PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
29-11-2005, 03:51 PM
சலனங்கள் எதுவுமின்றி
பயணிப்பதில்லை நதி,
நானும் நதி தான்
சலனப்படுவதால்.
---------------------

மழைக்காலம் வருமுன்
உணவு சேமித்திடும்
எரும்பு போல்
என்னில் சேகரிக்கிறேன்
உன்னுடனான நினைவுகளை.
என்னை விட்டு
நீ விலகிய பின்
நான் உயிர் வாழ.

----------------------

Shanmuhi
29-11-2005, 06:54 PM
சலனங்கல் எதுவுமின்ரி
பயனிப்பதில்லை நதி,
நானும் நதி தான்
சலனப்படுவதால்.

கவி சிறியதாக இருந்தாலும்
கரு நன்றாக இருக்கின்றது.
மேலும் தொடருங்கள்...

இளசு
29-11-2005, 10:09 PM
வரவேற்பு பாரதப்ரியன் அவர்களே..

துல்லிய கற்பனை சொல்லும் கவிதைகள்..
பாராட்டுகள்.. மேலும் நிறைய எழுதிப் படையுங்கள்..
வாழ்த்துகள்..


( ண, ற, ள - தட்டச்ச shift key அழுத்தியபடியே n,r,l தட்டச்சுங்கள்.)

பென்ஸ்
30-11-2005, 01:50 AM
வாங்க பாரதபிரியன்...ஒரு சிறிய அறிமுகத்தை "உங்களை அறிமுகம் செய்து கொள்க" பகுதியில் இடலாமே...

ப்ரியன்
30-11-2005, 03:47 AM
/* சலனங்கள் எதுவுமின்றி
பயணிப்பதில்லை நதி,
நானும் நதி தான்
சலனப்படுவதால். */

இயற்கை ஒரு அங்கம் நாம் என்பதை சொல்லுவதாய் தோன்றுகிறது எனக்கு.அருமை.

/* மழைக்காலம் வருமுன்
உணவு சேமித்திடும்
எரும்பு போல்
என்னில் சேகரிக்கிறேன்
உன்னுடனான நினைவுகளை.
என்னை விட்டு
நீ விலகிய பின்
நான் உயிர் வாழ. */

எறும்புடனான உங்கள் உவமை வழமை வாழ்த்துக்கள் பாரதப்ரியன்

kavitha
30-11-2005, 09:25 AM
சலனங்கள் எதுவுமின்றி
பயணிப்பதில்லை நதி,
நானும் நதி தான்
சலனப்படுவதால்.
தாமே நதியாக, நினைவுகள் சலனங்களாக நல்ல உவமை.



மழைக்காலம் வருமுன்
உணவு சேமித்திடும்
எறும்பு போல்
என்னில் சேகரிக்கிறேன்
உன்னுடனான நினைவுகளை.
என்னை விட்டு
நீ விலகிய பின்
நான் உயிர் வாழ.



" உன்னை நான் பிரிஞ்சா
உனக்கு முன் இறப்பேன்"
ஏற்கனவே கேட்டது!

விலகிவிடுவாய் என்றறிந்தே சேகரிக்கும் நினைவுகள் - புதுமையாய் இப்போது கேட்பது.

இறப்பதை விடவும் நினைவுகளோடு வாழ்வது கடினமானது தான்!

நல்லமுயற்சி பாரதப்ரியன். :)

ilanthirayan
04-12-2005, 04:49 PM
சலனப்படுவதால் தான் நதி அடிக்கடி கரைகளை உடைக்கின்றது.... மனிதர்களும்தான்.

- ஒரு வாழ்வியல் தத்துவம் அழகுடன் ....