PDA

View Full Version : தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(3)poo
12-11-2005, 10:27 AM
அடுத்து எங்க போறதுன்னு யோசிக்காம கிழக்கு நோக்கி நடைபோட்டோம். புதுவையில் எந்த தெருவில் கிழக்கு
நோக்கி நடந்தாலும் அது கடற்கரையில் கொண்டு சென்றுவிட்டு விடுமென்பதால் யாரும் வழி தெரியாமல் தவிக்க
வாய்ப்பேயில்லை.


தலை.. அதோ போறாரே அவர் பெரிய எழுத்தாளார்..
அப்போ அவர் CAPITAL LETTER -லதான் எழுதுவாரா பூ..


நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம்தான் பார்க்கிறமாதிரி இருந்தது. - வழியில் ஒரு ஓவியரைப் பார்க்க
அவரிடம் பேசினேன்.
ரொம்ப நன்றிங்க.. சந்தோஷம்.-
ஓவியர் விலகியதும்.. "யார் பூ அவரு.. அவ்ளோ பெரிய ஓவியரா.. உனக்கு பெரிய பெரிய ஆள்ல்லாம்
பழக்கமா" என தலை கேட்க..
அப்படி இல்லைங்க தலை மத்தவங்களுடைய ஓவியங்களை சுத்தி செம கூட்டம்..அதனால பார்க்கவே முடியல. - அவர் காதில்
விழுந்திருந்தால் என்னை வகுந்திருப்பார்.


"தோ கிராஸ் பண்றாரே அவரு நம்ம பக்கத்து வீடுதான்.. திருமணம் ஆயிடுச்சி..ஆனாலும் இன்னமும் படிச்சிக்கிட்டு இருக்கார் - நான்.
அப்போ திருமண "மாணவர்"ன்னு சொல்லு" - தலை.


தலை மாணவர்ன்னதும் ஆட்டோகிராப் ஞாபகம் வருது - சேரனுக்கு இது வழக்கம்தானே..
பஜ்ஜிக்கடைதானே போய்டலாம் - தலை என்னைப் பார்க்க..
தலை நம்ம பவானியக்கா ஒரு சந்தேகம் கேட்டாங்க.."பஜ்ஜி விக்கனும்னா என்ன பண்ணனும்?"
பஜ்ஜி சாப்பிடும்போது தண்ணி குடிக்காம இருக்கனும் - சேரன் யோசனை சொல்ல..
பவானிக்கு பாஸ் பண்ணிடலாம் பூ - தலை வழிமொழிந்தார்.
ம்ம்.. பவானி பாஸ் பண்ணியிருந்தா நான் ஏன் பெட்டிஷனோட அலைஞ்சிருக்கப்போறேன் -சேரன் ஆட்டோகிராப்பில் மூழ்கிவிட்டார்!


பூ கவனிச்சயா நாம வந்த தெருவுல ஒரு கிளினிக்கை மூடும்போது தேசியகீதம் பாடுனாங்க?!
ஆமாம் தலை.. அவர் ஒரு நாட்டுவைத்தியர் அதான்!..


நான் நில்லுன்னு சிக்னல் கொடுத்தபிறகும் நீ சைக்கிளை
ஓட்டிக்கிட்டு போனா என்னய்யா அர்த்தம்.. - சிக்னலில் ஒரு டிராபிக் போலீஸ் ஒருவரை மிரட்டிக் கொண்டிருந்தார்.
பிரேக் பிடிக்கலன்னு அர்த்தம் சார் - மனுஷன் கொஞ்சமும் மிரளல..


கொஞ்ச தூரத்துல ஒரு வேட்பாளர் வாக்கு கேட்டு வந்து கொண்டிருந்தார்.. அநேகமாக அந்த மிரளாத
ஆசாமி அவரோட ஆளாத்தான் இருக்கனும்..


ஐயா நான் மின் விளக்கு கம்பத்துல நிக்கறேன்.. - கைகூப்பினார் வேட்பாளர்.
பார்த்து நில்லுங்க மின்சாரம் தாக்கிடப்போகுது - தலை வாயைவிட..
அய்யோ.. தலை.. கொஞ்சம் சும்மா இருங்க.. கும்மிடப்போறாங்க..- கும்பிடுபவர்களை புரிந்தவராய் சேரன் பம்மினார்..


உண்ணாவிரதத்துல கலந்துகிட்ட தலைவருக்கு வயித்துல இருந்து ரத்தம் வந்துச்சே ஏன்..
அவருக்கு பசி வயித்தை கிள்ளிடுச்சாம் அதான்..- அந்த கூட்டத்திலும் இரண்டு தொண்டர்கள் நக்கலடித்துக் கொண்டு சென்றனர்.


ஒரு நிமிஷம் தலை..
அருகிலிருந்த கடைக்கு போனேன்..
"சேட் ரெண்டு கிலோ வெல்லம் குடுங்க.." - வரும்போதே என் மனைவி காதுல கிசுகிசுத்தா... சும்மா போனேன்.. அவ்ளோதான்..
அச்சா.. - சேட்
இல்லைங்க உருண்டை வெல்லம்...-நான்
அச்சா..அச்சா... -மீண்டும் சேட்
அய்யோ.. உருண்டை வெல்லங்க.. - நான் சேட்டோடு போராட.. நடுவில் நுழைந்த தலை தன் பன்மொழி திறனால் எனக்கு பாடம் நடத்திவிட்டு அழைத்துவந்தார்.


என்ன பூ... அந்த ரேஷன் கடையில இருந்து கர்ஜிக்கிற சத்தம் வருது.. - தலை
எல்லாரும் "லயனா" போறாங்களாம் தலை - சேரன்


வழியில் காந்தி பார்க்கை கடந்தபோது கொஞ்சம் இளைப்பாறிட்டு போலாமேன்னு பார்க்கில் நுழைந்தோம்.


சிமெண்ட் பெஞ்சுகள் ஒன்றுகூட காலியில்லை. எல்லோரும் அரசு ஊழியர்கள்போல.. ஹிண்டு பேப்பரை விரித்து படுத்திருந்தார்கள்.. தலைமாட்டில் சாப்பாடு வயர்கூடை. ம்ம்.. 2 மணிக்கு வந்தவங்கபோல.. 4 1/2 ஆகுது.

உட்கார இடமில்லாமல்.. நிற்கவும் மனமில்லாமல் பார்க்கை சுற்றத் தொடங்கினோம்.
வழியில் பல சம்பாஷைனைகள்....


"என்ன ராமசாமி சின்னவயசுல ரொம்ப வால் பண்ணுவானே உங்க பையன் இப்போ என்ன பண்றான்..
இப்பவும் வால்தான் பண்றான்
இத்தனை வயசாகியுமா..ஒரு வேலைவெட்டிக்கு போகலயா அவன்..
அதான் சொன்னேங்களே கட்டட வேலையில இருக்கான்னு! "


"உங்க பையன் தொடர்ந்து 10-ஆம் வகுப்புல பெயிலாயிக்கிட்டு வர்றானே நீங்க எதுவும் முயற்சி செய்யலயா - முதலாமவர்.
அட..நான் முயற்சி செஞ்சா ஆள்மாறாட்டக் கேஸல தள்ளிட்டுப் போயிடுவாங்களாம்மே..- இரண்டாமவர்."


"உங்க மேனேஜர் கோபமா இருக்கும்போது ஏன் கண்ணை மூடிக்கிறார்..
அவர் கோபமா இருக்கும்போது யாராக இருந்தாலும் பார்க்க மாட்டாராம்.".. - இரண்டுபேரும் அக்கவுண்டண்ட்போல!?


"என்ன ஓய்..பையன் என்ன பண்றான்?
ஹாஸ்டல்ல தங்கி படிச்சிக்கிட்டு இருக்கான்..
ஏன் ஸ்கூலுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ...- ஹ்ஹ்ஹாஹாஹா.. பொக்கை வாய் நக்கலடித்தது.
ஹிஹிஹி- பேருக்கு எரிச்சலோடு வழிந்தார் அந்த நடுத்தர வயதுக்காரர்.
பையன் சுமாராத்தான் படிக்கிறான்போல - மீண்டும் ஹ்ஹஹா..
என் பையன் ஹிஸ்டரியில கொஞ்சம் வீக்.. - இவர் சுதந்திரபோராட்ட தியாகியாச்சே அந்த டைப்பில் எதனா கேட்டிருப்பார் என
மனக்கணக்கு போட்டது நடுத்தரம்.
அதுக்காக தாத்தா பேரைக்கேட்டாக்கூட தெரியாதுன்னு சொல்றது ரொம்ப அதிகம்ப்பா...- மீண்டும் ஹஹஹ்ஹ்ஹா...........
சரி பையனுக்கு மொட்டை அடிச்சிருக்கீங்களே .. எங்க அடிச்சீங்க - மீண்டும் ஹஹஹ்ஹ்ஹா
தலையிலதான்...- நடுத்தரம் இப்போதுதான் நிம்மதியானது!."


பார்க்கில் நிறைய பள்ளி மாணவர்கள்தான் தென்பட்டனர்.

"என்னடா சம்பளம் வாங்கினதும் உங்கப்பா பார்பர் ஷாப் போறாரு..
சம்பளத்தை சேவிங் பண்றாரு" - சிறுசேமிப்பை தப்பா புரிஞ்சிக்கிட்ட இரண்டு பள்ளி மாணவர்கள்.


ஒருவழியாக ஒரு பெஞ்ச் காலியாக.. உட்கார்ந்தோம்.
அலைந்து திருந்திகொண்டிருந்த பையன்களில் ஆளுக்கொருவனை பிடித்தோம்..


"ஏழு வள்ளல்கள் என்ன பண்ணினாங்க.. - தலை
கடைவைச்சி பிழைப்பு நடத்தினாங்க. - பையன்
என்னடா உளர்றே,..,- தலை
எங்க சார் நேத்து பாடம் நடத்தும்போது "கடை"யேழு வள்ளல்கள்ன்னுதான் சொன்னார் - பையன்
................!! - தலை."


ஒரு பையன் தனிமையில ரொம்ப தீவிரமா இருந்தான்...
"டேய் புத்தகத்துக்கு நடுவிலே என்னடா தேடறா.. - சேரன் கேட்க..
பேனா எங்க கிடைக்கும்னு கேட்டதுக்கு எங்க சார் புக் செண்டர்ல கிடைக்கும்னு சொன்னார்.. அதான் தேடிக்கிட்டு
இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் தீவிரமாயிட்டான்.... சைலண்ட்டா எஸ்கேப் ஆயிட்டார் சேரன்.


நான் ஒரு பையன்கிட்ட பாக்டீரியா படம் வரையச் சொன்னேன்..
கொஞ்ச நேரம் கழிச்சி என்கிட்ட பேப்பரை நீட்டினான்.. "என்னப்பா இதுல படமே இல்லையே..
பாக்டீரியா கண்ணுக்கு தெரியாதுன்னு நீங்க படிச்சதில்லையா" - பேப்பரை வெடுக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.


"பையன்ங்க வெவரமாத்தான்யா இருக்காங்க!!!" - கிளம்பினோம்....


- மீதி அடுத்த பாகத்தில்..."தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(4)"

இளசு
18-11-2005, 07:22 AM
அச்சா அசலா எத்தனை மொழிச் சிலேடைகள்..

சென்ட்டர்,கடை,விக்கணும், நாட்டு வைத்தியர்..., பார்க்கிறா மாதிரி..

அசத்தல் தோரணம் -- பின்னிப் பூ வைத்துவிட்டாய் பூ...

நடுவில் பவானி ஃபிளாஷ்பேக் வேறு..!

பாக்டீரியா வரைந்த சிறுவனுக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கு..

நாலாம் பாகம் நாளைக்குப் படிக்கிறேன்..

gragavan
18-11-2005, 10:54 AM
அடடேஏஏஏஏஏஏஏஏ! இது கலக்கல். ஒரே சொல் விளையாட்டா இருக்கே. படிச்சிப் படிச்சி ரசிச்சேன். (ரெண்டு வாட்டி). அற்புதம்பூ!!!!!!!!!!

அறிஞர்
19-11-2005, 11:28 AM
ஒவ்வொன்றும் வெகு அருமை... நாம் பயன்படுத்தும் சொற்களில் ரசிக்க எவ்வளவு விசயம் இருக்கு.....

பாக்டீரியா சூப்பரோ சூப்பர்... வாழ்த்துக்கள்

சேரன்கயல்
05-03-2007, 12:13 PM
பவானி பாஸ் பண்ணியிருந்தா நான் ஏன் பெட்டிஷனோட அலைஞ்சிருக்கப்போறேன் -சேரன் ஆட்டோகிராப்பில் மூழ்கிவிட்டார்!

அட இந்த பஜ்ஜி பவானி மேட்டரை விடமாட்டேங்கிறீங்களே...
அந்த பவானி யாருன்னுதான் கொஞ்சம் சொல்லுங்களே...

மன்மதன்
05-03-2007, 05:54 PM
ரெண்டு வருசம் கழிச்சி மறுபடியும் பவானியா..........??? :D :D

அறிஞர்
05-03-2007, 05:57 PM
ரெண்டு வருசம் கழிச்சி மறுபடியும் பவானியா..........??? :D :D
ஆமாம் அவருக்கு அந்த நினைப்பு போகவில்லையாம்.

மன்மதன்
05-03-2007, 06:16 PM
ஹ்ம்ம்.. கொஞ்சம் சுதி ஏத்தினாலே நியாபகம் வந்திடும்பா அவருக்கு.. சேரா.. மிக்ஸிங் எப்படி போயிகிட்டிருக்கு.. ஐ மீன் சவுண்ட் மிக்ஸிங் :D :D

சேரன்கயல்
06-03-2007, 11:56 AM
ஹ்ம்ம்.. கொஞ்சம் சுதி ஏத்தினாலே நியாபகம் வந்திடும்பா அவருக்கு.. சேரா.. மிக்ஸிங் எப்படி போயிகிட்டிருக்கு.. ஐ மீன் சவுண்ட் மிக்ஸிங் :D :D

மிக்ஸிங்கு ஆள் மிஸ்ஸிங்...
சவுண்டைத்தா சொல்றேன்)
மவனே...இம்மாதம் கடைசியில் சென்னை...பாண்டிக்கு போயி பூவை(யும்):rolleyes: பார்த்துட்டு வரலாமா..??:)

மன்மதன்
06-03-2007, 12:20 PM
மவனே...இம்மாதம் கடைசியில் சென்னை...பாண்டிக்கு போயி பூவை(யும்):rolleyes: பார்த்துட்டு வரலாமா..??:)


இம்மாதமா?? எப்போ வாரீஹ இங்கிட்டு..B) B)

மயூ
06-03-2007, 02:02 PM
சொற்கள் சிலம்பம் ஆடுகின்றதே பூ
கலக்கலப் பூ..

சேரன்கயல்
07-03-2007, 09:39 AM
இம்மாதமா?? எப்போ வாரீஹ இங்கிட்டு..B) B)

இன்னும் சரியான நாள் முடிவாகவில்லை...
16ம் தேதிக்கு பிறகு எப்போதுவேண்டுமானாலும் இருக்கும்...
(இங்கன கொஞ்சம் வேலைகள் முடிக்கோணும்...அதேன்)

மன்மதன்
07-03-2007, 05:46 PM
வாங்க வாங்க.. :D :D

pradeepkt
08-03-2007, 04:59 AM
இன்னும் சரியான நாள் முடிவாகவில்லை...
16ம் தேதிக்கு பிறகு எப்போதுவேண்டுமானாலும் இருக்கும்...
(இங்கன கொஞ்சம் வேலைகள் முடிக்கோணும்...அதேன்)
வாங்கப்பூ...
ஏப்ரல் 12 வாக்குல சென்னைல இருப்பீகளா???

ஷீ-நிசி
08-03-2007, 05:49 AM
பூ, காமெடில பின்றீங்கலே... வார்த்தைகளில் நகைச்சுவை பலே பலே... மூன்று பேரும் சேர்ந்து கலக்கறீங்க....

சேரன்கயல்
09-03-2007, 08:41 AM
வாங்கப்பூ...
ஏப்ரல் 12 வாக்குல சென்னைல இருப்பீகளா???

இருப்பேன் இருப்பேன்...
நீங்களும் வாரீகளா...??

pradeepkt
12-03-2007, 11:33 AM
இருப்பேன் இருப்பேன்...
நீங்களும் வாரீகளா...??
ஆமா ஆமா...
அப்ப ஒரு சந்திப்பைப் போட்டுருவமா?

விகடன்
04-08-2007, 08:41 PM
பூ அண்ணாவின் பூரிப்புடன் கமழும் நகைச்சுவை சிரிக்கவைத்தது மட்டுமின்றி சற்று சிந்திக்கவும் வைத்தது. பாராட்டுக்கள்