PDA

View Full Version : கலைகளில் பரிமாணம் (அ.மை. -13)



இளசு
21-11-2005, 10:29 PM
கலைகளில் பரிமாணம்


அல்பெர்ட்டி ( 1404- 1472)
பிரான்செஸ்கா ( 1412- 1492)


அறிவியல் மைல்கற்கள் - 13

12ம் பாகம் - அல்ஜிப்ரா இங்கே.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5890

--------------------------------------------------------------

கட்டடக்கலை பற்றி கி.பி. முதலாம் நூற்றாண்டில்
ரோமானியரான விட்ருவியஸ் On Architecture என்ற நூலை எழுதி
கலைகளின் மறுமலர்ச்சி ( Renaissance) சகாப்தத்தைத் தொடங்கிவைத்தார்.

இக்காலகட்டத்தில்தான் கலைகளில் மெய்நிகர் - தத்ரூபம் எனப்படும்
மெய்மை (Reality) -யைக் கொண்டுவர மேதைகள் முயன்றார்கள்.
இத்தாலியின் ஓவியர்கள் இருபரிமாண ஓவியத்திரைகளில்
முப்பரிமாண மெய்மையைக் கொண்டுவர ஆசைப்பட்டார்கள்.
அதைச் செய்ய முதலில் கண்டுணர்தல் ( Perspective) பற்றி
சில அடிப்படை விதிகளை புரிந்துகொண்டார்கள்.

சதுரங்கப்பலைகைபோல் கறுப்பு- வெள்ளைச் சதுரங்கள் தரையை
வரையவேண்டும். அதன் மேல் நிற்கும் நபர்கள், உள்ள பொருட்கள்
நம் பார்வைக்கு - சிலர் சற்று முன்னே, சில(ர்) அதன் பின்னே
என ஒரு மேடைக்காட்சி போல் முப்பரிமாணத்தில் உணரப்படவேண்டும்.

எப்படி வரைவது?

இந்த சூத்திரங்களை மேதாவிகளுக்கு மட்டுமே புரியும் வகையில்
சிக்கலாய் லத்தீன் மொழியில் முதலில் எழுதியவர் - அல்பெர்ட்டி.
அதையே பல ஓவியர்களுக்கும் பயன்படும்வண்ணம் எளிய நடையில்
எழுதி பிரபலப்படுத்தியவர் - பிரான்செஸ்கா.

இந்த விதிகளை விளக்கும் பின்னாளைய நூல்களுக்கு
எடுத்துக்காட்டு ஓவியங்கள் வரைந்தவர் - நம் எல்லோருக்கும்
பரிச்சயமான மோனலிசா வரைந்த லினார்டோ டாவின்சி.

http://www.mos.org/sln/Leonardo/ExploringLinearPerspective.html

அல்பெர்ட்டி,பிரான்செஸ்கா எழுதிவைத்த விதிகளே பின்னர்
இன்னும் சிக்கலான வடிவங்கள், மனித உருவங்களை
'மெய்மை'யுடன் வரைவது வரைக்கும் மேம்படுத்தப்பட்டன.

இருபரிமாணத் திரையில் முப்பரிமாணக் காட்சியுணர்வைத்தர
இம்மேதைகள் செய்த பணி -
இன்று நாம் பார்வைக்கு சிறியதாய்த் தெரியலாம்.

ஆனால் , அன்று 'தட்டை'யாய் மட்டுமே ஓவியம் எழுதிவந்த
காலத்தில், ஒரு புதிய பரிமாணம் கொடுத்து,
அதைக் கணக்கிட விதிகள் அமைத்து
அதை விளக்கி நூல்கள் படைத்து-
கலைகளில் ரியலிசம் தேடும் அத்தனை படைப்பாளிகளின் தேடலுக்கும்
வித்திட்டவர்கள் இவர்கள் என்பதால்--

அல்பெர்ட்டி, பிரான்செஸ்கா இருவரையும்
இம்மைல்கல்லின் (கலை)நாயகர்களாய் நினைவுகூர்வோம்.

பென்ஸ்
22-11-2005, 03:07 AM
யம்மாடியோவ்... இந்த ஆட்கள் இல்லைனா, நான் ரெம்ப தான் குழம்பி போயிருப்பேன்... (அதற்க்காக ரெம்ப தெளிவா இருக்கிறேன என்று கேட்பது தெரிகிறது)... பொறியியலில் இதன் பங்கு என்னை கர்வர்ந்துள்ளது.... குறிப்பாக 3D மாடல்கள் உருவாக்குவதில் ...

இளசு... சூப்பருங்க..

.

பரஞ்சோதி
22-11-2005, 03:09 AM
அண்ணா இந்தத் தொடர் மிகவு அருமையாக செல்கிறது, அறியாத அரிய செய்திகள் கொடுக்கிறீங்க.

நீங்க சொல்பவர்களின் புகைப்படம் கிடைத்தாலும் கொடுங்க, பதிவு இன்னும் கலக்கலாக இருக்கும்.

இளந்தமிழ்ச்செல்வன்
22-11-2005, 04:31 PM
அரிய தகவல். நல்ல பயனுள்ள பதிப்பு. நன்றி இளசு

பாரதி
22-11-2005, 05:39 PM
படைப்புகளில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும் அண்ணனின் கலைகளின் பரிணாமம் பதிவும் சாதாரணமானதல்ல. ஓவியம் வரைவதே சிரமமான கலை.. அதிலும் முப்பரிமாணம்..! 1400..களிலேயே அந்த சிந்தனையா..? ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி அண்ணா..

kavitha
19-12-2005, 09:09 AM
இத்தாலியின் ஓவியர்கள் இருபரிமாண ஓவியத்திரைகளில்
முப்பரிமாண மெய்மையைக் கொண்டுவர ஆசைப்பட்டார்கள்.
அதைச் செய்ய முதலில் கண்டுணர்தல் ( Perspective) பற்றி
சில அடிப்படை விதிகளை புரிந்துகொண்டார்கள்.
'புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்'. ஆனால் அதே புள்ளிகளை இருபரிமாணம், முப்பரிமாணங்களில் விளக்குவது, கண்டுணர்வது என்பதெல்லாம் இப்போதைய கம்யூட்டர் மாடல்களுக்கு முன்பு அசாத்திய அறிவாக இருக்கிறது. அல்பெர்ட்டி-பிரான்செஸ்கா மேதைகளைப்பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.

kavitha
19-12-2005, 09:16 AM
லியார்னோ டாவின்சி யின் கோட்டோவியமும் நன்றாக இருக்கிறது. ஏதோ போர்க்காளக்காட்சிபோல் தெளிவாக இல்லையே என்று பார்த்தால் இணைக்கோடுகள் (Parellel lines), எண்கோண அமைப்பு(orthogonal), மறைவுப்புள்ளி(vanishing point) என்று அசத்தியிருக்கிறார்கள்.

aren
01-01-2006, 10:00 AM
2D-யை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் கலையை சிறக்கச் செய்த இந்த இரண்டு அறிஞர்களுக்கும் என் நன்றிகள் பல.

அவர்கள் 600 வருடங்களுக்கு முன்பே இத்தனை சாதனைகளை எளிதாக சாதித்திருக்கிறார்கள். நான் இந்த 2006-ல் இத்தனை வசதிகள் இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.

இந்த பதிவைப் படித்தவுடன் நாமும் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் வருகிறது.

முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஏதாவது சாதிக்க கிளம்பலாமா?

இன்றே ஆரம்பிக்கவேண்டும் என்று நினைப்பு மனதில் ஒரு ஒளிபோல் தோன்றுகிறது.

நமக்குப்பின் வரும் சந்ததிகளுக்கு ஏதாவது விட்டு விட்டுச் செல்லவேண்டும். முயற்சி செய்வோம்.

நன்றி வணக்கம்
ஆரென்