PDA

View Full Version : வாடை எனை வாட்டுது..........



gragavan
29-11-2005, 04:42 AM
இன்றைக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டு இளம் பெண்களின் பேச்சு எப்படியிருக்கும் என்று ஒரு நகைச்சுவையான கற்பனை. கற்பனையில் உலகம் நிறையவே மாறிவிட்டது. அதனால் படிக்கிறவர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்.

ரமாவும் சுமாவும் கல்லூரி மாணவிகள். கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏய் சுமா? மல்லிகை மொட்டு சிடி வாங்கினியா? நான் நேத்துதான் வாங்கினேன். ராத்திரி கண்ண மூடிப் படுத்துக்கிட்டு அதக் கேட்டுட்டும் மோந்து பாத்துகிட்டும் தூங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது."

"அடடா! நான் இனிமேதான் வாங்கனும். எத்தனை பாட்டு இருக்கு? எல்லாம் நல்லாயிருக்கா? ஆமா வாடையமைப்பாளர் யாரு?"

"இசை ஏ.ஆர்.ரகுமான் போட்டிருக்கார். பாட்டெல்லாம் நல்லாயிருக்கு. வாடையமைப்பாளர் சசி. ரொம்பப் புதுமையா இருக்குடி. மல்லிகைக் கொடின்னு ஒரு பாட்டு. அதுல ஒரு மாதிரி மல்லிகை மணம் வருது. அடடா! என்னமா இருக்கு தெரியுமா? அதே மாதிரி பீச்சுக்குப் போனேன் பாட்டுல பீச்சுல வருமே....அதே மாதிரி உப்புக்காத்து வாடைய ரொம்ப நேச்சுரலா போட்டிருக்காரு. அப்பப்ப பானீபூரி வாடையும் லேசான கருவாட்டு வாடையும் ரொம்ப நேச்சுரலா இருக்கு."

"ஐயோ! ரமா! நீ வேற ஏத்தி விடுறயே! சசி ஒவ்வொரு வாடையும் கம்யூட்டர்ல போடுறாராமே. நல்லா இருக்கா?"

"சூப்பராயிருக்கு சுமா. கதிரவன் மாதிரி வாடையமைப்பாளர்கள் இயற்கையாவே வாடைய ரெக்கார்ட் பண்ணுவாங்களாம். ஆனா சசிதான் கம்யூட்டர் வெச்சி வாடையமைக்கிறார். அதுவும் எல்லாருக்கும் பிடிச்சுதான் இருக்கு. என்ன இருந்தாலும் டிஜிட்டல் ரெக்கார்டிங் ஆச்சே!"

"தியேட்டர்ல போய் பாக்கனும் நீ. திருச்சி எக்ஸ்பிரஸ் படத்த தியேட்டர்ல பாக்கும் போது கும்முன்னு இருந்துச்சே. நல்ல டால்பி ஸ்மெல்லர்ஸ். ஒவ்வொரு வாசனையும் தெளிவா இருந்ததே. நீயுந்தான வந்த?"

"ஆமாமா. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல.....ஒரு நாத்தம் வருமே. தியேட்டர்ல இருக்கோமான்னு எனக்கே டவுட் வந்துருச்சி. ஆனா ஒன்னுப்பா....பழநி பஞ்சாமிர்தத்த கமல் நக்கும் போது எனக்கு வாயில எச்சி ஊறிடிச்சி."

"அதெல்லாம் கம்யூட்டர்ல போட்டதுதானே. நல்லாதான் இருந்தது. பழைய ஆளுங்கதாம்ப்பா இன்னமும் நேச்சுரலா ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்வாங்க. பழைய படமெல்லாம் அப்படிதான வந்தது."

"ஆமாம் சுமா. நம்ம சின்னக் குழந்தையா இருந்தப்போ வாசனைய ரெக்கார்டே பண்ண முடியாதாமே. வெறும் ஒலியும் ஒளியும்தானாம்."

அப்பொழுது ரமாவிற்கு போன் வருகிறது. ரமாவின் தாயார் வீட்டிலிருந்து கூப்பிடுகிறார். ரமா கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்து விடுகிறாள். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கம்மென்று பாயாச வாடை.

"ரமா...இன்னைக்கு வீட்டுல என்ன விசேஷம்? பாயாச வாடை பலமா இருக்கு."

"ஊருல இருந்து சித்தி சித்தப்பால்லாம் வந்துருக்காங்க. அதான். இந்த மொபைல் போனால இதுதான் பிரச்சனை. அன்னைக்கு நம்ம காலேஜ் போகாம ஹோட்டலுக்குப் போனோமே. கரெக்ட்டா அப்பதான் வீட்லருந்து போன். டேபிள்ள என்னடான்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு ஆர்டர் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த வாடையெல்லாம் போகாம நான் போன பொத்தி வெச்சுக்கிட்டு பேச வேண்டியிருந்தது. நல்ல வேள என்கிட்ட கேமராவை ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இல்லைன்னா நான் இருக்குற எடம் தெரிஞ்சி போயிருக்கும்."

"ஆமா. நல்ல வேள. தப்பிச்சோம். இல்லைன்னா உங்க வீட்லருந்து எங்க வீட்டுக்கும் விஷயம் போயி ஒரே பிரச்சனையாப் போயிருக்கும்."

சுமாவுக்கு ஒரு சந்தேகம். "ஏய்! அன்னைக்கு உன்னோட பாய் பிரண்ட் ஏதோ பெர்பியூம் போட்டுட்டு வந்தான்னு மொபைல்ல ரெக்கார்டு பண்ணியே. அதக் கொஞ்சம் போடுடி. நல்ல ஸ்மெல்."

"சுமா! இதெல்லாம் வேண்டாம். அந்த வாடையத்தான் ஒரு வாட்டி போட்டேன்ல. அப்புறம் என்ன அடிக்கடி. ரொம்ப அலையாத!"

"சரிம்மா. விட்டுத்தள்ளு. என்னவோ மேன்லியா நல்லா இருந்ததேன்னு கேட்டேன். சரி. சரி. அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா. நான் கம்ப்யூட்டர்ல போட்டு காப்பி பண்ணிக்கிறேன்."

இருவரும் ஒருவருக்கொருவர் டாட்டா சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்.

(சரி நண்பர்களே. இது போல நடக்குமானால் என்னென்ன நடக்கலாம் என்று உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்களேன்.)

அன்புடன்,
கோ.இராகவன்

mania
29-11-2005, 05:56 AM
:D :D :D ஹா......ஹா.....ஹா....நல்ல கற்பனை ராகவன்.....அது சரி சுமாவுக்கு தெரியுமா.....???:rolleyes: நீ இந்த மாதிரி போட்டு உடைக்கப்போறேன்னு......சண்டைக்கு வந்திட போறா....!!!???:D :D
பின்ன என்ன ரமா, உமான்னு போடறத்துக்கு பதிலா வேணும்னேதானே சுமான்னு போட்டிருக்க.....:rolleyes: :rolleyes: :D ?(அப்பாடி இன்னிக்கு வேலை ஆச்சு)....:D :D
அன்புடன்
மணியா...

பென்ஸ்
29-11-2005, 06:16 AM
ராகவன்... நல்ல கற்ப்பனை... கலக்குறிங்க... இது சம்பந்தபட்ட ஆராய்ச்சி நடப்பதாக படித்திருக்கிறேன்...

உங்கள் கற்ப்பனை படி ஒரு காட்சியை காட்டும் போது அந்த இடத்தோட மணம் அடிக்கும் என்றால், சென்னையை பற்றி நியுஸ் காண்பிக்கும் போது மூக்கை பொத்திக்கொண்டுதானே பாக்கனும்... :rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

ஆனாலும் தமிழ் சினிமாவில் காட்டும் பொது கூவத்தில் கூட குண்டுமல்லி மணம் அடிக்குதுன்னு எடுத்திடுவாங்கப்பா....:p :p :D :D :D :D

mania
29-11-2005, 06:22 AM
ராகவன்... நல்ல கற்ப்பனை... கலக்குறிங்க... இது சம்பந்தபட்ட ஆராய்ச்சி நடப்பதாக படித்திருக்கிறேன்...

உங்கள் கற்ப்பனை படி ஒரு காட்சியை காட்டும் போது அந்த இடத்தோட மணம் அடிக்கும் என்றால், சென்னையை பற்றி நியுஸ் காண்பிக்கும் போது மூக்கை பொத்திக்கொண்டுதானே பாக்கனும்... :rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

ஆனாலும் தமிழ் சினிமாவில் காட்டும் பொது கூவத்தில் கூட குண்டுமல்லி மணம் அடிக்குதுன்னு எடுத்திடுவாங்கப்பா....:p :p :D :D :D :D

:rolleyes: :rolleyes: :D :D ஓ....அதானா அன்னிக்கு என்னை பாத்தபோது ஹெல்மெட்டோட இருந்தியா.....:rolleyes: :rolleyes: ????நான் கூட அந்த நறுமணம் நீ 10ஆவது நாளாக அணிந்திருந்த ஜீன்ஸிலேயிருந்து வந்ததோ என்று நினைத்தேன்....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன், உரிமையுடன்
மணியா...:D :D

பென்ஸ்
29-11-2005, 06:34 AM
ஆமா தலை.... நான் வேளியே போகும் போது அக்தர் பந்தை மீட் பண்ண போகிற கக்குலி போல..... விண்வெளிவீரன் போல.... உடம்பை சுத்திகிட்டு போக வேண்டி இருக்கு.. பெங்களுரில் தூசு.. சென்னையில் நாற்றம்....:p :p :D

ஆனால் உங்களை பாத்த போது கெல்மெட் வைத்திருந்தது ராகவனின் ஹிண்டி மொசுருவுக்கு பயந்துதான்... :rolleyes: :rolleyes: தப்பா நினைச்சுடிங்களா?????:D :D :D

gragavan
29-11-2005, 07:12 AM
:D :D :D ஹா......ஹா.....ஹா....நல்ல கற்பனை ராகவன்.....அது சரி சுமாவுக்கு தெரியுமா.....???:rolleyes: நீ இந்த மாதிரி போட்டு உடைக்கப்போறேன்னு......சண்டைக்கு வந்திட போறா....!!!???:D :D
பின்ன என்ன ரமா, உமான்னு போடறத்துக்கு பதிலா வேணும்னேதானே சுமான்னு போட்டிருக்க.....:rolleyes: :rolleyes: :D ?(அப்பாடி இன்னிக்கு வேலை ஆச்சு)....:D :D
அன்புடன்
மணியா...ஹி ஹி ஹி ஹி இதுதான் என்னோட வேலை.

gragavan
29-11-2005, 07:16 AM
ஆமா தலை.... நான் வேளியே போகும் போது அக்தர் பந்தை மீட் பண்ண போகிற கக்குலி போல..... விண்வெளிவீரன் போல.... உடம்பை சுத்திகிட்டு போக வேண்டி இருக்கு.. பெங்களுரில் தூசு.. சென்னையில் நாற்றம்....:p :p :D

ஆனால் உங்களை பாத்த போது கெல்மெட் வைத்திருந்தது ராகவனின் ஹிண்டி மொசுருவுக்கு பயந்துதான்... :rolleyes: :rolleyes: தப்பா நினைச்சுடிங்களா?????:D :D :Dஹிண்டி மொசுருக்கு பயந்தா? :mad: :mad: :mad: :mad: :mad: :mad: அடுத்த முறை வீட்டுக்கு வந்தா வெறும் ஹிண்டி மொசுருதான்..........

aren
29-11-2005, 07:28 AM
படிக்கும்பொழுது தலை சுற்றியது. ஆனால் நம் மக்களின் பதிவுகளைப் படித்தவுடன் அது கொஞ்சம் குறைந்தது போலுள்ளது.

mania
29-11-2005, 07:32 AM
ஹிண்டி மொசுருக்கு பயந்தா? :mad: :mad: :mad: :mad: :mad: :mad: அடுத்த முறை வீட்டுக்கு வந்தா வெறும் ஹிண்டி மொசுருதான்..........

:D :D அவனுக்கு கொசுராக்கூட ஹிண்டி மொசுரு கொடுக்காதே.....!!!!:D வெறும் ஹிண்டி மட்டும் கொடு,,.....!!!:D :D
அன்புடன்
மணியா...:D

aren
29-11-2005, 07:34 AM
:D :D அவனுக்கு கொசுராக்கூட ஹிண்டி மொசுரு கொடுக்காதே.....!!!!:D வெறும் ஹிண்டி மட்டும் கொடு,,.....!!!:D :D
அன்புடன்
மணியா...:D

மெசுரு மட்டும் கொடுக்கச்சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹிண்டியை கொடுத்து அவர்களை ஊரை விட்டே துரத்த பிளான் கொடுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

kiruba_priya
29-11-2005, 07:37 AM
நல்ல கற்பனை..

3 வருடங்களுக்கு முன்பு, "தினேஷ் பாபு" என்ற நடிகர், cum டைரக்டர், ஒரு பக்தி படம் (ஒரிஜினல் பக்தி படம்) எடுத்திருந்தார். அதில் சில காட்சிகளில், படத்தில் சாம்பிராணி வாசனை வரும்போது, படம் பார்ப்பவர்களும் சாம்பிராணி வாசனையை நுகர்வர்; ரோஜா வாசனை வரும்போதும் அதே போல்தான்.

நான் இதை படித்தபோது, இது எப்படி சாத்தியம் என யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது.. சாம்பிராணி, ரோஜா காட்சிகள் வரும்போது, தியேட்டரில் வேலை செய்பவர்கள், அந்த வாசனையை spray செய்வார்களாம், மக்களுக்கு தெரியாதவண்ணம்.

ராகவன் சொல்லுவதுபோல் வரும் காலத்தில் நடக்க சாத்தியம் உள்ளது.

நடந்தால் ராகவனுக்கு ஒரு 'ஜே'!!

aren
29-11-2005, 07:40 AM
கிரிபா அவர்களே, உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

pradeepkt
29-11-2005, 08:20 AM
வாசனையையும் பதிவு செய்து அனுப்புவது என்பது நல்ல கற்பனை. மக்கள் ஹாரி பாட்டரில் வருவது போல் மனிதனையே அனுப்ப முயற்சி செய்து வந்தார்கள். ஒவ்வொரு செல்லாக அனுப்பி இன்னொரு முனையில் அதை மீண்டும் உருவாக்குவதே அது. இன்று வரை சின்ன வெற்றி கூடக் கிடைக்கவில்லை என்று கேள்வி... அறிஞர் மேலும் விளக்கங்கள் தரலாம்.

ஏற்கனவே யூனிவர்சல் ஸ்டுடியோக்களில் 4வது பரிமாணம் என்று இதைச் செய்கிறார்கள். முப்பரிமாணங்களில் படம் தெரிய, நான்காவது பரிமாணமாக உணர்ச்சிகளைச் சொல்கிறார்கள்.
நான் ஷ்ரெக் - 3 - 4D அங்கே பார்த்தேன்.
முதல் காட்சியில் ஷ்ரெக் தூவென்று என் முகரைக் கட்டையில் துப்பினான். அதைத் துடைக்கும் முன் காலுக்குக் கீழே வண்டு ஊர்ந்தது.

மன்மதன்
29-11-2005, 02:47 PM
அருமையான கட்டுரை.........எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் சாத்தியம் ஆகலாம்.....

ஷ்ரெக் 3-4D படம் எங்கே பார்த்தாய் பிரதீப்??

அறிஞர்
29-11-2005, 09:38 PM
இதற்கு சாத்தியமுண்டு...

எல்லா வாசங்களும் வேதிப்பொருள்களே..

ஆனால் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும்போது வாசங்கள் குறையலாம்.

நல்ல ஆராய்ச்சி....இராகவன்.. இதை இன்னும் ஆராய்ந்து பேட்டண்ட் பண்ணுங்கள்

இளசு
29-11-2005, 10:34 PM
வாவ்... அசத்தலோ அசத்தல் ராகவன்..

பின்னிட்டீங்க.. கையைக் குடுங்க.... பாராட்டுகள் ராகவன்.

எதிர்காலக் கற்பனை + சாத்திய முன்னோட்டம் வகைப் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தவகைப் பதிவுகள் இதுவரை தமிழில் கம்மி..

உங்களின் இப்பதிவுக்கு என் சிறப்பான பாராட்டுகள்..


மொசுறு கொடுக்கச்சொன்ன, போட்டுக்கொடுக்கும் மணியா முதல், ஹெல்மெட் பெஞ்சமின்,
தினேஷ்பாபு படம் பற்றி சொன்ன கிருபா, ஷ்ரெக் பார்த்த பிரதீப்
என நண்பர்களின் பின்னூட்ட வாடை சேர்ந்து....

இந்தப் படைப்பை தூக்குது...


அருமை மக்களே...

pradeepkt
30-11-2005, 03:30 AM
அருமையான கட்டுரை.........எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் சாத்தியம் ஆகலாம்.....

ஷ்ரெக் 3-4D படம் எங்கே பார்த்தாய் பிரதீப்??
முந்தைய பதிவைப் பாரு
அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலம் ஆர்லண்டோவில் யூனிவர்சல் ஸ்டுடியோ இருக்கிறது.
அங்கேதான் பார்த்தேன்.

gragavan
30-11-2005, 04:04 AM
பிரதீப் சொல்வது போன்ற ஒரு திரைப்படத்தை நான் பாரீசில் பார்த்தேன். டிஸ்னி லாண்டில்தான்.

honey I shrunk the kids படம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம் இது. நான்காவது டைமென்ஷனில்.

ஒன்றை நூறாக்கும் கருவியைக் கண்டு பிடித்திருப்பார்கள். அதில் ஒரு பொருளை வைக்கும் பொழுது எலி மாட்டிக்கொள்ளும். அதனால் நூறு எலிகள் உருவாகி திரையிலிருந்து நம்மை நோக்கி தடதடவென முப்பரிமானத்தில் ஓடி வந்து......அவுச்...காலை யாரோ பிரண்டுகின்றார்களே (எலிகள் நாற்காலிக்கு அடியில் ஓடுகின்றனவாம்.)

பிறகு ஒரு நாயை இருபது மடங்கு பெரிதாக்கி விடுவார்கள். அது அச்சென்று நம்மைப் பார்த்துத் தும்மும். ஐயோ....முகத்தில் ஜில்லென்று....(தண்ணீரைத்தானே தெளித்திருப்பார்கள்.)

இன்னும் நிறைய..இது பற்றி மட்டுமே பெரிய பதிவு போடலாம்.

gragavan
30-11-2005, 04:35 AM
இதற்கு சாத்தியமுண்டு...

எல்லா வாசங்களும் வேதிப்பொருள்களே..

ஆனால் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும்போது வாசங்கள் குறையலாம்.

நல்ல ஆராய்ச்சி....இராகவன்.. இதை இன்னும் ஆராய்ந்து பேட்டண்ட் பண்ணுங்கள்என்னது பேட்டண்ட்டா? இத இதுவரைக்கும் யோசிச்சுப் பேட்டண்டு பண்ணாமலா இருக்காங்க. அதுவுமில்லாம டெக்னிகலா இல்லாம வெறும் கான்செப்சுவலா பேட்டண்ட் பண்ண முடியுமா?

அறிஞர்
30-11-2005, 02:52 PM
என்னது பேட்டண்ட்டா? இத இதுவரைக்கும் யோசிச்சுப் பேட்டண்டு பண்ணாமலா இருக்காங்க. அதுவுமில்லாம டெக்னிகலா இல்லாம வெறும் கான்செப்சுவலா பேட்டண்ட் பண்ண முடியுமா? கண்டிப்பா முடியாது..எதுக்கும் ஆதாரம் வேண்டும்...

aren
30-11-2005, 03:04 PM
அறிஞரே சொல்லிவிட்டார். ஆதாரம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது.

poo
05-12-2005, 04:53 AM
அருமை இராகவன்..

முன்பு சகோதரி லாவண்யா மன்றத்தில் இது தொடர்பாக கட்டுரை எழுதிய ஞாபகம்!

பட்டனைத் தட்டினா பட்டுன்னு ரெண்டு இட்டிலி தட்டுல விழும்.. விழுகிறதே இப்போது!

சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தீர்கள்..
நன்றி!