PDA

View Full Version : தமிழகத்தில் வெள்ளம்



அறிஞர்
25-11-2005, 09:45 PM
தமிழகத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சி, கடலூர் உட்பட பல ஊர்கள் தண்ணீரில் மிதப்பதாக செய்திகள் கூறுகின்றன.

உண்மை நிலை என்ன நம்மூர் மக்கள் செய்திகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இன்னும் மழை தொடரும் என்ற செய்தி மக்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

பரஞ்சோதி
26-11-2005, 03:23 AM
இன்னும் 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை சொல்கிறது.

அரசாங்கம் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

இராணுவத்தின் உதவியையும் நாட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் போன்றவற்றை நன்கு திட்டமிட்டு வழங்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் தங்களால் முடிந்த நிதியை இப்போவே திரட்ட வேண்டும்.

mania
26-11-2005, 04:36 AM
பண்ருட்டியில் வாட்டி வதைத்த பேய் மழை நின்றது: மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது
பண்ருட்டி: பண்ருட்டியில் கடந்த ஐந்து நாட்களாக வாட்டி வந்த பேய் மழை நின்றது.நேற்று காலை முதல் நல்ல வெயில் அடித்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
பண்ருட்டி பகுதியில் கடந்த 5 நாட்களாக முன்னெப் போதும் இல்லாத வகையில் பேய் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. எப் போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் மகாத்மா காந்தி சாலை, இந்திரா காந்தி சாலை, லிங்க் சாலை, நால் ரோடு, கடைவீதி, கும்பகோணம் சென்னை நெடுஞ்சா லைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. மழைக்கு பயந்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பண்ருட்டி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
மழையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 56 மி.மீட்டரில் துவங்கி, 152 மி.மீட்டரில் முழங்கி, நேற்று முன் தினம் 324 மி.மீட்டரென மாநிலத்திலேயே அதிக அளவு மழை பெய்த இடங்களில் ஒன்றாக விளங்கியது. நேற்று காலை பண்ருட்டியில் 173 மி.மீட்டரும், பண்ருட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட வானமாதேவியில் 113.02 மி.மீட்டர் மழையளவும் பதிவானது. இதிலிருந்தே பண்ருட்டியில் எந்தளவிற்கு மழை பெய்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எப்போதும் கடலுர் மாவட்டத்தில் கடலுர், சிதம்பரம், வடலுர் பகுதிகள் தான் மழையால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த முறை அவற்றோடு சேர்ந்து பண்ருட்டியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை பொது மக்களை பயமுறுத்தி வந்த பேய் மழை பண்ருட்டி பகுதியில் நின்றது.
காலை முதலே வானம் திறந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத பொதுமக்கள் நேற்று வெளியே வந்தனர். இதனால் பண்ருட்டி நகரில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடந்த ஐந்து நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டதுடன் வழக்கமான வணிகமும் நடந்தது.

வெள்ளத்தால் சிதம்பரம் நகரம் துண்டிப்பு: வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் பலி
சிதம்பரம்: சிதம்பரம் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிதம்பரம் பகுதிகள் முற்றிலும் தண்ணீரில் மிதக்கிறது. வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர். கல்வி அமைச்சர் சண்முகம் முகாமிட்டு நிவாரணபணிகளை முடுக்கி வருகிறார்.
பருவமழை தீவிரமடைந்து கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டுகிறது. இதனால் வெள் ளாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. அத்துடன் வீராணம் தண்ணீரும் வெள்ளியங்கால் ஓடை வழியாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சிதம்பரம், காட்டுமன் னார்குடி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 300 கிராமங்களுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்குடி பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறியுள்ளன.
வெள்ளப் பகுதிகளில் கல்வி அமைச்சர் சண்முகம் மற்றும் கலெக்டர் ககன்தீப் சிங்பேடி ஆகியோர் நேரிடையாக சென்று நிவாரண பணிகளை முடுக்கினர்.
இருந்தும் தண்ணீர் முழுமையாக சூழ்ந்ததால் மீட்டு பணியில் தோய்வு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.
பகுதிகளில் தண் ணீர் முழுமையாக சூழ்ந்து முழுமையான பாதிப்பு என்பதால் வெள் ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்தனர்.
சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிக்கு வந்தனர். அப்படி வரும்போது 3 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர்.
சிதம்பரம் தண்டேஸ்வரநல்லுர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (58). இவரும் நாகசேரிகுளம் தென்கரையை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோசலை (28) ஆகியோர் கயிறு பிடித்துக்கொண்டு வெள்ளத்தில் இருந்து வரும் போது ஆழமான பகுதியில் மூழ்கி இருவரும் இறந்தனர். அதே போன்று காட்டுக்கூடலுரை சேர்ந்த கோவிந்தராஜன் (60) என்ற முதியவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

நன்றி....தினமலர்

mania
26-11-2005, 04:39 AM
திருச்சி மாவட்டம்

அய்யாறு, பெருவளை வாய்க்கால் உடைப்பு
மண்ணச்சநல்லுர்: அய்யாறு, பெருவளை வாய்க்கால் ஆகியவற்றில் ஏற்பட்ட கரை உடைப்பினால் மண்ணச்சநல்லுர் தாலுகா துண்டிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் உட்புகுந்ததால் வீட்டை விட்டு மக்கள் வெளியேறினர்.
வாத்தலை அருகே ஓடக்கரை எனுமிடத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததால் அய்யாற்றங்கரை உடைந்ததை தொடர்ந்தும், பெருவளை வாய்க்காலின் கரை கடுக்காத்துறைக்கு மேற்கே உடைந்தது.
இதனால் மண்ணச்சநல்லுர் தாலுகாவைச் சேர்ந்த கிளியநல்லுர், சிறுகாம்பூர், துடையூர், திருவாசி, மான்பிடிமங்கலம், கடுக்காத்துறை, அத்தானி, நொச்சியம் கூத்துர், வெல்வாக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் வெள்ளம் உட்புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
அரசு பள்ளிகளிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருவாய்துறை மற்றும் மண்ணச்சநல்லுர் யூனியன் நிர்வாகம் சார்பில், உணவு வழங்கி வருகின்றனர்.
பங்குனி வாய்க்காலின் இருபுறமும் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வயல்களில் 4 அடி முதல் 6 அடி வரை வெள்ளம் நிரம்பியுள்ளதால் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் வயல்களும், வாழை தோப்புகளும் மூழ்கியுள்ளன.
கடந்த மழையின்போது வயல்கள் மூழ்கி பயிர்கள் அழுகியதால் தற்சமயம்தான் விவசாயிகள் வயல்களை சீரமைத்து புதிதாக நாற்று வாங்கி நட்டனர். நெற்பயிர்கள் வேர் பிடித்து செழித்து வளரும் வேளையிலும், வாழை தார் ஈனும் பருவத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தற்போது மிகவும் கவலையில் உள்ளனர்.
பங்குனி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் துறையூர் ரோட்டிலும், சென்னை நெடுஞ்சாலையிலும் ரோட்டிலிருந்து மூன்றடி உயரத்துக்கு நீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, பெரம்பலுர், துறையூர், சேலம், நாமக்கல் உட்பட முக்கிய ஊர்களுக்கு போக்குவரத்தில் தடைஏற்பட்டது.
நேற்று முன்தினம் முதலே ஓமாந்துர், எதுமலை, திருப்பைஞ்ஞீலி உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்ணச்சநல்லுரை சுற்றியுள்ள கிராமமக்கள் திருவிழாவை காணவருவது போல் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து வியக்கின்றனர்.
வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த மக்களுக்கு முசிறி எம்.எல்.ஏ., மல்லிகா, முன்னாள் எம்.எல்.ஏ., ஜோதி கண்ணன், சிறப்பு நிலை பஞ்., தலைவர் தங்கராஜ் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினர். மேலும், மழைநீடித்தால் கடுமையாக மண்ணச்சநல்லுர் தாலுகா பாதிக்கப்படும் நிலை நீடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நன்றி தினமலர்

aren
26-11-2005, 05:06 AM
மழையேயில்லை தண்ணியே கிடையாது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது மழை பிளந்துகட்டுகிறது. ஆனால் தண்ணீரை சேமித்து வைக்கத் தெரியவில்லை. நம் அரசாங்கத்தை என்ன செய்வது.

மழையில் தத்தளிக்கும் தமிழ் மக்களுக்கு என்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த தடவையாவது ஒட்டு போடும்பொழுது பார்த்து போடுங்க.

poo
26-11-2005, 06:04 AM
நேற்று இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது..

இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் நிலமை என்னாகுமோ?!

ஆண்டவா.. போதுமே மழை!

மன்மதன்
26-11-2005, 06:14 AM
மும்பையில் அடித்த மழைக்கும் இங்கே அடிக்கும் மழைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் மும்பை சமாளித்து விட்ட மாதிரிதான் தெரிகிறது...

அறிஞர்
26-11-2005, 03:07 PM
தெளிவான செய்தி கொடுத்த மணியாவுக்கு நன்றி....

திருச்சியில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. என்னுடைய வீட்டிலும் தண்ணீர் உள்ளே வந்துவிட்டதாம்.
---
ஆரென் சொல்வது போல் தண்ணீரை சேர்த்து வைக்க போதுமான வசதிகள் இல்லை....

இன்னும் ஒழுங்கான பாலங்களே இல்லை. கரூரில் புதிதாக கட்டப்பட்ட பால இடிந்து விழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கும் வரை.... நாட்டில் செழிப்பை காண்பது அரிதே....

aren
26-11-2005, 04:10 PM
ஆரென் சொல்வது போல் தண்ணீரை சேர்த்து வைக்க போதுமான வசதிகள் இல்லை....

இன்னும் ஒழுங்கான பாலங்களே இல்லை. கரூரில் புதிதாக கட்டப்பட்ட பால இடிந்து விழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கும் வரை.... நாட்டில் செழிப்பை காண்பது அரிதே....

இதை நாம் பேசி பயனில்லை அறிஞர் அவர்களே. ஓட்டு போடும் முன்பாக ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும். அப்பொழுதுதான் ஓட்டு கேட்க வருபவர்கள் அடுத்த தடவை வரும்பொழுது ஏதாவது மக்களுக்கு செய்துவிட்டே வருவார்கள். அப்படி செய்யாதவர்களை இந்த முறை ஓட்டுகேட்கவே வரவிடக்கூடாது. இப்படி மக்கள் செய்தால் நிலைமை சீராகும், நமக்கும் நன்மை பிறக்கும்.

செய்வார்களா????

aren
27-11-2005, 03:21 AM
கடலூரில் 100 கிராமங்களுக்கு மேல் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக செய்தியில் படித்தேன்.

இப்பொழுது மழை நிலைமை எப்படியிருக்கிறது. இன்னும் பொழிகிறதா அல்லது நின்றுவிட்டதா?