PDA

View Full Version : மரணம்!



நிலா
21-04-2003, 07:01 PM
மனம் கேட்டேன்! தரமறுத்தாய்!
நின் காதல் தாங்கி மரித்தது என் மனம்!
அது......மாண்புமிகு மரணம்!

இளசு
21-04-2003, 08:47 PM
காதல் தாங்கியதால் மாண்புமிகுந்ததாய்
மரித்த மனத்தை வர்ணித்த நிலாவே....
மறக்கவில்லை தமிழை நீ
மரத்துப்போக விடவில்லை உணர்வை நீ
கவிதை உள்ள வரை உனக்குக் காதல் நோய் பீடிக்கக் கடவதாக!

kaathalan
21-04-2003, 09:53 PM
மாண்புமிகு மரணம் என்று குறும்பா தந்த நிலாவுக்கு பாராட்டுக்கள்.
அண்ணா என்ன இது, நிலாவுக்கு எல்லாம் சாபம் இட்டு..
காதல் உள்ளவரை நிலாவுக்கு தான் எத்தனை சாபங்கள் காதலர்களால். நீங்கள் வேறு சாபமிடவேண்டுமா?

puppy
08-01-2004, 05:00 PM
அடடா நம்ம மாண்புமிகு நிலா......

இ.இசாக்
08-01-2004, 05:40 PM
மனம் கேட்டேன்! தரமறுத்தாய்!
நின் காதல் தாங்கி மரித்தது என் மனம்!
அது......மாண்புமிகு மரணம்!

காதல் சுமந்த மனதின் மரணம்
மாண்புக்குரியதென்றால்..

தர மறுத்த மனதின் வாழ்வு???????????????????

நிலா
08-01-2004, 05:43 PM
நக்கல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பப்பி !
நல்ல கேள்வி இசாக்!

நன்றி!அனைவருக்கும்!

Nanban
08-01-2004, 05:46 PM
அருமையான கவிதை.......

மாண்புமிகு மரணம்...... மாண்புமிகு காதலால்........

பாராட்டுகள் நிலா.........

நிலா
08-01-2004, 05:47 PM
நன்றி நண்பன்!

Nanban
08-01-2004, 05:52 PM
என்ன நிலா, பப்பி இன்றைக்கு மன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் போலிருக்கிறது......... என்ன விஷயம்...... மன்றத்தில் நடக்கப் போகும் போட்டிக்காக மன்றத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறாரா?

நிலா
08-01-2004, 05:57 PM
என்ன நிலா, பப்பி இன்றைக்கு மன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் போலிருக்கிறது......... என்ன விஷயம்...... மன்றத்தில் நடக்கப் போகும் போட்டிக்காக மன்றத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறாரா?


தெரியலையேஏஏ நண்பன்?
நேத்து முழுக்க நீதிக்கதைகள்.இன்னைக்கு கவிதை?(என்கவிதையையும் உங்களையெல்லாம் படிக்கவச்சதுக்கு நான் நன்றி சொல்லணும் அவங்களுக்கு)நாளைக்கு?????????????/

Nanban
08-01-2004, 06:01 PM
நாளைக்கு சிரிப்புகள் தான்......... (மற்ற மன்றங்கள்லாம் 5 அல்லது 6 பக்கங்கள் தான் ஓடியிருக்கு - அவங்க அட்டாக் பண்றதெல்லாம் - 20 பக்கங்கள் தாண்டிய மன்றங்கள் என்று நினைக்கிறேன்......)

என்றாலும் புரட்டிப் போட்ட இந்த பூகம்ப புயலில், மன்றமே கலங்கிப் போய் தான் நிற்கிறது - பாருங்களேன் - அடுத்த ஒரு மாதத்திற்கு வெறும் நன்றி சொல்லும் படலாமாக இருக்கப் போகிறது - பின்னே எப்படி பின்னாடி போய்ட்ட அவங்கவங்க பதிப்பை எப்படி முன்னுக்கு கொண்டு வரதாம்....

திடீரென்று எல்லாரும் ஆக்டிவ் ஆயிடுவாங்க, பாருங்க........

இ.இசாக்
08-01-2004, 06:05 PM
இதென்ன புது அரசியலா இருக்கு
எப்படியோ மன்றத்தில் எழுதுவோர் கூடினால் சரி

நிலா
08-01-2004, 06:06 PM
சரிதான் நண்பரே!

நானே என் பதிப்பையெல்லாம் தூசிதட்டலாம்னு இருந்தேன்!பபபி விட்ட என் பதிவுகளை நானே வெளீக்கொணரலாமான்னு இருக்கேன்! :wink: :D

Nanban
08-01-2004, 06:22 PM
செய்யுங்க.......... ஆனால் இந்த அசுர கதி வேகத்தில் வேண்டாம். (தினமும் 2,3 மணிக்குப் படுத்தால் மறுனாள் காலையில் ஆ·பீஸ் காலி......)

நிலா
08-01-2004, 06:24 PM
அப்படியே ஆகட்டும்!போய் தூங்குங்க நண்பன்!நானே யோசிப்பேன் உங்களுக்கு தூக்கமே வராதான்னு? :wink:

Nanban
08-01-2004, 06:31 PM
இது இன்னும் சிறிது காலத்திற்குத் தான். நான் இப்பொழுது என் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மூன்று மாத நோட்டீஸ் பீரியடில் தான் இருக்கிறேன். அதனால் தான் கவலையே படாமல், மன்றத்தில் நேரம் காலம் இல்லாமல் உலா வர முடிகிறது. FEB 15க்கு அப்புறம் இப்படி எல்லாம் இருக்க முடியாது... அதனால் தான் இப்பவே இப்படி......

kavitha
09-01-2004, 04:25 AM
பாவம் நிலா! இப்படி ஒரு சாபமா?

kavitha
09-01-2004, 04:59 AM
வரிகள் நன்று!