PDA

View Full Version : BCCI தேர்தல்



aren
29-11-2005, 07:23 AM
சரத்பவார் BCCIயின் பிரசிடெண்டாக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. 20 க்கு 11 என்ற வாக்கு வித்யாசத்தில் ரன்பீர்சிங் மகேந்திராவை வென்றார். அப்படியானால் டால்மியாவின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டதா?

கங்குலிக்கு இனிமேல் இடம் கிடைக்குமா? சந்தேகம் என்று தோன்றுகிறது.

aren
29-11-2005, 07:24 AM
வெற்றி பெற்ற சரத்பவாருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

gragavan
29-11-2005, 07:26 AM
வெற்றி பெற்றவருக்கு எனது வாழ்த்துகள்.

mania
29-11-2005, 07:27 AM
அநேகமா உடம்பு சரியில்லை என்று கங்கூலியே சென்னை டெஸ்டிலிருந்து விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....!!!!:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

aren
29-11-2005, 07:31 AM
அநேகமா உடம்பு சரியில்லை என்று கங்கூலியே சென்னை டெஸ்டிலிருந்து விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....!!!!:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

அப்படியில்லையென்றால் நீங்கள் ஒரே உரைப்பாக ஒரு உணவை கொடுத்து அவரை பாத்ரூமிற்கு அனுப்பிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் கேள்வி கேட்க ஆளேயில்லையே.

mania
29-11-2005, 07:35 AM
:D :D :D :D :D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
29-11-2005, 08:14 AM
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

டால்மியா கோஷ்டிகளில் கைகளில் இருந்து கிரிக்கெட் வாரியம் விடுதலை அடைய வேண்டும்.

இனிமேல் திறமையான வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் என்ற நிலை வர வேண்டும்.

சென்னை கிரிக்கெட் சங்கம் அதிக மகிழ்ச்சியோடு இருக்குமே.

இளையவன்
29-11-2005, 09:08 AM
கங்குலிக்கு இனிமேல் இடம் கிடைக்குமா? சந்தேகம் என்று தோன்றுகிறது.

திறமையின் அடிப்படையில் வீரர்கள் சேர்க்கப்படுவார்களாயின் தற்போதைய நிலையில் கங்குலியை அணியிலிருந்து ஓரம் கட்ட முடியாது. அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

aren
29-11-2005, 09:14 AM
திறமையின் அடிப்படையில் வீரர்கள் சேர்க்கப்படுவார்களாயின் தற்போதைய நிலையில் கங்குலியை அணியிலிருந்து ஓரம் கட்ட முடியாது. அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

திறமையை மட்டுமே பார்த்தால், தமிழ்நாட்டின் பதானி, ஸ்ரீதரன் ஸ்ரீராம், மும்பையின் வாசிம் ஜாஃபர், ஜாஹீர்கான் (ஐயோ பாவம்) ஆகியோருக்கு சான்ஸ் கொடுத்திருக்கவேண்டுமே.

ஆகாஷ் சோப்ரா என்ன பாவம் செய்தார் என்று தெரியவில்லை.

சடகோபன் ரமேஷ் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்பொழுது ஓரங்கட்டப்பட்டார்.

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வி.வி.எஸ். லஷ்மன் பற்றி என்ன சொல்வது.

pradeepkt
29-11-2005, 11:04 AM
இனிமேலும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் மிகப் பொறுப்போடு செயல்படட்டும்.
எந்த அரசியலுக்கும் இடம் தராமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.

அறிஞர்
29-11-2005, 01:54 PM
இன்றைக்கு நல்ல தகவல்....

டால்மியா கும்பலுக்கே மொத்த ஆப்பு....

அனைவரும் சந்தோசத்தில்..

சபாஷ் பவார்... திறமையாக சங்கம் செயல்படட்டும்

poo
03-12-2005, 06:06 AM
பதவிக்காலம் ஒரு வருடம்தானே... இந்த குறைந்த நேரத்தில் என்ன செய்துவிட முடியும் பவாரால்?!!

டால்மியா மீண்டும் வருவதை தடுக்கவும், டால்மியா என்ன செய்தாரென ஆராய்ச்சி செய்யவும், அடுத்தமுறை நாம் எப்படி மீண்டும் ஜெயிப்பது என யோசிக்கவுமே நேரம் போய்விடும்.

அறிஞர்
03-12-2005, 04:16 PM
பதவிக்காலம் ஒரு வருடம்தானே... இந்த குறைந்த நேரத்தில் என்ன செய்துவிட முடியும் பவாரால்?!!

டால்மியா மீண்டும் வருவதை தடுக்கவும், டால்மியா என்ன செய்தாரென ஆராய்ச்சி செய்யவும், அடுத்தமுறை நாம் எப்படி மீண்டும் ஜெயிப்பது என யோசிக்கவுமே நேரம் போய்விடும். பவார் பக்கா அரசியல்வாதி... ஆட்சி வேறு அவர்களுடையது.. எப்படியும் சில வருடங்கள் அவர் கோலாச்சுவார்.

அடிப்பட்ட டால்மியா ஏதாவது செய்ய முயன்று தோல்வியடைவார்

poo
05-12-2005, 04:28 AM
டால்மியா ஆசிய-ஆப்ரிக்க கவுன்சில் தலைவர் பொறுப்பை உதறியிருப்பது ??!

aren
05-12-2005, 12:29 PM
டால்மியா ஆசிய-ஆப்ரிக்க கவுன்சில் தலைவர் பொறுப்பை உதறியிருப்பது ??!

இந்த அமைப்பு ஆரம்பித்ததிலேயிருந்தே ஒரு சொதப்பல்தான். அவர்களால் மாட்சிற்கு டிவி உரிமையைக்கூட யாருக்கும் கொடுக்க முடியவில்லை. ஆகையால் அது ஒரு டம்மி பதவி என்பதால் அதை உதறிவிட்டார்.