PDA

View Full Version : சரியா?



thirukanaga
01-11-2005, 11:30 PM
வடையை எடுத்த காகம்
மறைந்து பலகாலம்
கொடுத்த நாமோ குழம்புவது
எப்போதும்
விட்ட வடையை நினைக்கும் நாங்கள்
சுடும் வடையை இழப்பதேனோ

புதுசாய்ச் சிரிக்குது
புத்தகத்தில் நடிகைகள்
காட்டிய கார்ச்சியில்
கூட்டியது வசதியை
சாட்டியே குற்றத்தை அவர்மேல்
வாங்கினேன் புதுசுபுதுசாய்
என் மானத்தை விட்டல்லோ

thirukanaga
01-11-2005, 11:48 PM
போரிலே இறந்தவர் விட்டது
உயிரை மட்டுந்தான்
புலம்பெயர்ந்தவர் காத்தது
உயிரை மட்டுந்தான்
இறப்பு வருமென்று இரவல் நாட்டில்
இழந்தது எங்கள் மானத்தையன்றோ
இருப்பது இனந்தெரியாத வெளிநாட்டில்
மனந்தவிக்குது நடுக் காட்டிலன்றோ
தப்பிப்போம் என்று நினைத்ததால்
தவறவிட்டது உறவுகளையன்றோ

gragavan
02-11-2005, 04:13 AM
மிகவும் நெஞ்சை உலுக்கும் கவிதை திருகனகா. உண்மைதான். கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல் நினைவிற்கு வருகிறது.

கண் திறந்த தேசம் இங்கே
கண் மூடும் தெசம் எங்கே

விஸ்வநாதனின் குரலில் நெஞ்சை உலுக்கும் பாடல். பட்டால்தான் அந்தத் துன்பம் தெரியும்.

இளசு
02-11-2005, 08:30 PM
சூழ்நிலை துரத்த
புலம் பெயரும் துயரம்...
அதை ஆழமாய்ச் சொல்லிய விதம்..

அருமை திருகனகா அவர்களே'

இராகவன் மேற்கோள் பொருத்தம்...

அறிஞர்
03-11-2005, 09:37 AM
அருமையான வரிகள் திருகனகா...
உயிருக்காய்
மானத்தை
தொலைக்கும்
கொடுமைகள்