PDA

View Full Version : தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(2)poo
12-11-2005, 10:27 AM
பக்கத்துல பார்க்கிறமாதிரி என்ன இருக்கு பூ.. -சேரன்.
பஜ்ஜிக்கடை.. பார்...பார்க்..காலேஜ்..ஹாஸ்பிட்டல்.. - சர்வர் கணக்காய் அடுக்கினேன்.


தம்பி ஹாஸ்பிட்டலுக்கு எப்படி போகனும் - ஒரு தாத்தா வழிகேட்க..
வியாதியோடத்தான் போகனும் தாத்தா.. பதில் சொன்ன சேரனை முறைத்தார் தலை.
இந்தப்பக்கமா போய்.. முதல் தெருவுல திரும்பி.. - நான் டவுசர் பாண்டி கணக்கா ஆரம்பிக்க..
நாமளும் ஹாஸ்பிட்டல் போலாம் பூ... - தலை
எதுக்கு தலை.. - நான்.
சும்மா கொஞ்ச நேரம் அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்.. - தலை.
ஒரு ரவுண்டு அடிச்சிட்டு போலாமே தலை - சேரன் இழுக்க... தலை அவரை இழுத்தார்..


பக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த பெரிய மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலுக்குள் அழைத்து போனேன்..


நிறைய பேஷண்ட்டுகள்..கொஞ்சம் டாக்டர்கள்.. .

ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தார் சேரன்..
'என்னது காத்து அடிச்சா வியர்க்குமா நம்பவே முடியலயே"
"சைக்கிளுக்கு காத்தடிச்சுப் பாரு தெரியும்" - காய்ந்துவிட்டு நகர்ந்த பேஷண்ட்டைவிட்டு எங்களுடன் இணைந்தார் சேரன்.


"தியரிக்கும் பிராக்டிக்கலுக்கும் என்னப்பா வித்தியாசம்.".- ஒரு எம்.பி.பி.எஸ். மாணவரைப் பார்த்த தலை.
"பிராக்டிக்கல்னா நாங்க அறுப்போம் சார்... தியரின்னா ப்ரபசர்.". - ரிலாக்ஸ் பண்ண ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தார் வருங்கால வசூல்ராஜா.


"தீ விபத்துல சிக்கிக்கிட்டா சாக்கை உடம்புல சுத்திக்கிட்டு உருளனும்.".- பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் ப்ரபசர்..
"ஓ..ஷாக் ட்ரீட்மெண்ட்னா இதுதானா.." - சேரன் உஷாரானார்.


வராண்டாவில் வர்றோம்ண்டான்னு ஒரு ரவுண்டு அடித்தோம்..
வழியில் காதில் விழுந்தவைகள்...

"நான் சொல்லவேண்டிய விஷயத்தை மத்தவங்ககிட்ட சொல்லும்போது வேற எதையோ சொல்லிடறேன் டாக்டர்.
அதுதான் உங்க பிரச்சினையா..
இல்லை வேற ஏதோ டாக்டர்!!.. "


"பையன் சாவியை முழுங்கி இத்தனை நாள் கழிச்சி வர்றீங்களே..
டூப்ளிகேட் சாவி இப்போதான் தொலைஞ்சுது டாக்டர்."


"டாக்டர் 100 நாளா தொடர்ந்து இருமிகிட்டு இருக்கேன்.."
அப்படியா..
என்ன மருந்து எழுதிக்கிட்டீருக்கிங்க டாக்டர்..
மருந்தில்ல.. கின்னஸ் புத்தகத்துக்கு லெட்டர்.."


"கனவுல உங்களை தூக்கி எறிஞ்சது யாரு..
யாருமில்ல டாக்டர் நான் கண்டது மின்சாரக்கனவு.."


"இது எங்க முதல் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனா பீஸ் தரவேண்டாம்..
சந்தோசம் டாக்டர்..
பெயிலியர் ஆனா யருகிட்ட வாங்கனும்னு சொல்லுங்க.."


"நேத்து கால்ல ஒரு முள்ளுன்னுதானே வந்தீங்க.. இப்போ எப்படி ரெண்டு முள்ளு?
முள்ளை முள்ளால எடுத்தேன் டாக்டர்.. அதுவும் மாட்டிக்கிடுச்சி!"


"டாக்டர் தலைவலிக்கு நீங்க தந்த மாத்திரையை சாப்பிட்டதிலேர்ந்து கை காலை மடக்கி உட்காரவே முடியல..
நீங்கதானே வலி ஜாஸ்தியா இருக்கு நிக்கிறமாதிரி மாத்திரை கொடுங்கன்னு கேட்டீங்க.."


"டாக்டர் அடிக்கடி பசிக்குது..
உட்காருங்க ஊசி போடறேன்..
வேணாம் டாக்டர் கொஞ்சம் சாப்பாடு போடுங்க போதும்.."


"என்னங்க இந்தப்பக்கம்..
மருமகளுக்கு கால்ல ஆணி..
அடப்பாவமே..
பொண்ணு பம்பரமா சுத்தனும்னு சொன்னதை அந்த புரோக்கர் தப்பா புரிஞ்சிக்கிட்டான்போல....
என்ன சொல்றார் டாக்டர்..
கத்தி போடனுமாம்..
போட்ற சொல்லு...".- இரண்டு மாமிகள் மெகா சீரியலுக்கான ஒரு எபிசோட்டை படமாக்கிக் கொண்டிருந்தனர்.


"இந்த ஞாபகமறதி டாக்டர்கிட்ட போனது தப்பா போச்சுடி..
ஏன் என்ன ஆச்சு..
அடிக்கடி தொண்டை விக்குதுன்னு சொன்னதுக்கு.. அவசரப்பட்டு விக்கவேணாம்
ரெண்டு வருஷம் பொறுங்க நல்ல விலை வரும்னு சொல்றாருடி... "- இரண்டு தோழிகள் மிரட்சியோடு
வயிற்றெரிச்சலோடு எங்களை கடந்து கொண்டிருந்தனர்.


"நான் வரும்போது ஏன் கண்ணாடி போட்டுக்கறே..
தலைவலி வரும்போது கண்ணாடி போடனும்னு டாக்டர் சொல்லியிருக்கார் அதான்!.. "- பரம்பரை வைரிகளாய்
பக்கத்துவீட்டு வைதேகியும் காயத்ரியும் மோதிக்கொண்டு நகர்ந்தனர்..


"காலுக்கு நல்ல ட் ரீட்மெண்ட் குடுத்து உன்னை நடக்கவைக்கிறேன் பாருன்னு
டாக்டர் சொன்னதை நம்பி மோசம் போயிட்டேன்..
ஏன் என்னாச்சு..
கார் பங்களா எல்லாத்தையும் வித்து டாக்டருக்கு பீஸ் கொடுத்திட்டு இப்போ
நடுத்தெருவுல நடந்துகிட்டிருக்கேன்.. "- நொந்து நூலாகி பேசிக் கொண்டிருந்தார் ஒரு வயசானவர்.


............... இது ரொம்ப விவகாரம் பிடிச்ச இடமா இருக்கும்போல.. ரமணா கணக்கா என்னை இங்க கூட்டியாந்திட்டயே பூ - தலை வெளியே போகலாமென சொல்லாமல் சொன்னார்.


தலை நான் சின்ன வயசுலயே எம்.பி.பி.எஸ் படிக்க ஆசைப்பட்டேன் ஆனா முடியல.. - சேரன் பீல் பண்ணினார்.
ஏன் காலேஜ்ல இடம் கிடைக்கலயா.. - நானும் பீல் பண்ணினேன்..
அஞ்சு வயசுப்பசங்களுக்கெல்லாம் சீட் தரமாட்டாங்களாமே அதான் முடியல..- மீண்டும் சேரன்... ஆனா என்னால நோ....

ஆனா தலை எனக்கு டாக்டருக்கோ என் ஜினியருக்கோ படிக்க விருப்பமில்லை... - நான் பீலாவுட..
ஏன் பூ... - இம்முறை சேரன் பீல்வுட..
ஹிஹி..பிளஸ் டூ பாஸாகல..அதான் - நான் பால்போட...
அனைவரும் அவுட்டானார்கள்!!

மீண்டும் தெருவில் நடந்தோம்..

நம்ம மன்மதன்கூட டாக்டரா தலை.. - நான்
இல்லையே யார் சொன்னா ..
இல்லை.. உடம்பு சரியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த ஒரு அரேபிய ஆசாமிகிட்ட ஒரே ஒரு சிரப் பாட்டிலை நீட்டினாராம்.. அவர் உடனே குணமாயிட்டாராமே.... - நான் ஆச்சரியமா சொல்ல..
ஓ..அதுவா... நம்ம மன்மதன் நீட்டின பாட்டில்மேல "shake well before use" -ன்னு எழுதியிருந்திச்சா..அதைப் பார்த்ததும் அந்தாளு சரியாயிட்டான்.. இதைவைச்சுகிட்டு வசூல்ராசாவா ஆயிடலாம்னு பாக்கிறாரா நம்ம மம்முதராசா.... - தலை ரகசியத்தை உடைத்தார்.


டாக்டரெல்லாம் இல்ல பூ... நம்ம மன்மதன் கதாநாயகன் - சேரன்
நானும் விசாரிச்சேன் சேரன்.. செகண்ட் ஹீரோன்னு சொல்லி ஒரு படத்துல புக் பண்ணி ஏமாத்திப்புட்டாங்களாம் - தலை பகீர் போட்டார்.
ஏன் என்ன பண்ணாங்க.. - நான்.
படத்துல ஒரே ஒரு செகண்ட் வந்து போறமதிரி ரோல் கொடுத்திருக்காங்க.. வெறுத்துட்டான் நம்ம ராசா- தலை.
அடப்பாவமே - சேரன்.


ஆமாம் பூ ..நீ ஒரு படத்துல நடிச்சிருக்கிறதா சொன்னயே.. ஆனா படத்துல உன்னை
காணவே காணோமே.. - தலை சி.பி.ஐ.யானார்.
நான் தலைமறைவா இருக்கற தீவிரவாதியாத்தானே நடிச்சிருக்கேன் தலை - நான் அரசியல்வாதியானேன்.


தலை.. நீங்க கோலிவுட்பக்கம் போக டிரை பண்ணலயா- சேரன் கொக்கிபோட..
ஒரு கோலிசோடா வாங்கு பூ..ன்னு தலை ஆரம்பிச்சார்.. "நாமெல்லாம் நடிக்கவந்தா ஜெமினிக்கெல்லாம் கஷ்டமாயிடும்னு டைரக்ஷன் பக்கம் போலாம்னு நினைச்சேன். ஒரு பைனான்சியரும் மாட்டினார். அவர்கிட்ட கதையை சொன்னேன். கதையை முழுக்க கேட்ட மனுஷன்.. இந்த கதைக்கு குறைச்சலான பட்ஜெட்ல குளு குளு சூழ்நிலையில
பக்கத்திலயே எடுக்கறமாதிரி ஒரு லொக்கேஷன் சொல்லுங்களேன்னார்.. - தலை நிறுத்த...

நீங்க ப்ரிட்ஜ்ன்னு சொல்லியிருப்பீங்களே - சேரன் பாயிண்ட்டை பிடிக்க..

அதே..அதே..சபாபதே..- தலை தலையில் துண்டைபோட்டு வெளியில் வந்ததை சொல்லவில்லை..ஹிஹி நாங்களே புரிந்துகொண்டோம்.


- மீதி அடுத்த பாகத்தில்..("தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(3)"

இளந்தமிழ்ச்செல்வன்
12-11-2005, 11:09 AM
தொடர்ந்து கலக்குறீங்க.

இளசு
17-11-2005, 08:12 AM
ஹாஹ்ஹா..

பூ.. டாக்டர்கள் + ஆக்டர்கள்-ன்னு
இரட்டை வாரல் பதிவு..

மருத்துவ ஜோக்குகள் படித்து சிரித்தேன்..
(பசிக்கு சாப்பாடு தவிர -- ஃபீல் ஆய்ட்டேன்)

ஃபிர்ட்ஜ் லொகேஷன் - ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆ!

நாளை அடுத்த பாகம் படிக்கிறேன்.

gragavan
18-11-2005, 10:59 AM
ஐயகோ! இதை எப்படி மிஸ் பண்ணியிருக்கிறேன். மூன்றாம் பாகத்தப் படிச்சிட்டு இதத் தேடி வந்து படிச்சேன். சூப்பரப்பூ!

அறிஞர்
19-11-2005, 11:14 AM
மருத்துவமனைகளில் நடக்கும் கூத்துக்களை பார்த்து ரசித்த போன்ற அனுபவம்.. அழகாக எழுதியிருக்கிங்க அன்பரே..

இதே ரேஞ்சுல போல சினிமாவில் திரைக்கதை எழுதுபவர் இடத்தில் தங்கள் பெயரை காணலாம் போல

சேரன்கயல்
05-03-2007, 12:07 PM
தலை சொல்லும் கமெண்டெல்லாம், உண்மையாவே தலை சொல்லும் கமெண்டாவே வடிச்சிருக்கீங்க...
(என்னோட பேக்குத்தனத்தையும்தான்...தன்னடக்கத்தோட அதைச் சொல்லாம விட்டுடுறேன்)

ஆதவா
11-08-2007, 05:18 PM
ஹ ஹா ஹ... மன்மியை இப்படியா போட்டு கலாய்க்கறது?

mythili
11-08-2007, 05:46 PM
நான் எல்லாப் பகுதிகளையுமே இப்போது தான் படித்தேன்..

மருத்துவ ஜோக்குகள் அருமை.

அன்புடன்,
மைத்து

அன்புரசிகன்
11-08-2007, 05:54 PM
உண்மையிலேயே நடந்தவையா??? :icon_hmm:

சூப்பரா இருக்கு.... மாறி மாறி போட்டுத்தள்ளியிருக்காக..


நான் எல்லாப் பகுதிகளையுமே இப்போது தான் படித்தேன்..
மருத்துவ ஜோக்குகள் அருமை.
அன்புடன்,
மைத்து

இதை நீங்கள் மட்டும் தானா படித்து சிரித்தீர்கள்.... :spudnikbackflip: