PDA

View Full Version : மகிந்த வெற்றி

இளையவன்
18-11-2005, 03:30 AM
சிறீலங்காவின் ஐந்தாவது அரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச நாடளவிய ரீதியில் அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவித்தல் இன்னும் விடுக்கப்படவில்லை.

மகிந்த 50.33%
ரணில் 48.4%

அறிஞர்
18-11-2005, 04:13 AM
ஆஹா.... இது எதிர்பாராத முடிவாக உள்ளது...

இரணிலின் எதிர்காலம் என்ன.....

gragavan
18-11-2005, 04:41 AM
இருவருக்கும் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. மகிந்தவிற்கு வாழ்த்துகள். நடுநிலையோடு நாட்டை நல்ல பாதைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு உண்டு. ஆனால் அதைச் செய்வார் என்ற நம்பிக்கை மிகக் குறறவு. எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், ரணில் எதிர்பார்த்ததை விட நிறைய ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்.

இளையவன்
18-11-2005, 04:54 AM
ரணில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவார் என நம்புகிறேன். அவர்தானாக விலகாவிட்டால் கட்சிக்குள் பிளவு வருவது தவிர்க்க முடியாததாகிவிடும். ரணில் தலைமையிலான ஐ.தே.க தொடர்ந்து பல தேர்தல்களில் (1999ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் உட்பட)
தோல்வியைத் தழுவியுள்ளது.

அறிஞர்
18-11-2005, 02:47 PM
ரணில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவார் என நம்புகிறேன். அவர்தானாக விலகாவிட்டால் கட்சிக்குள் பிளவு வருவது தவிர்க்க முடியாததாகிவிடும். ரணில் தலைமையிலான ஐ.தே.க தொடர்ந்து பல தேர்தல்களில் (1999ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் உட்பட)
தோல்வியைத் தழுவியுள்ளது.
வெளி உலகிற்கு ரணில் நல்லவராக தோன்றுகிறார். அவரின் தோல்விக்கு.. அவரை மட்டும் குறை கூற இயலாது. மற்ற தலைவர்களுக்கு வழி விடுவது நல்லது