PDA

View Full Version : கங்குலி.... எதிர்காலம்????



அறிஞர்
28-10-2005, 02:45 PM
கங்குலிக்கும் மீண்டும் இந்திய அணியில் இடம் இல்லை...

உடல் ரீதியாக தகுதிபெறவில்லை என காரணம் காட்டுகிறார்கள்..

கங்குலி நல்ல மட்டையாளர்தான்.. ஆனால் கேப்டனாக இருப்பதற்கு இனி தகுதியற்றவர் எனத்தோன்றுகிறது.

இனி அவரின் எதிர்காலம் என்ன?????

இளையவன்
29-10-2005, 12:41 AM
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். இதனால் யாரையும் நீக்க முடியாத இக்கட்டான நிலையில்தான் கங்குலிக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கங்குலி நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நம்புகிறேன்.

aren
29-10-2005, 05:08 AM
இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது போட்டியில் கங்குலி டீமில் இருந்தாலும், ஆட்டத்தில் இறக்குவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம். ஆகையால் அவரை வெளியே நிறுத்திவைப்பதே அவருக்கு நல்லது. ஆனால் நிச்சயம் 6வது ஆட்டத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பரஞ்சோதி
29-10-2005, 05:39 AM
கங்குலியை இப்போதைக்கு வெளியே வைத்திருப்பது நல்லதே. இருக்கும் நேரத்தில் அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகள் விளையாடி தன் திறமையை நிறுபிக்க வேண்டும், குறிப்பாக உடல் தகுதி.

உடல் தகுதி இல்லாத அணியை வைத்து விளையாடியதாலேயே இலங்கை படு மோசமாக தோற்றது. அதே நிலை முன்பு இந்தியா கொண்டிருந்தது, எத்தனையோ போட்டிகளில் ஜாகிர், நெக்ரா உடல் தகுதி இல்லை என்றால் வெறும் அதிஷ்டத்தை மட்டுமே நம்பி அணித்தலைவர் கங்குலி அவர்களை விளையாட விட்டு, மோசமாக தோற்றிருக்கிறோம், இனி அந்த நிலை வராது.

பென்ஸ்
29-10-2005, 11:01 AM
அணியில் புதியதாக தேர்வானவர்கள் களத்தில் இருப்பவர்களுக்கு த்ண்ணிர் பாட்டில்கள் எடுத்து செல்லுவர், ஆனால் கங்குலி செய்ய மறுத்து இருக்கிறார். சப்பல் சொன்னது பொல கங்குலிக்கு attitude பிரச்சினை அதிகமாக உள்ளது...:)

இந்திய அணியின் மிக பெரிய பிரச்சினை என்னவென்றால் எதிர் அணியை குறைத்து மதிப்பிடுவது, இந்த இரண்டு ஆட்டங்களில் நன்றாக ஆடிய இவர்கள் இதையே நன்றாக தொடர்ந்தால் நன்று... இல்லை என்றால் "வேலியில் இருக்கும் ஓணானை (கங்குலி) வேட்டியில் (அணியில்) எடுத்து போடுவார்கள்".... :D :D :D

கங்குலி என்னும் கொஞ்சம் நாள் வெளியில் இருந்து தன் திறமையை கவுன்டி, ரண்சி போன்ற ஆட்டங்களில் காண்பித்து பின்னர் அணியில் சேரட்டும் என்பது என் கருத்து...:p :p