PDA

View Full Version : தமிழ் பழமொழிகள்....பென்ஸ்
04-11-2005, 09:08 AM
இந்த பகுதியில் நமக்கு தெரிந்த தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா????


1, கரும்பு தின்ன கூலியா??
2, சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்...
3, சும்மா குடுத்த மாட்டுக்கு பல்லை புடிச்சு பார்த்தானாம்...
4, குடிகாரன் பேச்சு விடிங்சா போச்சு..
5, நிறை குடம் தளும்பாது
6, தனி மரம் காடாகாது..
7, முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்...
8, யானைக்கும் அடி சறுக்கும்...
9, காக்கைகும் தன் குஞ்சு பொன் குஞ்சு..
10, தாய் பேச்சு கேட்காத வவ்வால் தலை கீழாதோங்கும்....
11, ஆற்றில் போட்டலும் அளந்து போடனும்..
12, ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோட போகமாட்டான்..
13, புலி பசித்தாலும் புல்லை தின்னாது...
14, தவளை தன் வாயால் கெடும்....
15, பந்திக்கு முந்து படைக்கு பிந்து..

பென்ஸ்
04-11-2005, 10:21 AM
16. பனை படுத்து கிடந்தா பன்றி குதித்து விளையாடுமாம்...:D :D

17. பாம்பின் கால் பாம்பறியும்....

பாரதி
05-11-2005, 06:42 PM
இந்த பகுதியில் நமக்கு தெரிந்த தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா????

நிறை குடம் தழும்பாது..
............
ஆதாரம் இல்லாமல் செட்டி ஆற்றோட போகமாட்டான்..
........


நல்ல முயற்சி நண்பரே. பாராட்டுக்கள்.
ஆங்காங்கே தென்படும் சில பிழைகளையும் நீக்கிவிட்டால் இன்னும் சிறப்பானதாகி விடும்.

.............. தளும்பாது.

ஆதாயம் இல்லாமல் .....

என்பதுதான் சரியான பழமொழியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பரஞ்சோதி
06-11-2005, 05:53 AM
பெஞ்சமின் பழமொழிகள் தொடர்ந்து கொடுங்க. பாரதி அண்ணா சொன்ன எழுத்துப்பிழைகள் சரி செய்யுங்க.

தவளை வாயால் கெடும்.

பிரியன்
06-11-2005, 06:29 AM
தவளை தன் வாயால் கெடும் என்பதுதானே பழமொழி பரஞ்சோதி

பரஞ்சோதி
06-11-2005, 06:43 AM
பிரியன் என்னை தவளையாக்க நினைக்கிறார்.

நான் சொன்னது மேலே பெஞ்சமின் கேடும் என்று தட்டச்சு செய்திருக்கிறார், அதை மாற்ற சொன்னேன்.

பென்ஸ்
07-11-2005, 03:33 AM
பிழைகளை கொஞ்சம் சரி செய்து இருக்கிறேன்... இன்னும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
18, இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
19, இனம் இனத்தையே சாரும்.
20, அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்
21, மச்சான் இருந்தால் மலை ஏறியாவது பிழைக்கலாம்...
22, எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
23, கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
24, எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
25, எரிகிற அடுப்பில் எண்ணையை உற்றியது போல்....

இளசு
07-11-2005, 07:52 AM
ஆஹா, பெஞ்சமின் கெளம்பிட்டாருய்யா... கெளம்பிட்டாரு-
என் பங்குக்கு --
(பசி நேரத்தில் - பத்தும் நினைவில் வந்திருக்குமோ????)

ஆறிய கஞ்சி பழங்கஞ்சி
சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்?
குடல் கூழுக்கு அழுவுதாம்; கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
கருப்பே அழகு; காந்தலே ருசி.
மரத்தில் இருக்கும் பலாக்காயை விட , கையில் இருக்கும் கலாக்காயே மேல்!
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்.
அமாவசைச் சாப்பாடு அன்றாடம் கெடைக்குமா?
ஊருல கல்யாணம், மாருல சந்தனம்.
அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
நோகாம நோன்பிருக்க முடியுமா?
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு.
பருப்பில்லாமல் கல்யாணமா?
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவன்.
கொட்டாங்குச்சியில் சோறாக்கி குடும்பத்துக்கே போட்டுடுவா..

பரஞ்சோதி
07-11-2005, 08:04 AM
இளசு அண்ணா பழமொழிகள் கொடுத்து பசியை தூண்டி விட்டீங்க. நல்ல வேளை நோம்பு நேரம் முடிந்து விட்டது.

பென்ஸ்
07-11-2005, 09:19 AM
குடல் கூழுக்கு அழுவுதாம்; கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
கோவனத்தை காக்கா கொண்டு போவுதேன்னு இருக்கிரப்போ, பிள்ளை சந்திரகாளி பட்டுக்கு அழுதாளாம்...

மரத்தில் இருக்கும் பலாக்காயை விட , கையில் இருக்கும் கலாக்காயே மேல்!
கையில வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்க்கு அலைந்தானாம் ஒருத்தன்

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்.
ஆடு அறுக்குறதுக்கு முன்னால ---- அறுக்க நிக்க கூடாது..:D :D :D

ஊருல கல்யாணம், மாருல சந்தனம்.
பிறியா(free) கிடச்சா பினாயிலையும் (phenoil)குடிப்போமில்லா...

gragavan
07-11-2005, 09:38 AM
ஐயகோ........இங்கே பழமொழிகள் பழுத்துக் கிடக்கின்றன. நன்று. நன்று.

அப்புறம் பெஞ்சமின். அந்த பினாயில் மொழி புதுமொழியல்லே!

பென்ஸ்
07-11-2005, 09:41 AM
அதேதான் ராகவன்... அப்பப்ப "சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டனும்" இல்லையா???

gragavan
07-11-2005, 10:11 AM
அதேதான் ராகவன்... அப்பப்ப "சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டனும்" இல்லையா???ஆகா சொன்ன மாதிரியே செய்யுறீங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!

பரஞ்சோதி
07-11-2005, 11:12 AM
பினாயில் - செந்தில் கவுண்டமொழியாச்சே.

கலக்குங்க மக்கா, விரைவில் தான் கோதாவில் குதிக்கிறேன்.

gragavan
07-11-2005, 12:02 PM
பினாயில் - செந்தில் கவுண்டமொழியாச்சே.

கலக்குங்க மக்கா, விரைவில் தான் கோதாவில் குதிக்கிறேன்.தன்னைச் சோதா என்றும் சாதா என்றும் மற்றவர்கள் நினைக்கும் முன்பே கோதாவில் குதிக்கும் பரஞ்சோதியை வருக வருக என்று வரவேற்கிறேன். :D

pradeepkt
07-11-2005, 04:04 PM
சூப்பர்...
கலக்குறீங்க மக்கா...

என் பங்குக்கு எம் ஆர் ராதா பழமொழி ஒண்ணு

ராவுத்தரே கொக்கா பறக்குறாராம், குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்.

pgk53
08-11-2005, 01:45 AM
சூப்பர்...
கலக்குறீங்க மக்கா...

என் பங்குக்கு எம் ஆர் ராதா பழமொழி ஒண்ணு

ராவுத்தரே கொக்கா பறக்குறாராம், குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்.

நண்பரே இதே பொருளில் இன்னும் ஒரு பழமொழியும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

சாமியே சைக்கிளில் போகுதாம்.
பூசாரிக்கு புல்லட் வேண்டுமாம்.

மன்மதன்
13-11-2005, 10:15 AM
ஆகா..ஆகா..புதுசு புதுசா கொட்டுறீங்களேப்பூ புதுமொழியை.......
பம்மல் கே.சம்பந்தம்ல கமல் சொல்றாப்ல இருக்கு.......கலக்குங்க................

இளசு
14-11-2005, 12:05 AM
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை
இரும்பு பிடிச்ச கையும், சிறங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காது.

மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்
வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கிட்டாப் போல
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
வெற ( விதை) ஒண்ணு வெதச்சா சொர (சுரை) ஒண்ணா மொளைக்கும்?

mania
14-11-2005, 03:46 AM
என் பங்குக்கு ஒன்னு
ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகுமா....?
அன்புடன்
மணியா

அறிஞர்
15-11-2005, 05:02 AM
கலங்குறீங்க அன்பர்களே...

இதை படிக்கும்போது
பழைய நினைவுகள் எல்லாம் வருது....

mania
15-11-2005, 05:06 AM
கலங்குறீங்க அன்பர்களே...

இதை படிக்கும்போது
பழைய நினைவுகள் எல்லாம் வருது....

இந்த சபையிலே சொல்லக்கூடிய மாதிரி நினைவுகள் என்றால் :rolleyes: :rolleyes: சொல்லலாமே.....???:D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
15-11-2005, 05:08 AM
இந்த சபையிலே சொல்லக்கூடிய மாதிரி நினைவுகள் என்றால் :rolleyes: :rolleyes: சொல்லலாமே.....???:D :D
அன்புடன்
மணியா...:D ஏதாவது சொன்னா... ஒரே பிடியா பிடிச்சுடுவீங்களே... காலம் கனியும் போது அவசியம் சொல்லுறேன்

mania
15-11-2005, 05:11 AM
ஏதாவது சொன்னா... ஒரே பிடியா பிடிச்சுடுவீங்களே... காலம் கனியும் போது அவசியம் சொல்லுறேன்

காலம் எப்போது கனியும்.....???? :rolleyes: :rolleyes:
தானா கனியாத கனியை தடி கொண்டு பழுக்க வைக்கலாம்னு ஒரு பழமொழியே இருக்கே...????:rolleyes: :D :D
ஆவலுடன்
மணியா..:D

பென்ஸ்
15-11-2005, 02:43 PM
"இலவு காத்த கிளியாக.." காக்க வைத்து விடாதேயும்...