PDA

View Full Version : கிரிக்கெட்--இந்தியா-தென் ஆப்பிரிக்கா



அறிஞர்
12-11-2005, 08:12 PM
மீண்டும் கிரிக்கெட் விழா தொடர்கிறது. இலங்கையை வென்ற பலத்துடன் இந்தியா... தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த அணி. தற்சமயம் ஒரு நாள் போட்டியில்2 வது சிறந்த அணியாக உள்ளது. இந்தியர்களின் சாதனை தொடருமா...

5 ஒருநாள் போட்டிகள்..

1. நவம்பர் 16 ஹைதராபாத்
2. நவம்பர் 19 பெங்களூர் (இரவு-பகல்)
3. நவம்பர் 22 சென்னை (இரவு-பகல்)
4. நவம்பர் 25 கொல்கத்தா (இரவு-பகல்)
5. நவம்பர் 28 மும்பை (இரவு-பகல்)

இந்திய அணி

ராகுல் டிராவிட் (தலைவர்), சேவாக் (துணை தலைவர்), டெண்டுல்கர், யுவராஜ் சிங், கைப், சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்பஜன்சிங், முரளி கார்த்திக், இர்பான் பதான், அகார்கர், ஜே.பி.யாதவ், ஸ்ரீசந்த், காம்பீர், ஆர்.பி.சிங்.

தென்னாப்பிக்க அணி

ஸ்மித் (தலைவர்), காலிஸ், ஜோகன் போதா, பவுச்சர், வில்லாரிஸ், ஆண்ட்ரு ஹால், கெம்ப், லாங்வெல்ட், மோர்கல், நெல், நிட்னி, ராபின் பீட்டர்சன், பொல்லாக், பிரின்ஸ்

அறிஞர்
12-11-2005, 08:15 PM
கங்குலிக்கு மீண்டும் ஆப்பு கொடுத்துட்டாங்க.... துலிப் போட்டியில் சாதித்து விட்டு வரவேண்டுமாம்... என்ன செய்ய போகிறார் எனப்பார்க்கலாம்.. பாவம் மேற்கு மண்டலத்துடன் நடந்த போட்டியில் ஜாகீர்கான் பந்தில் வாத்து முட்டை பெற்றுள்ளார்.

"எங்கே நிம்மதி... இப்படி பொலம்ப வச்சுட்டாங்களேன்னு" கத்துகிறாரா.... துலிப் கோப்பை போட்டியில் கங்குலி
http://www.dinakaran.com/daily/2005/Nov/13/photos/SPO-12-5.jpg
நன்றி-தினகரன்

பரஞ்சோதி
13-11-2005, 03:31 AM
நன்றி அறிஞர்.

இலங்கைத் தொடரை நீங்க தொடங்கி வச்சீங்க, அற்புதமாக வெற்றி பெற்றோம்.

இந்தத் தொடரும் வெற்றித் தொடராக அமைய வாழ்த்துகிறேன்.

aren
13-11-2005, 08:34 AM
இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இலங்கை மாதிரி தென் ஆப்பிரிக்கா கிடையாது. அவர்களிடம் அருமையாக வேகப்பந்து வீசும் ஆட்டக்காரர்கள் இருப்பதால் நாம் இதே வெற்றி வாகையை சூடுவோமா என்று தெரியவில்லை.

ஆனால் இந்தியா வெளிநாட்டில் குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆடி வெற்றி பெற்றால்தான் கிரக் சாப்பலின் கோச்சிங்கை மெச்ச முடியும்.

இந்தியாவில் இந்தியாவை வெல்வது அனைவருக்கும் சிரமமே. அதற்கு கிரக் சாப்பலின் கோச்சிங் தேவையில்லை என்பது என் கருத்து.

பரஞ்சோதி
13-11-2005, 09:08 AM
கங்குலி இரண்டாம் இன்னிங்ஸிலும் ஜாகிர்கான் பந்து வீச்சில் முதல் பந்தில் முட்டை எடுத்து விட்டார், விதி அவரை சுத்தி சுத்தி அடிக்குது, பாவம் மனுசன்.

அறிஞர்
13-11-2005, 07:16 PM
ஆரென் சொல்வது போல்.. தென்னாப்பிரிக்காவை வெல்வது எளிதல்ல..

மேலும் தொடர்ந்து 19 போட்டியில் வெற்றி பெற்று யானை பலத்தோடு வருகிறார்கள்...

இந்தியர்களின் பேட்டிங்க் இன்னும் பிரகாசிக்க்னும். டீமில் யுவராஜ் தேவையா என எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி இருக்கு..

பவுலிங்கில் இருவர்தான் பிரகாசிக்கிறார்கள் பதான், ஹர்பஜன், எப்பாவது அகர்கர்....... ஆர்.பி சிங். பிரகாசிக்கின்றனர்.

மன்மதன்
13-11-2005, 07:35 PM
சென்னையில் கையில் வெண்ணையிடன் 3 பேர்கள் குரூப்பாக நேரிடையாக மேட்சை கண்டுகளிக்க போவதாக பட்சி சொல்கிறது..............பார்ப்போம் :D :D

இளசு
13-11-2005, 11:18 PM
இன்று சேப்பாக்கம் டிக்கட் வரிசையில் மணியா, சேரனைப் பார்த்தாப்ல இருந்ததே ... சரியா மன்மதன்?

mania
14-11-2005, 03:09 AM
இன்று சேப்பாக்கம் டிக்கட் வரிசையில் மணியா, சேரனைப் பார்த்தாப்ல இருந்ததே ... சரியா மன்மதன்?

மவனே மன்மதன் மட்டும் இதுக்கு ஆமாம்னு சொல்லட்டும்.....:rolleyes: அவன் சொல்ற க்ருப்பிலே ஒரு ஆள் குறைஞ்சிடும்.....:D :D
அன்புடன்
கொக்குத்தலை(வெண்ணையை வைக்க)
மணியா:D :D

poo
14-11-2005, 08:57 AM
கங்குலி இனிமே பவுலரத்தான் உள்ள வரமுடியும்!!

(தொடர்ந்து பவுலிங் பிராக்டிஸ் செய்வது நலம்!)

poo
14-11-2005, 08:59 AM
தென்னாப்ரிக்காவை ஜெயிப்பது கடினமென்றாலும்.. நமது திடீர் பவுலர்கள் ஜெயிக்க வைப்பார்கள்.. (யுவராஜ், சேவக், சச்சின்.. )

இங்க தோனின்னா.. அங்க கெம்ப்!!

(பார்ப்போம் எத்தனை பந்து தொலையுதுன்னு..)

அறிஞர்
15-11-2005, 04:46 AM
முதல் பயிற்சி ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளனர்.

முதல் ஆட்டத்திலே இருவரின் நிலையையும் ஒரளவு கணித்துவிடலாம்

பரஞ்சோதி
16-11-2005, 04:05 AM
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை விளையாட சொல்லி, 71/5 விக்கெட்கள். யுவராஜ், பதான் ஆடி வருகிறார்கள்.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட்.

pradeepkt
16-11-2005, 04:09 AM
நான் இன்னைக்கு 9:10கு வீட்டை விட்டுக் கெளம்பினேன் அதுக்குள்ளயே 3 விக்கட்டுப் போயிருச்சு.
எங்க ஆபீசில கொள்ளக் காசு குடுத்து டிக்கட்டு வாங்கிக் கொள்ளப் பேரு போயிருக்காங்க... அவங்க மேனேஜர்கள் எல்லாம் இங்க சந்தோஷமா இருக்காங்க.... ஏன்னா அவங்க எல்லாரும் போற போக்குல மதியமே மேட்ச் முடிஞ்சு அலுவலகத்துக்கு வர வாய்ப்பு இருக்கில்ல? :D :D :D

mania
16-11-2005, 04:14 AM
நான் இன்னைக்கு 9:10கு வீட்டை விட்டுக் கெளம்பினேன் அதுக்குள்ளயே 3 விக்கட்டுப் போயிருச்சு.
எங்க ஆபீசில கொள்ளக் காசு குடுத்து டிக்கட்டு வாங்கிக் கொள்ளப் பேரு போயிருக்காங்க... அவங்க மேனேஜர்கள் எல்லாம் இங்க சந்தோஷமா இருக்காங்க.... ஏன்னா அவங்க எல்லாரும் போற போக்குல மதியமே மேட்ச் முடிஞ்சு அலுவலகத்துக்கு வர வாய்ப்பு இருக்கில்ல? :D :D :D

இப்போத்தானே புரியுது....:rolleyes: :rolleyes: :D ..நீ கிரிக்கெட் பாத்தியா...:rolleyes: .அதான்.......:D
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
16-11-2005, 04:15 AM
நான் இன்னைக்கு 9:10கு வீட்டை விட்டுக் கெளம்பினேன் அதுக்குள்ளயே 3 விக்கட்டுப் போயிருச்சு.
எங்க ஆபீசில கொள்ளக் காசு குடுத்து டிக்கட்டு வாங்கிக் கொள்ளப் பேரு போயிருக்காங்க... அவங்க மேனேஜர்கள் எல்லாம் இங்க சந்தோஷமா இருக்காங்க.... ஏன்னா அவங்க எல்லாரும் போற போக்குல மதியமே மேட்ச் முடிஞ்சு அலுவலகத்துக்கு வர வாய்ப்பு இருக்கில்ல? :D :D :D

ஹா ஹா, கலக்கிட்ட தம்பி.

துன்பம் வரும் போது சிரிக்க வைத்த தம்பிக்கு நன்றி.

pradeepkt
16-11-2005, 04:20 AM
இப்போத்தானே புரியுது....:rolleyes: :rolleyes: :D ..நீ கிரிக்கெட் பாத்தியா...:rolleyes: .அதான்.......:D
அன்புடன்
மணியா...:D :D
நான் எங்க பாத்தேன்? வீட்டில டிவி ஓடிட்டு இருந்திச்சு, அவ்ளோதான்!
வீட்டில என் தம்பி பைத்தியம் இருக்கான்... காலங்காத்தால ஆபீஸ் போவாம வீட்டில உட்கார்ந்து கிரிக்கெட்டுப் பாக்க நினைச்சான்...
ஆண்டவன் கண்ணைத் தொறந்துட்டான் போல :D :D

pradeepkt
16-11-2005, 04:22 AM
ஹா ஹா, கலக்கிட்ட தம்பி.

துன்பம் வரும் போது சிரிக்க வைத்த தம்பிக்கு நன்றி.
நன்றி அண்ணா!
அது சரி, நம்ம இளையவன் ரன்னிங் கமெண்டரி குடுப்பாரே...
எங்க காணோம்?

பரஞ்சோதி
16-11-2005, 04:23 AM
அவர் இலங்கை அணி தோற்கும் போது மட்டுமே வருவார்.

பரஞ்சோதி
16-11-2005, 04:24 AM
தலை, மேட்ச் பார்க்க போய், தலைவலியோடு வர இருக்கிறார்.

pradeepkt
16-11-2005, 04:26 AM
தலை தலைவலியோடு வந்தால் பரவாயில்லை.
புதுத் தலைவியோடுதான் வரக் கூடாது :D :D :D :D :D

mania
16-11-2005, 04:34 AM
தலை, மேட்ச் பார்க்க போய், தலைவலியோடு வர இருக்கிறார்.

என் சோக கதையை கேளு பரம்ஸே..:rolleyes: :D .....மேட்ச் நடக்கும் ஊரிலேயே இருந்தும் மேட்ச் பாக்கமுடியாத நிலமை எனக்கு.....:eek:
சோகத்துடன்
மணியா..:eek:

mania
16-11-2005, 04:38 AM
தலை தலைவலியோடு வந்தால் பரவாயில்லை.
புதுத் தலைவியோடுதான் வரக் கூடாது :D :D :D :D :D

:D :D :D என்னை தலை வலி போய் திருகு வலியுடன் வர ஆசையா....????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
16-11-2005, 04:39 AM
என் சோக கதையை கேளு பரம்ஸே..:rolleyes: :D .....மேட்ச் நடக்கும் ஊரிலேயே இருந்தும் மேட்ச் பாக்கமுடியாத நிலமை எனக்கு.....:eek:
சோகத்துடன்
மணியா..:eek:

அய்யோ, சோகமோ சோகம், மேட்ச் தான் சோகம் என்றால் நீங்களுமா?

சோதனை மேல் சோதனை.

பரஞ்சோதி
16-11-2005, 06:28 AM
ஆகா, அற்புதமான ஆட்டம், என்ன அருமையான எழுச்சி.

யுவராஜ், பதான், அகர்கார், ஹர்பஜன் மிக சிறப்பான ஆட்டம். என் மனமார்ந்த பாராட்டுகள்.

பரஞ்சோதி
16-11-2005, 06:28 AM
249 ரன்கள் எடுத்துள்ளார்கள். யுவராஜ் அற்புதமான சதம்.
35/5 என்ற நிலையில் இருந்த இந்தியா 249 ரன்கள்.

mania
16-11-2005, 06:35 AM
மிகவும் மோசமான நிலையில் இருந்த(ப்ரதீப் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த போது)நிலையை வைத்து பார்த்தால் இது ஒரு ஃபைட்டிங் ஸ்கோர் என்றே சொல்லணும்.(நன்றி ப்ரதீப் ஆஃபீஸுக்கு போனதுக்கு ):D :D
இப்போ உன் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்...:rolleyes: .போன மச்சான்லாம் த்ரும்பி வந்திடுவாங்கன்னு சந்தோஷமா இருந்தாங்களே......!!!!????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...
(சும்மா ஒரு இரண்டு நிமிஷம் ஃபோன்ல பேசினபோது பதான் விக்கெட்டை எடுத்திட்டான்யா நம்ம ப்ரதீப்.....!!!!):D :D :D

rajasi13
16-11-2005, 06:36 AM
ஆரென் சொல்வது போல்.. தென்னாப்பிரிக்காவை வெல்வது எளிதல்ல..

மேலும் தொடர்ந்து 19 போட்டியில் வெற்றி பெற்று யானை பலத்தோடு வருகிறார்கள்...

இந்தியர்களின் பேட்டிங்க் இன்னும் பிரகாசிக்க்னும். டீமில் யுவராஜ் தேவையா என எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி இருக்கு..

பவுலிங்கில் இருவர்தான் பிரகாசிக்கிறார்கள் பதான், ஹர்பஜன், எப்பாவது அகர்கர்....... ஆர்.பி சிங். பிரகாசிக்கின்றனர்.
எண்ணத்த மாத்திக்குங்க தலைவரே! கைஃப் தேவையானு சிந்திக்கணும் இனி.(மானத்த காப்பாத்தின யுவாவுக்கு ஒரு ஓ!. தோத்தாலும் கௌரவமா தோக்கலாம்ல)

pradeepkt
16-11-2005, 07:43 AM
மிகவும் மோசமான நிலையில் இருந்த(ப்ரதீப் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த போது)நிலையை வைத்து பார்த்தால் இது ஒரு ஃபைட்டிங் ஸ்கோர் என்றே சொல்லணும்.(நன்றி ப்ரதீப் ஆஃபீஸுக்கு போனதுக்கு ):D :D
இப்போ உன் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்...:rolleyes: .போன மச்சான்லாம் த்ரும்பி வந்திடுவாங்கன்னு சந்தோஷமா இருந்தாங்களே......!!!!????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...
(சும்மா ஒரு இரண்டு நிமிஷம் ஃபோன்ல பேசினபோது பதான் விக்கெட்டை எடுத்திட்டான்யா நம்ம ப்ரதீப்.....!!!!):D :D :D
போனாப் போவுதுன்னு நான் அப்பப்ப ஸ்கோர் பாத்ததுனாலதான் இத்தனையாச்சும் வந்தது... இல்லன்னா இன்னேரம் மச்சான்ஸ் எல்லாம் திரும்பி வந்திருப்பாங்க... :D :D

mania
16-11-2005, 07:50 AM
76/1 ல் இருந்து இப்போது 76/3. அகர்கர் 2 விக்கெட்கள், ஆர்பி சிங் 1 விக்கெட்.
அன்புடன்
மணியா:D

rajasi13
16-11-2005, 11:45 AM
மேட்ச் புட்டுக்குச்சேய்

pradeepkt
16-11-2005, 11:55 AM
ஆமா,
கடைசி ஓவரைத் தற்செயலா நான் பார்க்க நேர்ந்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்த்துகள்.
நம்ம பசங்க நல்ல சண்டை (அதாங்க குட் ஃபைட்) குடுத்தாங்க! அதுனால அவங்களுக்கும் வாழ்த்துகள் :D

அறிஞர்
16-11-2005, 01:45 PM
ஆமா,
கடைசி ஓவரைத் தற்செயலா நான் பார்க்க நேர்ந்தது.
:Dடீ.வி.யிலையா பிரதீப்

அறிஞர்
16-11-2005, 01:48 PM
நல்ல மேட்ச்.... டாப் ஆர்டர் எல்லாம் சொதப்பிவிட்டனர்.

டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்ட தவறான முடிவு..... டோனி ரன் அவுட் பெரிதும் பாதித்தது.

280-290 ரன் எடுத்திருந்தால் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்த்து இருக்கலாம்.

ஒரு அடி நல்லது தான்.. கொஞ்சம் பொறுப்பா விளையாடுவாங்க...

சேவாக் என்ன பண்ணுகிறார் என்றே தெரியவில்லை.... கொஞ்ச நாள் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம்

அறிஞர்
16-11-2005, 01:50 PM
எண்ணத்த மாத்திக்குங்க தலைவரே! கைஃப் தேவையானு சிந்திக்கணும் இனி.(மானத்த காப்பாத்தின யுவாவுக்கு ஒரு ஓ!. தோத்தாலும் கௌரவமா தோக்கலாம்ல) தொடர்ந்து பிரகாசிக்கனும். ஆடிக்கொரு வாட்டி அம்மாசைக்கு ஒரு வாட்டி என்ற நிலை மாறனும்.

காலிஸை பாருங்கள் எல்லாத்துறையிலும் கலக்குகிறார்.

மன்மதன்
16-11-2005, 04:58 PM
நான் முழு மேட்சும் பார்த்தேன்.. டிவியில.......... சவுத் ஆப்ரிக்கா ஒண்ணும் இலங்கை அணி இல்லை...............எப்படியாவது அடுத்த மேட்ச் இந்தியா ஜெயிக்கணும்........இல்லைனா.....ஹ்ம்ம்..

pradeepkt
17-11-2005, 02:56 AM
டீ.வி.யிலையா பிரதீப்
ஆமா, எங்க ஆபீசில கேண்டீன்ல புரொஜக்டர் வச்சி ஓட்டுவாங்க... எல்லாப் பயலுவளும் அங்கதான் இருப்பாங்க...
நான் ஏன் கடைசி ஓவருக்குப் போனேன்னா அது ஸ்னாக்ஸ் டைம் :D

பரஞ்சோதி
17-11-2005, 03:03 AM
நான் முழு மேட்சும் பார்த்தேன்.. டிவியில.......... சவுத் ஆப்ரிக்கா ஒண்ணும் இலங்கை அணி இல்லை...............எப்படியாவது அடுத்த மேட்ச் இந்தியா ஜெயிக்கணும்........இல்லைனா.....ஹ்ம்ம்..

ஏலே நீ மேட்ச் பார்த்தியா, அதான் தோத்துட்டாங்க.

அப்புறம் எப்படியாவது ஜெயிக்கணுமுன்ன எப்படி? அது எப்படி என்று சொன்னா டிராவிட்க்கு சொல்லிக் கொடுக்கலாமுல்ல :D

rajasi13
17-11-2005, 03:16 AM
ஆமா, எங்க ஆபீசில கேண்டீன்ல புரொஜக்டர் வச்சி ஓட்டுவாங்க... எல்லாப் பயலுவளும் அங்கதான் இருப்பாங்க...
நான் ஏன் கடைசி ஓவருக்குப் போனேன்னா அது ஸ்னாக்ஸ் டைம் :D தயவு பண்ணி அடுத்த போட்டி நடக்கும்போது கேண்டீன் பக்காம் போயிராதீங்க.(கடைசி ஓவர்ல தான செயிச்சாங்க)

pradeepkt
17-11-2005, 03:18 AM
எப்படியும் அடுத்த ரெண்டு போட்டி நடக்கும்போது நான் ஆபீசிலயே இல்லை...
அப்படியாச்சும் நம்ம பசங்க செயிக்கிறாங்களான்னு பாத்திருவம்.

rajasi13
17-11-2005, 03:23 AM
எப்படியும் அடுத்த ரெண்டு போட்டி நடக்கும்போது நான் ஆபீசிலயே இல்லை...
அப்படியாச்சும் நம்ம பசங்க செயிக்கிறாங்களான்னு பாத்திருவம்.
ஆபீசிலயே இல்லைன்னு சொல்லிட்டு கிரௌண்டுல போய் உக்காந்துராதீங்க சாமி.

பரஞ்சோதி
19-11-2005, 08:22 AM
இரண்டாம் ஆட்டம் தொடங்கியாச்சு, பதான் முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். இந்தியா வெற்றி பெற வாழ்த்துகள்.

இளையவன்
19-11-2005, 08:37 AM
பதான் 3 விக்கெட்.

தென்ஆப்பிரிக்கா 3/20(7.2ஓவர்)

பரஞ்சோதி
19-11-2005, 08:38 AM
நான் தனியாளாக பந்து வீசுகிறேன் என்று நினைத்தேன், இளையவன் வந்து விட்டார். பதான் 3 விக்கெட்களை வீழ்த்தி விட்டார்.

இளையவன்
19-11-2005, 09:38 AM
தென்ஆப்பிரிக்கா 4/77(21ஓவர்)

அறிஞர்
19-11-2005, 09:39 AM
என்ன இளையவன் கமெண்ட்ரி கொடுக்க வந்தாச்சு போல

விரைவில் 5ம் விக்கெட் விழவேண்டும்

இளையவன்
19-11-2005, 09:56 AM
இர்பானின் அசத்தலான தொடக்கம் ஆர்வத்தை தூண்டியதால் வந்துவிட்டேன் அறிஞரே.

தென்ஆப்பிரிக்கா 4/82(25ஓவர்)

அறிஞர்
19-11-2005, 09:59 AM
85-5 சேவாக்குக்கு முதல் பந்தில் விக்கெட்

அறிஞர்
19-11-2005, 10:08 AM
96-6 மீண்டும் சேவாக்

இளையவன்
19-11-2005, 10:09 AM
தென்ஆப்பிரிக்கா 6/96 (30ஓவர்)

அறிஞர்
19-11-2005, 10:30 AM
முரளி கார்த்திக்கின் ஓவர் வெகு அருமை.... 4 ஓவர்கள் தொடர்ந்து.. ரன் கொடுக்கவில்லை...

இளையவன்
19-11-2005, 11:04 AM
தென்ஆப்பிரிக்கா 7/157(48ஓவர்)

இளையவன்
19-11-2005, 11:06 AM
தென்ஆப்பிரிக்கா 8/158(48.5ஓவர்)

இளையவன்
19-11-2005, 11:12 AM
தென்ஆப்பிரிக்கா 9/169(50ஓவர்)

அறிஞர்
19-11-2005, 11:47 AM
ஸ்பின்னர்களின் பந்து வீச்சு... அருமையாக இருந்தது..

முதல் 15 ஓவர் ஒழுங்காக விளையாண்டால்.. நல்ல நிலையில் வெற்றி பெறலாம்

இளையவன்
19-11-2005, 12:19 PM
கம்பீரும் சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இளையவன்
19-11-2005, 12:24 PM
முதல் இரண்டு ஓவர்களிலும் இந்தியாவால் ஓட்டங்கள் எதுவும் பெற முடியவில்லை. இந்தியா 0/0

இளையவன்
19-11-2005, 12:27 PM
மூன்றாவது ஓவரிலும் ஓட்டங்கள் இல்லை.

அறிஞர்
19-11-2005, 12:35 PM
விக்கெட் முக்கியம்..... ரன் மெதுவாக எடுத்துக்கொள்ளலாம்.

5ம் ஓவரில் டெண்டுல்கர் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.. பிடிக்கவில்லை.. சற்று முன்பாக விழுந்தது... இது மாதிரி தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்

5 ஓவரில் 7/0

இளையவன்
19-11-2005, 12:36 PM
இந்தியா 5 ஓவர்கள் முடிவில் விக்கட் இழப்பின்றி 7 ஓட்டங்கள்.

இளையவன்
19-11-2005, 12:51 PM
இந்தியா 1/13 (8.1ஓவர்)

கம்பீர் 11* (27)
சச்சின் 2 (22)

இளையவன்
19-11-2005, 12:58 PM
இந்தியா 1/25 (10 ஓவர்)

கம்பீர் 19* (33)
பதான் 4* (5)

இளையவன்
19-11-2005, 01:18 PM
இந்தியா 1/47 (15 ஓவர்)

கம்பீர் 36* (48)
பதான் 8* (20)

இளையவன்
19-11-2005, 01:26 PM
இந்தியா 2/52 (16.2 ஓவர்)

கம்பீர் 38 (50)
பதான் 11* (26)

இளையவன்
19-11-2005, 01:46 PM
இந்தியா 2/71 (20 ஓவர்)

பதான் 24* (39)
சேவாக் 6* (9)

இளையவன்
19-11-2005, 02:04 PM
இந்தியா 2/94 (25ஓவர்)

பதான் 35* (55)
சேவாக் 17* (23)

இளையவன்
19-11-2005, 02:14 PM
இந்தியா 3/105
பதான் 37 (58)
சேவாக் 26* (30)

இளையவன்
19-11-2005, 02:31 PM
இந்தியா 3/124 (30ஓவர்)

சேவாக் 39* (42)
ராவிட் 6* (8)

இளையவன்
19-11-2005, 02:37 PM
சேவாக் அரைச்சதம் 50* (48) . இந்தியா 3/137. வாழ்த்துக்கள் சேவாக்.

இளையவன்
19-11-2005, 02:50 PM
இந்தியா 4/155

சேவாக் 65* (58)
ராவிட் 10 (17)

அறிஞர்
19-11-2005, 02:55 PM
டிராவிட் அவுட்

எளிதில் வெற்றி - இந்தியா....

சேவாக ஆட்டம் அபாரம் 77 அவுட் இல்லை

171-4.

தென்னாப்பிரிக்காவின் வெற்றி ஓட்டத்திற்கு மூக்கணாங்கயிறு.

ஆஸ்திரேலியாவில் தொடர் டெஸ்ட் வெற்றியை நிற்பாட்டிய இந்தியா மீண்டும் ஜொலித்தது

இளையவன்
19-11-2005, 02:57 PM
இந்திய அணியினர் 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

இந்தியா 4/171 (35.4 ஓவர்)

சேவாக் 77* (62)
யுவராஜ் 4* (6)

ஆட்டநாயகன் பதான்.

இளசு
19-11-2005, 09:47 PM
20 ஆட்டங்கள் தொடர்ந்து வென்று வந்த அணியை
இன்று வென்ற இந்திய அணிக்கு --பிரமாண்ட வாழ்த்துகள்..

தென் ஆப்பிரிக்காவுக்கு -

சாரி ஃபார் த பிரேக்!

பரஞ்சோதி
20-11-2005, 03:17 AM
டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு ரெஸ்ட் கொடுத்தவர்கள் நாம் தானே.

அருமையான பந்து வீச்சு, அபாரமான ஆட்டம். இனிவரும் போட்டிகளில் சூடு பிடிக்கும்.

pradeepkt
21-11-2005, 06:55 AM
அருமையான ஆட்டம்.
வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அறிஞர்
21-11-2005, 02:05 PM
சென்னையில் காலசூழ்நிலை எவ்வாறு உள்ளது?

புயல், மழைன்னு பயமுறுத்துறாங்களே.......

மன்மதன்
21-11-2005, 05:57 PM
சென்னையில் இன்று முழுதும் நல்ல மழை........... இந்த மழைக்கே நாளை பிட்ச் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது..... ஒருவேளை நாளை நல்ல வெயில் அடித்தால் மேட்ச் நடக்கும்...... மழை பெய்தால் அவ்ளோதான்...........

பரஞ்சோதி
21-11-2005, 06:13 PM
இரவு பகல் போட்டி என்பதால் காலையில் வெயில் அடித்தாலும் நல்லதே, ஒருவேளை நாளை ஆட்டம் இல்லை என்றால் அடுத்த நாள் ஆட்டம் இருக்குமா தெரியலையே, தலையை உடனே கேட்டு சொல்லுங்கப்பா.

அறிஞர்
21-11-2005, 09:12 PM
சீக்கிரம் கேட்டு சொல்லுங்கப்பா... காலங்கார்த்தலே 4 மணிக்கு எழுந்தரிக்கனும்

பரஞ்சோதி
22-11-2005, 03:06 AM
சென்னையில் இன்றும் மழை பெய்யும் போலிருக்குதே. பணம் வேறு வசூல் செய்துள்ளார்களே! போட்டி நடக்கவில்லை என்றால் பொதுமக்கள் என்ன செய்வாங்க, கிரிக்கெட் சங்கம் என்ன செய்வாங்க.

எதுக்கும் தலையை இரண்டு நாட்களுக்கு அந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்று சொல்லணும்.

பென்ஸ்
22-11-2005, 06:57 AM
தலை... "தலை பத்திரம்" :rolleyes: :rolleyes:

pradeepkt
22-11-2005, 07:20 AM
மன்மதா,
இன்னைக்கு ஆட்டம் நடக்கலைன்னா நான் பொறுப்பில்லை, சரியா?

aren
22-11-2005, 07:34 AM
பாவம் மன்மதன் மாட்சை பார்க்க டிக்கெட்டெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்.

மாட்ச் மட்டும் நடக்கலைன்னா???????

மதி
22-11-2005, 09:46 AM
ஆட்டம் கைவிடப்பட்டது.
இனி தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

மதி

பரஞ்சோதி
22-11-2005, 10:34 AM
பாவம் மன்மதன் மாட்சை பார்க்க டிக்கெட்டெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்.

மாட்ச் மட்டும் நடக்கலைன்னா???????

மேட்ச் நடக்கலைன்னா, மன்மதன் பொடி நடையா நடந்து பக்கத்தில் இருக்கும் தியேட்டரில் அதே டிக்கெட்டை காட்டி படம் பார்த்து விடுவான். :D

pradeepkt
22-11-2005, 11:17 AM
அவன் படம் பாக்க மட்டுமா செய்யிறான்...
பல நேரத்தில படம் காட்டயில்ல செய்யிறான்... :D
என்னவோ ஆட்டம் கைவிடப் பட்டதில எனக்கு ரொம்ப வருத்தம்

அறிஞர்
22-11-2005, 02:39 PM
காலை 4 மணிக்கு முழித்து காத்திருந்து... ஆட்டம் விடப்பட்ட செய்தி வருத்தத்தில் ஆழ்த்தியது.
---

சென்னை இந்தியாவுக்கு சாதகமான இடம்.

கல்கத்தா, மும்பையை எந்த அளவுக்கு நம்ப இயலும் எனக்கூறமுடியாது.

பரஞ்சோதி
22-11-2005, 03:49 PM
ஆட்டம் கை விட்டதில் எல்லோருக்கும் வருத்தம் தான்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு என்ன செய்ய போறாங்க.

அறிஞர்
22-11-2005, 04:02 PM
ஆட்டம் கை விட்டதில் எல்லோருக்கும் வருத்தம் தான்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு என்ன செய்ய போறாங்க.ஒரு காட்சி போட்டியை வைத்து சமாளித்துவிடுவார்கள் நம் ஆட்கள்...

மேலும் 3 முறை சென்னையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. கால சூழ்நிலை பார்த்து.. இனியாவது சரியான இடத்தை, நேரத்தை தீர்மானிப்பார்கள் என எண்ணுகிறேன்

மன்மதன்
22-11-2005, 04:06 PM
மேட்ச் நடக்கலைன்னா, மன்மதன் பொடி நடையா நடந்து பக்கத்தில் இருக்கும் தியேட்டரில் அதே டிக்கெட்டை காட்டி படம் பார்த்து விடுவான். :D

நான் பரவாயில்லைப்பா.. பாவம் நண்பர் பூ.. சரி அதே டிக்கெட்டை காட்டி பக்கத்து தேவி தியேட்டரில் படம் பார்க்க செல்லலாம் என்றால் (சேரன் ஐடியா) கொஞ்சம் தாமதாகிவிட்டது..( மைதானத்தில் தண்ணீருடன் விளையாடிக்கொண்டிருந்த 20 பேர்களை பார்த்துக்கொண்டிருந்ததில் ..:angry: :angry: :angry: )..........ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. பூ , சேரன் இது பற்றி ஒரு ரன்னிங் கமெண்ட்ரி கொடுங்கப்பு.. இல்லைன்னா நான் மன்மதன் பக்கம் போட்டி திட்டு விடுவேன்.. தலை கோவிச்சிப்பார்...:D :D

மன்மதன்
24-11-2005, 05:57 PM
நாளை கல்கத்தாவில் மேட்ச்..... பாவம் பெங்கால் டைகர் ஆட்டத்தில் இல்லை.............. நாளை மேட்ச் எப்படி இருக்கும் ???

பரஞ்சோதி
24-11-2005, 06:43 PM
கண்டிப்பாக மழை இருக்காது? ரன் மழை இருக்கும்.

aren
25-11-2005, 02:23 AM
டெண்டுல்கர் அடித்து நாளாகிவிட்டது. இன்றாவது ஏதாவது அடிப்பாரா?

mania
25-11-2005, 03:20 AM
டெண்டுல்கர் அடித்து நாளாகிவிட்டது. இன்றாவது ஏதாவது அடிப்பாரா?

டெண்டுல்கரும் லாராவும் ஒரே வகை.....(அம்பயரால் அடிக்கடி தவறாக அவுட் கொடுக்கப்படுவதில் ):rolleyes: :rolleyes: ....பார்க்கலாம் இன்று என்ன செய்கிறார் என்று.....!!!??:D இவர்கள் இருவரையும் அவுட் கொடுப்பதில் அப்படி என்ன ஒரு பெருமையோ.....திருப்தியோ தெரியலை....???:rolleyes: :confused: :D :D
அன்புடன்
மணியா...:D

poo
25-11-2005, 03:39 AM
டெண்டுல்கரும் லாராவும் ஒரே வகை.....(அம்பயரால் அடிக்கடி தவறாக அவுட் கொடுக்கப்படுவதில் ):rolleyes: :rolleyes: ....பார்க்கலாம் இன்று என்ன செய்கிறார் என்று.....!!!??:D இவர்கள் இருவரையும் அவுட் கொடுப்பதில் அப்படி என்ன ஒரு பெருமையோ.....திருப்தியோ தெரியலை....???:rolleyes: :confused: :D :D
அன்புடன்
மணியா...:D

அம்ப்பயரைத்தானே சொல்றீங்க தலை?!

mania
25-11-2005, 03:47 AM
அம்ப்பயரைத்தானே சொல்றீங்க தலை?!

:D :D :D இன்று காலை லாராவுக்கு ஒரு உத்தி கிடைத்தது.....பார்க்கலாம் சச்சின்னுக்கு என்ன ஆகிறது என்று....???:D :D
அன்புடன்
மணியா....:D :D

poo
25-11-2005, 07:14 AM
லாரா இரட்டைச்சதம் அடித்துவிட்டார்... நம்ம ஆளு ஒரு சதம் அடிச்சா நல்லா இருக்கும்!!

mania
25-11-2005, 07:44 AM
தென் ஆப்பிக்க அணி டாஸில் ஜெயித்து இந்தியாவை ஆட அழைத்திருக்கிறது
அன்புடன்
மணியா..

மதி
25-11-2005, 07:57 AM
ஆட்டம் துவங்க உள்ளது...
பார்ப்போம் யார் வெல்கிறார்கள் என்பதை..

மதி

aren
25-11-2005, 08:00 AM
டெண்டுல்கர் அடிப்பாரா?

ஷேவாக் இன்னும் முழுமையாக அடிக்கவில்லை.

mania
25-11-2005, 08:04 AM
ஆச்சர்யம்....!!!! காம்பீரும் பதானும் ஓபனிங் .....
அன்புடன்
மணியா..

mania
25-11-2005, 08:10 AM
வெளியே போய்க்கொண்டிருந்த பந்தை அடித்து விக்க்ட்டில் இழுத்து பதான் அவுட் ....பொல்லாக்குக்கு... 3/1. சச்சின் வந்திருக்கிறார்.
அன்புடன்
மணியா..

poo
25-11-2005, 08:10 AM
பதான் குளோஸ்...

poo
25-11-2005, 08:11 AM
முதலில் பேட் செய்யும் அணிக்குதான் வெற்றிவாய்ப்பு இருக்குமென சொன்னார்களே தலை?!

மதி
25-11-2005, 08:12 AM
பத்தான் ஆட்டமிழந்தார்.
இந்தியா 3/1 (1)

mania
25-11-2005, 08:26 AM
பொல்லாக்கின் ஒரு அருமையான பந்துக்கு சச்சின் அவுட்.இந்தியா 14/2 ஐந்தாவது ஓவரில்
அன்புடன்
மணியா..

மதி
25-11-2005, 08:46 AM
கம்பிர் ஆட்டமிழந்தார்..
மறுபடியும் பொல்லாக்..
இந்தியா 29/3 (9)

மதி
25-11-2005, 08:56 AM
சேவாக் ஆட்டமிழந்தார்..
இந்தியா 49/4 (11.2)

மதி
25-11-2005, 09:19 AM
அடுத்த ஆட்டத்தில் டென்டுல்கர் இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதே

mania
25-11-2005, 09:21 AM
சந்தேகமே இல்லாமல் இருப்பார்....
அன்புடன்
மணியா..

இளையவன்
25-11-2005, 10:13 AM
கப்டனும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இப்பொழுது யுவராஜ்-கைப் இணை ஆடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் நிலைத்து நின்று அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என நம்புவோம்.

இந்தியா 5/124( 29 ஓவர்)

யுவராஜ் 36* (55)
கைப் 27* (32)

இளையவன்
25-11-2005, 10:24 AM
சச்சின் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற ஐந்து போட்டிகளிலும் மற்றும் தெ.ஆப்பிரிக்காவுக்கான 3 போட்டிகளிலுமாக மொத்தமாக தொடர்ச்சியாக 8 போட்டிகளில் சோபிக்கத் தவறிவிட்டார். திராவிட் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். இன்றைய இந்த முக்கியமான போட்டியிலே இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடுவார்கள் என்று நினைத்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துவிட்டார்கள். திராவிட் இப்படி மோசமாக அடுத்த போட்டியிலும் ஓட்டஙகள் பெறத் தவறுவாராயின் கங்குலியிடம் இருந்த தலைமைப் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது அர்த்தமற்றதாகிவிடும்.

மதி
25-11-2005, 10:59 AM
இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 169 ஓட்டங்கள் எடுத்துள்ளது...
தோனி ஆடிக் கொண்டிருக்கிறார்...
பார்ப்போம் 50 ஒவர்களின் முடிவில் எவ்வளவு ஓட்டங்கள் எடுக்கிறோம் என்று..

இளையவன்
25-11-2005, 11:03 AM
யுவராஜ் 53 (78) கைப் 46 (63) அவுட். தோனி-அகார்கர் இணை ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா 7/177( 42.1 ஓவர்)

தோனி 8* (15)
அகார்கர் 8* (10)

இளையவன்
25-11-2005, 11:15 AM
அகார்கர் 11 (16)அவுட்

இந்தியா 8/187( 44.3 ஓவர்)

தோனி 14* (24)

இளையவன்
25-11-2005, 11:21 AM
தோனி 14 (26)அவுட்

இந்தியா 9/187( 45.1ஓவர்)

இளையவன்
25-11-2005, 11:23 AM
இந்தியா 10/188( 45.5ஓவர்)

இளையவன்
25-11-2005, 11:29 AM
அணியிலிருந்து நீக்கப்பட்ட கங்குலி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டு துறைகளிலுமே ரஞ்சி கோப்பையில் கலக்கிக் கொண்டிருக்க அவருக்குப் பதிலாக இணைக்கப்பட்டவர்கள் மோசமாக ஆடுவது கவலையளிக்கிறது. பந்து வீச்சாளர்களாவது நன்றாகச் செயற்பட்டு வெற்றி தேடித் தருவார்களா எனப் பார்ப்போம்.

இளையவன்
25-11-2005, 02:46 PM
விக்கட் இழப்பின்றி தென்னாபிரிக்கா அணியினர் வெற்றி இலக்கை அடைந்துள்ளனர்.

தெ.ஆப்பிரிக்கா 0/189
ஸ்மித் 134* (124ப 20x4 1x6)
ஹால் 48* (94ப 4x4 0x6)

மன்மதன்
25-11-2005, 04:39 PM
சங்கு ஊதிட்டாங்களே.........................:D

mania
26-11-2005, 04:28 AM
பரிசோதனைகளை ஒரு அளவோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.....
அன்புடன்
மணியா...

aren
26-11-2005, 05:10 AM
இந்த தோல்வி நிச்சயம் நம் இந்திய குழுவிற்குத் தேவைதான். ஒரு திறமையான குழுவிடம் ஆடும்பொழுது எப்படி ஆட வேண்டும் என்று இப்பொழுது தெரிந்திருக்கும்.

அடுத்த ஆட்டத்தில் சுரேஷ் ரைனாவை களத்தில் இறக்கவேண்டும். மேலும் இந்த மாதிரி ஆட்டக்காரர்களை இடத்தை மாற்றாமல் அவர்களுக்கு தோதுவான இடங்களில் இறக்கவேண்டும்.

டெண்டுல்கரும் ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கவேண்டும். காம்பீருக்கு பதில் சுரேஷை கொண்டுவரலாம். ஜேபி யாதவையும் முரளிக்கு பதில் கொண்டுவரலாம். சுழற்பந்துவீச்சிற்கு டெண்டுல்கர், யுவராஜ் மற்றும் ஷேவாக்கை உபயோகிக்கலாம்.

அடுத்த ஆட்டத்தை எப்படியாக கைப்பிடிக்கவேண்டும். இல்லையென்றால் இலங்கையும் வென்றது ஒரு அதிர்ஷடத்தால் கிடைத்தது என்பதாகிவிடும்.

ஜெயிப்பார்களா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி மாதிரி இருக்கிறதே.

poo
26-11-2005, 06:41 AM
அருமையான யோசனைகள் அண்ணா.. ஆனால் பலசமயம் சாதாரண ஆட்கள் (உங்களை சொல்லலைங்கண்ணோ..) யோசிப்பதைக்கூட ஏன் நிர்வாகம் யோசிப்பதில்லையென தோணும் எனக்கு!!




ஜெயிப்பார்களா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி மாதிரி இருக்கிறதே.

எனக்கு இது குரோர்பதி கேள்விமாதிரி இருக்குங்க ஆரேன் (அமிதாப்ப)ண்ணா... ஹிஹி..

மன்மதன்
26-11-2005, 07:15 AM
ஹ்ம்ம்..இந்த சீரிஸை ஜெயித்து 7வது ரேங்கிலிருந்து மேலே போலாம்னு பார்த்தா, வேணாம் பங்களாதேஷ், ஜிம்பாப்வே கூடவே ரேங்க் பட்டியலில் இருப்போங்கிறாங்க..............என்னத்த சொல்றது........

poo
26-11-2005, 07:18 AM
சீரியஸா ஆடினாத்தானே!..

mania
26-11-2005, 07:28 AM
இன்றைய டெக்கான் க்ரானிகலில் மோஹன் எழுதிய ஆர்டிகிளை படியுங்கள்.மிகவும் சுவையானது.:)
அன்புடன்
மணியா...

Eden pitch was a gift to the Proteas (http://www.tamilmantram.com/vb/) The enmities that divide our land are so ancient that they have even been immortalised in the epics. Like the Kauravas and the Pandavas of Mahabharata facing each other in battle, the two warring factions of the BCCI will be battling each other at Kolkata.
Long before the board war is set to begin in the corridors of power, Team India had to pay a heavy price for the prevailing enmity among administrators. Rahul Dravid?s men had to face up to the truth that grass is not only for cows in India although the green in the grass seldom remains on the pitch at cricket grounds at match times.
This is not the first occasion on which some grass has been left on in a crucial game though. The Australians were fascinated with the surface given them for the Test match at Nagpur where they arrived 1-0 up in the series last year. Thanks to India?s hospitality, they won the series with Vidarbha CA taking out its animus against the Dalmiya-dominated board on Sourav Ganguly?s team by making conditions more akin to Headingley than Nagpur.
Graeme Smith must have had a quiet chuckle when the coin fell in his favour on Friday afternoon. The pitch could come straight out of Kingsmead in Durban which, when the grass is left on, can be most unsettling for batsmen, more so for Indian batsmen who were once slaughtered there by Allan Donald and his partners in pace in a Test.
Such a South African hatchet job could be understood because in cricket terms such home preparation was a revenge for conditions the Proetas generally find in India. To gift the visitors with a boon just to settle our scores is a peculiar Indian propensity.
To see Team India beaten might bring nothing material even by the funny terms of cricket politics.
But so many seem to take a vicarious pleasure in stabbing their own that Team India must be wondering if there is anything like home advantage when playing in India.
Not that they did a bad job of batting when conditions of bounce and movement were unfavourable. Rahul Dravid?s men fought back fiercely as they did in the series opener on a virgin pitch with some life in it in Hyderabad.
Contrast that with Sourav Ganguly?s attitude when he came across the greentop in the Test series last year. He sulked and walked off, feigning an injury if rumours are to be believed. Yuvraj and Kaif fought on after Shaun Pollock?s lifting deliveries from a steady length made a world record-breaking Sachin Tendulkar look way out of his depths as an away seaming lifter kissed the edge of his bat.
Pollock is South Africa?s most capped player. As a strike bowler, his prowess has come down in most recent times, especially since he has lost pace and is dependent on the early sting that the new ball lends him. When he found encouragement in the surface, he bowled like a champion, seamer, always keeping the ball up. This is no ego trade, to demonstrate the bouncer would be foolish. Up to the bat and he had three men, including the surprising makeshift opener Irfan Pathan.
The South Africans who have never won a one-day series in India were suddenly in with a chance to grab one if they could snuff out the long batting lineup. It is still a mystery how Hansie Cronje?s men managed to lose some matches on our soil, particularly the Titan Cup final in Mumbai. In that sense at least, letting oneself down may not be an Indian monopoly.
But it made watching the match on a Kingsmead-like seamer a sickening experience. A little grass, some movement and a little bit of bounce is not supposed to put off classy batsmen of the kind that India has so many of. The problem is such self-induced tests of technique are so psychologically inhibiting that to bat normally would be next to impossible.
The Indian batsmen could not really cope with the challenge well enough. Surely, the Eden Gardens would not be sporting a greentop if Ganguly, who averages 8.00 at Kingsmead in Tests and 13.40 in ODIs, is to bat in the December Test against the likes of Chaminda Vaas, Dilhara Fernando and Zoysa. So peculiar is the quality of Indianness that we see such skewered priorities as imposed by the dictates of cricket politics.

aren
26-11-2005, 04:04 PM
நமக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு புலமையில்லாததால் மோகன் அவர்கள் சொன்னதை அப்படியே தெரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனாலும், பிட்சை குறை சொல்வது தவறு என்பது என்னுடைய கருத்து. நிறைய தடவை நம் இந்தியா பிட்சுகளும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து பிட்ச் மாதிரி பந்து எம்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பொழுதுதான் நாமும் வெளிநாட்டிற்குச் சென்றால் நன்றாக விளையாடமுடியும் என்று. அப்படியிருக்கையில் பிட்சை மட்டும் குறை கூறாமல் எழும்பும் பந்தை எப்படி தடுத்து ஆடுவது என்று சாப்பல் நம் மக்களுக்கு சொல்லித்தந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையுடன் வென்றது வெறும் வெத்து வேட்டுதான் என்று நன்றாகவே தெரிகிறது. இதில் சாப்பலின் சாகசமும், திராவிடின் திறமையும் நிச்சயமாக இல்லை என்று தெரியவந்துள்ளது. இனிமேலாவது நம் மக்கள் தங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து பந்து வீச்சிற்கு தகுந்தாற்போல் ஆடவேண்டும். வெறும் பிட்சுகளை நம்பி இனிமேல் களம் இறங்ககூடாது என்பது என்னுடைய கருத்து.

இளசு
26-11-2005, 09:36 PM
மும்பையில் ஜெயித்து தொடரை டிரா பண்ணனும்...

அதான் என்னோட இப்போதைய எண்ணம்..ஆசை எல்லாம்..

(ஜெயிக்கணும், 3 வது இடத்துக்கு வரணும்ன்ற கனவுக்கெல்லாம்தான்
மன்மதன் சொன்ன மாதிரி..ஊஊஊஊஊஊஊஊஊஊஊ -ன்னு
கொல்கொத்தாவில் வச்சு சங்கு ஊ(த்)திட்டாங்களே...

முகிலன், பெங்களூர் ஒரு (சின்ன) பிரேக் மட்டும்தான் போல..
மத்தபடிக்கு தொடர்ந்து ஜெயிக்கிறாங்களேப்பா....)

பரஞ்சோதி
27-11-2005, 03:22 AM
வலைப்பூவில் நான் படித்த கட்டுரை இதோ:

Dalmiya-வின் ஆடுகள அரசியல் (http://balaji_ammu.blogspot.com/2005/11/dalmiya.html)



டால்மியாவும் அவரது அடிவருடிகளும் சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய அபத்த அரசியல் நாடகத்தின் விளைவாக, கல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று மண்ணைக் கவ்வ நேர்ந்தது. பொதுவாக, எந்தவொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும், இன்னொரு நாட்டு அணி தம் நாட்டில் விளையாட வரும்போது, தமது அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது, நடைமுறையில் காணப்படும் ஒன்றாகும்.

இதற்கு மாறாக, பிரபிர் முகர்ஜி என்ற திமிர் பிடித்தவரின் மூளை குழம்பியதின் விளைவாக, அவர் "SPORTING WICKET" என்ற பெயரில், KINGSMEAD-க்கு இணையான ஆடுகளம் ஒன்றை உருவாக்கியதற்கு, BCCI-யில் தற்போது நிலவி வரும் உட்பூசலும் ஒரு முக்கியக் காரணமாகும். பணம் கொடுத்து, பல மணி நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, பலவித சிரமங்களுக்கிடையில் அரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றிய, வெறுப்பேற்றிய இந்தக் கோமாளி பிரபிர் முகர்ஜியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்று தெரியவில்லை ?!?!

இதே போல், கடந்த வருடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, ஷரத் பவாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் சங்கம் , டால்மியாவைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, நாக்பூரில் பசுமையான ஆடுகளத்தை தயாரிக்க வைத்து, கிரிக்கெட் வீரர்களை (கிரிக்கெட்டையும்!) பலிகடாக்களாகவும், ரசிகர்களை முட்டாள்களாகவும் ஆக்கியது குறிப்பிட வேண்டியது. கிரிக்கெட் அரசியலில் "தாதா"வான கங்குலி கடைசி நிமிடத்தில் (உடல்நிலையை காரணம் காட்டி!) ஆட்டத்திலிருந்து விலகினார்! டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் (பல வருட காத்திருப்பிக்குப் பின்!) கைப்பற்றியது.

ஏற்கனவே, கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப் படாததால் கடுப்பில் இருந்த, நேற்று மைதானத்திலிருந்த கங்குலி ரசிகர்கள் (வெறியர்கள்!) இந்தியா 71-5 என்று சரிந்தபோது, "டிராவிட் ஒழிக", "சாப்பல் ஒரு கழுதை", "சச்சின் ஹை ஹை" என்று (டால்மியாவும், முன்னாள் கேப்டனும் எதிர்பார்த்தது போலவே!) கூக்குரலிட்டனர்! பொதுவாக, நேற்று கொல்கத்தாவில், தென்னாப்பிரிக்காவுக்கு பலத்த ஆதரவு காணப்பட்டதில், கொல்கத்தா கிரிக்கெட் வெறியர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை!

கங்குலி டெஸ்ட் அணியில் "ஆல்ரவுண்டர்" (கிரன் மோரேயின் கூற்றின்படி!) என்ற போர்வையில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதில், திடீரென்று அவர் எப்படி ஆல்ரவுண்டர் ஆனார் என்பது புரியாத புதிர்! அப்படியானால், கபில்தேவையும், ·பிளின்டா·வையும், இம்ரான் கானையும் என்னவென்று அழைப்பது ??? என்ன ஒரு கேலிக்கூத்து இது ? இதனால், சமீபத்திய உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ஆடிய ஜகீர்கான் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது.

அணிக்குள் பின்புறக் கதவு வழியாக பிரவேசித்திருக்கும் கங்குலி, ஏதாவது அரசியல் பண்ணி, அணியின் ஒற்றுமையைக் குலைத்து, டிராவிட்டுக்கு தலைவலி தர மாட்டார் என்று நம்புவோம்!!! அதற்கு, வரும் BCCI தேர்தல், டால்மியாவுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். BCCI-யிலும் மாநில அளவிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் சில அரசியல் தரகர்கள் நடத்தும் கேவலமான அரசியல் விளையாட்டிலிருந்தும், அதனால் ஏற்படும் அவல நிகழ்வுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்கு என்று தான் விடிவு காலம் வருமோ ?! உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், நேற்று நடந்தேறிய கூத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்து வரும் இரண்டொரு ஆட்டங்களை புறக்கணித்தாலாவது, BCCI திருந்துவதற்கு வழி பிறக்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: http://balaji_ammu.blogspot.com/2005/11/dalmiya.html

பரஞ்சோதி
27-11-2005, 03:27 AM
தற்போது சாப்பல் ரசிகர்களை நோக்கி தவறாக சமிக்கை காட்டினார் என்று ஒரு பிரச்சனை.

முட்டாள் தனமாக இருக்கிறது, ரசிகர்கள் அன்று எத்தனை கேவலமாக நடந்துக் கொண்டார்கள். அப்படி இருக்கையில் தன்னை வெறுப்பேற்றியவனை நோக்கி அவ்வாறு காட்டியதில் தவறு இல்லை என்று தான் சொல்வேன். இது ஒரு பிரச்சனையே இல்லை, வேண்டும் என்றே பத்திரிக்கைகள் பிரச்சனையை பெரிதாக்குறது.

aren
27-11-2005, 03:34 AM
தற்போது சாப்பல் ரசிகர்களை நோக்கி தவறாக சமிக்கை காட்டினார் என்று ஒரு பிரச்சனை.

முட்டாள் தனமாக இருக்கிறது, ரசிகர்கள் அன்று எத்தனை கேவலமாக நடந்துக் கொண்டார்கள். அப்படி இருக்கையில் தன்னை வெறுப்பேற்றியவனை நோக்கி அவ்வாறு காட்டியதில் தவறு இல்லை என்று தான் சொல்வேன். இது ஒரு பிரச்சனையே இல்லை, வேண்டும் என்றே பத்திரிக்கைகள் பிரச்சனையை பெரிதாக்குறது.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படி பொது இடத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

ஆஸ்திரேலியா இந்தியா வந்த பொழுது அந்த நாட்டு ரசிகர்களைப் பார்த்து கங்குலி கை காண்பித்தார் என்று புகார் சொல்லி அவரை ஐ.சி.சி எச்சரித்தது. அதுமாதிரி சாப்பல் செய்ததையும் ஐசிசி தட்டிக்கேட்குமா என்று தெரியாது, நிச்சயம் இந்திய போர்டு தட்டிக்கேட்கவேண்டும்.

இது டால்மியா பிரச்சனையால் வந்தது என்று குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு எந்த பிட்ச் கொடுத்தாலும் அதில் தறமையுடன் ஆடமுடியும் என்று நிரூபிக்க வேண்டும்.

அப்படி பார்த்தால் டெண்டுல்கர், திராவிட் போன்றவர்கள் இந்திய பிட்சுகளில் மட்டுமே சோபிப்பார்களா? வெளிநாடுகளில் நடந்து மாட்சுகளில் பிளக்கவில்லையா. அப்படினால் இங்கே ஏன் ஆடமுடியவில்லை. தென் ஆப்பிரிக்காவின் திறமையான அணுகுமுறையே இதற்குக் காரணம் என்பது என்னுடைய கருத்து.

aren
27-11-2005, 03:41 AM
வலைப்பூவில் நான் படித்த கட்டுரை இதோ:

Dalmiya-வின் ஆடுகள அரசியல் (http://balaji_ammu.blogspot.com/2005/11/dalmiya.html)


நன்றி: http://balaji_ammu.blogspot.com/2005/11/dalmiya.html

கல்கத்தா நகரம் அவர்கள் ஆட்டக்காரரான கங்குலியை டீமிலிருந்து எடுத்ததற்கு பிரச்சனை செய்தது என்பது சரியென்றால், அத்தனை பேரும் ஏன் மாட்சைப் பார்க்க வந்தார்கள். நம் மக்கள் சரியாக ஆடாததால்தான் இந்த பிரச்சனையே வந்தது.

இதுதான் பிரச்சனையென்றால் ஹைதராபாத்தில் நடந்த மாட்சில் லஷ்மன் ரசிகர்கள் கொஞ்சம் பிரச்சனையை கிளப்பியிருக்கவேண்டுமே. இப்படி நினைத்தால் இந்தியாவில் எந்த நகரத்திலும் சரியாகவே மாட்ச் நடக்காது.

இதுவரை கங்குலி தலைமையில் ஆடி தோல்வியுற்றதையும் இந்த விதத்திலேயே எடுத்துக்கொள்ளமுடியுமா?

அவர் தலைமையில் பாகிஸ்தானுடன் கல்கத்தாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதே. அதை எந்த விதத்தில் எடுத்துக்கொள்ள முடியும். அங்கேயும் பிட்சில் டால்மியா ஆதரவாளர்கள் விளையாடினார்களா?

இந்தியா சரியாக ஆடவில்லை என்பதே என் கருத்து. அதனை உணர்ந்து இந்திய ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடி மும்பையும் நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

சொந்த மண்ணான மும்பையில் சச்சின் சதம் அடிப்பாரா? 38 சதத்திலேயே நிறைய நாட்கள் இருக்கிறார். 39க்குச் செல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மன்மதன்
27-11-2005, 04:35 PM
கல்கத்தா நகரம் அவர்கள் ஆட்டக்காரரான கங்குலியை டீமிலிருந்து எடுத்ததற்கு பிரச்சனை செய்தது என்பது சரியென்றால், அத்தனை பேரும் ஏன் மாட்சைப் பார்க்க வந்தார்கள். நம் மக்கள் சரியாக ஆடாததால்தான் இந்த பிரச்சனையே வந்தது.


கண்டிப்பா இந்தியா சரியாக ஆடாததினால்தான் சப்போர்ட் தென் ஆப்ரிக்காவிற்கு சென்றிருக்க வேண்டும்.. முன்னே மாதிரி இல்லை..இந்தியா ஒழுங்கா ஆடவில்லையென்றால் கலாட்டா பண்ணாமல் எதிரணிக்கு சப்போர்ட் பண்ணி ஆரவாரம் பண்ணுறாங்களே..

பரஞ்சோதி
28-11-2005, 03:19 AM
சரி மக்களே!

நடந்ததை மறப்போம், நடக்க இருப்பதை நினைப்போம்.

இன்றைய போட்டியின் நிலவரம் பற்றி சொல்லுங்க.

mania
28-11-2005, 03:22 AM
பிட்ச் கொஞ்சம் வெட்டாக இருப்பதால் இன்றும் டாஸ் மிகவும் முக்கியமான ஃபேக்டராக இருக்கிறது.பார்க்கலாம்.
அன்புடன்
மணியா:)

பென்ஸ்
28-11-2005, 03:31 AM
தலை.. அது எப்படி ஆஸ்த்திரேலியா மட்டும் யார் டாஸ் ஜெயித்தாலும் கோப்பையை தட்டிட்டு போயிடுறானுக???? :rolleyes: :rolleyes: :D :D

ம்ம்ம்ம்ம் அசாருதினை நம்ம டீம் மானேஜரா போடலாம்.. :p :p மாட்ச் பிக்ஸ் செய்தாவது கோப்பை கிடைக்க வழி செய்வார்... :rolleyes: :rolleyes: :D :D

mania
28-11-2005, 03:36 AM
:D :D :D அவங்க " ஷோலே" காயின் யூஸ் பண்ணறாங்களே.....தெரியாதா....??:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
28-11-2005, 03:45 AM
தலை, உடனே அமிதாப்பை தொடர்ப்பு கொண்டு அந்த காயினை கேட்டு வாங்குங்க. பாவம் திராவிட், கொஞ்சம் கொடுத்து உதவுங்க.

mania
28-11-2005, 03:52 AM
:D :D எப்படியும் இன்றைய ஆட்டம் கொல்கத்தாவை போல அவ்வளவு மோசமாக(ஒன் சைடடாக) இருக்காது. கொஞ்சம் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும் பாருங்க....:D :D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
28-11-2005, 03:58 AM
ஆமாம், நேற்றிரவு சச்சின் தன்னுடைய உணவகத்திற்கு தென் ஆப்பிரிக்க வீரர்களை அழைத்துப் போய் நல்லா காரமாக சாப்பாடு போட்டாராம், அது ஒன்று போதாதா? நாம் வெற்றி பெற..

mania
28-11-2005, 04:02 AM
ஆமாம், நேற்றிரவு சச்சின் தன்னுடைய உணவகத்திற்கு தென் ஆப்பிரிக்க வீரர்களை அழைத்துப் போய் நல்லா காரமாக சாப்பாடு போட்டாராம், அது ஒன்று போதாதா? நாம் வெற்றி பெற..

அவங்க என்ன நம்ம ராகவன் மாதிரியா....!!!!:D :D ?????நல்லா ஹிண்டி மொசுரை ஒரு பிடி பிடிச்சிட்டு :rolleyes: ஆஃபீசிலே போனவுடனே தூக்கம் வருதுன்னு சொல்ல....???:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

rajasi13
28-11-2005, 05:40 AM
:D :D எப்படியும் இன்றைய ஆட்டம் கொல்கத்தாவை போல அவ்வளவு மோசமாக(ஒன் சைடடாக) இருக்காது. கொஞ்சம் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும் பாருங்க....:D :D
அன்புடன்
மணியா..:D
ஆமா ஆமா, அதான் ஏற்கனவே ரெண்டு கிரிக்கெட் போர்டும் பேசி முடிச்சாச்சுல்லா,

பரஞ்சோதி
28-11-2005, 07:36 AM
தலையின் புண்ணியத்தால் நம்ம தலை டிராவிட் கேட்டு தலை விழுந்திருக்குது.

இனிமேல் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் விக்கெட் தான் விழ வேண்டும். டிராவிட் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

இளையவன்
28-11-2005, 08:20 AM
தெ.ஆப்பிரிக்கா 1/14 (3.3)

பதான் 1 விக்கட்

பரஞ்சோதி
28-11-2005, 08:24 AM
நன்றி இளையவன், ஒரு விக்கெட் பத்தாது, அது பத்தாக வேண்டும். சீக்கிரமாக எடுங்க.

இளையவன்
28-11-2005, 08:46 AM
தெ.ஆப்பிரிக்கா2/36 (8.2)

ஸ்மித் 24 (29) அவுட்

பதான் 2 விக்கட்

இளையவன்
28-11-2005, 09:44 AM
தெ.ஆப்பிரிக்கா 3/78 (21.2 )

அறிஞர்
28-11-2005, 10:27 AM
காலிஸ் விக்கெட்டை கழட்டிவிட்டால் நன்றாக இருக்கும். 50 அடித்து இன்னும் ஆடுகிறார்.

122/3 34 ஓவர்

அறிஞர்
28-11-2005, 10:50 AM
அடுத்த விக்கெட்

158-4 40.4 ஓவர்

பவுச்சர் காலி.

ஹர்பஜனின்.... கேட்ச் வெகு அருமை

மதி
28-11-2005, 11:01 AM
இது வரையில் இந்திய அணியின் பந்துவீச்சூ நன்றாக உள்ளது..
பர்க்கலாம் இனி எப்படி உள்ளதென்று.

நண்பன்,
மதி

இளையவன்
28-11-2005, 11:09 AM
தெ.ஆப்பிரிக்கா 5/179 (45)

இளையவன்
28-11-2005, 11:19 AM
தெ.ஆப்பிரிக்கா 6/209 (48.5)

இளையவன்
28-11-2005, 11:26 AM
50 ஓவர் முடிவில் தெ.ஆப்பிரிக்கா அணியினர் 6 விக்கட் இழப்புக்கு 221 ஓட்டங்கள் பெற்றுள்ளனர்.
கலிஸ் 91(146ப 5x4 0x6)

பதான் 3 விக்கட்
ஹர்பஜன் 2 விக்கட்

மதி
28-11-2005, 11:31 AM
இனி நின்று நிதானமாக ஆடினாலே போதும்..
இந்திய அணி ஜெயித்து விடும்..

அறிஞர்
28-11-2005, 11:33 AM
கடைசி போலாக் பொலந்து விட்டார்.....
--------
கார்த்திக் கடைசி இரண்டு ஓவர் அதிக ரன்கள்... மற்றபடி.. இந்தியர்கள்.. தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள்....

குறிப்பாக பீல்டிங்க் அருமை. யுவராஜ், கைப், ஹர்பஜன், பதானுக்கு... ஒரு ஓ போடலாம்

அறிஞர்
28-11-2005, 11:33 AM
இனி நின்று நிதானமாக ஆடினாலே போதும்..
இந்திய அணி ஜெயித்து விடும்.. இன்று ஜெயிக்கவேண்டும்.. இல்லாட்டி ஆப்பு இந்திய அணியை ஆப்பு அடித்துவிடுவார்கள்....

அறிஞர்
28-11-2005, 11:35 AM
ஒரு குட்டி (சிறிய) போட்டி


மேன் ஆப் த சீரியஸ் விருது யாருக்கு?

இளையவன்
28-11-2005, 11:35 AM
மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணியினர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். ஏற்கனவே இரு போட்டிகளில் (1996-1997) இங்கு விளையாடிய தெ.ஆப்பிரிக்கா அணியினர் பெற்ற ஓட்டங்கள் முறையே 185 மற்றும் 193 ஆகும். இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியினரே வெற்றி பெற்றனர். அதேபோல் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவார்கள் என நம்பலாம்

அறிஞர்
28-11-2005, 11:36 AM
என்னுடைய பதில்.... இர்பான் பதான்.

இளையவன்
28-11-2005, 11:42 AM
இர்பான் அல்லது யுவராஜ் சிங்

அறிஞர்
28-11-2005, 11:53 AM
இர்பான் அல்லது யுவராஜ் சிங் இன்று இந்தியா வெற்றி பெற வேண்டும். இருவரில் சிறப்பாக ஆடுபவர்களுக்கு வாய்ப்பு உண்டு

இளையவன்
28-11-2005, 12:24 PM
கம்பீர் அவுட் இந்தியா 1/1 (1.3)

இளையவன்
28-11-2005, 12:52 PM
சேவாக் 27 (20ப 4x4 1x6) அவுட்
இந்தியா 2/46 (7)

இளையவன்
28-11-2005, 01:39 PM
சச்சின் 30 (44ப 5x4) இந்த முறையும் ஏமாற்றிவிட்டார்.

இந்தியா 3/87 (17.5)

அறிஞர்
28-11-2005, 02:00 PM
யுவராஜ், டிராவிட் வெற்றியை தேடி கொடுப்பார்கள் என எண்ணுகிறேன்

மதி
28-11-2005, 02:23 PM
யுவராஜ், டிராவிட் அணி முன்னெச்சரிக்கையுடன் ஆடிக் கொண்டிருக்கிறது..
இவ்வாறே ஆடினால் ஜெயித்து விடலாம்.

rajasi13
28-11-2005, 02:34 PM
141/3

இளையவன்
28-11-2005, 02:37 PM
திராவிட் அரைச் சதம் 50* (78ப 6x4)
இந்தியா 3/148 (32.5)

அறிஞர்
28-11-2005, 02:46 PM
யுவராஜுக்குதான்.. மேன் ஆப் த சீரியஸ் போல..

நல்ல பொறுப்புடன் ஆட்டம் ஆடுகிறார்.

டிராவிட், யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடுகிறது

இளையவன்
28-11-2005, 02:54 PM
யுவராஜ் 49 (64ப 7x4) அவுட்
இந்தியா 4/162 (36)

அறிஞர்
28-11-2005, 02:55 PM
யுவராஜ் நன்றாக விளையாண்டார்.. என்ன பண்ணுவது... டோனியின் பொறுப்பான ஆட்டம் தேவை

இளையவன்
28-11-2005, 03:31 PM
தோனி 12 (26) அவுட்
இந்தியா 5/201 (43.2)

அறிஞர்
28-11-2005, 03:47 PM
அருமையாக விளையாடி இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிராவிட்டின் ஆட்டம் சிறப்பு (78 ஆட்டமிழக்காமல்)

முறைப்படி இந்த தொடர் இந்தியாவுக்குதான். சென்னையில் நம் ஆட்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பார்கள்.

---
என்னுடைய எண்ணம்

இன்றைய ஆட்டநாயகன் ; டிராவிட்

தொடர் நாயகன் : யுவராஜ்/ஜான் போலாக்

இளையவன்
28-11-2005, 03:51 PM
இந்தியா 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியா 5/224 (47.3)
திராவிட் 78* (106ப 10x4)
யுவராஜ் 49 (64ப 7x4)

அறிஞர்
28-11-2005, 04:19 PM
கடைசி ஆட்டத்தின் நாயகன் - டிராவிட்

தொடர் நாயகர்கள் : யுவராஜ், ஸ்மித் (போலாக் இல்லாதது வருத்தம்)

aren
29-11-2005, 01:51 AM
டாஸ் ஜெயித்தார்கள். போட்டியில் வென்றார்கள். இல்லையென்றால்?????

வெற்றி பெற்ற இந்திய குழுவிற்கு என் பாராட்டுக்கள். திறமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு என் பாராட்டுக்களும் அடங்கும்.

மதி
29-11-2005, 02:49 AM
இந்திய அணி நேற்று நன்கு விளையாடியது. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
29-11-2005, 03:26 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

இனிமேல் ஒரு தொடர் முடிந்தால் குறைந்தது ஒரு மாத இடைவெளி விட வேண்டும். இது வீரர்களுக்கு சலிப்பை உண்டாக்கும்.

அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் சந்திப்போம்.

mania
29-11-2005, 06:18 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

இனிமேல் ஒரு தொடர் முடிந்தால் குறைந்தது ஒரு மாத இடைவெளி விட வேண்டும். இது வீரர்களுக்கு சலிப்பை உண்டாக்கும்.

அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் சந்திப்போம்.


அட போப்பா.....:mad: .இரண்டு நாளா நல்ல வெய்யில் அடிச்சிது....:D .சரி மேட்ச் ஒழுங்கா நடக்கும்னு பார்த்தா......????:rolleyes: ஏதோ இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்றும் இன்றிரவிலிருந்து இரு நாட்களுக்கு மழை இருக்கும் என்று பயமுறுத்துகிறார்கள்...:eek: :eek: ..நாங்கள் எங்கள் விரல்களை குறுக்கே வைத்துக்கொண்டிருக்கிறோம்....!!!!(keeping our fingers crossed):rolleyes: :D :D
அன்புடன்
மணியா..

aren
29-11-2005, 06:25 AM
சென்னை டெஸ்ட் நிச்சயம் நடக்கும் மணியா அவர்களே.

மன்மதன் அவர்கள் மாட்ச் பார்க்கப்போவதை பிரதீப்பிடம் மட்டும் சொல்லாதீர்கள்.

mania
29-11-2005, 06:31 AM
சென்னை டெஸ்ட் நிச்சயம் நடக்கும் மணியா அவர்களே.

மன்மதன் அவர்கள் மாட்ச் பார்க்கப்போவதை பிரதீப்பிடம் மட்டும் சொல்லாதீர்கள்.

நன்றி ஆரென் உங்கள் வாக்கு பலிக்கட்டும்.:)
நண்பர்கள் யாரும் டிக்கெட்டுக்கு என்னிடம் இதுவரை கேட்கவில்லை...:rolleyes: (ஒரு வேளை பழைய டிக்கெட்டிலேயே உள்ளே பூந்திடலாம் என்று திட்டமோ என்னவோ):rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

aren
29-11-2005, 07:19 AM
நன்றி ஆரென் உங்கள் வாக்கு பலிக்கட்டும்.:)
நண்பர்கள் யாரும் டிக்கெட்டுக்கு என்னிடம் இதுவரை கேட்கவில்லை...:rolleyes: (ஒரு வேளை பழைய டிக்கெட்டிலேயே உள்ளே பூந்திடலாம் என்று திட்டமோ என்னவோ):rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

செய்தாலும் செய்வார்கள். ஆனால் வாசலிலேயே நிற்கவைத்துவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியுமா?

pradeepkt
29-11-2005, 11:03 AM
சரி சரி,
நான் ஒன்றும் சொல்லவில்லை.
எல்லோரும் நன்றாக மேட்ச் பாருங்கள்... ஹி ஹி :D

அறிஞர்
29-11-2005, 01:55 PM
சரி சரி,
நான் ஒன்றும் சொல்லவில்லை.
எல்லோரும் நன்றாக மேட்ச் பாருங்கள்... ஹி ஹி :D வால் மாதிரி ஒட்டச்செல்ல முயலுங்களே நண்பரே