PDA

View Full Version : மாவீரர்கள்



kavinila
20-11-2005, 07:02 PM
மாவீரர் உன்கள் கல்லறைகள் ஒன்றும்
கல் அறைகள் அல்ல.
கயவரை களமாடி கடக்காது தடுத்த
கல்லணைகள்.
எம் எதிரியை வேரோடு கருவறுத்த
எம் எதிர்கால தேசத்தின்
கருவறைகள்
உம்மை வீழ்த்தலாம் ஓரிரு
சன்னம்.
உம் எண்ணத்தை வீழ்த்துமா ஓராயிரம்
சன்னம்.
உம் எண்ணத்தை நிறைவேற்ற பல்லாயிரம்
ச(ன்)னம்.
உம் எண்ணம் நிறைவேறும் என்பது
திண்ணம்.
அன்று நாம் தூக்குவோம் தமிழீழம் என்னும்
வெற்றிக்கிண்ணம்.

பென்ஸ்
21-11-2005, 03:14 AM
அருமையான கவிதை... தொடருங்கள் நண்பரே...

இளசு
21-11-2005, 06:44 AM
வாருங்கள் கவிநிலா அவர்களே.

தேசபக்திக் கவிதையுடன் ஆரம்பம்.

வரவேற்பும் வாழ்த்துகளும்.

iniya
16-10-2007, 06:19 PM
மாவீரர்கள் நினைவு கூரும் கவி அருமை கவின்நிலா

மாவீரர்கள் என்றும் மரணிக்காதவர்கள்

kampan
18-10-2007, 09:40 AM
மனிதர்கள் உதிப்பது பெண் கருவில்
மாவீரர்கள் உதிப்பது மண் கனவில்

மனிதர்கள் மடிவது அவர்கள் விதியால்
மாவீரர்கள் மடிவது அவர்கள் பணிக்காய்

தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்