PDA

View Full Version : புரியவில்லையே



kavinila
28-11-2005, 09:41 AM
கடலை வென்ற தமிழன்
என்கிறாய்.
கப்பலோட்டிய தமிழன்
என்கிறாய்.
காலம் காலமாய்
கடல் தொழில் செய்வோரை
கரையான் என
தாழ்திய நீ

பென்ஸ்
28-11-2005, 10:28 AM
ஆவேசம் புரிகிறது...

கவிதையை கொஞ்சம் விளக்கலாமா... சரியாக புரியவில்லையே..

அறிஞர்
28-11-2005, 11:14 AM
கடலில் தொழில் செய்வோருக்கு தமிழில் என்ன பெயர்.. அன்பரே

இளசு
30-11-2005, 10:51 PM
குலம் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்..

பாவிகளை ஒதுக்குங்கள் கவிநிலா..

முன்னேற்றம் ஒன்றில் மட்டுமே நம் கண்ணோட்டம்..

gragavan
01-12-2005, 06:03 AM
இளசு சொன்னது போல குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம். எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் நிறை. எல்லாரும் இந்திய மக்கள். இது பாரதி வாக்கு.

kavinila
06-12-2005, 10:06 AM
கடலில் தொழில் செய்வோருக்கு தமிழில் என்ன பெயர்.. அன்பரே
கடல் தொழில் செய்வோரை நாயக்கர் அல்லது மரக்கார் என பழையகாலதில் அழைத்துள்ளார்கள்.தற்போது மீனவர்கள் என அழைக்கின்றார்கள்

அறிஞர்
06-12-2005, 02:58 PM
கடல் தொழில் செய்வோரை நாயக்கர் அல்லது மரக்கார் என பழையகாலதில் அழைத்துள்ளார்கள்.தற்போது மீனவர்கள் என அழைக்கின்றார்கள்நன்றி.. கரையான் என்று விழித்தீரே....அதான்...

தஞ்சை தமிழன்
06-12-2005, 03:08 PM
தோழியின் கவிதைக்கு விளக்கம் புரியவில்லை.

கரையான் எனறால் என்ன?

கரையான் என்பதற்கு கரையில் இருப்பவன் என வருமா?
அல்லது
கரையான் என்கிற புழு வகையை குறிப்பிடும் சொல்லா?

தோழி விளக்குவாரா?

அறிஞர்
07-12-2005, 04:16 AM
தோழி விளக்குவாரா? தஞ்சை தோழி இல்லை தோழன் ;) ;)

kavinila
12-12-2005, 07:35 AM
நான் இலங்கை தமிழர்களின் பேச்சு வழக்கில் உள்ள சொல்லையெ பாவித்தேன்.அதுவும் ஒரு தமிழ் நிகழ்சியில் இரு தமிழ் பெரிய மனிதர்கள் பாவித்த சொல்லாடலையெ இதில் நான் சிறு கவிதையாக வடித்தேன்.எங்கே தான் போனாலும் எம்முள் இலை மறை காயாக எம்முளிருக்கும் வர்க்கவேறுபாடு ஒழியவேன்டும் என்பதே இக் கவிதையை எழுதியதன் நோக்கமாகும்.யார் மனதையும் புண்படுத்தவல்ல

kavinila
12-12-2005, 07:41 AM
நன்றி.. கரையான் என்று விழித்தீரே....அதான்...
நான் கரையானெனெ விழித்தது ஒரு நிகழ்சியில் இரு தமிழ் பெரிய மனிதர்கள் பாவித்த சொல்லையெ அப்படியே என் கவிதையில் பாவித்தேன்

kavinila
12-12-2005, 07:44 AM
இளசு சொன்னது போல குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம். எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் நிறை. எல்லாரும் இந்திய மக்கள். இது பாரதி வாக்கு.
பாரதி சொல்லியும் பார் அதிகம் மாறவில்லையே.....