PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. யுவன் சந்திரசேகரினĮ

rambal
11-11-2005, 01:17 PM
விளிம்பின் நுனியில்.. யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவல் (பதவி மோகம்)

சதுரங்கத்தில் காய்கள் தானாக நகருதல் கூடாது..

என் வாழ்க்கை சதுரங்கத்தில் வரும் கறுப்பு மந்திரியின் வாழ்க்கை. கறுப்புக் கட்டங்களின் குறுக்கே மட்டும் நகரும் விதியுடன் வாழ்பவன். (லுமூம்பா சொல்வது)

இன்னும் எத்தனையோ விதிமுறைகள். வாழ்வே ஒரு கடையாட்டமா? சதுரங்கக்காய்களில் எந்த காய் நாம்? எந்த விதிமுறைகள் நம் மீது ஏற்றப்பட்டுள்ளது. சிப்பாயா? ராணியா? இந்த நாவல் சோமிட்சிய எனும் கற்பனை எல்லைப் பரப்பொன்றுக்குள் நிகழும்ளரசியல் நிகழ்வுகளை
பதிக்கிறது. ஆறு மாதக் குழந்தையை அடுத்த தலைவனாக ஏற்றுக் கொள்வதும் அவன் ஒரு குறிப்பிட்ட பருவம் வளரும் வரை மதகுரு அரசியல் மற்றும் தலைவனைப் பராமரிப்பதும் நிகழ்கிறது. பல கட்ட அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. தலைவனாக (ராஜா) தேர்ந்தெடுக்கப்படுகிற சிறுவனுக்கு சகலமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனைத்து போர் தந்திரங்களும், அரசியல் சாசனங்களும், அனைத்து மதச் சடங்குகளும்.. நீளும் பட்டியல் இறுதியில் மனிதத்தைத் தொலைத்து விட்ட மனப்பாட இயந்திரத்தை உருவாக்குகிறது. மனப்பாட இயந்திரத்திற்கு மனசு ஒன்று இருந்து கொண்டு விடாது துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இறுதியில் எளிய அன்பே போதுமானது என்று அங்கிருந்து தப்பி விடுகிறான். காடுகளில் பயணம் செய்யும் லுமூம்பாவின் பார்வை மூலம் வேறு கட்ட மனிதர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கறுப்பினம் என்று மிஷினரியில் எள்ளி நகையாடப்படும் லுமூம்பா அமெச்சூர் மலையேறிக்கான லைசன்சுடன் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மலைகளில் எல்லாம் ஏறி இறங்குகிறான். அவனைப் பொறுத்த வரையில் மனிதர்களுக்கு நடுவில் வாழ்வதை விட காட்டிலும் மலை முகட்டிலும் வாழ்வது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. மனிதர்களை விட கொடிய விலங்குகள் மேல்.

தலைவனை பராமரிக்கும் மதகுருவிற்கோ பொம்மையாக ஒருவனை வைத்துக் கொண்டு நாட்டை தன் இஷ்டம் போல் ஆள்வதற்கு விரும்புகிறான். ஆகையால் தலைவனுக்கு நிறைய தேர்வுகள்
வைக்கிறான். அலைக்கழிக்கிறான். மக்களை மதுவில் ஆழ்த்தி பரிபூரண நித்திரையில் ஆழ்த்தி வைத்திருக்கிறான். இந்த இடம் கவனத்திற்குரியது. காந்தி மது ஒழிப்பிற்கு ஈடுபட்டதற்குக் காரணமே
மக்கள் போதையின் பிடியில் இருந்தால் சிந்திக்க மாட்டார்கள். எவன் ஆண்டால் நமக்கென்ன? என்ற எண்ணம் மேலோங்கி விடும். இருந்தும் சீனாவின் படையெடுப்பிற்குப் பிறகு மதகுருவிற்கு நாட்டை இழக்க வேண்டி வருகிறது. அவன் தன்னுடன் சிறுவன் (இப்பொழுது 17 வயது இளைஞன்) மற்றும் தனது ஆசை நாயகி ஆகியோருடன் இந்திய எல்லைக்குள் பாதுகாப்பாக இருப்பதற்காக வருகிறான். மேஜர் க்ரூஷ் என்பவரிடம் ஒவ்வொருவரும் தங்களது கதைகளைச் சொல்கின்றனர். நாவல் விரிவு கொள்கிறது.

அரசியல் நிகழ்வுகள் என்பதை நேரடி அரசியல் அல்லாது தன் உலகம் சார்ந்த அரசியல் என்று பார்க்கும் அளவு இன்று அரசியலை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில் நாவல் அரசியல் ஒரு பகடையாட்டம்
என்று விவரிக்கிறது. ஜெயிப்பது பற்றி மட்டுமே குறிக்கோளுடன் ஆடப்படும் பகடையாட்டம். பணயமாக அப்பாவி மக்கள், அதிகாரிகள்...
பகடையாட்டம் என்பதே எந்த ஒரு அதிகாரமுமற்ற ஒரு ராஜாவிற்காக பலியாகும் அப்பாவிகளின் விளையாட்டுதானே..

ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: தமிழினி

இளசு
11-11-2005, 10:36 PM
விளிம்பின் நுனியில்.. யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவல் வாழ்வே ஒரு பகடையாட்டமா? சதுரங்கக்காய்களில் எந்த காய் நாம்? எந்த விதிமுறைகள் நம் மீது ஏற்றப்பட்டுள்ளது.

....இறுதியில் மனிதத்தைத் தொலைத்து விட்ட மனப்பாட இயந்திரத்தை உருவாக்குகிறது.

... மனிதர்களுக்கு நடுவில் வாழ்வதை விட காட்டிலும் மலை முகட்டிலும் வாழ்வது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. மனிதர்களை விட கொடிய விலங்குகள் மேல்.

.... காந்தி மது ஒழிப்பிற்கு ஈடுபட்டதற்குக் காரணமே
மக்கள் போதையின் பிடியில் இருந்தால் சிந்திக்க மாட்டார்கள். எவன் ஆண்டால் நமக்கென்ன? என்ற எண்ணம் மேலோங்கி விடும்.

அரசியல் ஒரு பகடையாட்டம்
. ஜெயிப்பது பற்றி மட்டுமே குறிக்கோளுடன் ஆடப்படும் பகடையாட்டம். பணயமாக அப்பாவி மக்கள், அதிகாரிகள்...
பகடையாட்டம் என்பதே எந்த ஒரு அதிகாரமுமற்ற ஒரு ராஜாவிற்காக பலியாகும் அப்பாவிகளின் விளையாட்டுதானே..

எப்படி இப்படைப்புகளைத் தேடிப்(ப)பிடிக்கிறாய் ராம்?
அறிமுகம் செய்ய நண்பர்கள் இருக்கிறார்களா?
இல்லை சுயத்தேடலா?

இந்த படைப்பாளி நான் அறியாதவர்.
உன் பார்வையில் அவரின் பார்வைகளைப் படிக்கும்போது
மதிப்பு-ஈர்ப்பு வருகிறது.

படிப்பவனுக்கும் படைப்பவனுக்கும் பாலமாய் ராம்.
அரிய பணி இது - சொந்த சுகத்துக்காகவே எழுதினாலும்.

பாராட்டுகள் ராம்.

rambal
12-11-2005, 04:28 AM
இங்கு வெளி வரும் கதாசிரியர்கள் எல்லாம் சுயதேடல்தான்.
ஒரு புத்தகம் வாங்கிப் படிப்பேன். நன்றாக இருந்தால் இவர்களுடைய மற்ற
புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கிப் படிப்பேன்.

பிரச்சினை என்னவென்றால் ஒரு எழுத்தாளரின் எந்தப் புத்தகத்தை முதலில்
படிக்கவேண்டும் என்று தெரியாமல் இருந்தேன். உதாரணமாக
ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் படித்து விட்டு ரப்பர்
படித்தால் ஜெயமோகன் மேல் வெறுப்பே வந்துவிடும். சரியான குரு இல்லாமைதான் காரணம். அதன் விளைவுதான் விளிம்பின் நுனியில்..

இதைப் படியுங்கள். இவரைப் படிப்பதாக இருந்தால் முதலில் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். அதன் பிறகு வேறு படியுங்கள் என்று சொல்வதெல்லாம். இதற்காக குருவெல்லாம் நானில்லை. நான் நிறைய பணத்தை விரயமாக்கி கற்றுக் கொண்ட பாடம் இது. மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வழிப்போக்கன் அவ்வளவே.

எழுத்தைப் போலவே வாசிப்பும். முதலில் சிரமமாக இருக்கும். பின் வாசிப்பு அழைத்துச் செல்லும் இடங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை..
என்னுடைய பதிவுகளுக்கு விமர்சணமோ பாராட்டோ குற்றமோ வந்தாலும் வராவிட்டாலும் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து விடவேண்டும் என்ற முடிவோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மேலும்.. ஆதரிக்க நீங்கள், பாரதி, ஆரென், ஜிராகவன் மற்றும் சிலர்
இருப்பது ஆறுதலான விசயம்தான் எனக்கு..
மனதை பாராட்டுக்கள் எனும் வட்டத்திற்குள் அடக்கி விட்டால் தான்
பிரச்சினையே.. அது இல்லாவிட்டால்..

இளசு
14-11-2005, 06:22 AM

ராம்,

பல குருக்கள் தங்களை வழிப்போக்கர்கள் என்றே வர்ணித்துக்கொண்டிருக்கிறார்கள்.. அந்தப் பக்குவம் உன்னிடம் பார்த்து... அதை இந்தப் பதிலில் படித்து -- மனம் ஒருவித மகிழ்ச்சி ஆயாசத்தில்!

அந்தப் பக்குவம் எனக்கும் வருமா??????

பாராட்டு என்னும் வட்டத்துக்குள் அடக்கிவிட்டால் பிரச்சினைதான்.

சத்திய வாக்கியம். ஆனால் சாதாரணமாய் எல்லாருக்கும் அதுதான் சாத்தியம்.

பாராட்டினால் மகிழ்வதும்,
மதிப்பவர்- பிடித்தவர் செய்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!

அப்படியே குறைகள் சொன்னால், குற்றம் கண்டால்
சோர்ந்து, சுணங்குவதுமாய்

கண்டுகொள்ளப்படாவிட்டால்.
அங்கீகாரத்துக்கு அலைவதுமாய்

நம் மனங்களோடு நித்தம் நாம் ஆடும் விளையாட்டு..

இதை விட்டு மீண்டுவிட்டால்?

நினைக்கவே ஆனந்தமாய் இருக்கு ராம்.. ஆனால் இயலுமா? கைகூடுமா????

பாரதி
15-11-2005, 12:10 AM
மீண்டும் புத்தகங்களைத் தேடும் ஒரு ஆர்வத்தை இத்தொடர் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. என் நன்றிகள் ராம்.