PDA

View Full Version : பிச்சைக்காரியாய்...



பென்ஸ்
22-11-2005, 04:11 AM
என் 100-வது பதிப்பு..........

பிச்சைக்காரியாய்...

வானமே கூரை..
மழைக்கு மரத்தடி..
யாதும் ஊரே...
எவரும் கேளார்..

தொட்டில் முதல்
பாடையில்
இருப்பவர் வரை
எனக்கு அம்மாதான்...

உச்சி வெயிலும்
சுட்டெரிக்கும் சூரியனும்
எனக்கு நண்பர்கள்...
ஆனால்
உங்கள் பார்வைகள்....

கொட்டும் பனியும்
சொட்டும் மழையும்
எங்களை நனைத்ததில்லை
ஆனால்...
உங்கள் வார்த்தைகள்..

கொடுக்கும் ஒரு ரூபாக்கு
ஓராயிரம் வசுவுகள்
மனம் செத்துப்
போயிருப்பதால்
செவிடாயிருக்கிறேன்...

என்மகனும் உன்னைப்போல்
இருந்திருந்தால் கூட
ஒரு செவிடாய், குருடாய்
அங்கேயே முடங்கிக் கிடந்திருப்பேன்

நான் மட்டுமாயிருந்தால்
என்றோ இறந்திருப்பேன்
ஆனால்...
இறப்பதற்காகக் காத்திருக்கும்
ஒரு உயிருக்காக
நானும் இன்று.....

.

பாரதி
22-11-2005, 05:58 PM
சிறப்பான கவிதை பெஞ்சமின். யாரும் யோசிக்காத கோணத்தில் வந்த கவிதை... மகனின் நிலை என்ன என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டதும் நல்லதே...
உங்கள் நூறு வற்றாத ஆறாக தொடர வாழ்த்துக்கள் நண்பரே.

பென்ஸ்
23-11-2005, 02:47 AM
நன்றி பாரதி.....

பிச்சைகாரியின் காலி பத்திரத்தை பரிதாபமாக பார்த்து சென்றவர்கள் மத்தியில் முதல் காசு இட்ட உங்களுக்கு நன்றி...

பேருந்து நிறுத்தம் முதல் கோவில் வாசல் வரை அலைந்து திரியும் பிச்சைகாரர்கள் நமக்கு ஒரு தோந்தரவு தான்... பச்சிளம் குழந்தைகளை காயப்படுத்தி இடுப்பில் கட்டி கொண்டு வரும் பெண்களை பார்க்கும் போது எனக்கு கோபமும் , ஆத்திரமும் வரும்... இவர்களுக்கு நான் காசு இடுவதில்லை... சிறு குழந்தைகளை சிரு வயதிலையே பழக்கியும் விட்டு விடுகிறர்கள், இவர்கள் அருகில் வந்து என்னை சுரன்டும் போது எனக்கு பத்திக்கொன்டு வரும்....

இவர்களுக்கு மத்தியில் சிலர் இயலாமையாலும், கைவிடபட்டும் தன் மற்றும் தன்னை சார்ந்தவர்கள் உயிரை காக்கவும் வரும் போது நாம் சில நேரங்களில் இவர்களையும் உதாசினபடுத்துவது உண்டு, அப்படி பட்ட ஒரு எழை கிழவியின் அழுகையை தான் எழுதியுள்ளேன்...

நன்றி...
.

இளசு
23-11-2005, 11:12 PM
தாமதமான விமர்சனத்துக்கு மன்னிக்கவும் பெஞ்சமின்.
(பணிப்பளு அதிகம் சில நாட்களாய்..)

நேற்று வாசிக்கமட்டும் செய்துவிட்டு, கருத்திடாமல் சென்றவர்களில் நானும் ஒருவன்..

------------------------------------------------

அவசரம், அவரவர் கவலை
அடுத்தவன் செய்யட்டுமே
அவரவர் விதிப்போல் என்ற வியாக்கியானம்..

அபயக்குரல்களை, அபலைக்குரல்களை
அலட்சியம் செய்து
மனசாட்சி குரல்வளை நெறிக்க
எத்தனை காரணங்கள்.....


எதிர்நிற்போர் மனநிலையில் நின்று
கூடுப்பாய்ந்து எழுதிய இன்னொரு படைப்பு..


பாராட்டுகள் பெஞ்சமின்..

poo
03-12-2005, 09:59 AM
பாராட்டுக்கள் பெஞ்சமின்...

எங்கே செல்லும் இந்தப் பாதை?!

இறக்கக் காத்திருக்கும் இன்னொரு ஜீவனுக்காக... இறுதி வரியில் நெஞ்சைப் பிழிகிறீர்கள்..


இதுபோன்ற கவிதைகள் எனக்கு அதிகம் பிடிக்கும்!

பென்ஸ்
03-12-2005, 03:46 PM
தாமதமான விமர்சனத்துக்கு மன்னிக்கவும் பெஞ்சமின்.
(பணிப்பளு அதிகம் சில நாட்களாய்..)

இந்த ஒரு விஷயதிற்க்கு மட்டும் மன்னிப்பு கிடையாது இளசு... கன்டிப்பாக உங்கள் விமர்சனம் முக்கியம்...


எதிர்நிற்போர் மனநிலையில் நின்று
கூடுப்பாய்ந்து எழுதிய இன்னொரு படைப்பு..


:) :) ஒருத்தரை இன்னும் ஒன்று எழுது என்பதை இப்படியும் சொல்லலாம???? உங்க வழியே தனி தான்...

பென்ஸ்
03-12-2005, 04:02 PM
பாராட்டுக்கள் பெஞ்சமின்...
எங்கே செல்லும் இந்தப் பாதை?!
இறக்கக் காத்திருக்கும் இன்னொரு ஜீவனுக்காக... இறுதி வரியில் நெஞ்சைப் பிழிகிறீர்கள்..
இதுபோன்ற கவிதைகள் எனக்கு அதிகம் பிடிக்கும்!

நன்றி பூ... உங்கள் ஒன்றுமில்லை இதை விட அருமை...

சமூக கவிதைகள் எனக்கு அதிகமாக பிடிப்பதில்லை.... ஏதோ தெரியாம எழுதி போட்டேன்...;) ;)
காதல் கவிதைகள் வாசிக்கும் போது தான் அதிகம் டொபமயின் உற்பத்தி ஆகிறது.........அதனால் என் வாழ்க்கையில் ஒரு காதல் கவிதையாவது எழுதனும்முன்னு நினைக்கிறேன்.. நடந்தபாடில்லை....:D :D :D

தாமரை
04-07-2006, 01:32 PM
என் 100-வது பதிப்பு..........

பிச்சைகாரியாய்...

வானமே கூரை..
மழைக்கு மரத்தடி..
யாதும் ஊரே...
எவரும் கேளார்..

தொட்டில் முதல்
பாடையில்
இருப்பவர் வரை
எனக்கு அம்மாதான்...

உச்சி வெயிலும்
சுட்டெரிக்கும் சூரியனும்
எனக்கு நண்பர்கள்...
ஆனால்
உங்கள் பார்வைகள்....

கொட்டும் பனியும்
சொட்டும் மழையும்
எங்களை நனைத்ததில்லை
ஆனால்...
உங்கள் வார்த்தைகள்..

கொடுக்கும் ஒரு ரூபாக்கு
ஓராயிரம் வசுவுகள்
மனம் செத்து
போயிருப்பதால்
செவிடர்களாயிருக்கிறேன்...

என்மகனும் உன்னைபோல்
இருந்திருந்தால் கூட
ஒரு செவிடாய், குருடாய்
அங்கேயெ முடங்கி கிடந்திருப்பேன்

நான் மட்டுமாயிருந்தால்
என்றோ இறந்திருப்பேன்
ஆனால்...
இறப்பதர்க்காக காத்திருக்கும்
ஒரு உயிருக்காக
நானும் இன்று.....

.

பிச்சைக்காரர் ஒருபுறம்..
பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டவர்கள் மறுபுறம்..

இனி இவர்களால்
உபயோகமில்லை என்று
சக்கையாய் துப்பப்பட்ட
தாய் தந்தையர்கள்

இவர்களை
இப்படியும் உபயோகப்படுத்தலாமே
என
வாட்டப்படும் குழந்தைகள்

சமுதாயத்தில் கை-நீட்டி
வயிறு வளர்த்து
நாளை வரும் சாவுக்காய்
காத்திருக்கும் இயலாதவர்கள்

யார் வயிறோ வளர
ஏதுமறியாமல்
அழுக்குமூட்டைகளுக்குள்
மயங்கிக் கிடக்கும்
குழந்தைகள்

விதியின் கைகள்
மனிதத்தின் குரல்வளையை
இப்படி இருபுறமும் நெருக்கினால்...

உணர்வுகள் மயங்கி
வார்த்தைகள் வருவதில்லை

ஓவியா
05-07-2006, 01:46 PM
இரண்டு சமூக கவிதையும்
மிகசிறப்பான கண்னொட்டதில் அமைந்துள்ளன...

பாராட்டுகள் கவிஞர்களே

ஆதவா
04-03-2007, 05:31 PM
சமூகக் கவிதைகளில் யாரும் அவ்வளவு எளிதில் விடுபடாத தலைப்பு...

சிலர் கவிதை எழுதுபவர்களா என்பதே தெரியாமல் போய்விடுகிறது... பணிப்பளு இன்றி பணியேது?

பிச்சைகாரியாய்...

வானமே கூரை..
மழைக்கு மரத்தடி..
யாதும் ஊரே...
எவரும் கேளார்..

வந்த நூறாவது பதிவே நல்ல பதிவு.. சாலையோரங்களில் வாழும் மனிதருக்கு கூரை ஏது?.கடையிரண்டு வரிகள் முதலிரண்டுவரிகளின் ஆழத்தை தோண்டுகிறது.. பூங்குன்றனாரை மிஞ்சிய வரிகள்.

தொட்டில் முதல்
பாடையில்
இருப்பவர் வரை
எனக்கு அம்மாதான்...

உண்மைதான்... பிச்சைக்காரிக்கு குலமேது கோத்தரமேது? பெற்றவன் என்ற முறைகள்தான் ஏது? யாரும் அன்னைதான்....

உச்சி வெயிலும்
சுட்டெரிக்கும் சூரியனும்
எனக்கு நண்பர்கள்...
ஆனால்
உங்கள் பார்வைகள்....

நல்ல கருத்து... சூரியன் தருவதுதானே வெயில்? அப்போ இதில் இருவர் என்ற கணக்கு வராதே! இருந்தாலும் பிச்சையிடாதவன் பார்வை அனலாகத் தான் இருக்கும்... சூரியன் இவர்களுக்கு ஒரு விளக்கு.. ஆக அது சுட்டெரிக்கும் சுடராகத் தெரிவதில்லை... கடைசி வரிகளின் முழுமைபெறா நிலை மற்ற வரிகளினூடே சேர்ந்து அழகாக ஒரு பொருள் காட்டுகிறது... நல்லது நண்பரே!!

கொட்டும் பனியும்
சொட்டும் மழையும்
எங்களை நனைத்ததில்லை
ஆனால்...
உங்கள் வார்த்தைகள்..

பிச்சையிடாதவன் வார்த்தைகள் என்றுமே அவன் மனம் போல ஈரமாக இருப்பதில்லை... மழைகூட நனைப்பதில்லை.. ஆனால் உன் வார்த்தை என்னை அழ வைக்கிறது... நல்ல அருமையான சிந்தனைங்க பெஞ்...

கொடுக்கும் ஒரு ரூபாக்கு
ஓராயிரம் வசுவுகள்
மனம் செத்து
போயிருப்பதால்
செவிடர்களாயிருக்கிறேன்...

ஒரு ரூபாய் போட்டுவிட்டு நாம் எழுப்பும் வார்த்தைகள்..... நானே செய்திருக்கிறேன்.. இப்போதல்ல... இப்போதெல்லாம் நான் பிச்சையிடுவதே கிடையாது... மாறாக புத்திமதி சொல்லுவேன்.. ஒரு சின்ன திருத்தம்... செவிடர்களாயிருக்கிறேன் என்ற வரி தவறாக இருக்கிறது.. மாற்றவும்.

என்மகனும் உன்னைபோல்
இருந்திருந்தால் கூட
ஒரு செவிடாய், குருடாய்
அங்கேயெ முடங்கி கிடந்திருப்பேன்

கொடுப்பவன் இடத்தில் நானிருந்தால் எடுப்பது என் மனமல்ல என்று நான் ஒரு வரி எழுதியிருக்கிறேன்.. ஞாபகம் வருகிறது.. (கவிதையை தேடிப்பிடித்து கொடுக்கிறேன்.)

நான் மட்டுமாயிருந்தால்
என்றோ இறந்திருப்பேன்
ஆனால்...
இறப்பதர்க்காக காத்திருக்கும்
ஒரு உயிருக்காக
நானும் இன்று.....
பிச்சைக்காரியானேன் என்று சொல்லுகிறீர்களா?... மிகச் சரிதான்...
ஒரு உயிருக்காக பிச்சையெடுப்பது பாவமல்லாதது மாதிரி தோணுகிறது....

கவிதை அருமை நண்பரே!!.....

பிச்சைக்காரன்(ரி) நிலையிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட கவிதை மிக அருமை.. கொஞ்சம் ஆழமாக சென்றதுபோல இருந்து பின் எளிதாக முடிந்துவிட்ட பிரமை எனக்குத் தோணுகிறது.. ஒவ்வொரு பிறப்பும் யாராவதொரு பிஷைக்காரர்களைப் பார்க்காமலிருப்பதில்லை... எல்லாருமே பிச்சைக்குத் தகுதியானவர்களா?.... இறுதி வரிகளில் சற்று ஆழமிருந்தாலும்... பிச்சைக்குத் தகுதியானவன் அவன்(ள்)அல்ல...

என்னடா பிச்சைக்குக்கூட தகுதியா என்று நீங்கள் கேட்க வாய்புண்டு... நான் நீங்கள்.. ஏன் மன்றத்தில் வருபவர்கள் காணாத பிச்சைக்காரர்களே கிடையாது.... மிகப்பெரிய வல்லரசாக மார்தட்டிக்கொண்டிருக்கும் அமரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் உண்டு........

பென்ஸ்
04-03-2007, 05:42 PM
ஆதவா...

இது நான் ஒருமுறை CMH Road ப்க்கத்தில் வைத்து பார்த்த ஒரு ஏழை கிழவியின் அழுகை....
இப்போது நினைத்தாலும் அந்த சம்பவம் என் மனதை கணக்க வைக்கிறது... இதில் சில அவர் சொன்ன வார்த்தைகள்... அதிலும் கடைசி வரிகள்....

ஆதவா
04-03-2007, 06:24 PM
ஆதவா...

இது நான் ஒருமுறை CMH Road ப்க்கத்தில் வைத்து பார்த்த ஒரு ஏழை கிழவியின் அழுகை....
இப்போது நினைத்தாலும் அந்த சம்பவம் என் மனதை கணக்க வைக்கிறது... இதில் சில அவர் சொன்ன வார்த்தைகள்... அதிலும் கடைசி வரிகள்....

மிகச் சரிதான்.. நம்வாழ்க்கையிலிருந்து நாம் எழுதும் கவிதைகள் மிக ஏராளம். அவ்வகையில் இதுவும் ஒன்று... அருமையான படைப்பு... அதேசமயம் பிச்சைக்காரர்களை நாம் ஊக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.. நான் பார்த்த வரையில் பலரை ஏளனம் செய்திருக்கிறேன்..... மிகக் கேவலமாக............ பலரை புத்திமதி சொல்லு அனுப்பியிருக்கிறேன்.. இதுநாள் வரை ஒருரூபாய் கூட போட்டதில்லை.......... அவர்கள் முடமாயிருந்தாலும் சரி, குருடனாயிருந்தாலும் சரி........

என்னைப் பொருத்தவரை பிச்சையெடுப்பதுற்குண்டான தகுதிகள் என்னிடம் எதுவுமில்லை என்று எடுப்பவனுக்கல்ல...... வாழ்க்கையில் வாழத் தகுதியிழக்கும் முடவர்கள், குருடர்கள் அல்லது மிகவும் வயதானவர்களுக்கு இடுவதில் தவறில்லை///// அப்ப்டித்தானே@>.

ஷீ-நிசி
05-03-2007, 03:16 AM
யாசகம் கேட்பவர்களின் மீது உங்கள் பார்வை விழுந்தது.. இந்தக் கவிதை பிறந்தது....

சமூக கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..

என்னை கவர்ந்த கவிதையில் இதுவும் ஒன்று..

வெயிலிலும், மழையிலும், வானமும், மரத்தடியும் தான் எங்களைக் காக்கின்றன
வேறு எவர் எங்களை அக்கறையாய் கேட்கின்றனர்?
யாதும் ஊரே, எவரும் கேளார்

வயதில் சிறியவராயிருந்தாலும் அம்மா தான் எங்களின் அடையாளமொழி....

சூரியன், அவனிடமிருந்து பிறந்த வெப்பம்... இது எப்படி நண்பனாக முடியும்?? முடியாதுதான்.. ஆனால் உன் ஊடுறுவும் கேவலமான பார்வையைக் காட்டிலும், அவன் ஊடுருவும் அக்கினி பார்வை என்னால் தாங்கிக் கொள்ள முடிகிறது.. அந்த வகையில் அவன் என்னை சுட்டெரித்தாலும் நண்பன் தான்..

கொட்டும் பனியும், கொட்டும் மழையும் என் மேற்தோலினை நனைத்திடலாம்... ஆனால் அவை என் மனதை அழவைத்து நனைத்ததில்லை.. ஆனால், உன் வசவு வார்த்தைகள் என் உள்ளிலிருந்து வந்து என் கண்ணிலிருந்து வந்து என்னை நனைக்கின்றன....

எல்லோருமே திட்டுவதில்லை ஒற்றை ரூபாய் கொடுத்துவிட்டு, திட்டிவிட்டு ஒற்றை ரூபாய் கொடுக்கும் மனிதனுக்கான வார்த்தைகள்...

நீ திட்டும் வார்த்தைகள் என்னை தாக்குகின்றன.. ஆனால் நீ தந்திடும் ஒற்றை ரூபாயில்தான் நான் பசியாறிட முடியும்.. பசி காதை அடைக்கும் என்பார்களே, அந்த நிலையில்தான் நான்..

யாவரும் கைவிட்ட நிலையில் நான், என்னையும் தாங்கிடும் ஜீவன் இருந்திருந்தால் நான் உன்னிடம் ஏந்திடும் அவலம் இல்லையே..

ஒவ்வொரு யாசகம் கேட்டிடும் மனிதனுக்கும் ஒரு சோகம் இருந்திடத்தான் செய்கிறது.. யாருமே மிக கேவலம் என் நினைத்திடும் செயலை அவர்கள் செய்திட அவர்கள் உந்தபடுகிறார்கள்.. எல்லா இடங்களிலும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இவர்களின் மத்தியிலும், சில போலி ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அரசாங்கம் இவர்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும்.. மாற்று வழி ஒன்றை யோசித்திட வேண்டும்...

சமுதாயதிதின் மேல் விழுந்த பரிதாபத்தில் எழுந்த மிக சிறந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய் இருக்கிறது நண்பரே... இந்தக் கவிதை.. வாழ்த்துக்கள்...

டாக்டர் அண்ணாதுரை
05-03-2007, 03:42 AM
நெருடுகின்ற வார்தைகள்.......சொல்லாட்சி நிமிர்ந்து பார்கிறது!
ஒரு முறை கி.ஆ.பே. விசுவநாதம் மலேசியா வந்திருந்தபோது அவரது சொற்பொழிவை கேட்கின்ற பாக்கியம் கிடைத்தது. அப்பொழுது அவர் 'பிச்சை இடாத மனிதனும் பிச்சைக்காரனே' என்று கூறிய வார்த்தைகள் உங்களது கவிதையை வாசித்தபோதும் ஆதவா'வின் விமர்சனத்தை கண்டபோதும் நினைவில் வந்தது.
100வது கவிதையா? வாழ்துக்கள்.
அன்புடன் அன்பன்
ஆனந்த்

வெற்றி
05-03-2007, 04:00 AM
ஒரு படைப்பை படித்தவுடன் மனதில் எங்கோ ஓர் மூலையில் சுருக்கென ஒரு முள் குத்துதினால் அது சிறந்த படைப்பு...
உங்கள் படைப்பும் சுருக்கென குத்தியது..

மன்மதன்
05-03-2007, 05:25 AM
சிக்னலில் முடமாகி போன கால்கள் கொண்ட புருசனை, மனைவி தன் முதுகில் சுமந்து பிச்சை கேட்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது. உங்கள் கவிதையில் அந்த ரணம் இருக்கிறது. கவிஞரே, இனி தொடர்ந்து கவிதை படையுங்கள்.. ஏனிந்த இடைவெளி??

அமரன்
18-05-2007, 12:37 PM
நெஞ்சத்தை தொடும் வார்த்தைகள். பிச்சைக்காரனை ஏளனமாகப் பார்க்கும் நம்மவர்கள் கொடுக்கும் ஒற்றை நாணயத்துகாக அவர்களைக் கடவுளுக்கு மேலான தாயாகப் பார்க்கும் ஒரு பிச்சைக்காரியின் அவல வாழ்வை அப்படமாக காட்டியிருக்கும் கவிவரிகள். அவர்களது பொருள், உறவு இல்லாமையைக் கூட

வானமே கூரை..
மழைக்கு மரத்தடி..
யாதும் ஊரே...
எவரும் கேளார்

தொட்டில் முதல்
பாடையில்
இருப்பவர் வரை
எனக்கு அம்மாதான்

எனும் வரிகளில் கூறிவிட்டு பிச்சைக்காரியாக வாழ்வதுக்கான காரணத்தை

நான் மட்டுமாயிருந்தால்
என்றோ இறந்திருப்பேன்
ஆனால்...
இறப்பதர்க்காக காத்திருக்கும்
ஒரு உயிருக்காக
நானும் இன்று

எனும் வரிகளில் கூறி இதயத்தின் கனத்தை அதிகரித்து விட்டீர்கள்