PDA

View Full Version : விண்ணைத்தேடி (அ. மை. - 8)இளசு
27-10-2005, 10:39 PM
விண்ணைத்தேடி

ஹிப்பார்கஸ் (கி.மு. 190 - 120)


அறிவியல் மைல்கற்கள் - 8

ஏழாம் பாகம் - உலகளந்தவர் இங்கே -http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5833
----------------------------------------------------------------

விண்ணைத்தேடி, அதனால் மன்ணில் உண்டாகும் மாற்றங்களைத்தேடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள சிநேக இழைகளைத் தேடி
ஒரு மனிதன் எத்தனை கண்டுபிடித்தறிய முடியும்?

அம்மனிதன் நம் நாயகன் ஹிப்பார்கஸாய் இருந்தால்
எத்தனையோ கண்டுபிடிக்க முடியும்.

ஹிப்பார்கஸ் அக்காலம் வழங்கிய மிகப்பெரிய வானியல் ஞானி.
கவனிப்பதை கணக்குப் போட்டு , இயற்கையின் இயல்புகளை
அதன் சூட்சுமங்களை இனம் கண்டு சொன்ன தீர்க்கதரிசி.

அதுவரை வந்ததைக் கவனித்து சொல்வது மட்டுமே என்றிருந்த கிரேக்க வானியல்
ஹிப்பார்கஸால் வருவதைக் கணித்து சொல்லும் ஆருட இயலாய் மாறியது.
ஜியோமெட்ரி, டிரிகோணோமெட்ரி - இவற்றில் வல்லவரான ஹிப்பார்கஸ்
இவற்றின் கணக்குகளால் கணித்துச் சொன்ன விண்ணக உண்மைகளின் பட்டியல் நீளமானது.

பாபிலோனின் கணிதம், கிரேக்கத்தின் கணிதம் என்ற இரு அரை நிஜங்களை
இணைத்து முழுமையான புதுக்கணிதம் தொகுத்த செயல்வீரர் ஹிப்பார்கஸ்.
360 டிகிரி வட்டத்தை மேற்குக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே.

ஹிப்பார்கஸ் விண்டு சொன்ன விண்ணக உண்மைகளில் சில:

1) ஒரு ஆண்டு என்பது = 365 நாட்கள் + 5 மணிகள் + 55 நிமிடங்கள்.

2) பருவங்கள் எல்லாம் சரிசமமான காலநீளம் கொண்டவை அல்ல -
வசந்தம் = 94.5 நாட்கள்
கோடை =92.5 நாட்கள்
இலையுதிர்காலம் = 88.125 நாட்கள்
பனிக்காலம் = 90.125 நாட்கள்.

3) சூரியனுக்கும் பூமிக்கம் இடையே உள்ள தூரம் -
மிகக் குறைச்சல் - ஜனவரி 4
மிக அதிகம் - ஜூலை 4

4) மாதம் என்பது = 29 நாட்கள் + 12 மணிகள் + 44 நிமிடங்கள் + 2.5 நொடிகள்.
( இன்றைய அறிவியலில் இது ஒரே ஒரு வினாடி அதிகம்.
எண்ணிப்பாருங்கள்.கி.மு.வில் இதைக் கண்டுபிடித்துச் சொன்னவரின் அசாத்திய திறமையை!!!!)

5) அவரின் வாழ்நாளுக்கு முந்திய 800 ஆண்டுகளில் எப்போதெல்லாம் சந்திரகிரகணம்
நிகழ்ந்திருக்கக்கூடும் என்று ஒரு பட்டியல்.

6) கண்ணால் பார்க்கக்கூடிய நட்சத்திரங்கள் 850ன் தொகுப்பு, வரைபடம்.
அவற்றின் பிரகாசத்துக்குத் தக்க இடமளித்த பட்டியல் ( மேக்னிடிட்யூட் பட்டியல் என்ற
அவரின் இத்தொகுப்பு இன்றும் பயனாளப்படுகிறது!!!!)

7) கி.மு. 134 -ல் ஸ்கார்பியோ ( விருச்சிக) நட்சத்திரத் தொகுப்பில் புதிய உறுப்பினர் சேர்ந்துகொண்டதைக்
கண்டு சொன்னது

8) பகலும் இரவும் சரிசமநேரமாய் இருக்கும் இரு ஈகியூனாக்ஸ் நாட்கள் செப்டம்பர், மார்ச்சில்
வரும் என்று யூகித்துச் (சரியாய்ச்) சொன்னது

9) நட்சத்திரக் கோலப்புள்ளிகள் வானவாசலில் மிக மெல்ல இடம் மாறிவருகின்றன
என அறிந்து சொன்னது

10) வசந்தத்தின் முதல் நாள் சூரியன் உதிக்கும் புள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஒரு டிகிரி நகர்ந்து வருவதை ஆராய்ந்து சொன்னது - அதன் காரணம்
சுற்றிவிட்ட பம்பரமாய் தன்னைத்தானேயும் சுற்றும் பூமி ஒரு முறை தள்ளாடி
மறுமுறை அதே தள்ளாட்டத்தை விட்ட இடத்திலே தொடங்க 25,800 ஆண்டுகள் ஆகும்
என அதிசயத்தக்கவகையில் கணித்துச் சொன்னது.

இப்படி பத்தும் சொன்ன ஹிப்பார்கஸ் பத்தோடு பதினொண்ணு வகை அறிஞர் அல்லர்!
அறிவுக்கணித கயிறேறி விண்ணைத் தேடியவர்.

பாரதி
28-10-2005, 03:54 PM
ஹிப்பார்கஸ் ! - நிச்சயம் உங்கள் பதிவுகளை தேடியேனும் படிக்க வேண்டும் போல இருக்கிறது அண்ணா... மனிதர்களின் அறிவுத்திறனை நினைக்கையில் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது! அரிய தகவல்களை சேகரித்து மன்ற உறவுகளுக்கு தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இளசு
29-10-2005, 07:35 PM
மிக்க நன்றி பாரதி.

இதை எழுத அறிவியலை தமிழில் நினைத்துப்பார்க்க ஆசைப்படும் என் சுயநலமே முதல் காரணம்.

படித்து, பகிர்ந்து, பின்னூட்டம் தந்து மன்ற உறவுகள் ஆதரித்தால் மகிழ்ச்சி பன்மடங்காகிறது.
என் நன்றிகள் மீண்டும்.

aren
26-12-2005, 03:09 PM
வாவ்!! இத்தனை கண்டுபிடிப்புகளா, அதுவும் இவ்வளவு துள்ளியமாக அந்த காலத்திலேயே அவரால் முடிந்திருக்கிறதென்றால் இது ஒரு மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம்.

இவ்வளவு விஷயங்களை அந்த காலத்தில் அவர்களுடைய சுய முயற்சியால எந்த விதமான பலனையும் எதிர்பார்க்காமல் கண்டுபிடித்தது வியக்க வைக்கிறது.

இளசு அவர்களே - இந்த பகுதியில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு மாணிக்கம். எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

சுபன்
27-02-2006, 10:40 PM
இவற்றை தொகுத்து ஒரு பதிப்பில் போடலாமே

RRaja
04-03-2006, 11:00 AM
அருமையான பதிவு.

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 05:12 PM
அற்புதம். உங்கள் சுய நலம் வளர்க என்கிரது என் சுயநலம். நண்பர்கள் கூறியது போல இவையனைத்தையும் தொகுத்து வைத்தால் இனி வரும் நண்பர்களுக்கு அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் (எங்களுக்கும் தான்)

sarcharan
09-03-2006, 03:52 AM
தெரிந்துகொள்ளப்படவேண்டியவனவற்றுள் ஒன்று. மிகவும் நல்ல செய்தி

cchandru007
10-03-2006, 06:54 AM
ஆ! என்னே! ஹிப்பார்கஸின் கண்டுபிடிப்பு!

கண்டிப்பாக நான் உன்னைத்தேடி வருவேன் இதை முழுதாய் படிக்க.

ஆர்வத்துடன்
---நான்.

mkmaran
10-03-2006, 08:46 AM
அண்ணா, அற்புதமான தகவல். பொக்கிஷம் போன்ற தகவல்திரட்டு!
இதுபோல் நிறைய தந்திடுங்கள்!


உங்களுக்கு நான் ஒரு தகவல் சொல்கிறேன்.:D (உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்...!)

நாம் வியக்கும் செயலை அடுத்தவர் செய்திடும்போது, அவரை மேதை என்றழைக்கிறோம்.

நமது மூளையின் சக்தியை முழுமையாய் விஞ்ஞானம் கண்டு பிடிக்கவில்லை.

அதுபோல்

தன்னுடைய மூளையின் சக்தியை முழுமையாய் பயன்படுத்திய மனிதனையும் கண்டறியவில்லை.

நாமெல்லாம் மாமேதைகள் என்று ஒத்துக்கொண்ட
ஈன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர்கள்கூட அவர்களின் மூளையின் மொத்த சக்தியில் வெறும் 5.5% அளவுதான் பயன்படுத்தி இருந்தார்களாம்! (எப்போதோ படித்த நியாபகம்)

இந்த அளவுக்கே E=mc2 மற்றும் Theory of Relativity ஒரு மனிதன் கொடுக்க, இன்னொருவர் 1000 கண்டுபிடிப்புகள் தந்த அதிசய மனிதன் என பெயர் பெறமுடிந்தது. இதுபோல் எத்தனை எத்தனையோ மேதைகள்;) !

(Theory of Relativity இது பற்றி பலமுறை படித்து...குழம்பி...தெளிந்து..மீண்டும் குழம்பி...தெளிந்து...ம்ம்ம்... அதற்கே நான் எனது மூளையின் மொத்த சக்தியில் 6% பயன்படுத்தி, அதை ரொப்பவும் தொந்தரவு செய்து விட்டோமோ என்று பயந்து .. அதன் மேல் இரக்கப்பட்டு..:confused: சடாரென்று ஒரு தெளிவுக்கு வந்தேன்!:D )

பென்ஸ்
10-03-2006, 09:20 AM
மாறன்... சூப்பர்...
அப்படியே தியரி ஆப் ரிலேட்டிவிடியை விளக்கலாமே... எங்களுக்கும் புரியுற மாதிரி... நான் இன்னும் குழம்பி கொன்டுதாண் இருக்கிறேன்....

mkmaran
10-03-2006, 10:16 AM
நன்றி பெஞ்சமின்!

உலகில் எத்தனையோ சிக்கலான விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தியரிகள், தேற்றங்கள் உண்டு.

சட்டென்று புரிந்துகொள்ள முடியாத குழப்பமான தியரிகள் ஏராளம் என்றாலும்...ஈன்ஸ்டீன் தியரிதான் அவற்றில் முதல் இடத்தில் இருக்கிறது.

இல்லாதவைகளை சொல்லி..
அவைகள் இருப்பதாக கற்பனை செய்து கொள் என்று
இருக்கின்றதை நிரூபித்த தியரி!

(ஆரம்பத்திலேயே குழப்பிட்டேனா..?
அதுதான் ஈன்ஸ்டீன் தியரி:D )


அந்த மாமேதை கூறியதை என் அளவுக்கு புரிந்து கொண்டதை
விரைவில் இங்கு ஒரு பதிவாக கொடுத்திட விரும்புகிறேன்!

பென்ஸ்
10-03-2006, 10:42 AM
நன்றி.. நானும் படித்திருக்கிறேன்... பலமுறை...
ஏதோ புரிந்த மாதிரி இருக்கும்...
ஆனால் எவரிடமும் என்னால் விளக்க முடிந்ததில்லை...
மறு முறை வாசிக்கும் போதும் வேறு மாதிரி புரியும்...


அதனால் தான் உங்களிடம் விளக்கும்படி வேண்டினேன்....

kavitha
10-03-2006, 11:02 AM
சூரியனுக்கும் பூமிக்கம் இடையே உள்ள தூரம் -
மிகக் குறைச்சல் - ஜனவரி 4
மிக அதிகம் - ஜூலை 4 நீண்ட பகல், குறுகிய பகல்கள். நிறைய விசயங்களைத்தெரிந்துக்கொள்கிறோம் அண்ணா. தொடர்ந்து பதியுங்கள். நன்றி.