PDA

View Full Version : தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(4)poo
12-11-2005, 10:27 AM
கடற்கரை போனோம்....

தலை கடல்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு.. - சேரன்
என்ன - தலை
அதுமட்டும்தான் நீலமாவும் இருக்கு..நீளமாவும் இருக்கு.. - சேரனின் கண்டுபிடிப்பில் வியந்துபோனோம்.


கடலை போட்டுக்கொண்டிருக்கும் காதல்ஜோடிகளை ஒரக்கண்ணால் ரசித்தபடி கடலை பார்த்துக் கொண்டிருந்தோம்.


"டியூஷனுக்கு போனா சார் அடிப்பார்னு கடலுக்கு வந்தா.. இங்கயும் பிரச்சினைடா....
ஏண்டா என்னாச்சு..
இங்க அலை அடிக்குதுடா.." - அஞ்சாப்புதான் படிப்பானுவபோல.. அதுக்குள்ள இத்தனை நக்கலு!!...


சேரன் .. உன் மனைவியோட பிறந்தநாள் பரிசா மோதிரத்துக்கு பதிலா கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம் நீ..
ஆமாம் தலை.. அவளும் அதைத்தான் விரும்பினா..ஆனா கார் கவரிங்ல கிடைக்காதே.!!.

சிரித்துப் பேசியபடி கரையேறினோம்..

தலை அடுத்து கோயில்தான்!.
ஓக்கே...


இருட்ட ஆரம்பித்திருந்தது... கோயிலை அடைந்தோம்...

"கோயிலைச்சுத்தி இவ்வளவு லைட் போட்டிருக்காங்களே... ??! - தலை
ஆண்டவனுக்கே வெளிச்சம்! - சேரன்."


கோயிலுக்குள் நுழைந்த நானும் சேரனும் கூடவந்த தலையைக் காணாமல் பதறிட்டோம்...

வெளியில் வந்துப் பார்த்தோம்..

கோயிலுக்குள்ள வராம வாசல்ல இருக்கற பிச்சைக்காரன்கிட்ட ஜோக் அடிச்சிக்கிட்டு
நிக்கறீங்களே தலை நியாயமா? - சேரன் கொஞ்சம் கோபப்பட்டார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்னு சொல்றாங்களே அதை முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்பா.. - அப்பாவியாய்
தலை சொன்னதைக் கேட்டு கோபமெல்லாம் பறந்தே போனது!


தரிசனம் முடித்து பிரகாரத்தில் அமர்ந்தோம்..

சற்று தூரத்தில் இரண்டு மாமிகள்...
"எனக்கு தெரிஞ்சு ஒரு குழந்தை யானைப்பால் குடிச்சி வளர்ந்துச்சி.. ஒரே வாரத்துல அதோட எடை நாலு கிலோ அதிகமாயிடுச்சி..
ஆச்சர்யமா இருக்கே..யாரோட குழந்தை..
யானையோட குழந்தைதான்! "- வாசலில் யானையைப் பார்த்த எபக்ட்போல..


"ஏண்டியம்மா போன மாசம் இந்த கோயில்ல சிலை திருட்டு போய்டுத்தாம்மே..
இந்த வருஷம் அம்மனுக்கு சந்தன மாலை சாத்தல..அதனாலதான் சிலை திருட்டு போய்டுச்சி..
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ராத்திரி கோயில் கதவை சாத்தல.. அதான் "- தலை இங்கிருந்து கிராஸ்டாக்கில் வார்த்தைவிட...

முறைத்தபடி மாமிகள் நடையைக் கட்டினர்.


"உன்னுடைய தம்பிப்பாப்பாவுக்கு பெரிய துண்டு தேங்காப்பத்தையை கொடுத்திட்டு சின்ன துண்டு தேங்காயை நீ எடுத்துக்கனும்.. கோழியை கவனிச்சிருக்கயா அது தேடிக்கொண்டு வரும் புழுக்கள்ல மிகுந்த அளவை தன் குஞ்சுகளுக்கு கொடுத்துடும்... புழுக்களா இருந்தால் நான் முழுவதையுமே தம்பிக்கு கொடுத்திருப்பேனே.." - சீரியசாக கதை சொல்லிக்கொண்டிருந்த அப்பா நொந்துவிட்டார்!


சரி பூ.. நேரமாச்சு கிளம்பலாம்..


வெளியில் வந்தோம்.. கடைவீதி பக்கமா நடந்து வீட்டுக்கு போய்டலாம்.

ஒரு சிறிய துணிக்கடை.. தலை ஒரு கர்ச்சீப் வேணும்.. சேரன் கேட்க..உள்ளே நுழைந்தோம்.

முதல்ல கர்ச்சீப் கேட்டா சீப்பா நினைப்பான்.. சோ கொஞ்சம் பில்டப் உடனும் சரியா- தலை ஆர்டர் போட்டார்.


ஏம்பா... இந்த சர்ட் துணி என்ன விலை..- தலை
மீட்டர் 80 ரூபா சார்..- கடைக்காரன்.
அதிகமா இருக்கே.. -சேரன்.
இந்தத்துணி கிழியவே கிழியாது சார்.. - கடைக்காரன்.
அப்புறம் எப்படி எனக்கு 2 மீட்டர் கிழிக்கப் போற... - தலை.
ஹிஹி..- வழிந்த கடைக்காரனை.. சரி..சரி.. போய் ஒரு கர்ச்சீப் கொண்டா..ன்னு கேட்டு வாங்கி வெளியேறினோம்...


தலை ஒருதடவை தீர்த்த செலவுக்கு பணம் வேணும்னு என் பொண்டாட்டிக்கு தெரியாம
பீரோவைத் திறந்தேன்... - நான்.
அப்புறம் - தலையும் சேரனும் ஆர்வமனார்கள்..
சாத்திட்டா தலை - நான் சோகமானேன்..


சரி..சரி.. தலை.. பூ.. டல்லாயிட்டான்.. இனிமேவும் பொறுக்க முடியாது.. முதல்ல உற்சாகபானம் சாப்பிடுவோம்.
காபி பாருக்குதானே - நான் அப்பாவியா கேட்க..
ஆமாம்.. ஆமாம்... - தலை பாதியைத்தான் காதில் வாங்கினாரென்பது எனக்கும் புரியும்.. உங்களுக்கும் தெரியும்..

எல்லாம் முடிந்தது.. தலையும் சேரனும் கிளம்பத் தயாரானார்கள்..

வரும்போது இரண்டுபேராகத்தான் வந்தார்கள்
போகும்போது கூட்டமே கலைந்துபோவதைப்போன்று உணர்ந்தேன்.. யப்பா.. இது அதனால இல்ல.. நெஜமாலுமே வந்த பீலிங்..


அவர்கள் கண்ணில் இருந்து மறைந்ததும் பீலீங் இன்னமும் அதிகமானது .. நெஞ்சைத் தொட்டேன்..பாக்கெட்டில் இருந்த கடிதம் கையில் தட்டுப்பட்டது.. அடடா.. மறந்தேபோனமே.. எடுத்து பிரிச்சி
படிக்க ஆரம்பிச்சேன்..

"நீ வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க இன்னும் ஒரு வாரம்தான் டைம் அதுக்குள்ள கடனை கொடுக்கல..
நீ கடன் வாங்கினவங்ககிட்ட யெல்லாம் என்னோட கடனை திருப்பிக் கொடுத்திட்டதா சொல்லிடுவேன்.."

ஆஆஆஆஆஆஆஅ ...- கடிதத்தை தவறவிட்டு மயங்கி விழுந்தேன்!!

(தூக்கிவந்து வீட்டில் போட்ட ஆட்டோக்காரனுக்கும், என் மனைவிக்கும் கடிதம் வந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை.... அதனால் என்னென்ன விளைவுகள்... உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!!??)


--------------------------------------------------------------

பரஞ்சோதி
13-11-2005, 04:44 AM
பூ, பயங்கரமாக கலக்கியிருக்கீங்க.
சுனாமி மாதிரி சிரிப்புகள் பொங்கியிருக்குது. உங்க சிரிப்பு மழையில் மற்ற சிரிப்பு எழுத்தாளர்கள் எல்லாம் கரைந்து போயிட்டாங்க.

தொடரட்டும் உங்க ரவுசு பதிவுகள். இதுக்கு தானே காத்திருந்தோம்.

சேரன்கயல்
14-11-2005, 09:35 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கே மன்றம் வந்தால்...பூ போட்டுத் தாக்கியிருக்காரு...அடடே...அசத்தல்தான் பூ...
படிச்ச பிறகு, பாண்டிக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம்னு தோணுது...
(நான் ரெடி...நீங்க ரெடியான்னு கேட்டுடாதேப்பூ....)
தொடர் அட்டகாசம்...4 பதிவும், ஒரு சேர(ன்) படிச்சு முடிச்சு...ஹ¤ம்...
(உக்காந்து அடிச்ச உன் பொறுமையை பாராட்டுகிறேன்)

poo
14-11-2005, 09:38 AM
வாங்க சேரரே...

உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...!!


கேட்டாத்தான் என்னவாம்?!! (ஒரு ட்ரீப்பூ வரலன்னா.. இப்படி நிறைய ட்ரீப்பு வர வைச்சுடுவேன்...)

gragavan
18-11-2005, 11:05 AM
நம்ம பூவுக்கு சிரிப்பூன்னு பட்டம் கொடுக்கலாம். அவ்வளவு சிரிப்பு. கலக்கல்.

அறிஞர்
19-11-2005, 11:02 AM
வாவ்.. அடுத்த கலக்கல்... தங்கள் தனி ஸ்டைலில் கலக்கிவிட்டீர்கள்.

மாமிகளிடம் கிண்டலடிக்காட்டி மணியாவுக்கு தூக்கம் வராது என்பதை தெளிவா சொல்லிவிட்டீரே

இளசு
19-11-2005, 11:05 PM
ஆனைக்குழந்தை, சாத்தலை என்று இந்த பாகமும் செம்ம கலக்கல்..

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கண்ட மணியாவுக்கு ஜே..

நானும் உங்களுடன் ஜாலி டிரிப் வந்ததுபோல ஒரு மெய்நிகர் திருப்தி..

நன்றி பூ..

ஆமாம்... தலையும் சேரனும் செவ்வாய் மேட்ச் முடிந்ததும்தான் தலைகாட்டுவாங்க போல...

puppy
20-11-2005, 11:23 AM
பூ கலக்கல் ...ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து படிச்ச முதல் பதிவு....தொடரட்டும்....உங்க அண்ணன் வேற வந்துட்டாரு இனிமேல் உங்க அட்டகாசம் தாங்க்முடியாதே...நான் இந்த பக்கம் அடிக்கடி வரனும் போல இருக்கே....

பாரதி
20-11-2005, 04:38 PM
நிஜமாவே கலக்கல்தான்... கிரிக்கெட் மேட்சிலும் கலக்கப்போறீங்களா..?
நீண்ட நாட்களுக்குப் பின் மன்றம் வந்திருக்கும் பப்பி அவர்களை வரவேற்கிறேன்.

kavitha
21-11-2005, 06:09 AM
சர வெடியா போட்டுத்தாக்கியிருக்கீங்க பூ... அடிக்கடி இதுபோன்ற சந்திப்பு பூரிப்புகள் நடக்கட்டும்.
தலை கர்ச்சீஃப் வாங்கிய கதை ரசிக்கவைத்தது.
சேரனின் மோதிர விவகாரம் அசத்தல்.தலை ஒருதடவை தீர்த்த செலவுக்கு பணம் வேணும்னு என் பொண்டாட்டிக்கு தெரியாம
பீரோவைத் திறந்தேன்... - நான்.
அப்புறம் - தலையும் சேரனும் ஆர்வமனார்கள்..
சாத்திட்டா தலை - நான் சோகமானேன்


பீரோவ சாத்தினா என்னங்க? பணத்தை கொடுத்துட்டாங்க தானே!

கடன்காரங்களுக்கெல்லாம் ஒரு புது உபாயம் சொல்லிக்கொடுத்திருக்கீங்க பூ... (இதுல இன்னொரு சகாயமும் இருக்கு... எல்லா கடன்காரங்களையும் இதே டயலாக் நீங்க சொல்லவச்சிட்டீங்கன்னா... ஜாலியா தப்பிச்சுடலாம்..ஹஹ்ஹாஹா)

இளசு
21-11-2005, 07:47 AM
பூ கலக்கல் ...ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து படிச்ச முதல் பதிவு....தொடரட்டும்....உங்க அண்ணன் வேற வந்துட்டாரு இனிமேல் உங்க அட்டகாசம் தாங்க்முடியாதே...நான் இந்த பக்கம் அடிக்கடி வரனும் போல இருக்கே....


பப்பியை அடிக்கடி வரவைக்கணும்னா

பூ -சேரன் - தலை மணியா சந்திப்பு தொடரணும்..

அசத்துங்க மக்களா...

வாங்க பப்பி, நலமா?

இளந்தமிழ்ச்செல்வன்
21-11-2005, 08:39 AM
பூ வெளுத்து வாங்கிட்டீங்க. அழகா பார்த்து கோர்த்து கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் பதிவால் பப்பி அவர்களை மீண்டும் பார்க்கும் வாய்பு கிட்டியது. கவிதாவின் யோசனையை பார்த்தீர்களா? கவிதாவிற்கு கடன் கொடுக்க நினைப்பவர்கள் யோசிக்கவும்...?

பப்பி அவர்களே நலமா?

ஹா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் உங்களையெல்லம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பூ இன்னும் கொடுங்க நிறையபேர் சங்கமம் ஆகட்டும்.

சாத்திட்டா - பீரோவை மட்டுமா? இல்லை.......

சேரன்கயல்
05-03-2007, 12:18 PM
இரண்டாம் முறையாக படித்து மகிழ்ந்தேன்...
தலையோடு சேர்ந்து திட்டம் போட்டு, பாண்டியை ஒரு வட்டம் போடனும்...

அமரன்
05-03-2007, 04:51 PM
நான்தான் இப்பதாங்க படித்தேன் சூப்பருங்க.

விகடன்
04-08-2007, 08:45 PM
தொடர்ச்சியான சிரிப்பு மருந்துக்களின் தேக்கம்
அருமையான தொகுப்புக்கள் அனைத்துமே.

படித்தேன் ரசித்தேன்.