PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. முன்னுரை



rambal
03-11-2005, 05:37 PM
எழுதுதல் ஒரு வகை சுகம் எனில் வாசித்தல் மற்றொரு வகை சுகம். எவரோ நமக்காகப் பயணித்து எங்கெங்கோ அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் ஏதேனும் ஒரு விளிம்பின் நுனியில் தொக்கி நின்று
படைப்புகளைப் படைக்கிறார். தான் தொட்டு விட்ட விளிம்புகளை நோக்கி வாசகனை மேலிழுத்துக் கொண்டு சாசுவதமாய் நகர்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றிய பதிப்புத்தான் விளிம்பின் நுனியில். படைப்புகள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் அறிமுக விளக்கத்தோடு வரும் பதிப்பு இது. மன்றத்தில் இவர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கலாம். நான் அறியாத தகவல்கள்
உங்களுக்குத் தெரிந்து இருக்குமானால் (படைப்பு + படைப்பாளி) தெரிவிக்கவும். அது அந்தப் படைப்பாளியின்புதிய படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தியதாக இருக்கும்.

வாசித்தல் என்பது திக்கு தெரியாத வனம். அதன் எந்தப் பகுதியில் நான் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு மாயச்சுழலுக்குள் சிக்கிய அவஸ்தையில் இருக்கிறேன். ஒவ்வொருவருடைய படைப்பையும் படித்து முடித்து விட்டு வெகு நாட்கள் அவைகளைப் பற்றி அசை போட்டுக் கொண்டே திரிந்திருக்கிறேன். சுழல் அதிகரிக்கிறதே தவிர சுழலிலிருந்து விடுபட வழி தெரியவில்லை. படிப்பதற்கே நேரமில்லாத போது
எழுதுவதற்கென்று எப்போது நேரத்தை ஒதுக்க? என்னால் முடிந்த அளவு நேரத்தை ஒதுக்கி எழுதுகிறேன். என்ன தெரியுமோ அதை மட்டும் எழுதுகிறேன்.

கதையின் கட்டமைப்பு பற்றியும் இருக்கும். கதையாளரின் உரையாடலும் இருக்கும். கதையின் உட்கரு பற்றியும் இருக்கும். ஆக மொத்தத்தில் எழுதப்போவது கதை.. கதை.. கதை மட்டுமே..

புன்னகையுடன்..

இளசு
03-11-2005, 07:36 PM
வருக வருக ராம்.

சொன்னபடி தொடர் ஆரம்பித்தமைக்கு முதலில் வாழ்த்துகள்.

வாசித்தல் -
உனக்கு எத்தனை பிடித்தமானது என அறிந்தவன் நான்.

எப்போதும் வாசித்துக்கொண்டிருந்தால்
எப்போது எழுதுவதாம்?
-- நண்பர் நண்பன் ஒருமுறை சுகமாய் சலித்துக்கொண்ட வாசகம் இது.

வாசித்தல், எழுதுதல் என இரு குதிரைகளில்
இலாவகமாய் சவாரி செய்யும் திறமை உன்னிடம் உண்டு.

நீ தொட்ட விளிம்புகளை எஙகளுக்கும் வருடத் தரும்
இத்தொட்ரை ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.