PDA

View Full Version : மனதில் நின்ற கதைகள்....பென்ஸ்
01-11-2005, 12:02 PM
நான் படித்து என் மனதில் நின்ற சில கதைகளை இங்கு பதிக்கலாம் என்று உள்ளேன்....


கதை - 1

மூன்று மரங்களின் கதை.....

ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.

முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது,

" நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவென்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேன்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"...

எனற முதல் மரத்தை தொடர்ந்த இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது,

" நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேன்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேன்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்"

என்ற தன் கனவை முடித்ததும் மூன்றவது மரம் சொன்னது

"நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வாணையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்" என்று கூறியது...

பல வருடங்களாக தன் கனவு மேல் கொன்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து,

" நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்" என்று கூறினான், இதை கெட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.

இரண்டவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, "நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்" என்றன். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.

மற்றொரு மரவெட்டி முண்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து "நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொன்டு செல்லுவேன்" என்றான்.

முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைகோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைகோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது. போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் வெட்டி ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது. மூன்றவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடபட்டது.

காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது. ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.


சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யபட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக துங்கி கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து "அமைதி" என்றதும் புயல் அடங்கியது. அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.

கடைசியாக, அந்த முன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது வெர்தியில் சுமந்து செல்லபட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர், அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிரு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்தது, எனென்றல் அதில் அறையபட்டவர் இயேசு கிறிஸ்து......


கருத்து: :) :)

இளசு
01-11-2005, 08:54 PM
எண்ணம் போல் வாழ்வு - அணுகிய முறைகள் வேறு.
அதிகம் சிந்திக்க வைத்த கதை.

நன்றி பெஞ்சமின். தொடர்ந்து கொடுங்கள்..

gragavan
02-11-2005, 04:21 AM
நல்ல அழகான கதை. மிகவும் ரசித்தேன். அருமை பெஞ்சமின்.

pradeepkt
07-11-2005, 03:17 PM
நல்ல கதை
இன்னும் ஊக்கமாய்த் தொடருங்கள் பெஞ்சமின்

சுபன்
28-01-2006, 01:48 AM
அருமையான கதை

sarcharan
28-01-2006, 02:45 AM
பெஞ்சமின்,

சில வருடங்களுக்கு முன்னர் இதை படித்து பெருமிதம் கொண்டேன்.

அருமையான கதை.

மரங்கள் தம்மைப் படைத்தவரது ஸ்பரிசத்தை உணரும் தருணம்....
படைத்தவரோடு கொண்ட சில மணித்துளிகள் நெருக்கம்....

உண்மையில் அவைகளுக்கு மனிதர்களைப்போல் ஆறறிவு இருந்திருந்தால் "பிறவிப்பயன் பெற்றோம்"என்று சொல்லி இருக்கும்.

சிலுவையை சுமக்கவும் அறையப்படவும் தான் காரணமாய் இருந்ததை எண்ணி அந்த கடைசி மரம் சிலுவைநாதரோடு கூட கண்ணீர் வடித்திருக்கும்...
நான் படித்து என் மனதில் நின்ற சில கதைகளை இங்கு பதிக்கலாம் என்று உள்ளேன்....


கதை - 1

மூன்று மரங்களின் கதை.....

ஒரு அடர்த்தியான காட்டில் .............................
....................
................ எனென்றல் அதில் அறையபட்டவர் இயேசு கிறிஸ்து......


கருத்து: :) :)

aren
28-01-2006, 02:54 PM
நன்றாக உள்ளது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆனால் அந்த கடவுளையே சுமக்கும் மரத்திற்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்.

sarcharan
30-01-2006, 12:04 PM
இக்கதை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இது தவறா, சரியா அல்லது இதில் சொற்குற்றம் மற்றும் பொறுள் குற்றம் இருப்பின் மன்னிக்க இதை நான்
அப்படியே பதிக்கின்றேன் (copied and pasted as such)
அதனால் குறைகளும் நிறைகளும் அவர்க்கே சேரும்.


கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...


மலையேற்றப் போட்டி துவங்கியது. அவனுக்கு எல்லோருக்கும்

வாழ்த்து தெரிவித்தனர். கயிற்றைப் பிடித்து மேலே ஏறிய வண்ணம்

இருந்தான்.

மேலேறிய பின் இயற்கை அழகை மனம்போல் ரசித்தான். வெற்றிக்

களிப்பு. சிறிது நேர இளைப்பாறுதலுக்கு பின் கீழே செல்ல தொடங்கினான்.

மாலை நேரம் வந்தது. வெளிச்சம் குறையத் தொடங்கியது. கயிறு

அவன் அங்கமெங்கும் தாறுமாறாய் பிணைந்துள்ளதை அவன்

அறியாதவண்ணம் கீழிறங்கிக்கொண்டு இருந்தான்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு அதை அவிழ்க்க முயன்றான்.

தன்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்து கூடுமானவரை அவிழ்த்து

விட்டான். ஆனால் முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொள்ள

முடியவில்லை.

அவனுள் யோசனை. கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தால் சுக்கு

நூறாக தலை சிதறும். அறுக்காமல் விட்டாலோ கயிறு கழுத்தை

நெறிக்கும். போதாக்குறைக்கு குளிர் வேறு. அவனுள் சஞ்சலம். என்ன

செய்ய என்று யோசித்துக்கொண்டு இருந்தான். திக்கற்றோருக்கு

தெய்வம் துணை அல்லவா...

மனம் கடவுளை நினைத்தது.கடவுளே என்னை காப்பாற்று என்று

வேண்டினான்.அவனுக்கு ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.
கடவுள் : என்னை நம்புகிறாயா?
அவன் :ஆம்
கடவுள் : அப்பொழுது உன்னை பிணைத்துள்ள கயிற்றை வெட்டு.

சுற்றும் கும்மிருட்டு. உதவிக்கு வர யாரும் இல்லை.என்ன செய்வது

என்று குழம்பி யோசித்துக்கொண்டு இருந்தான். உடலும் களைத்து

விட்டது. மரண பயம் பற்றிக் கொண்டது.

நேரம் செல்லச்செல்ல கயிறு இறுகியது.

காலையில் அவ்வழி சென்றவர்கள் ஒரு மனிதனின் உடல் தரையில்

இருந்து 3 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருப்பதைக்

கண்டார்கள்.
கருத்து: :) :)

aren
30-01-2006, 01:37 PM
நம்பியிருக்கலாம் என்கிறீர்களா? ஆழம் தெரியாமல் காலைவிட அந்த ஆளுக்கு பயமாக இருந்திருக்கலாம், ஏனெனில் இப்பொழுது யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லையே? அவ்வளவு குழப்பம். இதில் கடவுள் சொன்ன வார்த்தையை புரிந்துகொள்ளமுடியவில்லை அவனால், என்ன செய்வான் பாவம்.

கடவுளும் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லியிருக்கலாமே, அல்லது அவரே கயிற்றை அறுத்து இருக்கலாமே?

pradeepkt
30-01-2006, 02:10 PM
இன்னொரு திரியில படிச்சோமே
ஆண்டவன் அவருக்கு மீனைக் குடுக்குறதை விட மீன் பிடிக்கக் கத்துக் குடுக்கப் பாத்தாரு. இவரு கத்துக்காம மூழ்கிட்டாரு...
அம்புட்டுதேன்... நம்பிக்கைதானே வாழ்க்கை! அதான் கதை சொல்லும் கதை!

aren
30-01-2006, 02:52 PM
இன்னொரு திரியில படிச்சோமே
ஆண்டவன் அவருக்கு மீனைக் குடுக்குறதை விட மீன் பிடிக்கக் கத்துக் குடுக்கப் பாத்தாரு. இவரு கத்துக்காம மூழ்கிட்டாரு...
அம்புட்டுதேன்... நம்பிக்கைதானே வாழ்க்கை! அதான் கதை சொல்லும் கதை!

யாரையோ தாக்குறா மாதிரியிருக்குது. இருக்கட்டும் இருக்கட்டும். எல்லோரும் நல்லாயிருந்தா சரிதான்.

kr_srinivasan1977
01-02-2006, 05:12 AM
நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்.

pradeepkt
01-02-2006, 07:48 AM
கடவுளை நம்புவதோடு நம் முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.
நம்ம முயற்சி ஒரு எண் மாதிரின்னா, கடவுள் அதுக்கு மேல இருக்குற பவர் (இதுக்கு தமிழில் என்னப்பா, மறந்து போச்சு)

நம்ம முயற்சி பூஜ்யமாக இருந்தால் பவர் என்னவாக இருந்தாலும் மொத்த மதிப்பு பூஜ்யம்தான். (0 ^ anything = 0)

அதே நேரம் நம்ம முயற்சி ஏறிக் கொண்டே இருந்தால் மதிப்பு பன்மடங்கு அதிகமாகும். எனவே கடவுள் நம்பிக்கையோடு முயற்சியும் மிக மிக முக்கியம்.

sarcharan
01-02-2006, 08:01 AM
ஒத்துக்கொள்ளப்படவேண்டிய உண்மை

பென்ஸ்
01-02-2006, 08:10 AM
சரவணா... இப்படி எல்லாதையும் கோட் பண்ண வேண்டாமே????

பண்ண மாட்டேன் என்று சத்தியாம் அடியுங்க... :rolleyes: :rolleyes: இல்லைனா ராகவன் அதுவரை உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்துவார் என்று எச்சரிக்கிறேன்...:D :D :D :D

aren
01-02-2006, 08:37 AM
பென்ஸ், உங்கள் ராகவன்மேல் அவ்வளவு கோபம். அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுகிறார் என்பதாலா?

ராகவன், பென்ஸிக்கு கொஞ்சம் ஹிண்டு மொசுறு கொடுத்து அனுப்பபா.

pradeepkt
01-02-2006, 08:44 AM
இந்தக் கூத்தில சரவணனே பயந்து போயி கோட் பண்ணினதை எடுத்து விட்டுட்டான் பாருங்க...
அதான் ராகவன்கிறது... :D :D :D

ஆரென் அண்ணா,
ராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்

பென்ஸ்
01-02-2006, 08:54 AM
அதுதாண் பிரதிப்..
ராகவன் DIETING பண்ணட்டும்...
நான் DIE-EATING பண்ணுறேன் ...

sarcharan
01-02-2006, 09:28 AM
அப்ப நான் DATING பன்ணுறேன். ஹி ஹி


ராகவன் DIETING பண்ணட்டும்...
நான் DIE-EATING பண்ணுறேன் ...

gragavan
01-02-2006, 09:31 AM
பென்ஸ், உங்கள் ராகவன்மேல் அவ்வளவு கோபம். அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுகிறார் என்பதாலா?

ராகவன், பென்ஸிக்கு கொஞ்சம் ஹிண்டு மொசுறு கொடுத்து அனுப்பபா.ஹிண்டி மொசுரு இருக்கு. இன்னைக்கு மன்றத்துல படத்தப் போடுறேன். வாங்க பென்சு வாங்க. ஹிண்டு மொசுரு இருக்கு வாங்க.

gragavan
01-02-2006, 09:37 AM
இந்தக் கூத்தில சரவணனே பயந்து போயி கோட் பண்ணினதை எடுத்து விட்டுட்டான் பாருங்க...
அதான் ராகவன்கிறது... :D :D :D

ஆரென் அண்ணா,
ராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்அதென்னய்யா கோட்டு....நாம் பாக்கலையே....சரவணா...எனக்கு அதத் தனிமடல்லயாவது அனுப்புய்யா...நல்லாருப்பே....

sarcharan
01-02-2006, 11:31 AM
ராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்

ஏதோ கொஞ்ச நாளைக்கி பென்ஸூம் (எனது சமையல் சாப்பிடாமல்!!)நல்லா இருக்கட்டுமேன்ற நல்லெண்ணம் தான்.

தவிர பென்ஸூ அடுத்தவங்க வீட்டில் கைநனைக்க மாட்டாரமே. அட ஒரு ட்ரீட் கொடுத்தா கூட வரமாட்டாராமே....!!!

pradeepkt
01-02-2006, 02:18 PM
சொல்லிட்டேல்ல...
நாளைக்கு இதைப் பொய்யாக்குறதுக்காவது வருவாரு பாரு!
இதைத்தான் நுணலும் தன்... அப்படிம்பாங்க :D