PDA

View Full Version : துபாயில் நிலநடுக்கம்..



மன்மதன்
27-11-2005, 04:05 PM
துபாயில் நிலநடுக்கம் (http://www.gulfnews.com/Articles/RegionNF.asp?ArticleID=195315)என கேள்விப்பட்டேன்..

துபாய், அபுதாபி நண்பர்கள் என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்........

அறிஞர்
27-11-2005, 06:10 PM
நண்பர்கள் அனைவரும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்

rajasi13
28-11-2005, 04:56 AM
நண்பர்கள் யாரும் கவலை படத்தேவையில்லை. ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அதிர்வு மட்டுமே துபாய் பகுதிகளை தாக்கியது. இதை உயரமான கட்டிடத்தில் இருந்தவர்கள் மட்டும் சில பகுதிகளில் உணர்ந்துள்ளனர். (ஷேக் சையது ரோடு, ஷார்ஜா ரோலா பகுதிகள்). மற்றபடி மிக்க இடத்தில் பயம் காரணமாக மக்கள் ரோடில் குழுமியிருந்தனர். இப்பொதும் அளவு கோலில் சிறிய அளவிலான அதிவுகள் பதிவாவதால் மீண்டும் அதிர்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரஞ்சோதி
28-11-2005, 05:12 AM
நன்றி ராஜாஸி,

நேற்றிரவே நான் கல்ப் நியூஸ் பார்த்தேன். பயமில்லை என்று சொல்லியிருந்தாங்க. துபாய் என்றதும் இங்கே எங்களுக்கும் வயிற்றில் பயம் வந்து விட்டது.

rajasi13
28-11-2005, 05:20 AM
உங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது, ஏனென்றால் நீங்கள் அரேபியன் பிளேட்டிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறீர்கள். துபாயிலும் பயப்பட தேவையில்லை. இந்தோ யூரேசியன் பிளேட் மற்றும் அரேபியன் பிளேட் சேரும் பகுதி ஈரானை கடக்கிறது அதனால் தான் அடிக்கடி அங்கே அதிர்ச்சி ஏற்படுகிற்து.

மன்மதன்
28-11-2005, 06:09 AM
ஷேக் ஜாயத் ரோடு மட்டுமில்லை.. தேரா துபாய் பகுதியிலும் (அல் பரஹா) கட்டிடங்கள் 30 செகண்ட்ஸ் ஆடினதாக என் நண்பன் சொன்னான்.

aren
28-11-2005, 09:21 AM
ஒன்றும் பிரச்சனையில்லையெனில் சந்தோஷமே. இப்பொழுது எதை படித்தாலும் கொஞ்சம் பயந்தே படிக்க வேண்டியுள்ளது.

அறிஞர்
28-11-2005, 10:28 AM
நல்ல தகவல்கள்.... நண்பர்கள் சுகமாக இருப்பது சந்தோசமான செய்தியே