PDA

View Full Version : தலை..சேரன்..பூ..-சங்கமம்-1poo
12-11-2005, 07:24 AM
இப்போ வருமோ.. அப்போ வருமோவென மூன்று ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கும் சந்திப்பு...

தலை, சேரன், நான் மூவரும் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்..

சார் போஸ்ட்.. ஓடிப்போய் வாங்கிவந்து கவரை திருப்பிப் திருப்பிப் பார்க்கிறேன்..
சேரனும் திரும்ப.. தலை தலையை திருப்பி என்ன சேரன் முழிக்கற
பூவுக்கு வந்திருக்கிறது மொட்டைக்கடுதாசி..
அனுப்பனவன் விலாசம் இல்லாத விஷயம் தலைக்கு எப்டீ தெரியும்..
எப்படி தலை.. -சேரன் முந்திக்கொள்ள..
அதான் நாலு மூலையிலும் மஞ்சள் வைச்சிருக்கே.. - நம்பியார்போல தலை..

என் மனைவிக்கு தெரியாமல் அதை டிராயரில் போட்டு மூடிவிட்டு
அதைவிடுங்க தலை.. நாம பேசுவோம்...
என்ன பேசறது.. - சேரன்
வந்ததும் வந்தது கடிதம்.அதனால் "கடி" ப்போம்.. - தலை.
அப்போ "தம்" - நான்.
அடிப்போம் - என்றபடி ஹாலுக்கு வந்தாள் என் மனைவி.

கடிதம் வந்த விஷயம் தெரியாமலயே பேச்சை ஆரம்பித்து வைத்தாள்..

ஒருநாள் ரேடியோவுல விளம்பரத்தை கேட்டுக்கிட்டிருந்த
இவர் திடீர்னு உள்ள போய் தட்டுல சோறும் அப்பளமும்
கொண்டுவந்து வைச்சிக்கிட்டு வாயைத் திறந்தபடி உட்கார்ந்துக்கிட்டு இருந்தார்.. - என் மனைவி.
ஏன் - தலை
தலை.. ரேடியோல சொன்னதை நீங்க கேட்டதில்லையா.. - நான் கேட்க..
என்ன சொன்னாங்க???- சேரன்
மாதா ஊட்டாத சோறை மான்மார்க் அப்பளம் ஊட்டும் - நான்.
.................

ஏம்மா..இவனை சும்மாவா விட்ட - சேரன்..
விடுவேனா.. அன்னையில இருந்து நாலுநாள் இவர்தான் குக் - என் மனைவி.
இங்கிலீஷ்ல உயர்திணையைவிட அ·றிணைக்குத்தான் அதிகம் மரியாதை..- தலை
எப்படி தலை?.. -சேரன்
சமையல்காரரை குக்-னு கூப்பிடறோம்..ஆனா சமைக்கும் பாத்திரத்தை குக்கர்னு மரியாதை¨யா சொல்றோம்.- தலை.
ம்ம்.. நான் இங்க கிக்கர் கணக்கா இருக்கேன் - முனகின என்னை முறைத்தாள் என் மனைவி.
தலை.. சூப்பர் தலை.. இங்க பாண்டியில ஒரு கிராமத்துல இருக்கற எல்லாரும் சமையல் கலைஞர்கள்னு நம்ம அண்ணன் இளசுகூட சொன்னதா ஞாபகம் - சேரன்...
அப்போ அது "குக்"கிராமம்னு சொல்லு - தலை.
ஆஹா..பலே..-சேரன்

ஹஹ்ஹா.. எல்லாரும் என்னை சும்மாவா சொல்லுவாங்க "இங்கிலீஸ்ல புலின்னு.."..- தலை தம்பட்டம் அடிக்க..
அய்யோ.. மாமா.. "இங்கிலீஷ்ல டைகர்ன்னு"தானே சொல்லுவாங்க...- சமயம்பார்த்து காலை இல்லை..இல்லை..தலையை வாரினாள் பூவிதா.

அந்த நாலு நாளும் சமைக்கிறதுக்கு நான் பட்டபாடு இருக்கே.. சொல்லி மாளாது தலை..டாக்டர் இனிமே அவளை வெயிட் போடக்கூடாதுன்னு சொல்லிட்டாராம்..அதுக்காக குக்கர்லகூட வெயிட் போட விடமாட்டேன்னு அடம்பிடிச்சா எப்படி? - நான்.

ஆமாம்.. அன்னைக்கு சமைச்ச சாதத்துல செம கல்லு.. இவருக்கு கண்ணு ரெண்டு இருக்கான்னே சந்தேகமா ஆயிடிச்சின்னா - என் மனைவி.
ஆனா.. . அவளுக்கு பல்லு முப்பத்தியிரண்டு இருக்குங்கிறதுல எனக்கு சந்தேகமேயில்ல தலை.... - நான்.

சரி..சரி உங்க சண்டையை நிறுத்துங்க.. நான் இப்போ ஒரு கேள்வி கேக்கறேன்.. வீட்டில் வளரும் கோழி எத்தனை நாள் உயிரோடு இருக்கும்.. - தலை.
விருந்தாளி வர்ற வரைக்கும்... - பூவிதா.

அய்யோ தலை கோழின்னா எனக்கு உசுரு.. - சேரன்.
அப்போ நீ சொல்லு.. கோழி முதல்ல வந்துச்சா.. முட்டை முதல்ல வந்துச்சா..
கோழிதான் தலை.. ஏன்னா.. முட்டை வந்த வேன் பஞ்சர் ஆயிட்டதால லேட்டா வந்துச்சின்னு மிலிட்டிரி ஓட்டல் மாயாண்டியண்ணன் சொன்னாரே.. -சேரன்.

அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய பிரச்சினைக்கு ஈஸியா விடை சொல்லிட்டே.. - தலை.

அது மட்டுமில்ல தலை கோழி முட்டைதான் போடும்தான் நினைச்சேன்..ஆனா கோடுகூட போடும்னு லேட்டஸ்ட்டாத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..- சேரன்
எங்கே போட்டிருக்கு..- தலை
கேரளா போயிருந்தேன் அங்க கோழிமுட்டைபோலவே கோழிக்கோடு இருக்கு தலை- அப்பாவியாய் சேரன்.

சேரன் நீ லேசுப்பட்ட ஆளே இல்லப்பா.- தலை.
என்னையே இப்படி சொல்றீங்க..நான் கோடுபோட்டா என் நண்பன் ரோடு போடுவான்.. - சேரன்.
...???? - தலை..
என்ன முழிக்கிறீங்க நான் விளவங்"கோடு"ல இருந்தப்போ.. அவன் ஈ"ரோடு"ல இருந்தான் - சேரன் விளக்கினார்.

அஞ்சும் நாலும் எட்டுன்னானே அன்னைக்கு ஒருத்தன் அவன் யாரு சேரன்..- வெவரமான சேரனைப் பார்த்து நான் கேட்க..
என் ஒண்ணுவிட்ட தம்பி! - விடாக்கண்டனாய் சேரன்.

நான் சமீபத்துல எழுதின கதையை படிச்சீங்களா தலை.... - நான்
உங்க கதையை என்னால ஜீரணிக்க முடியல - என் மனைவி
நான் படிக்கத்தானே சொன்னேன்.. சாப்பிடவாச் சொன்னேன்.. -நான்.

சரி சரி.. விடு பூ.. கால்நடைத் தீவன வியாபாரம் ஆரம்பிக்கிறதா இருந்தயே என்னாச்சு - தலை.
திட்டம் தவிடுபொடி ஆயிடுச்சு - என் மனைவி.

இட்ஸ் மை பென் இதுக்கு என்ன அர்த்தம் - இறுக்கத்தை குறைக்க பூவிதாவை கூப்பிட்டு கேட்டார் சேரன்.
இது ஒரு மை பேனான்னு அர்த்தம் மாமா - பூவிதா சொல்ல.. அம்பேலானார் சேரன்.

இவர் யார் எது சொன்னாலும் நம்பிடுறார்.. கொஞ்சம் சொல்லிவையுங்களேன் - என் மனைவி.
சரி அதுக்கும் உங்க சுவத்துல ஜிமிக்கி மாட்டியிருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் - தலை
சுவத்துக்கும் காது உண்டுன்னு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்களாம் அதான் - என் மனைவி சொல்ல.. தலை என்னை
"பெருமையாய்" பார்த்தார்!


அப்பா நான் ஒரு சமத்தான காரியம் செஞ்சேன்.. -பூவிதா
என்ன ??....
நேத்து சாயந்திரம் ஸ்கூல் விட்டதும் பஸ்ஸில் ஏறாம பஸ் பின்னாடியே ஓடி வந்து 3 ரூபாய் 50 காசு மிச்சம் பண்ணிட்டேன்பா,.. -பூவிதா
அதைவிட ஒரு ஆட்டோ பின்னாடி வந்திருந்தா 35 ரூபாய் மிச்சம் ஆகியிருக்குமே. - நான் சொல்ல.. தலை தலையில் அடித்துக் கொண்டதேன்.... லாஜிக் உதைக்குமா என்ன.... லாஜிக் உதைக்கும்னா என் பொண்டாட்டி பேரு ஒண்ணும் லாஜிக் இல்லையே??!!

தொலைபேசி சிணுங்கியது.. சேரனை எடுக்கச் சொன்னேன்..

ஹலோ இது பூவேந்திரன் வீடுதானே.. -எதிர்முனை.
இல்லை இது அவரோட போன்.. - சேரன்.
டொக்..- எதிர்முனை.

எங்க வீட்டுக்கு டெய்லி யார் வீட்ல இருந்தாவது போன் வந்துகிட்டே இருக்கும். - என் மனைவி
அப்படியா அவ்வளவு போனையும் வைச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க.. - சேரன்

போன வாரம் நீங்க மளிகைக் கடையில வாங்கின பருப்புல ஓட்டை இருக்குன்னு சொன்னேனே போய்க் கேட்டீங்களா - சேரன் சீரியசாகக் கடித்ததில் என்னை எரித்தாள் என் மனைவி..
கேட்டேன்.. நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருந்ததைத்தான் கொடுத்தேன்ன்னு சொல்லிட்டான் - நான்.
நான் என்ன எழுதினேன்.. - என் மனைவி.
அந்த மளிகை லிஸ்ட்டை குடு பூ.. - தலை நடுவராகி வாங்கி உரக்கப் படித்தார்..
கடலை எண்ணெய் - 1/2 கி. கடுகு- 50 கிராம்.... "துவாரம்" பருப்பு - "துவா...ரம்" பருப்பு 1 கிலோ...ஓஓ.... - ராகமாய் படித்த தலை தலையை நிமிர்த்தி என் மனைவியை சிவாஜி ஸ்டைலில் பார்க்க.. அவள் சமையலறையை பார்த்தாள்...

தொழில் பண்ண கொஞ்சம் பணம் வாங்கியா உங்கப்பாகிட்ட- நான்
அதுக்கெல்லாம் மூளை வேணும்..- என் மனைவி
அவர்கிட்ட இருக்கறதைத்தானே கேட்க முடியும் - நான்.

என்ன பூ.. மாமனார் வெயிட்டா - சேரன் கேட்க..
ஆமாம் எங்கப்பா வெயிட்டுதான் எப்பவும் கோட் சூட்டோட இருக்கறவர்.,.டாக்டர் வெயிட்டை குறைக்கச் சொல்லிட்டார்ன்னு
இப்பல்லாம் வேஷ்டி சட்டையோட தான் இருக்கிறார் - அரைகுறையாக புரிந்து அலட்டிவிட்டு சென்றால் என் அசட்டு மனைவி.

ம்ம்.. அதெல்லாம் ஒண்னுமில்ல.. என் மாமனார் பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை. - நான்
என்ன வியாபாரம் பண்றார் பூ.. - சேரன்
சேமியா வியாபாரம்.. - பூவிதா ஓடிவந்து ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்னா என்னப்பான்னு கேட்டதை காதில் வாங்காமல்
சொன்னேன்.

போனவாரம் டாக்டர்கிட்ட போயிருந்ததா சொன்னயே பூ .. என்ன ப்ராப்ளம்- தலை
எனக்குதான் ப்ராப்ளம் - நான்
அதுக்கேன் சில்ட்ரன் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட போயிருந்தே -சேரன்
எனக்கு கண்ணுல இருக்கிற பாப்பா வலிக்குது அதான் - நான்.
ஆஹா...- கோரஸாக தலையும் சேரனும்.

எந்த டாக்டரையும் நம்ப முடியல.. - நான்
ஏம்பா அலுத்துக்கற - சேரன்.
கை,காலெல்லாம் வலி..பக்கத்து தெரு டாக்டர்கிட்ட போய் சுகர் இருக்கான்னு கேட்டதுக்கு
ரேஷன் கார்டு எடுத்திட்டு வான்னு சொல்லிட்டார் - நான்.
அவர் போலியா இருப்பார்.. - சேரன்..
இல்லைப்பா ஜாலியாத்தான் இருந்தார்.. - நான்.

அட.. வேற யார்கிட்டயாச்சும் போகவேண்டியதுதானே - தலை..
போனேன்.. தலைவலி போய் திருகுவலி வந்திருச்சி.. - நான்
ஏன் என்னாச்சு - தலை.
வேற டாக்டர் சொன்னமாதிரியே தினம் ரெண்டு ஸ்பூன்வீதம் சாப்பிட்டேன்.. -நான்
இப்போ எப்படி இருக்கு.. - சேரன்.
வீட்ல இருந்த 26-ஸ்பூனையும் சாப்ட்டுட்டேன்.. இப்ப வயித்துவலி தாங்க முடியல..- நான்.
நாசமாப்போச்சு - தலை.

அதுமட்டுமில்லைங்க.. காலையில எந்திரிச்ச உடனே சட்டை போட்டுக்கிட்டுதான் மருந்து மாத்திரை சாப்பிடுவேன்ன்னு அடம்பிடிக்கிறார் - என் மனைவி வெளியே வந்து போட்டுக் கொடுத்தாள்.
ஏன் பூ..- தலை
வெறும் வயத்தில சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரே தலை - நான்.

எதிர்காலத்துல நீ பெரிய கிரக ஆராய்ச்சியாளரா வருவேம்மா....-தலை
எப்படி சொல்றீங்க தலை - பூரிப்பான மனைவியை இன்னும் பூரிப்பாக்க கேட்டேன்..
உன்னைப்பத்தி எப்பவும் கோள் சொல்லிக்கிட்டே இருக்காளே... ஹாஹா....- தலை சொல்லிவிட்டு என் முதுகில் தட்ட
அவளைப் பார்க்கனும்மே...ம்ஹ¥ம்.. என் முதுகைத் தடவினேன்.. இன்னொரு முறை தட்டுங்க-ன்னு அசரீரி கேட்டது.

கோழி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்..- சேரன் சண்டையை நிறுத்தறாராம்மா....
பொரிச்சு சாப்பிடுமா மாமா? - கேட்ட பூவிதாவை போய் விளையாடுமாவென சொல்லிவிட்டு திரும்பிய சேரன்.

"என்னவோ கொஞ்சம் டல்லாவே இருக்கயே பூ..."
நேத்து ஆபிஸ்ல மேனேஜர் கோபத்துல சம்பளத்தை மூஞ்சியிலே வீசி எறிஞ்சிட்டார்,.,-நான்
அதான் pay அறைஞ்சமாதிரி இருக்கியா - இங்கிலீஸ் டைகர் மீண்டும் ஹாஹா..

எங்கயாவது புள்ளி புள்ளியா தெரிஞ்சா என் மகள் கோலம் போட்டுறுவா.. - சுவற்றைப் பார்த்த சேரனிடம் பெருமையாய் சொன்னாள் என் மனைவி.
அதுக்காக டிவி திரையயாவது விட்டுவைக்கக் கூடாதா.. - தலை.
இது பரவாயில்ல தலை.. இவ 8.58-க்கு டி.வி ஸ்க்ரீன்மேல தண்ணி தெளிக்க ஆரம்பிச்சிடுவா - நான்
ஏன்...- சேரன்.
9-மணிக்கு கோலங்கள் போடுவாங்களே - நான் ஹஹ்ஹ்ஹாஹ... உள்ளே தட்டு ஒலி கேட்டது.

சரி சேரன் திடீர்னு உனக்கு ரஜினிகாந்த போன் பண்னினா என்ன பண்னுவ - தலை
ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்.. -சேரன்
அவ்வளவுதானா நானா இருந்தா போனை எடுத்து பேசுவேன் - நான்.

சேரன் பூவிதாவை அழைத்தார்.. "பாம்புகடிக்கு முதலுதவி என்ன தெரியுமா கடிவாய்க்கு மேலும் கீழும் அழுத்தமாக
ஒரு கயிற்றால் கட்டுபோடவேண்டும்.."
தொண்டையில பாம்பு கடிச்சாலும் இதேமாதிரி செய்யலாமா மாமா?- பூவிதா கேட்க பயங்கர அப்செட் ஆயிப்போனார்.

என்னாச்சின்னே தெரியல கொஞ்ச நாளாவே என் அழகுக்கு சோதனை வருது - கையில் அப்பள எண்ணெய் சுட்டதுக்கு அவ்ளோ அலுப்பு என் மனைவிக்கு.
ஏண்டி இல்லாததைப் பத்தியெல்லாம் வீணா கவலைப்படற... - சொன்னவுடன் ஸ்ஸ்ஸ்... என் மணிக்கட்டுல எண்னெய் சூடா தெறிச்சிடுச்சி!

சாம்பார்ல சால்ட் அதிகமா இருக்கே.. - நான்
சாரிங்க.. கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். - என் மனைவி. (அழகுபத்தி கமெண்ட் அடிச்சதுக்கு அவ்ளோ எபக்ட்டா ?)

சாப்பாடு முடிந்தது.

கை கழுவ தண்ணி கொண்டாம்மா.. - தலை.
தலை.. வர்றப்போ காத்துவாக்கா ஒரு கையேந்திபவன் போனோமே அந்த ஞாபகம் வருதுல்ல..- சேரன்..
என்ன.. என்ன... - ஆர்வமானேன்.
அந்த ஓட்டல் வாசல்ல நாயை நிக்க வைச்சிருந்தாங்க பூ..- சேரன்
ஏன்..- என் மனைவி
கைகழுவத் தண்ணி இல்லயாம்.. பயப்படாம அதுகிட்ட கையை நீட்டினா.. கிளீன் பண்ணிடுமாம்- தலை.
அடப்பாவிகளா.. கையேந்திபவனுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா.. - நான்.


நாய்க்கடிக்கு என்ன செய்யனும் சேரன்.. - பாம்புக்கடி வைத்தியத்தை ஓரக்கண்ணால் கவனித்த தலை கேட்டார்.
நாயை சீண்டிலானே போதும் தலை.. கண்டிப்பாக கடிக்கும். - செமையாக கடித்தார் சேரன்.

சேரன் வெளியில ஒரு நாய்க்குட்டி ஏன் வீல் வீல்ன்னு கத்துது - கடுப்பான தலை பேச்சை மாற்றினார்.
அதோட வால்ல சைக்கிள் ஏறிடுச்சாம்..- எட்டிப்பார்த்த சேரன் செய்தி வாசித்தார்.
அப்போ வால் வால்ல்னு இல்ல கத்தனும் - பதிலுக்கு கடித்துவிட்டார் தலை.


லவ் பண்ணும்போது இவர் ஒருமுறை நடுரோட்ல சோப்பு போட்டு கழுவிக்கிட்டு இருந்தார்.. - என் மனைவி.
அடடே.. அந்த சமூகசேவையைப் பார்த்துதான் கழுத்தை நீட்டினயா - தலை.
அட நீங்கவேற தலை நாய் கடிச்ச இடத்தை கழுவனும்னு டாக்டர் சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாராம் நம்ம பூ. -சேரன் சொல்ல.. உனக்கெப்படி தெரியும்னு தலை கேக்க.. நானும் ஒரு காலத்துல லவ்வினவன்தானே என பூரித்தார் சேரன்.


ஏண்டா அழறே.. - அழுத பூவிதாவை அடக்க முயன்றார் சேரன்..
1 ரூபா தாங்க..சொல்றேன்..
சரி இந்தா ..இப்போ சொல்லு.. -சேரன்
1 ரூபா வேணும்னுதான் அழுதேன். - டாட்டா காட்டிவிட்டு எஸ்கேப்பானாள் பூவிதா.


சரி.. சாப்பிட்டு முடிச்சாச்சு.. இப்பவாச்சும் இனிப்பு சாப்பிடுங்க.. - கொண்டுவந்து வைத்தாள்.
தலை ஸ்வீட் சாப்பிடறதுக்கு முன்னாடி என்ன பண்ணனும்.. - சீரியசாக சேரன்.
ஸ்வீட் பண்ணனும் - சிரிப்பாக தலை.

ஸ்வீட்டிலிருந்து குதித்து ஓடிய எறும்பைப் பார்த்த சேரன்
"எறும்பின் வாயைவிட சின்னது எது?" - பூவிதா எஸ்கேப்பானதால் இங்கே வீசினார்.
"எறும்பு சாப்பிடும் உணவு" - தலை பயங்கரமாக வெறுப்பேற்ற.. வாய்நிறைய ஸ்வீட்டை அடக்கிக் கொண்டார் சேரன்.


சிரிக்க.. இனிக்க.. சுவைத்து முடித்து ஊர்வலம் புறப்படத் தயாரானோம்.!..(மறக்காமல் அந்த மொட்டைக்கடுதாசியை
எடுத்து மடித்து சர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்)

வாசலில் ஷூ மாட்ட குனிந்த சேரனிடம்
உன் சாக்ஸிலே ஓட்டை இருக்கா... - .தலை
இல்லையே தலை..- சேரன்.
அப்புறம் எப்படி காலை நுழைப்பே? - கேட்டுக்கொண்டே ஷ¥வை மாட்டித் தயாரானார்.


நான் இவ்வளவு செலவு பண்ணி வண்டி வாங்கினது தெரிஞ்சா என் அண்ணன் தொலைச்சிடுவார் தலை..-நான் பயபக்தியா சொல்ல..
அவர் என்ன அவ்வளவு பொறுப்பில்லாதவரா? - சேரன் சீரியசா கேட்க..
வண்டியே வேணாமடா- வடிவேலு ஸ்டைலில் வண்டியை ஒரு உதைவிட்டு விட்டு வீதியில இறங்கி நடக்க ஆரம்பித்தோம்..


நேத்து ராத்திரி தெரியாத்தனமா நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன் தலை - நடந்தபடி நான்.
அப்புறம் என்னாச்சு.பூ...- பதறினார்கள்..
என்ன ஆகுமோன்கிற பயத்துல தூக்கமே வரல.. .


- மீதி அடுத்த பாகத்தில்..."தலை..சேரன்..பூ ..- சங்கமம்-(2)"

அறிஞர்
12-11-2005, 07:55 AM
என்ன பூ ஒரே கலக்கலா கலக்கிட்டிங்க..... ரொம்ப பெரிய பதிவு... படிக்க ரொம்ப நேரம் ஆயிட்டு......

கோழிக்குழம்பு, முட்டை, கோழிக்கோடு, ஈரோடு என அனைத்தும் அருமை

poo
12-11-2005, 10:32 AM
ஆமாம்.. அறிஞரே நானே எழுதி முடிச்சிட்டு பார்க்கும்போதுதான் தெரியுது.. இன்னும் ஹோட்டல் , ஸ்கூல் எல்லாம் போனதைப்பத்தி எழுதல..

பதிவை வெட்டி 4 -ஆக்கிட்டேன்.. (இந்த பதிவில்மட்டும் தலை..சேரன்..பூ-சங்கமம் (1) என தலைப்பில் போட்டுவிடுங்களேன்..)

இளந்தமிழ்ச்செல்வன்
12-11-2005, 10:53 AM
பூ கலக்கலாக கலக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

mania
13-11-2005, 04:43 AM
10000 வாலாவை இப்படியா ஒரே வேளையில் வெடிப்பது....???:rolleyes: :D கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு வருடம் பூரா ரசிக்க வேண்டியதை இப்படி ஒரே பொறியில் காலி பண்ணிட்டயே....????:mad: சான்ஸே இல்லை மிகவும் சிறப்பான பதிவு. :D
சிரிச்சு சிரிச்சு பேட் வலி தாங்கலை.:D :D அற்புதமான நகைச்சுவை......:D :D சேரன் நேற்று எனக்கு ஃபோன் பண்ணி சைக்கிளின் வீல் தானே ஏறியது...???:rolleyes: அதான் வீல் வீல் என்று கத்திச்சு என்றார்....!!!!:D :D :D
அன்புடன்
மணியா
(இந்த நகைச்சுவை பதிவு முழுக்க முழுக்க பூ வின் சுய முயற்சியே.....பாராட்டுகள் ):) :)

இளசு
14-11-2005, 12:22 AM
தலை சொல்வது போல் இது மகா அநியாயம் பூ.

இப்படியா அசத்துவது.

சரவெடி... மீண்டும் சரவெடி என அடுக்குப் பட்டாசு பதிவு இது.


ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் படிக்கப்போறேன்.

படிச்சு, ரசிச்சு, சிரிச்சு -பின் கருத்துகள் தாரேன் சரியா?

poo
14-11-2005, 09:41 AM
அண்ணா.. நான் கோடுதான் போட்டிருக்கேன்.. நீங்களும் களத்தில் இறங்கினீர்களானால் நம் மன்றம் களைகட்டிவிடும்..

இது அவசரத்தில் அள்ளித் தெளித்தது.. தலை சொல்வதைப்போல திட்டமிடல் இல்லாமல் (நேரமின்மையால்..) மொத்தத்தையும் கொட்டிவிட்டேன்..

இளசு
14-11-2005, 10:38 PM
குக்கர், சேமியா, துவாரம் பருப்பு, ஈரோடு, தொலைச்சிடுவாரு, எறும்பு உணவு, ஸ்வீட் பண்ணனும், வெயிட் போடுவது..

அடேயப்பா.. எத்தனை எத்தனை சொல்விளையாட்டு ஜோக்குகள்.

இந்த ஐவரணியின் ரசிகனாகிவிட்டேன், பூவிதாவின் ஷொட்டுகள் பிரமாதம்..

அசத்தலோ அசத்தல் பூ..


இனி பாகம் 2 நாளைக்குத்தான் சரியா?

பரஞ்சோதி
15-11-2005, 04:19 AM
பூ, அருமையாக இருக்குது, ஒவ்வொன்றாக மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுது, அலுவலகத்தில் ஒரே சிரிப்பு தான் போங்க. அதிலும் தலையின் ஆங்கில அறிவை அப்படியே பிரதிபலிக்கும் சிரிப்புகள் கூடுதல் சுவை.

அறிஞர்
15-11-2005, 05:00 AM
பூ தலைப்புல 1 சேர்த்தாச்சு...

உங்க வெடி தொடர்ந்து வெடிக்கட்டும்

சேரன்கயல்
05-03-2007, 12:00 PM
ஹா ஹா ஹா...
பழைய நினைவுகள் திரும்புது பூ...
மறுபடி சந்திக்கமுடியுமா பார்க்கலாம்...

poo
12-03-2007, 11:54 AM
நிச்சயமாக சேரன்.. எனக்கும் இதை படிச்சுக்கிட்டே இருக்கனும்னு தோணுது...

ஆதவா
11-08-2007, 05:09 PM
இவ்வளவும் நடந்திருக்கா? அடப்பாவமே!

தலை,. இது அநியாயம்... இப்படியா பூவை கடி"க்க வைக்கிறது?

அன்புரசிகன்
11-08-2007, 05:40 PM
பெரிய காமடி கதம்பமே இங்க கிடக்கு.... (ஒவ்வொண்ணா நகைச்சுவைப்போட்டிக்கு காப்பியடிக்கலாம்.)

mythili
11-08-2007, 05:48 PM
ரொம்ப நல்லா இருந்தது..னானும் என் கணவரும் சேர்ந்து சிரித்தோம்..ரசித்தோம்..

அன்புடன்,
மைத்து

mythili
11-08-2007, 05:50 PM
பெரிய காமடி கதம்பமே இங்க கிடக்கு.... (ஒவ்வொண்ணா நகைச்சுவைப்போட்டிக்கு காப்பியடிக்கலாம்.)

ஏதோ என்னால் முடிஞ்ச*து... :p :p :p :p

அன்புட*ன்,
மைத்து

அன்புரசிகன்
11-08-2007, 05:52 PM
ஏதோ என்னால் முடிஞ்ச*து... :p :p :p :p

அன்புட*ன்,
மைத்து

ஏம்மா..... நான் உங்களப்பத்தி ஒன்னுமே சொல்லலியே........... :redface:

என் போட்டியின் வெற்றிவாய்ப்பை தவறவிடவைத்த நீங்கள் எனக்கு 1000 இ-பணம் அனுப்பியாகணும்...

mythili
11-08-2007, 06:00 PM
ஏம்மா..... நான் உங்களப்பத்தி ஒன்னுமே சொல்லலியே........... :redface:

என் போட்டியின் வெற்றிவாய்ப்பை தவறவிடவைத்த நீங்கள் எனக்கு 1000 இ-பணம் அனுப்பியாகணும்...

ஓ அப்படியா? தாராளமா அனுப்புங்களேன்... :spudnikbackflip: :spudnikbackflip:

அன்புடன்,
மைத்து

அன்புரசிகன்
11-08-2007, 06:09 PM
ஓ அப்படியா? தாராளமா அனுப்புங்களேன்... :spudnikbackflip: :spudnikbackflip:

அன்புடன்,
மைத்து

முறைக்கு அக்கா தான் தம்பிக்கு பணம் தரணும்... சரி சரி... நான் இபப்போது 1000 பணம் அனுப்புகிறேன்... :icon_08: தற்சமயம் உங்களிடம் உள்ள இ−பணம் 662.18 .. நான் அனுப்பியபின் 1662.18 அல்லது அதுக்கு மேல் இருக்கும்... பார்க்கவும்.... இடைத்திருடர்கள் அதிகம்... (நான் ஆதவாவை சொல்லவில்லை... நீங்கள் எடுகோள் எடுத்தால் நான் பொறுப்பல்ல)

mythili
12-08-2007, 03:49 AM
[QUOTE=அன்புரசிகன்;254101]முறைக்கு அக்கா தான் தம்பிக்கு பணம் தரணும்... சரி சரி... நான் இபப்போது 1000 பணம் அனுப்புகிறேன்... :icon_08: தற்சமயம் உங்களிடம் உள்ள இ−பணம் 662.18 .. நான் அனுப்பியபின் 1662.18 அல்லது அதுக்கு மேல் இருக்கும்... பார்க்கவும்.... இடைத்திருடர்கள் அதிகம்... (நான் ஆதவாவை சொல்லவில்லை... நீங்கள் எடுகோள் எடுத்தால் நான் பொறுப்பல்ல)னன்றி தம்பி இ பணம் கிடைத்தது :engel016: :icon_v:

அன்புடன்,
மைத்து