PDA

View Full Version : மனசுக்கு வயசில்லை...



Shanmuhi
09-11-2005, 08:23 AM
மனசுக்கு வயசில்லை...

தாத்தா ஆறுதலாக சாய்மனைக்கதிரையில் அமர்ந்து இருந்து இளைப்பாறிக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அவரது பேரனுக்கும் தாத்தாவுக்கும் இடம்பெற்ற உரையாடல் இது.

பேரன் :- உன்னிட்ட ஒரு கேள்வி கேட்கனும்

தாத்தா :- என்னடாப்பா கேட்கப்போறே

பேரன் :- என்னோட அப்பா உங்கட பிள்ளைதானே ?

தாத்தா :- இதிலே என்னடா சந்தேகம் உனக்கு..?

பேரன் :- அதுக்கில்ல ஒரு புத்திசாலி பிள்ளையாய் பெற்றிருக்கலாமே.. ?

தாத்தா :- உன் அப்பாவுக்கு புத்தி இல்லை என்று சொல்கிறாயா ?

பேரன் :- அப்பா போட்டுக் கொடுக்கின்ற கணக்கு எல்லாம் தப்பாயிருக்கிறதே.. நான் தான் தினமும் பிரம்படி வாங்கிக் கட்டிக்கொள்றன்.

தாத்தா :- வீட்டுக்கணக்குக்கு நீ ஏன் உன் அப்பாவிடம் போறாய். என்னிடம் வரவேண்டியதுதானே..

பேரன் :- போ தாத்தா உனக்குத்தான் வயதாகி விட்டதே

தாத்தா :- 90 வயசு ஒரு வயசா. 92 வயது தாத்தா எல்லாம் உலக சாதனை செய்யினம் உனக்குத் தெரியுமா..?

பேரன் :- என்ன சாதனை தாத்தா...?

தாத்தா :-அமெரிக்காவில 92 வயசுல ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பனாக இருக்கிறார். அவரோட மனைவிக்கு 38 வயதுதான்.

பேரன் :-அப்போ அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வயது வித்தியாசம் 92.. ஆ...

தாத்தா :-அந்த தாத்தாவின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் வந்து விட்டது.

பேரன் :- சீரியஸாக கேட்கிறேன் உனக்கு 90 வயது தானே ஆகிறது. இன்னொரு கலியாணம் பண்ணிக்கொண்டால் என்ன ?

தாத்தா :- :cry: :cry:

பேரன் :- ஏன் தாத்தா இப்படி சின்னபிள்ளை மாதிரி தேம்பி தேம்மி அழுறே யோசனை தப்பாக சொல்லிவிட்டேனா..?

தாத்தா :- உன் யோசனை நல்லதுதான். ஆனால் அதற்கு உன் பாட்டி அனுமதி கொடுக்க மாட்டாளே... அதை நினைக்கத்தான் எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது. மனசுக்கு வயசில்லை என்பதை என் பத்தினி அறிவாளா...? ? ?

Mathu
09-11-2005, 08:41 AM
தாத்தா உனக்கு துணிவு ஜாஸ்தி தான்..! :confused:

இபோ விடலை பசங்களே கல்யாணம் எண்டா காத தூரம் ஓடுரான்
இருந்தாலும் உனக்கு தெம்பு அதிகம்.


நல்ல உரையாடல் இப்படி கூட வஞ்சம் தீர்க்கலாமா?
தொடருங்கள் சண்முகி உங்கள் படைப்புக்களை, இங்கே
தவழ்ந்துகொண்டிருக்கும் மகளீர் அணியை தூக்கி நிறுத்தட்டும்.
:p :D :cool:

gragavan
09-11-2005, 10:41 AM
அட! இவரு தாத்தாவா தாதாவா? பலே கில்லாடியா இருக்காரே!

சுவேதா
09-11-2005, 02:43 PM
:)நல்ல தாத்தா நல்ல பேரன் சூப்பர் உரையாடல் அக்கா தொடருங்கள்!

இளசு
09-11-2005, 10:22 PM
ஹாஹ்ஹா

ஆண்ட்டனி குயின் என்னும் ஆங்கிலப்பட நடிகரை நினைவுபடுத்தும் உரையாடல்.


நம்மூர் பாட்டிகள் உஷார். எனவே கவலையில்லை...


பல்சுவைப்பதிவுகள் தொடரட்டும் சண்முகி அவர்களே..

பரஞ்சோதி
10-11-2005, 03:27 AM
இத்தனை நாள் மன்றத்தில் தாத்தா தலை, பேத்தி சுவேதா உரையாடல் தான் கேட்டிருந்தோம். சண்முகி அக்கா, அருமையாக இருக்குது.

mania
10-11-2005, 03:48 AM
இத்தனை நாள் மன்றத்தில் தாத்தா தலை, பேத்தி சுவேதா உரையாடல் தான் கேட்டிருந்தோம். சண்முகி அக்கா, அருமையாக இருக்குது.

:mad: :mad: அநாவசியமா என் தலையை (மண்டையை) உருட்டற....:rolleyes: :rolleyes: :rolleyes: ????? சரி சரி மும்முரமா வேலையிலே இறங்கு......:rolleyes: :D :D .ஹி....ஹி....ஹி...:rolleyes:
ஆசையுடன்
மணியா...

மன்மதன்
13-11-2005, 09:05 AM
:mad: :mad: அநாவசியமா என் தலையை (மண்டையை) உருட்டற....:rolleyes: :rolleyes: :rolleyes: ????? சரி சரி மும்முரமா வேலையிலே இறங்கு......:rolleyes: :D :D .ஹி....ஹி....ஹி...:rolleyes:
ஆசையுடன்
மணியா...

:D எந்த வேலையில தலை :rolleyes: :rolleyes:

mania
14-11-2005, 02:43 AM
:D எந்த வேலையில தலை :rolleyes: :rolleyes:

ஹி.....ஹி....ஹி.... அதான்....:rolleyes: :rolleyes: :D (எனக்கு வெக்கமா இருக்கு ):rolleyes:
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
15-11-2005, 04:07 AM
மணியாவை ஏன்பா எல்லாரும் உருட்டுறீங்க.....

அவருக்கும் இன்னும் வயது இருக்கு......
-----
அருமை சண்முகி... இன்னும் கொடுங்கள்

mania
15-11-2005, 04:09 AM
அறிஞர்..........வாழ்க.......:D :D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
15-11-2005, 04:23 AM
அறிஞர்..........வாழ்க.......:D :D :D
அன்புடன்
மணியா...:D என்ன கோஷம் பலமா இருக்கு.. உள்ளதை சொன்னேங்க....

mania
15-11-2005, 04:24 AM
என்ன கோஷம் பலமா இருக்கு.. உள்ளதை சொன்னேங்க....

அறிஞர் வாழ்க வாழ்க......:D :D :D
அன்புடன்
மணியா..:D :D