PDA

View Full Version : ஜிமெயில் குறிப்புகள்.



பாரதி
07-11-2005, 08:37 PM
ஜிமெயில் குறிப்புகள்

1. நீங்கள் வீட்டைத்தவிர்த்து, வெளியிடங்களில் சென்று, மோஸில்லா அல்லது நெட்ஸ்கேப் உலாவியின் மூலம் ஜிமெயிலை பார்வையிட்டால், அந்தப்பக்கத்திலிருந்து வெளிவரும் போது முறையாக "Sign out" செய்துவிட்டு வாருங்கள். வெறுமனே பக்கத்தை மூடினால், அடுத்து வரும் யாரேனும் ஜிமெயில் முகவரியைத் தந்தால் அது நேராக உங்கள் மின்னஞ்சல் பகுதிக்குத்தான் கொண்டு செல்லும். அவரால் உங்களது மடல்களைப் படிக்க முடியும். எனவே கவனம் தேவை.

2. பாதுகாப்பாக ஜிமெயிலைக் காண
https://gmail.google.com முகவரியை உபயோகிக்கவும்.

3.ஒரு மடலைப்பார்த்த பின்னர் மீண்டும் மின்னஞ்சல்பெட்டிக்கு [Inbox] திரும்ப இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருக்கும் "Back" என்ற பொத்தானை அழுத்தத் தேவையில்லை. மாறாக முகப்பில் பெரியஎழுத்துக்களில் உள்ள "GMail" என்பதையோ, "Inbox" என்பதையோ, மடல்களின் மேலே உள்ள "Refresh" என்கிற பொத்தானையோ அழுத்தினால் விரைவாக மின்னஞ்சல் பெட்டியின் முகப்பு பக்கத்திற்கு செல்ல முடியும்.

4. அதிகமான மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட மின்னஞ்சலை மட்டும் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? உதாரணமாக கீழே உள்ளது போல --- [ ] இது போன்ற சதுர அடைப்புக்குறிகளைத் தவிர்த்து--- தேடவும்.

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR to:Ragavan)]
இதில் "to:" என்பதற்கு பதிலாக "cc:" என்பதையோ "bcc:" என்பதையோ உபயோகிக்கவும் முடியும். மேலும் "-" கழித்தல் குறியை உபயோகிப்பதன் மூலம் தேவையில்லா மின்னஞ்சல்களை தேடுவதிலிருந்து தவிர்க்க இயலும். உதாரணமாக

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR (to:Ragavan -cc:Priyan -bcc:Paransothi))] என்று தந்தால் பிரியனிடமிருந்தும், பரஞ்சோதியிடமிருந்தும் "Rain in Chennai" என்று தலைப்பிட்டு வந்த மடல்களைத் தவிர்த்து நண்பன் மற்றும் இராகவனின் மடல்கள் மட்டுமே தேடுதலின் தீர்வாக கிடைக்கும்.

5. ஜிமெயில் மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு 'To','Cc','Bcc' பகுதிகளில் [ஜிமெயில் மின்னஞ்சல் வைத்திருக்கும்] பெறுபவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது - @gmail.com என்று குறிப்பிடத் தேவையில்லை. உதாரணமாக
manmadan@gmail.com என்பதற்கு பதிலாக manmadan என்று குறிப்பிட்டாலே போதுமானது. (ஜிமெயிலில் பெறுபவரின் முதலெழுத்தை தட்டச்சும் போதே, கீழே மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தோன்றுகின்றன என்பதையும் கவனிக்கவும்.)

6.உங்களுக்குத்தெரியுமா..? ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி
முதல்பெயர்.கடைசிப்பெயர்@ஜிமெயில்.காம் என்று சிலருக்கு இருக்கும். இதில் இருக்கும் நிறுத்தற்புள்ளியை நாம் இடாவிட்டாலும் ஜிமெயில் சரியான முகவரிக்குத்தான் செல்லும்.!உதாரணமாக

subra.manian@gmail.com என்ற முகவரியை subramanian@gmail.com என்று தட்டச்சினாலும் சரியான முகவரிக்குத்தான் செல்லும்!

7.ஜிமெயிலில் "or" என்பதும் "OR" என்பதும் ஒன்றல்ல. தேடலுக்கு "OR" என்பது மட்டுமே (மேற்கோள் குறிகள் இல்லாமல்) உதவும் என்பதைக் கவனிக்கவும்.

8. ஜிமெயிலில் ஒரு சொல்லைத் தேடும் போது "adi" என்று தேடுவதும் "Adi" என்று தேடுவதும் ஒன்றே. ஆனால் அவ்விதம் தேடினால் ஜிமெயில் "Aditya" என்பதை விடையாகத் தராது! "aditya" அல்லது "Aditya" என்று தேடினால் மட்டுமே அதற்கான சரியான விடை வரும்.

.

இளசு
08-11-2005, 05:55 AM
பயனுள்ள குறிப்புகள் பாரதி.
( என் பயனாளர் பெயரில் புள்ளியை விட்டுவிட்டால் உள்ளே விடமாட்டேன் என்கிறதே)

பரஞ்சோதி
08-11-2005, 05:58 AM
அருமையான தகவல்கள். என்னுடைய கணினியில் சேமித்துக் கொண்டேன். பிறருக்கும் பிரதி எடுத்து கொடுக்க இருக்கிறேன். பாராட்டுகள் அண்ணா.

Shanmuhi
08-11-2005, 06:11 AM
அனைத்தும் பயன்படக்கூடிய அருமையான தகவல்கள்.

aren
08-11-2005, 06:12 AM
அருமையான தகவல்கள். என்னுடைய கணினியில் சேமித்துக் கொண்டேன். பிறருக்கும் பிரதி எடுத்து கொடுக்க இருக்கிறேன். பாராட்டுகள் அண்ணா.

உங்களுக்கு இலவசம். ஆனால் மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது பாரதி அவர்களுக்கு ராய்ல்டி கட்டவேண்டும்.

aren
08-11-2005, 07:33 AM
பயனுள்ள குறிப்புகள் பாரதி.
( என் பயனாளர் பெயரில் புள்ளியை விட்டுவிட்டால் உள்ளே விடமாட்டேன் என்கிறதே)

பாரதி அவர்கள் சொன்னது, புள்ளி விடுபட்டுவிட்டாலும் அந்த செய்தி சேரவேண்டியவருக்குப்போய் சென்றுவிடும். ஆனால் பயனாளர் பெயரில் புள்ளியிருந்தால் அதை சேர்க்காவிட்டால் உள்ளே நுழைவது கடினம்தான்.

சுவேதா
08-11-2005, 03:34 PM
மிகவும் அருமையான தகவல்கள் அண்ணா
நன்றிகள்!!!

பாரதி
08-11-2005, 06:23 PM
நன்றி அண்ணா, பரஞ்சோதி,ஆரென்,ஷண்முகி,சுவேதா.

அண்ணா.. ஆரென் அவர்கள் கூறியது சரி.

அன்பு ஆரென் - இது எனக்கு சொந்தமானவை அல்ல. ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் படித்ததை, தெரிந்த அளவு தமிழாக்கி தந்திருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இன்னும் சில குறிப்புகள் இருக்கின்றன. இயலும் போது தர முயற்சிக்கிறேன்.

இளசு
08-11-2005, 06:51 PM
தொடர்க பாரதி..

ஆரென் சொன்ன பிறகு இப்போ நல்லா புரியுது.
எதையுமே ரெண்டு தடவைச் சொன்னாதான் எனக்கு புரியும்.. எனக்கு...

aren
09-11-2005, 12:55 AM
நன்றி அண்ணா, பரஞ்சோதி,ஆரென்,ஷண்முகி,சுவேதா.

அண்ணா.. ஆரென் அவர்கள் கூறியது சரி.

அன்பு ஆரென் - இது எனக்கு சொந்தமானவை அல்ல. ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் படித்ததை, தெரிந்த அளவு தமிழாக்கி தந்திருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இன்னும் சில குறிப்புகள் இருக்கின்றன. இயலும் போது தர முயற்சிக்கிறேன்.

பாரதி அவர்களே,

நான் ராயல்டி என்று பரஞ்சோதி அவர்களிடம் சொன்னது அவரை வம்புக்கு இழுக்கவே.

நன்றி வணக்கம்
ஆரென்

siva
09-11-2005, 05:03 PM
gmail உபயோகிக்கும் அனைவருக்கும் மிகவும் தேவையான குறிப்புகள்.

பாரதி
10-11-2005, 04:44 PM
9. ஒவ்வொருவரும் பல மின்னஞ்சல்களை - யாஹூ, ஹாட்மெயில் போன்று - உபயோகித்து வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் பல நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்!

உதாரணமாக யாஹூ மின்னஞ்சலில் உள்ள முகவரிகளை மாற்ற வேண்டுமெனில், இணையத்தில் தொடர்பு கொண்ட பின், உங்கள் யாஹ¤ மின்னஞ்சலுக்கு செல்லவும். இடதுபுறம் உள்ள "Address" பகுதியில் உள்ள உதவியைப் பயன்படுத்தி, மின்மடல் முகவரிகள் அடங்கிய கோப்பை உங்கள் கணினிக்கு பதிவிறக்கிக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு Yahoo.csv என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இப்போது உங்களின் ஜிமெயிலுக்கு பயனாளர் பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்து முகப்பு பக்கத்திற்கு வரவும். பக்கத்தின் இடது பக்கத்தில் இருக்கும் "Contacts" என்பதை அழுத்தினால் "Contacts List" என்ற புதிய பக்கம் திறக்கும். அதில் மேலே வலது ஓரத்தில் இருக்கும் "Imports Contacts" என்பதை தேர்வு செய்யவும். வரும் திரையில் "Browse" பொத்தானை தேர்வு செய்து, உங்கள் கணினியில் எந்த இடத்தில் யாஹ¤ மின்னஞ்சல் முகவரிகள் அடங்கிய கோப்பான Yahoo.csv இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு பின்னர் "Import Contacts" பொத்தானை அழுத்தவும். உங்கள் கோப்பு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் வரும் திரையில், புதிதாக சேர்க்கப்பட்ட முகவரிகள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

(ஜிமெயிலில் இருந்து யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களுடைய முகவரிகள் தானாகவே ஜிமெயில் முகவரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும் என்பதை அறியவும்.)

10. உங்களுக்கு புதிதாக ஜிமெயில் வந்திருக்கிறதா என்பதை அறிய ஒவ்வொரு முறையும் ஜிமெயில் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக GMail Notifier என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து, நிறுவிக்கொண்டால் போதும். இணையத்தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு முறையும், புதிய ஜிமெயில் மின்னஞ்சல்கள் வந்திருந்தால் அதைப் பற்றிய விபரங்களை தானாகவே காண்பிக்கும். இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://snipurl.com/gefx என்ற சுட்டியைத் தட்டுங்கள்.

11. உங்களது ஜிமெயில் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை வேறொரு மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்ப வழி இருக்கிறது! ஜிமெயிலில் உள்ள "Settings" என்பதை அழுத்துங்கள். வரும் திரையில் "Forwarding" என்பதை தேர்வு செய்து, பின்னர் "Enable" (mail forwarding) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கே இருக்கும் பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படவேண்டுமோ, அந்த முகவரியைத் தரவும். அதற்கு கீழ் இருக்கும் மூன்று தேர்வுகளில்
1. Keep GMail's copy in Inbox
2. Archieve GMail's copy
3. Trash GMail's copy
என்பனவற்றில் உங்கள் தேவைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மாற்றங்களை சேமித்துவிட்டு வெளியில் வரவும். அதற்கு பின்னர் உங்கள் ஜிமெயிலுக்கு வரும் மின்மடல்கள் அனைத்தும் நீங்கள் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்பப்படும்.

12. ஒரு இணையத்தளத்தைப் பார்வையிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் - அந்த தளத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்ப விரும்பி, "email link"-ஐ தட்டினால் அது வழக்கமாக Outlook Express-ஐ திறக்கும். அதற்கு பதிலாக ஜிமெயிலிருந்து மின்னஞ்சலை அனுப்ப விரும்புகிறீர்கள் என்றால், G-Mailto என்ற இலவச மென்பொருளை, http://snipurl.com/geg5 என்ற சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் நேரடியாக அனுப்ப முடியும். அப்போது ஒரு வேளை நீங்கள் ஜிமெயிலில் இல்லாமல் இருந்தால் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு செல்வதற்கான பக்கத்தை திறக்கும்.

13. ஜிமெயிலில் உள்ள Label - Filter போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை தனித்தனியாக - உதாரணமாக நண்பர்களின் மின்னஞ்சல்களைத் தனியாக, குடும்பத்தினர் மின்னஞ்சல்களைத் தனியாக, அலுவல் அஞ்சல்களைத் தனியாக - இப்படி எவ்விதம் வேண்டுமென்றாலும் தனித்தனியான பகுதிகளுக்கு செல்லும்படியான வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். எப்போது வேண்டுமென்றாலும் அந்த உபயோகங்களை "Edit" செய்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

இளசு
13-11-2005, 11:03 PM
மிக பயனுள்ள குறிப்புகள் பாரதி.

மற்ற முகவரிகளுக்கும் ஜிமெயிலுக்குமுள்ள இணைப்பு வசதிகள் பயனுள்ளவை.

நன்றி.

சேரன்கயல்
14-11-2005, 05:14 AM
அட்டகாசம் பாரதி....
ஜிமெயிலில் இவ்வளவு வசதிகள் இருப்பதை அறிய மகிழ்ச்சி....
நன்றிகள் பல...
(முதல்ல உட்கார்ந்து உங்களோட ஆலோசனைகளை இங்கே அரங்கேத்திடறேன்...)

rajasi13
14-11-2005, 09:10 AM
இப்படி பயனுள்ள விஷயங்களை எழுதணும்னு நமக்கு தொணாம போச்சே

pradeepkt
14-11-2005, 09:24 AM
நமக்கு வேற என்னதான் உருப்படியாத் தோணியிருக்கு ??? :D

mania
14-11-2005, 09:32 AM
நமக்கு வேற என்னதான் உருப்படியாத் தோணியிருக்கு ??? :D

தோணி நல்லாத்தானே உருப்பட்டிருக்காரு.....????:rolleyes: :confused:
சந்தேகத்துடன்
சாது மணியா...:D :D

மன்மதன்
14-11-2005, 10:31 AM
அவரு அந்தோணியை சொல்லலை தலை............. :D :D ......... குறிப்புகளுக்கு நன்றி பாரதி..........

rajasi13
15-11-2005, 07:04 AM
நமக்கு வேற என்னதான் உருப்படியாத் தோணியிருக்கு ??? :Dஅதானே!! நமக்கு தோணரதே இல்ல,இதுல எங்க உருப்படியா தோண, (ஆமா, நமக்குன்னது நாம ரெண்டு பேரும்தான)

pradeepkt
15-11-2005, 08:00 AM
நீங்க தனியா இருக்கக் கூடாதேன்னு மன்மதனைத்தான் ஏற்கனவே சேர்த்து விட்டுருக்கோமே...

rajasi13
15-11-2005, 08:37 AM
இருங்க இருங்க மன்மதன்கிட்டே சொல்லி அம்பு விட சொல்றேன்.

சுபன்
29-01-2006, 12:53 AM
என்னால் ஜிமெயில் கணக்கு திறக்க முடியாமல் இருக்கிறதே

மயூ
02-03-2006, 10:39 AM
பயனுள்ள தகவல் நன்றி

arul5318
22-07-2006, 07:23 AM
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

இனியவன்
22-07-2006, 08:02 AM
பாரதிக்குப் பாராட்டுக்கள்.
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு,

இணைய நண்பன்
24-07-2006, 05:22 AM
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

arul5318
30-08-2006, 05:45 PM
நண்பர்களே இதில் யாகூவில் போல்டர் போட்டு மைல்களை தரம்பிரித்து வைப்பதற்கு வசதிகள் உண்டு இதில் இருக்கின்றனவா தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்.

crisho
12-09-2006, 07:16 AM
நண்பர்களே ஜிமெயில் கணக்கு இருந்தால் "பொப் 3" ஊடாக "Outlook Express" க்கு (உங்கள் கணனிக்கு) உங்கள் மின்னஞ்சல்களை இறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் "Outlook Express" இல் உங்கள் விருப்பம் போல் போல்டர் போட்டு தரம்பிரித்து வைக்கலாம்.

அறிஞர்
12-09-2006, 10:57 PM
நண்பர்களே ஜிமெயில் கணக்கு இருந்தால் "பொப் 3" ஊடாக "Outlook Express" க்கு (உங்கள் கணனிக்கு) உங்கள் மின்னஞ்சல்களை இறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் "Outlook Express" இல் உங்கள் விருப்பம் போல் போல்டர் போட்டு தரம்பிரித்து வைக்கலாம். ஜிமெயிலே இந்த வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் நண்பர்.

crisho
13-09-2006, 04:11 AM
ஜிமெயிலே இந்த வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் நண்பர்.

நண்பா நான் இவ் வசதிகளால் கடந்த இரண்டு வருட காலமாக பயனடைந்து வருகிறேன்!

யான் பெற்ற பயன் நீங்கள் அனைவரும் பெற்றுய்ய வாழ்த்துகிறேன்!

உதவிக்கு கீழ் கண்ட தளம் செல்க.....

http://mail.google.com/support/bin/answer.py?answer=13276&topic=1555

அறிஞர்
14-09-2006, 02:53 PM
நண்பா நான் இவ் வசதிகளால் கடந்த இரண்டு வருட காலமாக பயனடைந்து வருகிறேன்!

யான் பெற்ற பயன் நீங்கள் அனைவரும் பெற்றுய்ய வாழ்த்துகிறேன்!

உதவிக்கு கீழ் கண்ட தளம் செல்க.....

http://mail.google.com/support/bin/answer.py?answer=13276&topic=1555 அன்பரே இது போன்று அவுட் லுக் எக்ஸ்பிரஸை... நான் என மற்ற அக்கவுண்ட்டுக்கு உபயோகிக்கிறேன்.....

Vanambadi
30-01-2008, 07:52 AM
மிக பயனுள்ள குறிப்புகளைத் தந்த பாரதி அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றியும்!

sarcharan
30-01-2008, 11:33 AM
இந்த autocomplete முறை ajax கொண்டு செய்யப்பட்டது. 2005ம் ஆண்டு கூகிள் வலைதளம் கொண்டு கூகிள் codeஐ பதிவிறக்கம் செய்து கம்பெனியில் பெயர் பெற்றேன்.

கூகிளுக்கு ஒரு 3rd பார்ட்டி கூட உண்டாம். அவர்களிட்மிருந்தும் codeஐ சுட்டேன் ஹி ஹி

நன்றி கூகிள்.

பூமகள்
30-01-2008, 11:43 AM
தாமதமாக வந்தாலும் ஜிமெயில் பற்றி பல முத்தான தகவல்கள் கிடைக்கப் பெற்றேன்.

நன்றிகள் பாரதி அண்ணா. :)

aren
30-01-2008, 11:52 AM
தாமதமாக வந்தாலும் ஜிமெயில் பற்றி பல முத்தான தகவல்கள் கிடைக்கப் பெற்றேன்.

நன்றிகள் பாரதி அண்ணா. :)


தெரிந்த விஷயங்களை உபயோகித்தால் நல்லது.

பூமகள்
30-01-2008, 12:38 PM
தெரிந்த விஷயங்களை உபயோகித்தால் நல்லது.
கண்டிப்பாக தேவைப்படும் இடத்தில் உபயோகிப்பேன் ஆரென் அண்ணா. :)

aren
30-01-2008, 12:43 PM
கண்டிப்பாக தேவைப்படும் இடத்தில் உபயோகிப்பேன் ஆரென் அண்ணா. :)

எப்போ

sarcharan
30-01-2008, 01:13 PM
எப்போ
??
விட்டுட்டீங்களே...
கஷ்டமான கேள்விதான் :confused:

பூமகள்
30-01-2008, 03:14 PM
எப்போ
அப்பப்போ அண்ணா!! :lachen001::lachen001:

பூமகள்
30-01-2008, 03:15 PM
??
விட்டுட்டீங்களே...
கஷ்டமான கேள்விதான் :confused:
ஏங்க சரவணன் அண்ணா,
நல்லாத்தானே இருந்தீங்க....!! :confused::confused:
இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறீங்களே...!! :icon_ush::icon_ush:

sarcharan
31-01-2008, 09:52 AM
ஏங்க சரவணன் அண்ணா,
நல்லாத்தானே இருந்தீங்க....!! :confused::confused:
இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறீங்களே...!! :icon_ush::icon_ush:

ஹிஹி நான் செல்வனுக்கு ஜூனியர்...

பூமகள்
31-01-2008, 10:09 AM
ஹிஹி நான் செல்வனுக்கு ஜூனியர்...
நீங்களுமா???????????????:icon_shok::icon_shok:

:icon_shok::icon_wacko::ohmy::shutup:

tamilambu
16-02-2008, 02:31 AM
அறிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள விடயங்கள்.
எனக்காக எழுதியதற்கு நன்றிகள்.

அனுராகவன்
22-02-2008, 01:11 AM
நன்றி பாரதி..
மிகவும் பயனுள்ள குறிப்புகள்..
என் வாழ்த்துக்கள்

நேசம்
22-02-2008, 04:32 AM
நல்ல தகவல்.பகிர்தலுக்கு நன்றி பாரதிண்ணா

அனுராகவன்
22-02-2008, 11:36 PM
நன்றி பாரதி..
மிகவும் நல்ல செய்திகள்..
தொடர்ந்து தர வேண்டுகிறேன்.

பாரதி
22-03-2008, 07:48 AM
கருத்துக்கள் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

sunson
10-07-2008, 02:38 PM
ஜி-மெயிலுக்கு இப்போது தமிழ் அன்பர்கள் அதிகளவில் வாடிக்கையாக சேருவார்கள், உங்கள் உபயோகமான் தகவலால். நன்றி!

sakthim
24-08-2008, 03:42 AM
மிக மிக பயனுள்ள தகவல்கள்,நன்றி பாரதி.

poornima
24-08-2008, 08:41 AM
நண்பர்களே இதில் யாகூவில் போல்டர் போட்டு மைல்களை தரம்பிரித்து வைப்பதற்கு வசதிகள் உண்டு இதில் இருக்கின்றனவா தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்.

அப்படியே முழுவதமாக இல்லை எனினும் வில்லைகள் (Label) பயன்படுத்தி தனித்தனியே வகைப்படுத்தலாம்.

யாஹு ஃபோல்டர் போலவே இனம்பிரித்தும் காணலாம். வில்லை மற்றும் வடிப்பான்கள் (Label & Filter ) பயன்படுத்தி செய்து பாருங்கள்

anna
10-11-2008, 12:50 PM
நல்ல அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி

இளந்தமிழ்ச்செல்வன்
10-11-2008, 04:40 PM
வழக்கம் போல நண்பர் பாரதியிடமிருந்து பயனுள்ள தகவல்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

பாரதி
13-01-2010, 02:54 AM
இப்போது ஜிமெயில் மின்னஞ்சலை எப்படி மேம்பட்ட வகையில் பயன்படுத்துவது என்பதைக்குறித்து பல எளிய வழிகாட்டும் குறிப்புகள் ஜிமெயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அவை என்ன என்பதைக்காண, பயன்படுத்த தட்டச்ச வேண்டிய முகவரி:
http://www.google.com/mail/help/tips.html

ஜிமெயிலில் உள்ள வசதிகள் குறித்து விளக்கமாக அறிய தட்டச்ச வேண்டிய முகவரி:
http://www.g04.com/misc/GmailTipsComplete.html

சரண்யா
13-01-2010, 05:08 AM
நன்றிகள் பாரதி அவர்களே...
பயனுள்ள தகவல்..

aravindhraju
12-04-2010, 01:33 PM
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிகள்