PDA

View Full Version : வான் வெளியில்.. (பாகம் 2)



rambal
01-04-2003, 02:59 PM
வான் வெளியில்.. (பாகம் 2)

நட்சத்திரம்

இரவின்
முகத்தில்
ஆயிரம் பருக்கள்..

******************

வானவீதியெங்கும்
புள்ளி வைத்தாயிற்று..
யாரங்கே கோலம் போட..

*******************


யார் கை தவறி
விழுந்தது இந்த
பொட்டுக்கடலைப் பொட்டலம்..

*******************

நிலாப்பெண்ணிடம்
ஏமாந்த வானக் காதலன்
விரித்து வைத்த முள்பாதை..

*******************

யாரோ துப்பாக்கி
சுட்டுப்பழகியதில்
விழுந்தன பொத்தல்கள்...

இளசு
01-04-2003, 08:03 PM
நட்சத்திரத் தரம் வாய்ந்த முத்திரைக் கவிதை.
படைத்த ராமுக்கு பாராட்டு.

பொன்னியின் செல்வன்
06-04-2003, 11:39 AM
அசத்தல் ராம். அடுத்து பிறை நிலா முதல் முழு நிலா வரை எதிர் பார்க்கலாமா?

aren
06-04-2003, 12:30 PM
நட்சத்திரம் அழகாக ஜொளிக்கிறது. பாராட்டுக்கள்.

Emperor
06-04-2003, 01:25 PM
இதை பார்தவுடன் எனக்கு ஒரு புதுகவிதை தோன்றியது....

யார் சொன்னது நீ நட்சத்திரம் என்று,
வானில் அது பல கோடியல்லவா இருக்கிறது?
நீ ஒரு வெண்ணிலா என் மனவானில் ஒரே ஒரு பொன்னிலா !!

Nanban
10-01-2004, 01:52 PM
அருமையான குறும்பாக்கள்........