந்தில் சச்சின் ரிஸ்க் எடுத்து அடிக்க வேண்டிய நிலை, ஏனென்றால் அவர் என்றும் பந்து வீச்சாளரை தன் முன்னால் திறம்பட செயல்பட விடமாட்டார். அப்படி செய்கையில் தன் கணிப்பு தவறாகி அவுட் ஆகி வந்தார். ஆனால் இலங்கை அணி அவ்வாறு அல்ல.

வாஸ், பெர்ணாண்டோ, முரளி மட்டுமே பந்து வீச்சாளர்கள், அதிலும் முரளி மட்டுமே இந்திய மைதானங்களில் பயமுறுத்தக்கூடியவர்.

என்னைப் பொறுத்தவரை இந்த தொடரை 3-0 என்று இந்தியா வெல்ல முடியும்.

அறிஞர்
30-11-2005, 03:45 AM
பரம்ஸ் கூற்றும் சரியே....

என்னை பொறுத்த வரையில் 1-1 என்ற சம நிலை ஏற்படலாம். அல்லது 2-0 என்று முடியும்.

ஒரு ஆட்டம் டிராவில் முடியலாம். குறிப்பாக சென்னையின் காலநிலை.

இன்று நன்றாக வெயில் அடிக்கிறது. நாளை எப்படியோ....

mania
02-12-2005, 07:33 AM
இன்று காலையில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. மேற்கொண்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.:eek: எப்படியும் நாளை மதியத்துற்குள் ஆட்டம் துவங்க வாய்ப்பில்லை(மேற்கொண்டு அதிக மழை இல்லாவிட்டால்)???
அன்புடன்
மணியா.....:eek:

gragavan
02-12-2005, 07:37 AM
அடடே! எவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட மேட்ச். மழையால் சென்னையில் மேட்ச் கேன்சலாவது இதுதான் முதன்முறையா?

mania
02-12-2005, 07:57 AM
அடடே! எவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட மேட்ச். மழையால் சென்னையில் மேட்ச் கேன்சலாவது இதுதான் முதன்முறையா?

அய்யா......மேட்ச் கேன்சல் ஆகவில்லை......:rolleyes: :D .முதல் நாள் ஆட்டம் தான் கைவிடப்பட்டது.....:) இன்னும் 4 நாட்கள் ஆட்டம் இருக்கிறது.ஆடுதளத்தின் தன்மையை வைத்து பார்க்கும் போது 4 நாட்கள் தாராளமாக போதும் மேட்சை முடிக்க...:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
02-12-2005, 08:22 AM
சரி சரி இப்பயாச்சும் ரசிகப் பெருமக்களை ஏமாத்தாம ஏதாச்சும் இண்டோர் ஸ்டேடியத்திலாவது மேட்ச் நடத்தீருங்க...
என்ன டோனி அடிக்கிற சிக்ஸரில ஏதாச்சும் கண்ணாடி பல்ப்பு ஒடையும், பரவாயில்லை :D

mania
02-12-2005, 08:33 AM
சரி சரி இப்பயாச்சும் ரசிகப் பெருமக்களை ஏமாத்தாம ஏதாச்சும் இண்டோர் ஸ்டேடியத்திலாவது மேட்ச் நடத்தீருங்க...
என்ன டோனி அடிக்கிற சிக்ஸரில ஏதாச்சும் கண்ணாடி பல்ப்பு ஒடையும், பரவாயில்லை :D

:rolleyes: :rolleyes: :D :D நம்ம ஊரு இண்டோர் ஸ்டேடியத்தில் புக் கிரிக்கெட் தான் ஆடமுடியும்......:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
02-12-2005, 09:57 AM
இப்போ அடிக்கிற மழையின் நிலவரத்தை பார்த்தால், நாளையும் மழை இருக்கலாம்.. அதனால் 3 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கிறது.... சென்னை மேட்ச் கண்டிப்பா ட்ராதான்..........

mania
02-12-2005, 10:05 AM
இப்போ அடிக்கிற மழையின் நிலவரத்தை பார்த்தால், நாளையும் மழை இருக்கலாம்.. அதனால் 3 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கிறது.... சென்னை மேட்ச் கண்டிப்பா ட்ராதான்..........
சரி.....ப்ரதீப்பே சொல்லிட்டான்......:D .சேரனுடன் மேட்ச் (அல்லது மழை)பாக்க வரியா....??:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
02-12-2005, 10:08 AM
அய்யா......மேட்ச் கேன்சல் ஆகவில்லை......:rolleyes: :D .முதல் நாள் ஆட்டம் தான் கைவிடப்பட்டது.....:) இன்னும் 4 நாட்கள் ஆட்டம் இருக்கிறது.ஆடுதளத்தின் தன்மையை வைத்து பார்க்கும் போது 4 நாட்கள் தாராளமாக போதும் மேட்சை முடிக்க...:D
அன்புடன்
மணியா...:Dமன்னிச்சிருங்க தல...எனக்குத் தெரிஞ்ச கிரிக்கெட் எந்துன்னா...மட்டையக் கொண்டு பந்தத் தட்டுறது. ஃபோரு சிக்சரு அவுட்டு....அதுக்கு மேல நா அவுட்டு.

நாலு நாளு வெளையாண்டாப் போதுமா.....இப்படிக் கொறஞ்சு கொறஞ்சுதான் ஒன் டே மேச்ச கண்டு பிடிச்சாங்களோ....(தெரியாமத்தான் கேக்குறேன்).

gragavan
02-12-2005, 10:09 AM
இப்போ அடிக்கிற மழையின் நிலவரத்தை பார்த்தால், நாளையும் மழை இருக்கலாம்.. அதனால் 3 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கிறது.... சென்னை மேட்ச் கண்டிப்பா ட்ராதான்..........என்ன முடிவே எடுத்துட்டியா? கிரிக்கட் ரசிகர்கள் இதக் கேட்டா....ட்ராயர் கூட மிஞ்சாது.

மன்மதன்
02-12-2005, 10:11 AM
சரி.....ப்ரதீப்பே சொல்லிட்டான்......:D .சேரனுடன் மேட்ச் (அல்லது மழை)பாக்க வரியா....??:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பார்க்காலாமேஏஏஏஏஏஏஏஏ................:rolleyes: :rolleyes: :rolleyes: சேரா எங்கேப்பா இருக்கே..:D :D :D

poo
02-12-2005, 10:12 AM
மன்மதன்..ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா நீங்க மேட்ச் பார்ப்பீங்க... என்ஜாய் பண்ணுங்க...

மன்மதன்
02-12-2005, 10:13 AM
என்ன முடிவே எடுத்துட்டியா? கிரிக்கட் ரசிகர்கள் இதக் கேட்டா....ட்ராயர் கூட மிஞ்சாது.

அட நீ ஒண்ணு... மழை வரும்னு தெரிஞ்சுதான் ரசிகர்கள் சேப்பாக் பக்கமே வரலையாமே......அட்ரா சக்கை.......:D :D

mania
02-12-2005, 10:14 AM
மன்னிச்சிருங்க தல...எனக்குத் தெரிஞ்ச கிரிக்கெட் எந்துன்னா...மட்டையக் கொண்டு பந்தத் தட்டுறது. ஃபோரு சிக்சரு அவுட்டு....அதுக்கு மேல நா அவுட்டு.

நாலு நாளு வெளையாண்டாப் போதுமா.....இப்படிக் கொறஞ்சு கொறஞ்சுதான் ஒன் டே மேச்ச கண்டு பிடிச்சாங்களோ....(தெரியாமத்தான் கேக்குறேன்).

:D :D உண்மைதான் ராகவன்.....:rolleyes: :D .ஒரு முறை ஆஸ்த்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடக்கவேண்டிய ஐந்து நாள் மேட்ச் மழையினால் குறைந்து குறைந்து ஒரு நாள் தான் மீதியிருந்தது. ரசிகர்களை ஏமாற்றவேண்டாமே என்று ஆரம்பித்த ஆட்டம் இந்த ஒரு நாள் ஆட்டம்.அப்படியே தங்கிவிட்டது.....!!!!????:D :D
அன்புடன்
மணியா...:D

poo
02-12-2005, 10:16 AM
தலை.. பாதி மேட்சு வீணாப்போனதால வந்ததுதான் 20-20 போட்டியா?!! ஹிஹி!

aren
02-12-2005, 10:18 AM
நாளை நிச்சயம் ஆட்டம் ஆரம்பிக்கவேண்டும். ஒரு நாள் போட்டியும் சென்னையில் நடக்கவில்லை. இதுவும் நடக்காமல் போனால் நம் மக்கள் ரொம்பவும் நொந்துவிடுவார்கள்.

தலை - கேட் கலெக்ஷனே இல்லையாமே? உண்மையா? நம்ம பசங்கள் எப்படி கடலை, மாங்காய் எல்லாம் வித்து பணம்பண்ண முடியும்.

நாளை ஆட்டம் நடந்தால் நன்றாக இருக்கும். வருணபகவானுக்கு ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்யலாமா? அவர் மனது வைத்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.

aren
02-12-2005, 10:19 AM
கங்குலிக்கு முதல் டெஸ்டில் இடமிருக்காது என்று எல்லோரும் பேசிக்கிறார்களே. இது உண்மையா?

aren
02-12-2005, 10:19 AM
தலை.. பாதி மேட்சு வீணாப்போனதால வந்ததுதான் 20-20 போட்டியா?!! ஹிஹி!

20 - 20 மாட்சில் மழை வந்தால் என்ன செய்வது, 10 - 10 போட்டி வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

pradeepkt
02-12-2005, 10:20 AM
நம்ம வருண பகவானை வேண்டி அவரு இன்னும் கொஞ்சம் கொட்டிறப் போறாரு.
மேட்ச் நடக்கட்டுமின்னு நான் வாழ்த்துறேன்.

aren
02-12-2005, 10:22 AM
நம்ம வருண பகவானை வேண்டி அவரு இன்னும் கொஞ்சம் கொட்டிறப் போறாரு.
மேட்ச் நடக்கட்டுமின்னு நான் வாழ்த்துறேன்.

தலை - பிரதீப் ஏதோ பொடிவைத்து பேசுவது மாதிரி இருக்குது. கொஞ்சம் கவனியுங்கள். இல்லைன்னா ஒரு நாள் போட்டியில் நடந்ததுமாதிரி ஆகிடப்போகுது.

mania
02-12-2005, 10:23 AM
கங்குலிக்கு முதல் டெஸ்டில் இடமிருக்காது என்று எல்லோரும் பேசிக்கிறார்களே. இது உண்மையா?

கங்கூலி முதல் டெஸ்டில் ஆடுவார் என்றே தோணுகிறது.....!!!!????:rolleyes: :D இன்னும் அதிகார பூர்வமான அறிவிப்பு வரவில்லை....:D
அன்புடன்
மணியா...:D

aren
02-12-2005, 10:24 AM
கங்கூலி முதல் டெஸ்டில் ஆடுவார் என்றே தோணுகிறது.....!!!!????:rolleyes: :D இன்னும் அதிகார பூர்வமான அறிவிப்பு வரவில்லை....:D
அன்புடன்
மணியா...:D

ஆடவேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் திராவிடும், சாப்பலும் நிருபர்களுடன் பேசியது அவ்வளவு சுவாரசியமாக இல்லை. அதனால்தான் கொஞ்சம் வருத்தம்.

பென்ஸ்
02-12-2005, 10:24 AM
...........................
தலை - கேட் கலெக்ஷனே இல்லையாமே? உண்மையா? நம்ம பசங்கள் எப்படி கடலை, மாங்காய் எல்லாம் வித்து பணம்பண்ண முடியும்.
.

அட.. இப்படியும் ஒரு சைட் பிஸ்ன்ஸ் வைத்திருக்கிறிர்களா???:p :p :p :D :D :D

aren
02-12-2005, 10:25 AM
அட.. இப்படியும் ஒரு சைட் பிஸ்ன்ஸ் வைத்திருக்கிறிர்களா???:p :p :p :D :D :D

இல்லையாபின்னே. எப்படி பொழப்பு நடத்துவது.

mania
02-12-2005, 10:29 AM
நாளை நிச்சயம் ஆட்டம் ஆரம்பிக்கவேண்டும். ஒரு நாள் போட்டியும் சென்னையில் நடக்கவில்லை. இதுவும் நடக்காமல் போனால் நம் மக்கள் ரொம்பவும் நொந்துவிடுவார்கள்.

தலை - கேட் கலெக்ஷனே இல்லையாமே? உண்மையா? நம்ம பசங்கள் எப்படி கடலை, மாங்காய் எல்லாம் வித்து பணம்பண்ண முடியும்.

நாளை ஆட்டம் நடந்தால் நன்றாக இருக்கும். வருணபகவானுக்கு ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்யலாமா? அவர் மனது வைத்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.

சீசன் டிக்கெட் விற்பனைக்கே கொடுக்கவில்லையே...:D .அதனால் தான் மழையை பார்த்துக்கொண்டு டிக்கெட் வாங்கலாம் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.:)
நம்ம மக்களே பீச்சிலிருந்துதானே கடலை....????? வாங்கி வந்தார்கள்......!!! மீதியிருந்த கடலையைத்தான் பீச்சில் (கடலில்):rolleyes: :rolleyes: போட்டார்கள்....!!!!:D :D
அன்புடன்
மணியா....:D

mania
02-12-2005, 10:38 AM
தலை - பிரதீப் ஏதோ பொடிவைத்து பேசுவது மாதிரி இருக்குது. கொஞ்சம் கவனியுங்கள். இல்லைன்னா ஒரு நாள் போட்டியில் நடந்ததுமாதிரி ஆகிடப்போகுது.

ப்ரதீப்பு கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கான்.....:rolleyes: :D .ஏதோ இமயமலைக்கு போயிட்டு வந்தாலாவது சரியாகும்னு பாத்தா.....:rolleyes: :rolleyes: .!!!!!இனிமே கொஞ்ச நாளிலே இமய மலைக்கு போனவங்களைத்தான் கேக்கணும்....(மலைக்கு ஏதாவது ஆயிடிச்சான்னு)....!!!!!:rolleyes: :rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D

மன்மதன்
02-12-2005, 10:39 AM
சீசன் டிக்கெட் விற்பனைக்கே கொடுக்கவில்லையே...:D .அதனால் தான் மழையை பார்த்துக்கொண்டு டிக்கெட் வாங்கலாம் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.:)
நம்ம மக்களே பீச்சிலிருந்துதானே கடலை....????? வாங்கி வந்தார்கள்......!!! மீதியிருந்த கடலையைத்தான் பீச்சில் (கடலில்):rolleyes: :rolleyes: போட்டார்கள்....!!!!:D :D
அன்புடன்
மணியா....:D

பூ, சேரா.........தலை போட்டு வாங்குறாருப்பூ..............:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
02-12-2005, 10:58 AM
ப்ரதீப்பு கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கான்.....:rolleyes: :D .ஏதோ இமயமலைக்கு போயிட்டு வந்தாலாவது சரியாகும்னு பாத்தா.....:rolleyes: :rolleyes: .!!!!!இனிமே கொஞ்ச நாளிலே இமய மலைக்கு போனவங்களைத்தான் கேக்கணும்....(மலைக்கு ஏதாவது ஆயிடிச்சான்னு)....!!!!!:rolleyes: :rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D
தலை,
நான் எப்பவுமே ஒரே மாதிரிதான் இருக்கேன்... ஹி ஹி
ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான்... ஆனால் கைவிட மாட்டான்...
நான் ஒரு தடவை சொன்னா...
சாரி, ஏதோ லைட்டா பாதிப்பு இருக்கு போல :D

mania
02-12-2005, 11:03 AM
தலை,
நான் எப்பவுமே ஒரே மாதிரிதான் இருக்கேன்... ஹி ஹி
ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான்... ஆனால் கைவிட மாட்டான்...
நான் ஒரு தடவை சொன்னா...
சாரி, ஏதோ லைட்டா பாதிப்பு இருக்கு போல :D

:D :D :D சும்மா லைட்டா இல்லை.....!!!! சுவேது சாப்பிட்ட லைட்டா மாதிரி.....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

gragavan
02-12-2005, 11:11 AM
தலை - பிரதீப் ஏதோ பொடிவைத்து பேசுவது மாதிரி இருக்குது. கொஞ்சம் கவனியுங்கள். இல்லைன்னா ஒரு நாள் போட்டியில் நடந்ததுமாதிரி ஆகிடப்போகுது.கவலையே படாதீங்க ஆரென். பிரதீப்பு வக்கிற பொடி எது தெரியுமா? இட்டிலிக்கும் தோசைக்கும் வக்கிற பொடிதான்....அதுக்கு மேல....ம்ஹூம்.

gragavan
02-12-2005, 11:15 AM
தலை,
நான் எப்பவுமே ஒரே மாதிரிதான் இருக்கேன்... ஹி ஹி
ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான்... ஆனால் கைவிட மாட்டான்...
நான் ஒரு தடவை சொன்னா...
சாரி, ஏதோ லைட்டா பாதிப்பு இருக்கு போல :Dநல்ல வேள பாதிதான் இருக்குன்னு சொல்லாம விட்டீங்களே. அப்புறம் மீதிய இமயத்துலதான் தேடனும்.

poo
03-12-2005, 05:25 AM
நிருபர்: நாளைய போட்டியில் யார் ஓப்பனிங்?

கங்குலி : நான்., என்னுடன் சச்சின் அல்லது ஷேவாக் !!

--- இப்படி அன்று ஒருநாள் பேட்டியில் சொன்ன கங்குலி ஞாபகம் வருகிறார்!!

கங்குலியால் யுவராஜுக்கும், கைப்புக்கும் வாய்ப்பே இருக்காதுபோல..

கங்குலி இல்லாமல் ஐந்து பவுலர்கள் , ஐந்து பேட்ஸ்மேன்கள் + தோனி என வீரர்கள் தேர்வு செய்யலாம்.

aren
03-12-2005, 05:30 AM

கங்குலியை எடுத்துவிட்டு 11-ல் இல்லாமல் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் கங்குலையைச் சேர்த்தே 11 இருக்கும்.

ஷேவாக், காம்பீர், திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லஷ்மன், தோனி, பதான், ஹர்பஜன், கும்பளே மற்றும் அகர்கர் அல்லது ஆர்.பி. சிங்.

யுவராஜ், கைஃப் மற்றும் கார்திக்கிற்கு சான்ஸ் இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்படியில்லையெனில் ஆர்.பி.சிங்கிற்கு பதில் யுவராஜை களத்தில் இறக்கலாம்.

aren
03-12-2005, 05:31 AM
ஆனால் மழையும், மேகமூட்டமுமாக இருப்பதால் ஆர்.பி.சிங் ஆடுவதற்கு சான்ஸ் இருக்கிறது.

poo
03-12-2005, 06:02 AM
ஆட்டத்தின் நாள் குறைவாக இருக்கையில்..,
பேட்ஸ்மேன்களை அதிகம் வைத்திருப்பது அறிவீனம். மெயின் பவுலர்கள் ஐந்து பேர் வைத்து டாஸ் ஜெயித்தால் பவுலிங் தேர்வு செய்யலாம்.

யுவராஜ் உள்ளே வரவேண்டாம். அவர் வரும்பட்சத்தில் பதானோடு கங்குலி துவக்குவாரா?!!

இந்தியாவின் கோழைத்தனத்திற்கு இன்னொரு உதாரணமாகவே வீரர்கள் தேர்வு இருக்கும்.

டெஸ்ட் போட்டிகளிலும்கூட அதிக பேட்ஸ்மேன்களோடு ஆடுவது சரியல்ல.. குறைவான பந்து வீச்சாளர்களுக்கு அதிக பளு கொடுத்து சோர்வடைய வைப்பதே இந்தியாவின் வேலை.

பகுதி நேர பந்து வீச்சாளர்களையெல்லாம் நம்பி டெஸ்ட் ஆடுவது நம் அணியாகத்தான் இருக்கும்.

பந்து வீச்சில் இந்தியா பலமடையாததிற்கு இந்த புறக்கணிப்பும் ஒரு காரணம்.

ஆடப்போவது மூன்றுக்கும் குறைவான நாட்கள்.. பேட்ஸ்மேன்களைவிட பவுலர்களின் கையில்தான் ஆட்டம் இருக்கும்!

பரஞ்சோதி
03-12-2005, 06:15 AM
தலை, 5வது நாள் ஆட்டம் நடக்குமா, நடக்காதா என்று தெரியவில்லை.

இருந்தாலும் கங்குலி 11க்குள் இருக்கிறாரா? என்று மட்டுமாவது சொல்லச் சொல்லுங்க, இல்லை என்றால் இருக்கிறார் இல்லை என்று காசு சுண்டிப் போட்டாவது சொல்லச் சொல்லுங்க.

இளையவன்
03-12-2005, 06:26 AM
கும்ளே ஹர்பஜன் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் நிச்சயம் அணியில் இருப்பார்கள் என நம்புகிறேன். அகார்கர் கம்பீர் மற்றும் ஆர்.பி. சிங்கிற்கு வாய்ப்பிருக்காது என நினைக்கிறேன்.

பரஞ்சோதி
03-12-2005, 07:18 AM
இளையவன் முதலில் போட்டி நடக்குமா என்று தெரியவில்லையே. அதன் பின்னர் தானே ஆட்டக்காரர்கள். முரளி கார்த்திக் சந்தேகம் தான். மேலும் தரை ஈரமாகி இருப்பதால் ஸ்பின் பந்து வீச்சாளர் 3 பேர் இருக்க மாட்டாங்க.

aren
03-12-2005, 07:25 AM
நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். கங்குலி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களத்தில் இறங்கலாம்.

யுவராஜிக்கு சான்ஸ் இருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

காம்பீருக்கு பதில் கங்குலியை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வாய்ப்பிருக்கிறது.

aren
03-12-2005, 07:26 AM
இளையவன் முதலில் போட்டி நடக்குமா என்று தெரியவில்லையே. அதன் பின்னர் தானே ஆட்டக்காரர்கள். முரளி கார்த்திக் சந்தேகம் தான். மேலும் தரை ஈரமாகி இருப்பதால் ஸ்பின் பந்து வீச்சாளர் 3 பேர் இருக்க மாட்டாங்க.

நீங்கள் சொல்வதும் சரிதான்.

முதலில் மாட்ச் ஆரம்பமாகட்டும், பின்னர் பார்க்கலாம்.

poo
03-12-2005, 07:33 AM
மேட்ச் நடக்காததும் கங்குலிக்கு ஒருவகையில் நல்லதே!!

அவர் இந்தத் தொடர் முழுக்க இடம்பெற நல்ல வாய்ப்பு!! ஹிஹி!

பரஞ்சோதி
03-12-2005, 07:40 AM
நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். கங்குலி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களத்தில் இறங்கலாம்.

யுவராஜிக்கு சான்ஸ் இருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

காம்பீருக்கு பதில் கங்குலியை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வாய்ப்பிருக்கிறது.

அப்போ பலியாடு கங்குலியா :D , முன்பு அவர் தான் தனக்கு பிடிக்காதவங்களை பலியாடு ஆக்குவார்.

அறிஞர்
03-12-2005, 04:15 PM
என்னுடைய கூற்று.. கங்குலிக்கு இடம் கொடுப்பது சந்தேகமே.

யுவராஜ் நல்ல பார்மில் இருப்பதால் அவர் டீமில் இருப்பார். ஒரு பவுலரை நீக்கினால் மட்டுமே.. கங்குலி உள்ளே வருவார்.

pradeepkt
03-12-2005, 04:27 PM
முதல்ல ஆட்டம் என்னாச்சுன்னு பாருங்க...

அறிஞர்
04-12-2005, 02:36 AM
முதல்ல ஆட்டம் என்னாச்சுன்னு பாருங்க... மழையோ மழைன்னு கொட்டுதாம்....

இன்று 90 சதவீதம் இருக்காது.. நாளையாவது இருக்கான்னு பார்போம்.

இது மாதிரியான சூழலுக்கு புதிய இரண்டு நாள் ஆட்டம் என ஒன்றை உருவாக்கலாம். 4 இன்னிங்க்ஸ் 50 ஓவர்கள் வைத்து விளையாடலாம்.

இளையவன்
04-12-2005, 03:08 AM
இன்றைய போட்டியும் கைவிடப்பட்டுள்ளது. நாளையும் நடப்பது சந்தேகமே.

பரஞ்சோதி
04-12-2005, 05:23 AM
இன்னும் 2 இரண்டு நாட்கள், ஊம் விளையாடவே முடியாது.

நம்ம வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்திருக்குது.

மன்மதன்
04-12-2005, 03:38 PM
3 நாட்கள் நடக்கவில்லை.. ஒருவேளை நாளை மைதானம் ரெடி ஆகி விட்டால் 2 நாட்களுக்காக டெஸ்ட் மேட்ச் நடக்குமா?? நடத்துவது வீண்தானே..???

aren
05-12-2005, 01:11 AM
ஐந்து நாட்களும் மாட்ச் நடக்காவிட்டால் அடுத்த இரண்டு டெஸ்டுகளுக்கும் எப்படி ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுப்பார்கள். கங்குலியை என்ன செய்வார்கள். தேர்வுக்குழுவிற்கு கொஞ்சம் கஷ்டமான நேரம் இப்பொழுது.

பரஞ்சோதி
05-12-2005, 03:11 AM
இன்று வெயில் அடிப்பதால், மைதானம் தயார் செய்யப்பட்டப்பின்னர் ஆட்டம் தொடங்கலாம் என்ற நிலை.

aren
05-12-2005, 03:35 AM
ஆட்டம் தொடங்க தாமதமாகியுள்ளது. பிட்ச் நன்றாக உள்ளது. ஆனால் மைதானம் கொஞ்சம் ஈரமாக உள்ளது. அதை இப்பொழுது கவனிக்கிறார்கள். இன்று ஆட்டம் நிச்சயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

poo
05-12-2005, 04:29 AM
மேட்ச் அரை நாள் நடந்தால்கூட போதும்.. கங்குலியை ஓப்பனிங் இறக்கி ஒருவழி பண்ணிடலாம்!! (ஹிஹி.. கங்குலியைத்தான்!!)

poo
05-12-2005, 06:16 AM
மேட்ச் 3 மணிக்கு ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறதாம்ல..

அட.. மக்கா.. இந்தப் பொறுமையை ஒண்டே மேட்சுல காட்டியிருந்தீங்கன்னா ஒரு 10 ஓவராச்சும் பார்த்திருப்போமய்யா..

மன்மதன்
05-12-2005, 07:11 AM
மேட்ச் 3 மணிக்கு ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறதாம்ல..

அட.. மக்கா.. இந்தப் பொறுமையை ஒண்டே மேட்சுல காட்டியிருந்தீங்கன்னா ஒரு 10 ஓவராச்சும் பார்த்திருப்போமய்யா..

என்னத்த பார்த்து......என்னத்த ..........:D :D

இளையவன்
05-12-2005, 07:30 AM
ஒரு வழியா இன்று போட்டி நடக்கும் என்பது உறுதியாயிடுச்சு. இந்திய நேரப்படி 3மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆகக் குறைந்தது 38 ஓவர்கள் )

இளையவன்
05-12-2005, 08:09 AM
ராவிட் ரொஸ் வென்று முதலில் Bat செய்ய முடிவெடுத்துள்ளார்.

இளையவன்
05-12-2005, 08:11 AM
யுவராஜ், கைப் அணியில் இல்லை. கங்குலி உள்ளார்

இளையவன்
05-12-2005, 08:24 AM
இந்திய அணி: சேவாக், கம்பீர், திராவிட், லக்ஸ்மன், சச்சின், கங்குலி, தோனி, பதான், அகார்கர், ஹர்பஜன், கும்ளே.

இளையவன்
05-12-2005, 08:50 AM
கம்பீர் அவுட்

பரஞ்சோதி
05-12-2005, 08:55 AM
இந்த ஆட்டத்திலும் இந்தியா தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினால் அடுத்த போட்டிகளில் அது எதிரொலிக்கும்.

இளையவன்
05-12-2005, 09:20 AM
சேவாக் 35 (28) அவுட். இந்திய 2/45

இளையவன்
05-12-2005, 09:24 AM
ராவிட்டுடன் சச்சின் இணைந்துள்ளார். பொறுமையாக விளையாடி இந்தப் போட்டியில் சதம் காண்பாரா எனப் பார்ப்போம்.

poo
05-12-2005, 09:27 AM
பந்து உருளுதாமில்ல...!!.

சீக்கிரமா அடிச்சி 50 ஓவர்ல டிக்ளேர் பண்ணனும்யா.. (ஹிஹி..)

பரஞ்சோதி
05-12-2005, 09:39 AM
ஆமாம் பந்து எம்ப மாட்டேங்குது.

சேவாக் வழக்கம் போல் 30 அடித்து கிறங்கி போயிட்டார். இனிவரும் போட்டிகளில் நின்று நிலைத்தாட வேண்டும்.

சச்சின், டிராவிட் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டமாகவே ஆடுவார்கள் என்று கருதுகிறேன்.

poo
05-12-2005, 09:51 AM
ஷேவாக்.. 20-20 மேட்ச் ஆடத்தான் லாயக்கு என்பதுபோல சமீபகாலங்களில் ஆடுகிறார்!

பார்க்கலாம்.. கவுண்டியில் நல்ல காசு பார்க்க வாய்ப்பிருக்கு!

கங்குலி கையில் பேட் எடுக்கவிட மாட்டார்களென நினைக்கிறேன்!

போகிறபோக்கில் 5-வது பவுலர் வேண்டுமெனில் காம்பிரை கழட்டிவிட வாய்ப்பாயிடும்போல... கொஞ்சம் சுதாரிச்சிக்கனும் கவுதம்!

இளையவன்
05-12-2005, 10:51 AM
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய 2/90

ராவிட் 30*
சச்சின் 11*

வாஸ் 2 விக்கட்

aren
05-12-2005, 12:37 PM
பந்து உருளுவதால் கும்பளேயின் காட்டில் மழையாக இருக்கும். அதுபோல் கங்குலி கையிலும் பந்தை கொடுத்து நேராகப் போடச்சொல்லலாம். விக்கெட் கிடைத்தாலும் கிடைக்கும் கங்குலிக்கு.

டெண்டுல்கர் இப்படி பயந்து பயந்து ஆடுவதைப் பார்த்தால் 35ஆவது சதம் சென்னையில் நாளை நடக்கலாம் போலிருக்கிறது.

aren
05-12-2005, 12:40 PM
மூன்று நாட்களாக நம்ம மக்களுக்கு சுண்டல் வியாபாரமாகால் டல்லாக இருந்தார்கள். இன்றாவது கொஞ்சம் விற்றிருக்கும் என்று நினைக்கிறேன். போட்ட முதல் திரும்பி வருமா? "தலை" தப்பிக்குமா?

aren
05-12-2005, 12:58 PM
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் இதே டீம்தான் என்று தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அப்படியானால் கங்குலிக்கு இன்னொரு சந்தர்பம் கிடைத்திருக்கிறது. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

அறிஞர்
05-12-2005, 02:06 PM
அப்படி இப்படின்னு.. மேட்ச் நடத்திவிட்டார்கள்...

கம்பீர் ஒரு சில மேட்சை தவிர எதிலும் பிரகாசிப்பதாக தெரியவில்லையே...

aren
05-12-2005, 02:09 PM
அப்படி இப்படின்னு.. மேட்ச் நடத்திவிட்டார்கள்...

கம்பீர் ஒரு சில மேட்சை தவிர எதிலும் பிரகாசிப்பதாக தெரியவில்லையே...

அவர் இப்படியே ஆடினால் இன்னும் கொஞ்ச நாளில் அவருக்கு பதிலாக இன்னொரு தொடக்க ஆட்டக்காரரை தேடும்படியாகிவிடும்.

கர்நாடகாவின் ராபின் உத்தப்பா நன்றாக ஆடுகிறார். அவரை உள்ளே கொண்டு வந்தாலும் வரலாம்.

காம்பீர் கொஞ்சம் பார்த்து நிதானமாக ஆடினால் பிழைத்துக்கொள்ளலாம்.

pradeepkt
06-12-2005, 03:55 AM
இப்பத்தான் சாப்பிட்டுக்கிட்டே பாத்துட்டு வரேன்..
டெண்டுல்கரைப் போட்டுத் தள்ளிட்டாப்புல முரளி.
அடுத்த மேட்ச்சில கண்டிப்பா அந்த செஞ்சுரியை எடுத்திருவாருன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்

இளையவன்
06-12-2005, 04:15 AM
இந்தியா 6/117. எல்லா முன்னணி வீரர்களும் சொற்ப ரண்களுக்குள் ஆட்டமிழந்துள்ளனர்.

ராவிட் 32
சச்சின் 22
லக்ஸ்மன் 5
கங்குலி 5

பரஞ்சோதி
06-12-2005, 04:17 AM
பந்து வீசும் போது, விக்கெட் கீப்பருக்கு அருகில் யாராவது பாம்பாட்டியை வைத்து மகுடி ஊதச் சொல்லுங்கப்பா, பந்து எழும்பவே மாட்டேங்குது. ஊர்ந்து கொண்டே போகுது.

இல்லேன்னா, மட்டைக்கு பதில் வெளக்குமாறு கொடுங்க.

இளையவன்
06-12-2005, 04:20 AM
இந்தியா 7/119

இளையவன்
06-12-2005, 04:39 AM
இந்தியா 8/128

அறிஞர்
06-12-2005, 04:50 AM
சூப்பர் இந்தியா... அப்பாடியோவ்.. எப்படியும் தோற்க போவதில்லை....

rajasi13
06-12-2005, 04:51 AM
இப்பத்தான் சாப்பிட்டுக்கிட்டே பாத்துட்டு வரேன்..
டெண்டுல்கரைப் போட்டுத் தள்ளிட்டாப்புல முரளி.
அடுத்த மேட்ச்சில கண்டிப்பா அந்த செஞ்சுரியை எடுத்திருவாருன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்
நானும் பல தடவ சொல்லிட்டேன். மேட்ச் பாக்காதீங்கன்னு. இப்பிடி நீங்க பாத்த பார்வையில டெண்டுல்கர சாதன பண்ணாம பண்ணிபுட்டீகளே. ம் பாக்கலாம், ட்ராவிட் கிட்டே சொல்லி நாங்களே பாலோ ஆன் செய்றோம்னு சொல்லியாவது அடுத்த இன்னிங்ஸ் இந்தியா பேட் செய்ய சொல்லணும். சும்மா சாதனைக்குத்தான்.

அறிஞர்
06-12-2005, 04:55 AM
சும்மா சாதனைக்குத்தான். சும்மா சாதனைக்குதான் இன்னும் ரெண்டு டெஸ்ட் இருக்குல்ல....

அறிஞர்
06-12-2005, 04:56 AM
டோனி சூப்பரா கலக்குறாரு... யாராவது கம்பெனி கொடுத்தால் முதல் டெஸ்ட் 50, 100 போடுவாராம்

அறிஞர்
06-12-2005, 05:11 AM
153/8 உணவு இடைவேளை வரை

இளையவன்
06-12-2005, 06:03 AM
இந்தியா 10/167

சேவாக் 36
ராவிட் 32
தோனி 30
சச்சின் 22

வாஸ் 4 விக்கட்
முரளிதரன் 2 விக்கட்

அறிஞர்
06-12-2005, 06:11 AM
மொத்தமா ஊத்தி முழுகியாச்சு... அடுத்து... இலங்கை என்ன பண்ணப்போகிறார்கள்.... எனப்பார்ப்போம்....

நம்ம கங்குலி டொக்கு போட்டு 5 ரன் எடுத்துட்டாரப்பா..... பவுலிங்கில் பிரகாசிப்பாரா எனப்பார்ப்போம்....

poo
06-12-2005, 06:12 AM
காம்பீர் அவுட் ஆனதை இந்த மேட்ச்சில் குறை சொல்லமுடியாது.. வாஸின் பந்து ஸ்டம்பின் மைக் இருக்கும் பகுதிக்கும் கீழே தாக்கியதென்றால் பாருங்கள்.. எப்படி கணித்து ஆட முடியும்?!!

தோனிதான் பாவம்!!

கங்குலி.. ஹாஹாஹாஹா!!

அட 3 நாள் மேட்ச் இருந்திருந்தாக்கூட போதும்போல-ன்னு நினனக்க வைக்கும் ஆட்டம்!!

பரஞ்சோதி
06-12-2005, 06:57 AM
பவுலிங்கை மாத்தச் சொல்லுங்கப்பா. கங்குலி ஒரு பக்கமும், கும்ளே அடுத்த பக்கமும் போடச் சொல்லுங்க. அப்புறம் ஹர்பஜன், சச்சினை அழைக்கலாம். சச்சின் உருட்டி விட்டாவது விக்கெட் எடுப்பார்.

poo
06-12-2005, 08:58 AM
கங்குலி 2 ஓவர்லயே நொந்துட்டார்போல...

aren
06-12-2005, 01:32 PM
யாரை அடுத்த ஆட்டத்தில் கழிப்பார்கள். எல்லாமே இப்படி சொதப்பலாக ஆடினால்.

நன்றாக பந்து வீசிய கும்பளேயை அடுத்த மாட்சில் கழிக்கலாம். (பின்னே, ஏதாவது புதிதாக செய்யவேண்டுமல்லவா)

அறிஞர்
06-12-2005, 01:33 PM
கங்குலி 2 ஓவர்லயே நொந்துட்டார்போல... மொத்தமா ஆப்பு வைக்கிறாங்கப்பா... என்ன பண்ணுறது அவர் நேரம்

aren
06-12-2005, 01:36 PM
மொத்தமா ஆப்பு வைக்கிறாங்கப்பா... என்ன பண்ணுறது அவர் நேரம்

நிச்சயம். கங்குலியை வெளியே தள்ள அத்தனை முயற்சியும் சாப்பல் மேற்கொள்வார். அதற்கு திராவிடை உபயோகிப்பார்.

பந்துவீச நிச்சயம் சந்தர்பம் கிடைக்காது. நான்கு தவணையில் 12 ஓவர்கள் போடுவார். எப்படி தன்னுடைய திறமையைக்காட்ட முடியும்.

பேட்டிங்கில் ஏதாவது சாதித்தால்தான் உண்டு. அதற்குள் அடுத்த ஆட்டத்தில் லஷ்மன் இவரை ரன் அவுட் ஆக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பரஞ்சோதி
06-12-2005, 07:07 PM
அப்போ நண்டுகள் கதை தானா. இலங்கைக்கு கொண்டாட்டம் தான்.

அறிஞர்
06-12-2005, 09:57 PM
நிச்சயம். கங்குலியை வெளியே தள்ள அத்தனை முயற்சியும் சாப்பல் மேற்கொள்வார். அதற்கு திராவிடை உபயோகிப்பார்.

பந்துவீச நிச்சயம் சந்தர்பம் கிடைக்காது. நான்கு தவணையில் 12 ஓவர்கள் போடுவார். எப்படி தன்னுடைய திறமையைக்காட்ட முடியும்.

பேட்டிங்கில் ஏதாவது சாதித்தால்தான் உண்டு. அதற்குள் அடுத்த ஆட்டத்தில் லஷ்மன் இவரை ரன் அவுட் ஆக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.சூப்பர் ஆரென் லஷ்மண், கங்குலியை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது...

பரம்ஸ் சொல்வது போல் நண்டுகள் கதைதான்

aren
09-12-2005, 04:06 AM
ஷேவாக் இரண்டாவது டெஸ்டில் ஆடுவது கொஞ்சம் சந்தேகம் என்று தெரிகிறது. அப்படியானால் காம்பீருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடடக்கும். அதுபோல் இப்பொழுது யார் தொடக்க ஆட்டக்காரராக வருவார் என்று தெரியவில்லை.

கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவம் இருப்பதால், இப்பொழுது அவரால் வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக ஆட முடியாமல் அவதிப்படுவதால், இதுதான் சந்தர்பம் என்று சாப்பல் கங்குலியை தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறக்குவார் என்று எதிர்பார்க்கலாமா?

இரண்டாவது டெஸ்டும் பல பிரச்சனைகளை கிளப்பிவிடும் என்று தெரிகிறது.

mania
09-12-2005, 04:17 AM
:D :D :D ஆரெனை கோச்சாக போட்டால் கங்கூலியை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறதே.....!!!!:rolleyes: :rolleyes: :D :D :D என்ன மாதிரி யோசனைகள்.....சூப்பர் ஆரென்....:D :D
அன்புடன்
மணியா..:D

poo
09-12-2005, 09:17 AM
சாப்பல் புண்ணியத்தில் கைப்பிற்கு இடம் கிடைக்கலாம்!!

aren
09-12-2005, 09:19 AM
இப்பொழுது திராவிடும் ஆடுவது கடினம் போலிருக்கிறதே. அப்படியானால் யார் தலைவராக இருப்பார். சச்சின் அல்லது கும்ளே தலைவராக நியமிக்கப்படலாம். லஷ்மனுக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது.

ஆனால் நிச்சயம் கங்குலிக்கு கொடுக்கமாட்டார்கள்.

aren
09-12-2005, 09:20 AM
:D :D :D ஆரெனை கோச்சாக போட்டால் கங்கூலியை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறதே.....!!!!:rolleyes: :rolleyes: :D :D :D என்ன மாதிரி யோசனைகள்.....சூப்பர் ஆரென்....:D :D
அன்புடன்
மணியா..:D

தலை நாம் இருவரும் சேர்ந்துகொண்டு கோச் செய்யலாமே.

mania
09-12-2005, 09:40 AM
தலை நாம் இருவரும் சேர்ந்துகொண்டு கோச் செய்யலாமே.

:D :D :D :rolleyes: :rolleyes: சாப்பல் சப்பலாலே நம்மை கோச்சிப்பாரே.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:rolleyes: :D :D

aren
09-12-2005, 09:51 AM
:D :D :D :rolleyes: :rolleyes: சாப்பல் சப்பலாலே நம்மை கோச்சிப்பாரே.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:rolleyes: :D :D

எப்படி கோச்சிகிட்டாலும் பரவாயில்லை, நம்பளை கோச் செய்யவிட்டால் சரிதான்.

ஹர்பஜனை துவக்க போலராக அறிமுகப்படுத்தி, பதானையும் அகர்காரை தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறக்கு ஒரு புரட்சியே செய்துவிடலாமே.

சேரன்கயல்
09-12-2005, 10:00 AM
அடடே அப்போ நானும் மன்மதனும் அசிஸ்டென்ட் கோச்கள்...

:D :D :D :D எப்பிடி பாத்தாலும் கொஞ்சம் ஓவருங்கோ......:D :D :D நான் கோச் பொறுப்பை ,உழுவதுமாக உங்களுக்கே விட்டுக்கெடுத்து விடுகிறேன்......:D :D நிங்க அடிக்கற பஜனையில்:rolleyes: (கூத்தில்) என் பொத்தான் லாம் போயிடும் போல இருக்கு... :D பிறகு நீ உன் கர் ருக்கு நகர் (ன்+அகர்கர்) என்று அவர்கள் சொல்வதற்கு முன்னாடியே ......!!!!!:rolleyes: :D :D
அன்புடன்
(கோச்சிக்காத):D :D
மணியா

mania
09-12-2005, 10:02 AM
அடடே அப்போ நானும் மன்மதனும் அசிஸ்டென்ட் கோச்கள்...

:D :D :D மேலே சொன்ன என் ராஜினாமாவை நான் மறுபடியும் தீர்க்கமாக ஊர்ஜிதம் செய்கிறேன்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

சேரன்கயல்
09-12-2005, 10:14 AM
ஹா ஹா ஹா...
டோண்ட் வொர்ரி தலை...நாங்க அசிஸ்டெண்ட் மட்டும்தான்...
(மேட்ச் பிக்சிங் இத்யாதிகளைத் தவிர மத்த எல்லாத்தையும் கவனிச்சிப்போம்ல)

aren
09-12-2005, 10:21 AM
ஹா ஹா ஹா...
டோண்ட் வொர்ரி தலை...நாங்க அசிஸ்டெண்ட் மட்டும்தான்...
(மேட்ச் பிக்சிங் இத்யாதிகளைத் தவிர மத்த எல்லாத்தையும் கவனிச்சிப்போம்ல)

நான் நினைத்தேன் மாட்ச் பிக்சிங் மட்டுமே நீங்கள் கவனிப்பீர்கள் என்று.

பரஞ்சோதி
09-12-2005, 10:23 AM
கைப், யுவராஜ் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம், அகார்கருக்கு பதில் ஆ.பி. சிங் விளையாடவிடலாம். ஆனால் பழைய பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்வார் என்று அகர்காரை வைத்திருக்கலாம்.

ஒப்பனிங் கம்பீர், டிராவிட் செய்தால் என்ன?

கங்குலியும் இடது கை ஆட்டக்காரர் என்பதால் கம்பீருடன் அனுப்புவது சரியில்லை.

பரஞ்சோதி
09-12-2005, 10:26 AM
எது எப்படியோ டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும், இல்லை என்றால் ஒருநாள் போட்டியை குருட்டாம் போக்கில் வென்றோம் என்ற நிலை ஆகிவிடும். மேலும் டெஸ்ட் ராங்கிங்கில் கீழே இறங்க வேண்டியிருக்கும்.

அறிஞர்
09-12-2005, 10:27 AM
பரம்ஸ் பெயர் மாற்றம் அருமை

mania
09-12-2005, 10:43 AM
பரம்ஸ் பெயர் மாற்றம் அருமை

:D :D :D அறிஞர் அடிக்கடி மன்றம் வந்து போகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா:D :D

aren
09-12-2005, 11:05 AM
எது எப்படியோ டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும், இல்லை என்றால் ஒருநாள் போட்டியை குருட்டாம் போக்கில் வென்றோம் என்ற நிலை ஆகிவிடும். மேலும் டெஸ்ட் ராங்கிங்கில் கீழே இறங்க வேண்டியிருக்கும்.

நான் குருட்டாம்போக்கில்தான் வென்றதாக நினைத்திருந்தேன் நம் மக்கள் தென் ஆப்பிரிக்காவிடம் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு. அப்படியில்லையா?

aren
09-12-2005, 11:06 AM
கைப், யுவராஜ் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம், அகார்கருக்கு பதில் ஆ.பி. சிங் விளையாடவிடலாம். ஆனால் பழைய பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்வார் என்று அகர்காரை வைத்திருக்கலாம்.

ஒப்பனிங் கம்பீர், டிராவிட் செய்தால் என்ன?

கங்குலியும் இடது கை ஆட்டக்காரர் என்பதால் கம்பீருடன் அனுப்புவது சரியில்லை.

இலங்கையின் "வாஸ்" இடதுகையால் பந்து வீசுபவராயிற்றே. வலது கை ஆட்டக்காரர்கள் கொஞ்சம் கஷ்டப்படுவார்களே தொடக்கத்தில். ஆகையால் இடது கை ஆட்டக்காரர்களை முதலில் களத்தில் இறக்குவதே நமக்கு நல்லது.

அறிஞர்
09-12-2005, 12:03 PM
ஒரு வலது கை, ஒரு இடது கை ஆட்டக்காரர்கள் இறங்குவது நல்லது. கம்பீர், டோனியை கூட முயற்சிக்கலாம்

மன்மதன்
09-12-2005, 05:20 PM
அடடே அப்போ நானும் மன்மதனும் அசிஸ்டென்ட் கோச்கள்...

என்னாப்பா :rolleyes: ஏதோ ரயில் வண்டிய பத்தி பேச்சு நடக்குதா..:rolleyes: :rolleyes: :D :D

பரஞ்சோதி
09-12-2005, 05:38 PM
:D :D :D அறிஞர் அடிக்கடி மன்றம் வந்து போகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா:D :D

தலை, ஸ்லோ புல்டாஸ் போட்டு, அறிஞரை கிளீன்போல்ட் செய்து விட்டீங்க.:)

அறிஞர்
10-12-2005, 02:55 AM
இந்தியா பேட்டிங்...

டாஸ் வென்று டிராவிட் பேட்டிங்க் எடுத்துள்ளார்.

சேவாக்கிற்கு பதில் யுவராஜ் விளையாடுகிறார்.

உதயா
10-12-2005, 03:28 AM
ஒரு வலது கை, ஒரு இடது கை ஆட்டக்காரர்கள் இறங்குவது நல்லது. கம்பீர், டோனியை கூட முயற்சிக்கலாம்
டோனியை முதலில் இறக்குவது நல்லதில்லை. கம்பீர், சச்சின் இதுவே சரியான துவக்கமாக இருக்கும்.

அறிஞர்
10-12-2005, 03:35 AM
கம்பீர் காலி..

2/1 இந்தியா

உதயா
10-12-2005, 03:39 AM
அட கடவுளே... எங்கே போய் சொல்லுவது இத.. (2R / 1W (lbw) / 0.3ov)

பரஞ்சோதி
10-12-2005, 03:42 AM
அடப்பாவிங்களா? என்ன ஏது என்று பார்க்கும் முன்னமே காலியா?

ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுப்படும் என்று எதிர்பார்த்தேன், அதுக்கு இப்படியா?

பரஞ்சோதி
10-12-2005, 03:42 AM
என் பதிவுகள் ரன்களை விட அதிகமாக விழுந்து விட்டதே. நல்லவேளை, இராகவன் இந்த பக்கம் வரமாட்டார்.

பரஞ்சோதி
10-12-2005, 03:42 AM
ஆஸ்திரேலியா 331 ரன்கள் குவித்துள்ளது. கடைசி 7 ஓவரில் 100 ரன்கள்.

பரஞ்சோதி
10-12-2005, 03:42 AM
டிராவிட் முதல் முறையாக ஒப்பனிங்க் பேட்ஸ்மேனாக வந்திருக்கிறாரா?

பரஞ்சோதி
10-12-2005, 03:43 AM
அங்கே ஆஸ்திரேலியே நியூஸியை போட்டு துவைச்சி எடுக்கிறாங்க. கடைசி 5 ஓவரில் மரண

பரஞ்சோதி
10-12-2005, 03:43 AM
அங்கே ஆஸ்திரேலியே நியூஸியை போட்டு துவைச்சி எடுக்கிறாங்க. கடைசி 5 ஓவரில் மரண அடி.

உதயா
10-12-2005, 03:45 AM
அறிஞரே.. நீங்க எந்த சைட்ல இருந்து பாக்குறீங்க?

பரஞ்சோதி
10-12-2005, 04:17 AM
நன்றாக பந்து வீசிய பெர்ணாண்டோவை நிறுத்தி, முரளியை கொண்டு வந்துட்டாங்க.

அறிஞர்
10-12-2005, 04:20 AM
அறிஞ்ஙரே.. நீங்க எந்த சைட்ல இருந்து பாக்குறீங்க? என் வீட்டில் உள்ளவர்கள் சந்தா செலுத்தி உள்ளனர்... அதன் மூலம் நேரிடியாக பார்க்கிறேன்

அறிஞர்
10-12-2005, 04:21 AM
நன்றாக பந்து வீசிய பெர்ணாண்டோவை நிறுத்தி, முரளியை கொண்டு வந்துட்டாங்க.என்ன பண்ணுவது விக்கெட் வேண்டுமே......

அறிஞர்
10-12-2005, 04:21 AM
இரண்டு கட்டை மன்னர்கள் இந்தியாவுக்கு ரன் ஏற்றுகிறார்கள்.... இப்பொழுது 37-1

அறிஞர்
10-12-2005, 04:38 AM
56-2 இந்தியா

டிராவிட் அவுட்

இளையவன்
10-12-2005, 07:48 AM
இந்தியா 3/147

லக்ஸ்மன் 69 அவுட். முரளி 2 விக்கட்

இளையவன்
10-12-2005, 08:02 AM
பரஞ்சோதி நியூசிலாந்து விக்கட் கீப்பரின் அதிரடியால் 50 (25) நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பரஞ்சோதி
10-12-2005, 08:17 AM
நன்றி இளையவன்.

நியூஸிலாந்து உலகச்சாதனை, 331 ரன்களை விரட்டி அடித்து வென்றிருக்கிறார்கள். ஸ்டைரிஸ் சதம். பாராட்டுகள்.

பரஞ்சோதி
10-12-2005, 08:20 AM
அங்கே இங்கிலாந்து பாகிஸ்தானை போட்டு தாக்குது. 47 ஓவரில் 301 ரன்கள்.

poo
10-12-2005, 08:26 AM
espnstar.com - தளத்தில் கிராபிக்ஸ் முறையில் லைவ் கிரிக்கெட் (அனைத்து மேட்ச்களையும்) பார்க்கமுடிகிறது,. ஆபிஸில் இருப்பவர்களுக்கு நல்ல வழி!!

எவரேனும் முயன்று பார்த்தீர்களா?!

வேறு எங்காவது லைவ் ரிலே ஓடுகிறதா?! (டி.வின்னு சொல்லி வெறுப்பேத்தாதீங்க மக்கா!!)

பரஞ்சோதி
10-12-2005, 08:56 AM
இங்கிலாந்து 50 ஓவரில் 327/4 ரன்கள். நியூஸிலாந்து மாதிரி பாகிஸ்தான் விரட்டி வெற்றி பெறுமா?

பரஞ்சோதி
10-12-2005, 09:01 AM
ஈஎஸ்பின் கிராபிக்ஸ் கலக்கலாக இருக்குது.

நன்றி பூ.

aren
10-12-2005, 10:14 AM
சச்சின் 35ஆவது சதம் அடித்துவிட்டார். இன்னொரு ரிக்கார்டை ஏற்படுத்திவிட்டார்.

டெண்டுல்கருக்கு நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

இளையவன்
10-12-2005, 10:15 AM
அதி கூடிய ரெஸ்ற் சதமடித்த (35) சாதனை நாயகன் சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா 3/245

பரஞ்சோதி
10-12-2005, 10:18 AM
டெண்டுல்கர் உலக சாதனை, சாதனை மன்னனுக்கு என் வாழ்த்துகள்.

சச்சின் சதம் அடிக்கவே நான் என் அவதாரை மாற்றினேன், இனிமேல் சச்சின் வழக்கம் போல் என் அவதாரில் அலங்கரிப்பார்.

mania
10-12-2005, 10:52 AM
சாதனைக்கு மேல் சாதனை புரிந்துவரும் சச்சின்னுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்....:D :D :D .இன்று அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் இன்னும் நிறைய சாதனைகளை முறியடிப்பார் என்றே தோன்றுகிறது....:D :D .அதனால் பரம்ஸ் அவசரப்பட்டு அவர் அவதாரை ஏற்றவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்......:rolleyes: :rolleyes: :D :D
சந்தோஷத்துடன்
மணியா:D :D

பரஞ்சோதி
10-12-2005, 11:24 AM
தலைக்கு தலை வணங்குகிறேன்.

aren
10-12-2005, 11:32 AM
தலைக்கு தலை வணங்குகிறேன்.

என்னவோ செய்ங்க. சச்சின் சதம் அடித்துக்கொண்டிருந்தால் சரிதான்.

aren
10-12-2005, 11:34 AM
காம்பீர் தொடர்ந்து குறைவான ரன்களே அடிப்பதால், அடுத்த இன்னிங்ஸில் அடிக்கவில்லையென்றால் அடுத்த டெஸ்டிற்கு தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகம் என்று நினைக்கிறேன்.

காம்பீருக்கு பதில் தோனியை தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறக்கலாம்.

aren
10-12-2005, 11:37 AM
நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா மாட்ச் பார்த்தீர்களா? செம்மையாக இருந்திருக்கும்.

இப்பொழுது இங்கிலாந்து - பாகிஸ்தான் மாட்ச் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் வெலுத்து வாங்குகிறார்கள்.

இளையவன்
11-12-2005, 04:04 AM
இன்றைய ஆட்டத்தில் வெறும் 31 ஓட்டங்களுக்கு இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய முரளி 6 விக்கட்டுக்களை எடுத்துள்ளார். இந்தியா 9/280. ஹர்பஜன் மற்றும் அகார்கர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இளையவன்
11-12-2005, 04:18 AM
இந்தியா 10/290

சச்சின் 109
லக்ஸ்மன் 69
கங்குலி 40

முரளி 7விக்கட்

aren
11-12-2005, 04:48 AM
இப்படி இந்தியா காலையில் சுருட்டிக்கொண்டுவிட்டதே. நம்ம பாடு திண்டாட்டம்தான் போலிருக்கிறது.

நான் இந்தியா ஒரு 400 முதல் 450 வரை எடுத்து இலங்கையை கொஞ்சம் கஷ்டப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் இப்படியாகிவிட்டதே.

யுவராஜ் மற்றும் தோனி ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு மட்டும்தான் லாயக்கு போலிருக்கிறதே.

உதயா
11-12-2005, 06:31 AM
எல்லோரும் காலயில் சாப்பிடாமல் வந்திருப்பார்கள் போல். ஆகவே தான் வந்ததும் போய் விட்டார்கள்.

பரஞ்சோதி
11-12-2005, 09:52 AM
இலங்கை 195/5 விக்கெட்கள். பதான் 2, கும்ளே - 3.

175-2 என்ற நிலையில் இருந்து தொடர்ந்து 3 விக்கெட்களை கும்ளே வீழ்த்தி விட்டார்.

இளையவன்
11-12-2005, 10:04 AM
இலங்கை 6/198

அத்தப்பத்து 88
ஜெயவர்த்தன 60

கும்ளே 4 விக்கட்
பதான் 2 விக்கட்

இளையவன்
12-12-2005, 03:58 AM
இலங்கை 10/230

அத்தப்பத்து 88
ஜெயவர்த்தன 60

கும்ளே 6 விக்கட்
பதான் 3 விக்கட்

இளையவன்
12-12-2005, 04:21 AM
வழமைபோல் கம்பீர் (3) வந்ததும் சென்றுவிட்டார். அடுத்த போட்டியில் அவருக்கு நிச்சயமாக இடம் கிடைக்காது என நம்புகிறேன். கம்பீருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதானுடன் லக்ஸ்மன் இணைந்துள்ளார்.

இந்தியா 1/12

இளையவன்
12-12-2005, 04:31 AM
இன்றைய கம்பீரின் விக்கட்டு சர்வதேச ரெஸ்ற் போட்டிகளில் சமிந்தவாசுவின் 300ஆவது விக்கட்.

poo
12-12-2005, 04:43 AM
கம்பீர் அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் நியாயமாக அந்த அம்ப்பயருக்குத்தான் இடம் கிடைக்கக் கூடாது!! பாவம்.. அவுட் இல்லாததை கொடுத்துவிட்டார்! (கங்குலியின் சதியோ??!!ஹிஹி!)

இன்னும் 200 அடித்தால் வெற்றி பெறலாம்!

பரஞ்சோதி
12-12-2005, 06:47 AM
3 பேர் காலி, சச்சினும் அவுட். பதான் இருக்கிறார்.

பென்ஸ்
12-12-2005, 06:53 AM
பதான் -50

மதி
12-12-2005, 06:57 AM
பதான் -50
பதானுக்கு வாழ்த்துக்கள்..

இளையவன்
12-12-2005, 08:40 AM
பதான் 93 அவுட்.

இந்தியா 4/180

ராவிட் 44*

aren
12-12-2005, 10:28 AM
இந்தியா நாளை எப்படி விளையாடுமோ அதைப் பொறுத்தே இந்தியா வெல்லுமா அல்லது இலங்கை வெல்லுமா என்று தெரியும்.

யுவராஜ், கங்குலி மற்றும் தோனி கையில்தான் உள்ளது.

உதயா
12-12-2005, 12:06 PM
ஆரென் சார், எப்படி இருப்பினும், வெற்றியின் (என் முகம் அல்ல) முகம் தெறிகிறது.

அறிஞர்
12-12-2005, 02:14 PM
இந்தியா நாளை எப்படி விளையாடுமோ அதைப் பொறுத்தே இந்தியா வெல்லுமா அல்லது இலங்கை வெல்லுமா என்று தெரியும்.

யுவராஜ், கங்குலி மற்றும் தோனி கையில்தான் உள்ளது. பழைய வரலாற்றில் 275 ரன்கள் 4வது இன்னிங்க்ஸ் சேஸ் பண்ணியதாக தெரியவில்லை.

இப்பொழுது இந்தியா 297 முன்னிலை. இன்னும் 100 ரன்கள் சேர்த்தாலே போதும். இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது

aren
13-12-2005, 02:25 AM
ஆரென் சார், எப்படி இருப்பினும், வெற்றியின் (என் முகம் அல்ல) முகம் தெறிகிறது.

டெஸ்ட் வெற்றியையும், உங்களையும் என் மனக்கண்ணில் பார்க்கிறேன்.

உங்கள் வாழ்த்து பலிக்ககட்டும்.

aren
13-12-2005, 02:26 AM
பழைய வரலாற்றில் 275 ரன்கள் 4வது இன்னிங்க்ஸ் சேஸ் பண்ணியதாக தெரியவில்லை.

இப்பொழுது இந்தியா 297 முன்னிலை. இன்னும் 100 ரன்கள் சேர்த்தாலே போதும். இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது

வரலாறு படைத்தது அதை வெள்வதற்குத்தான். ஆகையால் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார்களோ அவ்வளவும் நல்லதுக்குத்தான்.

அறிஞர்
13-12-2005, 03:35 AM
வரலாறு படைத்தது அதை வெள்வதற்குத்தான். ஆகையால் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார்களோ அவ்வளவும் நல்லதுக்குத்தான். இப்பொழுதே 300க்கு மேல் கடந்து விட்டனர். 400 ரன் எடுத்து... டிக்ளேர் செய்வர் என நினைக்கிறேன்.

நேற்று கங்குலி... டிராவிட் விக்கெட்டை பறித்தார். இன்று அந்த அசம்பாவிதம் நடக்கக்கூடாது

rajasi13
13-12-2005, 06:52 AM
இந்தியா டிக்ளேர் 435 ரன்கள் லீட்

அறிஞர்
13-12-2005, 02:06 PM
இலங்கை 123/5.

5ம் நாளில் இந்தியா எளிதில் வெற்றிபெற வாய்ப்பு அதிகம்

பரஞ்சோதி
14-12-2005, 03:29 AM
அகர்கார் அடுத்த விக்கெட்டை வீழ்த்தி விட்டார். 6 பேர் காலி.

மன்மதன்
14-12-2005, 05:53 AM
4 விக்கெட்டை எடுத்திடுமா???

pradeepkt
14-12-2005, 05:56 AM
இன்னும் மூணே மூணுதான்...

pradeepkt
14-12-2005, 06:31 AM
ஒரு வழியா 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயிச்சிட்டாகப்பூ..
இந்திய அணிக்கு வாழ்த்துகள் :) :) :)

பரஞ்சோதி
14-12-2005, 08:13 AM
அபார வெற்றி. இரண்டாம் இன்னிங்ஸில் அற்புதமாக ஆடிய பதான், யுவராஜ், தோனி, அனில் கும்ளேவுக்கு தனியாக பாராட்டுகள்.

இந்த வெற்றித் தொடர வாழ்த்துகள்.

mania
14-12-2005, 08:56 AM
ஒரு சந்தோஷமான செய்தி....மூணாவது டெஸ்ட் அணியில் கங்கூலி இல்லை. வசிம் ஜாஃபர் அணியில் இடம் பெறுகிறார்....:D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
14-12-2005, 09:38 AM
தலை, கங்குலிக்கு என்னாச்சு?

mania
14-12-2005, 10:23 AM
தலை, கங்குலிக்கு என்னாச்சு?

இன்னும் ஒரிரு தினங்களில் விவரம் தருகிறேன் (அதற்குள் பத்திரிகைகளில் விவரம் வராவிட்டால் ).....!!!!:rolleyes: :D :D
அன்புடன்
மணியா..:D

இளையவன்
14-12-2005, 10:44 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

இளையவன்
14-12-2005, 11:04 AM
மூன்றாவது ரெஸ்ற் போட்டிக்கான அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டது கவலைக்குரிய விடயம். ஏற்கனவே நடந்த இரண்டு ரெஸ்ற் போட்டிகளிலும் வீரர்களின் செயற்பாட்டை வைத்துத்தான் அடுத்த போட்டிக்கான அணி அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. கங்குலி இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 40, 39 ஓட்டங்களை எடுத்தார் மற்ற சில வீரர்களின் ஓட்ட எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது கங்குலியின் பங்களிப்பு சிறப்பானதாகவே இருந்தது. அதனால்தான் இப்பொழுது கங்குலியை நீக்கியதற்கு புதுக் காரணம் கூறுகிறார் தேர்வுக்குழுத் தலைவர் அதாவது இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டாராம். இதிலிருந்து ஒரு விடயம் நன்றாகப் புரிகிறது கங்குலியை நீக்குவது என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு ஆனால் அதற்கான காரணம்தான் இப்பொழுது மாறுபட்டிருக்கு.

அறிஞர்
14-12-2005, 03:05 PM
இது கொஞ்சம் ஓவர்... கங்குலிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம்.. இனி அவர் கதி அதோகதிதான்....

aren
14-12-2005, 04:47 PM
இது கொஞ்சம் ஓவர்... கங்குலிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம்.. இனி அவர் கதி அதோகதிதான்....

இது கொஞ்சம் ஓவர் இல்லை, ரொம்ப ஓவர். அநியாயம். டால்மியாவிற்கும் பவாருக்கும் ஒன்றும் வித்யாசம் இல்லை என்றே தோன்றுகிறது. வங்காளத்திலிருந்து ஒருவரை நீக்கிவிட்டு மும்பையிலிருந்து ஒருவரை உள்ளே தள்ளியிருக்கிறார்கள். டிட் பாஃர் டாட் என்று ஆகிவிட்டது.

நாமும் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து மாட்சை பார்க்கின்றோம்.

இனிமேல் இதற்காக என்னுடைய நேரத்தை வீணாக்கவேண்டுமா என்று யோசிக்கிறேன்.

தமிழ்நாடு கிரிக்கெட்டை மட்டும் பாஃலோ செய்யலாமா என்று நினைக்கின்றேன்.

அறிஞர்
15-12-2005, 03:49 PM
தமிழ்நாடு கிரிக்கெட்டை மட்டும் பாஃலோ செய்யலாமா என்று நினைக்கின்றேன். எல்லாமே ஒன்று தான்.. பெரிய வித்தியாசங்கள் இல்லை.

தலை உங்களுக்கு இரண்டு கேள்வி.

1. கங்குலி நீக்கப்பட்டதின் உண்மையான காரணம் (பயிற்சி, மைதானத்தில் மற்றவர்களுடன் ஏதும் நல்ல உறவு இல்லையா...)

2. பாலாஜி தமிழ்நாட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணம் (பேப்பரில் சரியாக படிக்க இயலவில்லை)

பரஞ்சோதி
15-12-2005, 05:10 PM
1) கங்குலியின் ஆட்டத்தில் சூடு இல்லை, தன்னம்பிக்கை இல்லாதவராக தெரிகிறார், மேலும் ஓடி ரன் எடுப்பதில் சிரமம்.

2) பீல்டிங்கில் கோட்டை, காலுக்கு அடியில் பந்தை விட்டு விட்டு பின்னர் ஓடி விரட்டுகிறார்.

3) பாலாஜியின் உடல் நலத்தில் பிரச்சனை, அதான் தமிழக அணியில் கூட இல்லை.

pradeepkt
16-12-2005, 04:13 AM
பவாரே கங்குலி நீக்கப்பட்டதில் தான் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொன்னார் (இன்ப அதிர்ச்சியான்னு நக்கல் கேள்வியெல்லாம் கேக்கப்படாது :D)
போற போக்குல வங்காளத்தில் அனைவரும் (குருதாஸ் தாஸ்குப்தா - கம்யூனிஸ்டு, அங்க ஒரு அமைச்சரு, பல எழுத்தாளர்கள், பலப்பல கங்குலி ஆதரவாளர்கள்) ஆளுக்கொரு கண்டனத்தைத் தெரிவிச்சாங்க. கங்குலியும் மறக்காம டால்மியாவைப் போயிப் பாத்து "ஆலோசனை" செஞ்சாரு...
மக்கா, பெர்னாட்ஷா சொன்னதை நினைவு படுத்துறாங்க எல்லாரும். நல்லவேளை எனக்கு இந்தப் பைத்தியம் இல்லை :D

mania
16-12-2005, 04:20 AM

:D :D :D திருத்தம்......:rolleyes: :rolleyes: இந்த ஒரு பைத்தியம் மட்டும் இல்லை....:rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மணியா

aren
16-12-2005, 04:40 AM
:D :D :D திருத்தம்......:rolleyes: :rolleyes: இந்த ஒரு பைத்தியம் மட்டும் இல்லை....:rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மணியா

தலை, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். நமக்கெல்லாம் கிரிக்கெட் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது, ஆனால் பிரதீப்பிற்கு மற்ற அனைத்தும் பிடித்திருக்கிறதா?

சிண்டுமுடிச்சிவுடும்
ஆரென்

pradeepkt
16-12-2005, 04:48 AM
ஆரென் அண்ணா,
தலையே போனாப் போவுதுன்னு சும்மா இருக்காரு...
நீங்க ஏன் :D :D :D

aren
16-12-2005, 05:03 AM
ஆரென் அண்ணா,
தலையே போனாப் போவுதுன்னு சும்மா இருக்காரு...
நீங்க ஏன் :D :D :D

தலையே சும்மா இருககாரு, வாலு நான் ஏன் ஆடறேன் என்கிறீர்களா? அப்படின்னா என்னை "வால்" என்கிறீர்களா?

வம்புக்கு இழுக்கும்
ஆரென்

mania
16-12-2005, 05:05 AM
தலை, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். நமக்கெல்லாம் கிரிக்கெட் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது, ஆனால் பிரதீப்பிற்கு மற்ற அனைத்தும் பிடித்திருக்கிறதா?

சிண்டுமுடிச்சிவுடும்
ஆரென்

அதே அதே........!!!!!:D :D
முடிச்ச சிண்டுவில் பூ வைத்துவிடும்:rolleyes: :rolleyes: :D
மணியா...:D :D

pradeepkt
16-12-2005, 05:15 AM
ஐயையோ,
நான் இந்த வம்புக்கே வரலை...
பெரியவர்களின் பாதையில் பிரதீப் குறுக்கிட மாட்டான் :D

aren
16-12-2005, 05:40 AM
ஐயையோ,
பெரியவர்களின் பாதையில் பிரதீப் குறுக்கிட மாட்டான் :D

அப்படின்னா என்னையும் தலையையும் நீ "கிழவன்" என்று சொல்கிறாயா?

வம்பை இன்னும் முடிக்கிவிடும்
ஆரென்

mania
16-12-2005, 05:50 AM
அப்படின்னா என்னையும் தலையையும் நீ "கிழவன்" என்று சொல்கிறாயா?

வம்பை இன்னும் முடிக்கிவிடும்
ஆரென்

:D :D :D அது எப்பிடி என்னையும் நீ கிழவன் என்று சேர்த்து சொல்லலாம்.....?????:D :D
முடுக்கிவிட்ட திரியில் எண்ணையை ஊற்றும்:rolleyes: :rolleyes:
மணியா (வயது 26):D :D

pradeepkt
16-12-2005, 05:51 AM
ஆமாம், ஆணித்தரமாகச் சொல்கிறேன், உங்கள் இருவரையும் கிழவர்கள் என்றுதான் சொன்னேன்... ஹா ஹா ஹா :D :D :D

கிழவன் என்றால் தலைவன் என்றுதான் தமிழில் அர்த்தம்.

வம்பைத் தளர்த்திவிடும் முயற்சியில்,
பிரதீப் :D

பென்ஸ்
16-12-2005, 06:06 AM
தலையே சும்மா இருககாரு, வாலு நான் ஏன் ஆடறேன் என்கிறீர்களா? அப்படின்னா என்னை "வால்" என்கிறீர்களா?

வம்புக்கு இழுக்கும்
ஆரென்

பிரதிப்...
தலை ஆரொனை பத்தி சொன்னப்போ சரியா புரியாTக நீங்க இப்போ நல்லா புரின்சிருப்பியளே.....
ஆரென்.. இந்த பிரதிப்புக்கு என்னை ஆப்பு வைக்கிறதே வேலையா இருந்தது... அவனுக்கும் ஒரே ஒரு ஆப்பு வைத்து ஓட விட்டமைக்கு.. டாங்க்சுமா...

mania
16-12-2005, 06:16 AM
ஆமாம், ஆணித்தரமாகச் சொல்கிறேன், உங்கள் இருவரையும் கிழவர்கள் என்றுதான் சொன்னேன்... ஹா ஹா ஹா :D :D :D

கிழவன் என்றால் தலைவன் என்றுதான் தமிழில் அர்த்தம்.

வம்பைத் தளர்த்திவிடும் முயற்சியில்,
பிரதீப் :D

:rolleyes: :rolleyes: :rolleyes: அதெப்பிடி ஒரே மேட்டருக்கு இரண்டு கிழவன்கள்.......சாரி தலைவன்கள் இருக்க முடியும்......??????:rolleyes: :D :D
தளர்த்திய கயிறை திருப்பி முறுக்கும்
மணியா .....:rolleyes: :rolleyes: :D :D

pradeepkt
16-12-2005, 06:21 AM
பிரதிப்...
தலை ஆரொனை பத்தி சொன்னப்போ சரியா புரியாTக நீங்க இப்போ நல்லா புரின்சிருப்பியளே.....
ஆரென்.. இந்த பிரதிப்புக்கு என்னை ஆப்பு வைக்கிறதே வேலையா இருந்தது... அவனுக்கும் ஒரே ஒரு ஆப்பு வைத்து ஓட விட்டமைக்கு.. டாங்க்சுமா...
ஏப்பூ இப்படி ஒரு நல்லெண்ணமா?
நடக்கட்டும் நடக்கட்டும்...

தலை,
ஒரே கட்சியில தலைவர்கள்னு கொள்ளப் பேரு இருக்குறதில்லையா, அந்த மாதிரிதான் இது...

ரொம்ப முறுக்காதீங்க, ... :D

aren
16-12-2005, 08:59 AM
ஏப்பூ இப்படி ஒரு நல்லெண்ணமா?
நடக்கட்டும் நடக்கட்டும்...

தலை,
ஒரே கட்சியில தலைவர்கள்னு கொள்ளப் பேரு இருக்குறதில்லையா, அந்த மாதிரிதான் இது...

ரொம்ப முறுக்காதீங்க, ... :D

நம் மன்றத்திற்கு ஒரே தலைதான், அது நம்ம தலைதான். அதனால் இந்த சாக்கு எல்லாம் வேணாம்.

கிழவன் என்று சொன்னது அப்படியே இருக்கட்டும். கவனிக்கிறோம்.

அறிஞர்
16-12-2005, 02:59 PM
என்னப்பா.. கிழம், தலைன்னு.. ஒரே ரகளையா இருக்கு......

இருவருமே... இளைஞர்கள்.... (மனதில்)......
------

அறிஞர்
16-12-2005, 03:04 PM
கங்குலிக்கு பவார் ஆதரவு அளித்துள்ளார். கங்குலி நீக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியை தந்ததாம். உண்மையான காரணத்தை ஆலோசனை கூட்டத்தில் அறிய விரும்புகிறாராம்.

பவார் தேறிய அரசியல்வாதி... அரசியல் ஆட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. வெளியில் ஆதரவு.. உள்ளே ????????/

aren
16-12-2005, 07:30 PM
இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.

பாராளூமன்றத்தில் இதைப்பற்றி விவாதிக்கப்போகிறார்களாம். அதனால்தான். இடதுசாரி கட்சியின் ஒத்துழைப்பால்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆகையால் பவார் கொஞ்சம் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கொடுமை என்னவென்றால் பெங்காலிலிருந்து ஒருவரை எடுத்துவிட்டு மும்பையிலிருந்து ஒருவருக்கு சான்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. டால்மியா கோட்டையிலிருக்கும் ஒருவரை நீக்கிவிட்டு பவார் கோட்டையிலிருந்து ஒருவர் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது எங்கே போய் முடியப்போகிறதோ?

aren
16-12-2005, 07:34 PM
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் பார்த்தீர்களா? முதல்நாளில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா இப்படி முடக்கிவிட்டார்களே அதுவும் ஆஸ்திரேலியாவின் கோட்டையில்.

தென்னாப்பிரிக்காவின் பந்துவீசும் பலம் இன்னொருமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் அவர்கள் கலக்கியது உண்மை என தெரிகிறது.

அறிஞர்
17-12-2005, 11:10 PM
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் பார்த்தீர்களா? முதல்நாளில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா இப்படி முடக்கிவிட்டார்களே அதுவும் ஆஸ்திரேலியாவின் கோட்டையில்.

தென்னாப்பிரிக்காவின் பந்துவீசும் பலம் இன்னொருமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் அவர்கள் கலக்கியது உண்மை என தெரிகிறது. அடுத்த நாள் அவுங்க அடக்கிட்டாங்க... இன்று என்ன என்று பார்ப்போம்

அறிஞர்
17-12-2005, 11:12 PM
இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.

பாராளூமன்றத்தில் இதைப்பற்றி விவாதிக்கப்போகிறார்களாம். அதனால்தான். இடதுசாரி கட்சியின் ஒத்துழைப்பால்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆகையால் பவார் கொஞ்சம் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கொடுமை என்னவென்றால் பெங்காலிலிருந்து ஒருவரை எடுத்துவிட்டு மும்பையிலிருந்து ஒருவருக்கு சான்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. டால்மியா கோட்டையிலிருக்கும் ஒருவரை நீக்கிவிட்டு பவார் கோட்டையிலிருந்து ஒருவர் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது எங்கே போய் முடியப்போகிறதோ? பாராளுமன்றத்தில் சபாநாயகரின் பேச்சு எச்சரிக்கை போல் அமைந்தது...

அறிஞர்
17-12-2005, 11:14 PM
இன்றைய ஆட்டத்தில் டிராவிட் இல்லை...

சேவாக் வழி நடத்தும் முதல் டெஸ்ட்.

சச்சினின் 16 வது கிரிக்கெட் ஆண்டு

கும்ப்ளேயின் 100 வது டெஸ்ட்

aren
18-12-2005, 02:00 AM
அடுத்த நாள் அவுங்க அடக்கிட்டாங்க... இன்று என்ன என்று பார்ப்போம்

ஆஸ்திரேலியாவின் பலமே அதுதான். அவர்கள் எந்த நிலைமையிலும் எதிர் அணியினரை அவுட் ஆக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அதுதான் அவர்களுடைய வெற்றியின் ரகசியம்.

aren
18-12-2005, 02:02 AM
இன்றைய மூன்றாவது டெஸ்டில் திராவிட் கிடையாது. கங்குலியை குழுவில் வைத்திருந்தால் நிச்சயம் அவர் ஆடியிருப்பார். அநியாயமாக கழித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். கைஃப் அடிப்பாரா?

பாட்டிங் கொஞ்சம் பிரச்சனையாக்கும் என்று தெரிகிறது. முரளியின் பந்தை ஆடுவது அவ்வளவு எளிதல்ல.

பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று இன்று.

பரஞ்சோதி
18-12-2005, 03:22 AM
நாட்டுல எத்தனையோ பிரச்சனை, அதை எல்லாம் விட்டு விட்டு ஒரு கிரிக்கெட் வீரருக்காக பார்லிமெண்டில் நேரம் ஒதுக்கி விவாதம், கேட்கவே அவமானமாக இருக்குது.

இதற்கு முன்பு எத்தனையோ பேர் கங்குலி பாணியில் தூக்கி எறியப்பட்டார்கள், ராபின் சிங், சித்து, ஸ்ரீகாந்த் இப்படி பலர், அப்போ எல்லாம் ஏன் பேசவில்லை, காரணம் அவர்களை காட்டி ஓட்டு வாங்க முடியாது. இப்போ கங்குலியை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் கட்சிகள் ஆட்டம் போடுகின்றன.

பரஞ்சோதி
18-12-2005, 03:29 AM
இன்றைய மூன்றாவது டெஸ்டில் திராவிட் கிடையாது. கங்குலியை குழுவில் வைத்திருந்தால் நிச்சயம் அவர் ஆடியிருப்பார். அநியாயமாக கழித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். கைஃப் அடிப்பாரா?

பாட்டிங் கொஞ்சம் பிரச்சனையாக்கும் என்று தெரிகிறது. முரளியின் பந்தை ஆடுவது அவ்வளவு எளிதல்ல.

பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று இன்று.

முரளி இதுவரை இந்தியாவில் பிரகாசித்தது இல்லை, டெல்லி டெஸ்டில் கூட முதல் இன்னிங்ஸில் மட்டுமே 7 விக்கெட்களை வீழ்த்தினார், அதுவும் இறுதிக்கட்டத்தில். அதுவரை அவரது பந்தை கணித்து விளையாடத் தான் செய்தார்கள்.

அது மாதிரி இரண்டாம் இன்னிங்ஸில் அவரது பந்தை அடித்து நொறுக்கவில்லையா, ஆக மொத்தம் கணித்து ஆடினால் முரளி என்ன வார்னே வந்தாலும் இந்தியாவில் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் அடுத்த தலைமுறையான கைப், யுவராஜ் போன்றோர் கட்டாயம் விளையாடத் தான் வேண்டும்.

அறிஞர்
18-12-2005, 03:38 AM
இந்தியா டாஸ் வென்றுள்ளது.. முதல் பேட்டிங்க் 1 மணி நேர ஆட்டம் தாமதம்.

இந்திய அணியில் சேவாக் மீண்டும் வந்துள்ளார், கைப் இடம்பிடித்துள்ளார்.

ஜாபரை எதுக்கு சேர்த்தார்கள்.. இது கொஞ்சம் ஓவர்

அறிஞர்
18-12-2005, 03:42 AM
இதற்கு முன்பு எத்தனையோ பேர் கங்குலி பாணியில் தூக்கி எறியப்பட்டார்கள், ராபின் சிங், சித்து, ஸ்ரீகாந்த் இப்படி பலர், அப்போ எல்லாம் ஏன் பேசவில்லை, காரணம் அவர்களை காட்டி ஓட்டு வாங்க முடியாது. இப்போ கங்குலியை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் கட்சிகள் ஆட்டம் போடுகின்றன. என்ன பண்ணுவது அரசியல் பலம் உள்ளவர். கம்யூனிஸ்ட்களுக்கு கவுர பிரச்சனை. எல்லாம் சேர்ந்து வெடித்துள்ளது..

ஸ்ரீகாந்த் மிகவும் கடினமான சூழலை அனுபவித்தார்.

aren
18-12-2005, 04:08 AM
இந்தியா டாஸ் வென்றுள்ளது.. முதல் பேட்டிங்க் 1 மணி நேர ஆட்டம் தாமதம்.

இந்திய அணியில் சேவாக் மீண்டும் வந்துள்ளார், கைப் இடம்பிடித்துள்ளார்.

ஜாபரை எதுக்கு சேர்த்தார்கள்.. இது கொஞ்சம் ஓவர்

ஜாபர் மும்பையிலிருந்து வந்தவராயிற்றே. அது போதாதா?

aren
18-12-2005, 04:09 AM
என்ன பண்ணுவது அரசியல் பலம் உள்ளவர். கம்யூனிஸ்ட்களுக்கு கவுர பிரச்சனை. எல்லாம் சேர்ந்து வெடித்துள்ளது..

ஸ்ரீகாந்த் மிகவும் கடினமான சூழலை அனுபவித்தார்.

ஸ்ரீகாந்திற்கும் அன்றைய கோச் பிஷன் பேடிக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் பேடி ஸ்ரீகாந்திற்கு ஆப்பு வைத்துவிட்டார். அதன்பிறகு அவரால் மீண்டும் உள்ளே வரமுடியவில்லை.

aren
18-12-2005, 04:12 AM
முரளி இதுவரை இந்தியாவில் பிரகாசித்தது இல்லை, டெல்லி டெஸ்டில் கூட முதல் இன்னிங்ஸில் மட்டுமே 7 விக்கெட்களை வீழ்த்தினார், அதுவும் இறுதிக்கட்டத்தில். அதுவரை அவரது பந்தை கணித்து விளையாடத் தான் செய்தார்கள்.

அது மாதிரி இரண்டாம் இன்னிங்ஸில் அவரது பந்தை அடித்து நொறுக்கவில்லையா, ஆக மொத்தம் கணித்து ஆடினால் முரளி என்ன வார்னே வந்தாலும் இந்தியாவில் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் அடுத்த தலைமுறையான கைப், யுவராஜ் போன்றோர் கட்டாயம் விளையாடத் தான் வேண்டும்.

ஒரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் எடுப்பது என்பது எளிதானதல்ல. நம் மக்கள் எத்தனை முறை அப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் உண்மை விளங்கும் அதுவும் வெளிநாட்டில்.

முரளி டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் கலக்கு கலக்கி நம் மக்களை திக்குமுக்காட வைத்தார், ஆனால் அவர்களின் பேட்ஸ்மென்கள் நின்று விளையாடாமல் ஆட்டமிழந்துவிட்டார்கள். அதுதான் அவர்களுடைய தோல்விக்குக்காரணம்.

இந்த டெஸ்டில் நம் மக்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம். முரளி நன்றாக பந்து வீசக்கூடியவர். ஆகையால் அவருடைய பந்துவீச்சை பார்த்தே ஆடவேண்டும்.

நம் மக்கள் நன்றாக ஆடினால் சந்தோஷமே.

aren
18-12-2005, 04:23 AM
சாமிண்டா வாஸ் ஆடவில்லை போலிருக்கிறதே. நம் மக்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஷேவாக் இந்த மாட்சிலாவது சதம் அடிப்பாரா? ரொம்ப நாளாகிவிட்டது அவர் அடித்து.

இளையவன்
18-12-2005, 04:46 AM
கம்பீர் (19) அவுட். இந்தியா 1/31

இளையவன்
18-12-2005, 07:21 AM
இந்தியா 4/88

மலிங்கவுக்கு தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கட்டும் முரளிக்கு சச்சின் (23) மற்றும் யுவராஜ் (0) ஆகியோரின் விக்கட்டும் கிடைத்துள்ளது.

இளையவன்
18-12-2005, 07:38 AM
கைப் (4) அவுட். இந்தியா 5/97

பரஞ்சோதி
18-12-2005, 07:56 AM
லட்சுமணனும், தோனியும் கை கொடுப்பாங்களா?

இளையவன்
18-12-2005, 09:40 AM
தோனி (49) அவுட். இந்தியா 6/183

பரஞ்சோதி
18-12-2005, 09:49 AM
பதானும் லட்சுமணனும் கை கொடுப்பாங்களா?

aren
18-12-2005, 10:29 AM
நம் மக்களின் பலம் நன்றாகவே தெரிகிறது. யுவராஜ் மற்றும் கைஃப் ஆகிய இருவரும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கென்றே வைத்துக்கொண்டு டெஸ்ட் தொடருக்கு மெதுவாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்களை வைத்துக்கொள்ளலாம்.

நம்முடைய பலமாக இருந்த நடு நிலை (middle order) ஆட்டக்காரர்கள் இப்பொழுது பலவீனமாகிவிட்டார்கள்.

aren
18-12-2005, 10:29 AM
பதானும் லட்சுமணனும் கை கொடுப்பாங்களா?

கை கொடுக்கவேண்டும், இல்லாவிட்டால் அதோகதிதான்.

இளையவன்
18-12-2005, 11:10 AM
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணியினர் 6 விக்கட் இழப்புக்கு 247 ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

லக்ஸ்மன் 71*
பதான் 39*

aren
18-12-2005, 03:41 PM
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணியினர் 6 விக்கட் இழப்புக்கு 247 ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

லக்ஸ்மன் 71*
பதான் 39*

பயங்கரமாக் சொதப்பிவிட்டார்கள் நம்ம மக்கள். எப்படியோ தோனி, லஷ்மன், பதான் ஆகியோர் கொஞ்சம் ஆடி ஒரு பரவாயில்லை அளவிற்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

பரஞ்சோதி
19-12-2005, 04:14 AM
பதான் 50 ரன்களை கடந்து விட்டார்.

பரஞ்சோதி
19-12-2005, 04:25 AM
பதானும் லட்சுமணனும் சேர்ந்து 100ரன்கள் பெற்று கொடுத்திருக்கிறார்கள். பாராட்டுவோம்.

இந்தியா 285 ரன்கள்.

aren
19-12-2005, 04:27 AM
அது போதாது. குறைந்தது 400 ரன்களாவது தேவை. முடியுமா?

mania
19-12-2005, 04:34 AM
பதானும் லட்சுமணனும் சேர்ந்து 100ரன்கள் பெற்று கொடுத்திருக்கிறார்கள். பாராட்டுவோம்.

இந்தியா 285 ரன்கள்.

:rolleyes: அது சரி உன்னோட கபடி.....??? கிரிக்கெட் மேட்ச் என்னாச்சு...??? :rolleyes: பேப்பர்ல ஒன்னும் வரலையே...????:D ஏதாவது கையெழுத்து பிரதி வைச்சிருக்காயா....???:rolleyes: :D :D
ஆர்வத்துடன்
மணியா...:D

இளையவன்
19-12-2005, 04:40 AM
லக்ஸ்மன் சதம் (103*) , பதான் 64*

இந்தியா 6/305

பாராட்டுக்கள் லக்ஸ்மன்

mania
19-12-2005, 04:41 AM
பத்துரதன் புத்திரன் சதம் அடித்துவிட்டார்.....வாழ்த்துகள்....:D :D
அன்புடன்
மணியா..:D :D

மதி
19-12-2005, 04:49 AM
சதமடித்த லட்சுமனனுக்கு வாழ்த்துக்கள்.

இளையவன்
19-12-2005, 04:51 AM
லக்ஸ்மன் (104) அவுட்

இந்தியா 7/308

பரஞ்சோதி
19-12-2005, 04:52 AM
லட்சுமணன் காலி.

பரஞ்சோதி
19-12-2005, 04:53 AM
பத்துரதன் புத்திரன் சதம் அடித்துவிட்டார்.....வாழ்த்துகள்....:D :D
அன்புடன்
மணியா..:D :D

தலை உங்களை யார் வாழ்த்த சொன்னது :angry: , நீங்க எப்போ இலங்கை ஆதரவாளர் ஆனீங்க :D .

mania
19-12-2005, 04:58 AM
:D :D :D சரி....அப்படீன்னா முரளி, மஹாரூஃப். மலிங்கா, பண்டாராவுக்கு என் வாழ்த்துகள்.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

ஜீவா
19-12-2005, 05:17 AM
நண்பர்கள் வீடியோ பார்க்க விரும்பினால்

fantasysucks (யாகு மெஸெஞ்சர்) என்ற ஐடியை சேர்த்து அவர் வெப் காம் வழியாக வீடியோ பாருங்கள்..

pradeepkt
19-12-2005, 05:19 AM
தலை உங்க வாழ்த்துக்கு இத்தனை பவரா?
இதில நீங்க என்னை மேட்ச் பாக்க வாணாம்கிறீங்க :D
நான் இப்போவே போய் கஃபேடேரியாவில மாட்ச் பாக்கப் போறேன் :D

mania
19-12-2005, 05:30 AM
தலை உங்க வாழ்த்துக்கு இத்தனை பவரா?
இதில நீங்க என்னை மேட்ச் பாக்க வாணாம்கிறீங்க :D
நான் இப்போவே போய் கஃபேடேரியாவில மாட்ச் பாக்கப் போறேன் :D

:D :D :D யாரோட ஆட்சி நடக்குது இப்போ....??? இருக்காதா பின்ன.....:rolleyes: :rolleyes: :D :D தர்ம அடி வாங்க தைரியம் இருந்தா தாரளமா கஃபேடேரியாக்கு போ......:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
19-12-2005, 05:40 AM
பதானும் அகர்காரும் கை கொடுப்பாங்களா?

இளையவன்
19-12-2005, 05:46 AM
பதானும் அகர்காரும் கை கொடுப்பாங்களா?
பந்துவீச்சாளர்களிடம் இப்படி அதிகமாக எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் போல தெரியுது பரம்ஸ். எப்படியோ குறைந்தது 375க்கு உயர்த்தினாலே போதும்.

பரஞ்சோதி
19-12-2005, 05:50 AM
இளையவன் அப்படி சொல்ல முடியாது, அகார்கார் கூட 90+ ரன்களை அடித்தவர், அது மாதிரியே கும்ளே, ஹர்பஜன் பல முறை 50+ அடித்தவர்கள், ஆக இப்போட்டியிலும் அவர்கள் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இளையவன்
19-12-2005, 05:55 AM
இந்தப் போட்டியில் துடுப்பாட்டக்காரர்களே சொதப்பிவிட்டார்கள் அதனால்தான் இவர்கள் அடிப்பார்களோ என சந்தேகமாக உள்ளது.

பரஞ்சோதி
19-12-2005, 06:18 AM
முதல்நிலை ஆட்டக்காரர்கள் சொதப்பத்தானே செய்தாங்க, திறமையான பந்து விச்சுக்காரணமாக அவுட் ஆகவில்லை தானே, இது கடை நிலை ஆட்டக்காரர்களுக்கு தெரியும் தானே, ஆக ரன்கள் வரும் தானே.

இதுவரை 30 ரன்கள் ஜோடியாக எடுத்திருக்கிறார்கள்.

இளையவன்
19-12-2005, 06:27 AM
பதான் (82) அவுட்
இந்தியா 8/345

மன்மதன்
19-12-2005, 06:35 AM
நல்ல ஸ்கோர் மாதிரி தெரியுதே..??

aren
19-12-2005, 06:41 AM
நல்ல ஸ்கோர் மாதிரி தெரியுதே..??

இல்லையப்பா, இன்னும் இது சரியான ஸ்கோர் கிடையாது. நமக்கு 400 வேண்டும்.