PDA

View Full Version : நான் வாழ வேண்டும்....பென்ஸ்
27-10-2005, 06:28 PM
பொறியாளனாக இருந்தாலும், மனம் விரும்பிய காரணத்தினால் கவுன்சிலிங் பயின்று வருகிறேன், என் வகுப்பில் ஒருவர் கூறிய சம்பவம்...


நான் வாழ வேண்டும்....


சில்லென்ற அந்த ஸ்பரிசம் என் கன்னத்தில் விழுந்து என் உறக்கத்தைள் கலைத்தது.. அம்மா காப்பியுடன் நின்று கொன்டிருந்தாய். அவள் கன்னதில் இருந்த கரியை துடைத்து கொண்டு "குட் மார்ணிங்" சொல்லிய என்னை கண்ணதில் ஒரு முத்தம் தந்து பள்ளிக்கு செல்ல செல்லமாய் மிரட்டினாள்..சுமார் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்லுகிறேன், இத்தனை காலம் அனுபவித்த அந்த மருத்துவமனை நெடி இன்னும் என்னுள் ஓடி கொன்டிருந்து.

பள்ளியின் கடைசி பென்ச்சில் இருந்து கலகல என் சிரித்து கொன்டு இருந்த என்னை பார்த்து செல்வி ஒரு நிமிடம் அதிந்து பின் என் மூக்கில் வழித்த ரத்தத்தை துடைத்த போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.அலறி அடித்து கொண்டு வந்த அப்பா என்னை மருத்துவமனைக்கு கொன்டு சென்று பரிசோதித்த பிறகு "அனயிமியா" என்று சொன்னார்கள். +2 படித்து கொன்டு இருந்த எனக்கு அது சிவப்பு ரத்த அனுக்குறைவால் வருது என்று மட்டும் தெரியும். நடுதரகுடும்பம் என்பதால் அப்பாவின் வரவில் பெரும் பகுதி என்னுடைய மற்றும் தங்கையின் படிப்பிற்காக மட்டுமே சரியாக இருந்தது. ஏதேதோ சிகிட்ச்சைகளை பற்றி பேசினார்கள், ஆனாலும் அப்பாவின் கண்களை வாசிக்கும் திறன் எனக்கு இல்லை, ஆனால் கண்ணிரை மட்டும் காண முடிந்தது.....

குளியல் அறையில் செம்பு கிழே விழ, தங்கை வேட்டின் பின்புறம் இருந்து ஓடி வந்தாள், முகத்தில் ஒரு பயம் கலந்த பாசம் தெரிந்தது, திட்டினாள் "கவனம் கிடையாதா?". அமைதியாஇ கதவை அடைத்து கொண்டு குளிக்க ஆரம்பித்த எனக்கு பள்ளியை நினைத்த போது செல்வி, கலை நியாபகம் வந்தது, எத்தனை நாட்கள் ஆயிற்று. கலை குறைவாகதான் பேசுவாள் ஆனால் பாசகாரி, செல்வி வாயாடி கொஞ்சம் பயந்த சுபாவம்.

வகுப்பில் எல்லோரும் என்னை பரிதாபத்துடன் பார்த்தனர், ஆசிரியர் உட்பட.. கலை என்னை கட்டி கொன்டாள், செல்வி கண்ணில் கண்ணீர் தெரிந்தலும், என்னை பார்த்து சிரித்து கொன்டாள்.
என்னக்கு எல்லாம் பிடித்து போயிருந்து, அம்மா அப்பா, தங்கை, செல்வி, கலை, பள்ளி, அரசரடி வினாயகர் கோவில், எங்கு சென்றாலும் கூடவே வரும் நாய் குட்டி. எல்லாம் சரியாகிவிடும் ... அம்மாவும் அப்படிதான் சொன்னாள். அனால் என்னக்கு பெட்ரோல் அடிப்பது போல் ரத்தம் அடைப்பது மட்டும் பிடிக்கவில்லை..

அன்று கலை என்னிடம் அதிகம் பேசவில்லை, சில நாட்களாகவே அவள் சரியில்லை என்று தெரிந்தது. நான் அவளை கண்டு கொள்ளவில்லையோ என்ற வருத்தம் வர, நானும் செல்வியும் அவளிடம் கேட்க அவள் விலகி சென்றாள். மதியம் மரத்தடியில் சாப்பிட்டு கோண்டு இருந்த எஙளிடம் வந்தவள்
"ஏய்!! மதியம் வேதியல் வகுப்பை விட்டு வருவீர்கள? எனக்கு உங்களிடம் நிறைய பேச வென்டும்".
என்றவள் முகத்தில் ஏக கலவரம். வேயிட்டிங் அறையின் முலையில் பதுங்கி கொண்டோம்.

"என்ன சொல்லு..."

என்று செல்வி மெதுவாக கத்தினாள், கலையால் அழ மட்டுமே முடிந்தது. சிறுது நேர அமைதிக்கு பிறகு..

"எனக்கு சாக வேண்டும், உதவுவீர்களா?? "..

செல்வி முகம் வேளிறி போயிருந்தது, எனக்கு எதுவும் புரியாதது போல் இருந்து..

"எனக்கு 3 1/2 மாதங்களக மாதவிடாய் வரவில்லை..."

"எதோ தெரியாமல் நடந்துவிட்டது, அம்மா, அப்பாவுக்கு தெரிந்தால் என்னை கொன்று போட்டு விடுவார்கள், அதுக்கு பதிலா நானே செத்து போயிடுறேன்..." என்று அழ ஆரம்பித்தாள்

செல்வி ஏதேதோ சொல்லி கலையை சமாதான படுத்தி கொண்டிருந்தாள்.. அவளை நிறுத்திவிட்டு நான் தொடர்ந்தேன்

"ஏன் நீ சாகவேண்டும்? நாம் ஏன் நம் உயிர்களை மாற்றி கொள்ள கூடாது? எனக்கு வாழ வேண்டும்.."

"எனக்கு குணம் ஆகும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.."

யாரும் வெகு நேரம் பேசவில்லை., செல்வி எதோ முடிவுக்கு வந்தவளாய், அமைதியை கலைத்தாள்.
"சரி! 2 வாரம் கழித்து இங்கு சந்திப்போம், பிறகு உன் சாவை பற்றி முடிவு எடுக்கலாம்" என்று கலையிடம் கூறி விட்டு வேளியெறினாள். நனும் பின் தொடர்ந்தேன்.

கலை மறுநாள் பள்ளிக்கு வரவில்லை , நானும் செல்வியும் பதறினோம், அடுத்த நாள் வந்தாள் யாரிடமும் பேசவில்லை. அந்த வாரம் எதோ மந்தமாக போனது. ஆடுத்த வாரம் வகுப்பில் நுழைந்த எனக்கு கலை முகத்தில் சந்தோசம் ஒட்டியிருப்பதை பார்த்தேன்,

"இன்று கோவிலுக்கு போகவில்லை" என்றாள். அருகில் இருந்த என் கையை அவள் கரம் இறுக்கியது, அவள் கண்ணில் நான் சொன்ன வரிகள் "நான் வழ வேண்டும்.." என்று தெரிந்தன...குறிப்பு: சம்பவத்தின் "நான்", என் வகுப்பு நண்பர், இரு குழந்தைகளின் தாய்... வாழ்ந்து கொன்டிருக்கிறர், இன்னும் 100 காலம் நிச்சயம் வாழ்வார்

மயூ
03-02-2007, 02:57 PM
நல்ல பாடம்...

மதுரகன்
03-02-2007, 05:42 PM
அற்புதமான படைப்பு எப்படித்தான் தவறவிடப்பட்டதோ..

pradeepkt
05-02-2007, 12:11 PM
மனம் கனத்துப் போச்சுங்க... அவங்க இன்னும் பல காலம் நல்லா இருக்கட்டும்...

அறிஞர்
06-02-2007, 04:54 PM
வெகு காலம் தாழ்த்தி படித்த... சம்பவம்.. மனதை பாதித்தது....

எல்லா உயிர்களும் பல்லாண்டு வாழட்டும்....

நம்பிக்கை தான் வாழ்க்கையே...

மனோஜ்
07-02-2007, 07:38 AM
மறுபதிப்பு அறுமைதானே நன்பர்களே

விகடன்
11-02-2007, 04:03 AM
அருமையான ஆக்கம் என்று சொல்வதிலும் பார்க்கம் திறமையாக கேள்விப்பட்டதை தொகுத்து அளித்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

mukilan
12-02-2007, 04:02 PM
எதை இழந்தாலும் இழப்பு இல்லை, தன்னம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர! என்பதற்கு வாழும் ஓவியமாக உயிரூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் பென்ஸூ.

ஓவியா
12-02-2007, 08:54 PM
பென்சு

பல கதையாசிரியர்கள் கடைசியில் நெஞ்சில் கல்லை வைப்பார்கள், நீங்களோ மெல்ல மெல்ல பாரத்தை குறைத்துல்லீர்கள்.

சபாஷ்

வகுப்பு நண்பர் இரு குழந்தைகளின் தாய் சந்தோஷமாய் பல்லாண்டு வாழட்டும் :)

எதை இழந்தாலும் இழப்பு இல்லை, தன்னம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர! என்பதற்கு வாழும் ஓவியமாக உயிரூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் பென்ஸூ.

அருமையான வாக்கியம். (நன்றி:முகி)

ஓவியன்
23-06-2007, 01:06 PM
என் கண்ணிலே படத் தவறிய ஒரு அருமையான படைப்பு!, வாசிக்கும் போது நெஞ்சமே கனத்தது, எவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு அழகாக இவ்வளவு இயல்பாக.......

உங்களது அந்த நண்பர் இன்னும் பல நூறாண்டுகள் வாழ்வார் என்ற உங்கள் முத்தாய்ப்பான முடிவு எவ்வளவு உண்மை. அவரது வாழ்க்கை மீதான பற்றுதலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

அமரன்
23-06-2007, 02:31 PM
ஒற்றைவார்த்தையில் சொன்னால் இது ஒரு பொக்கிஷம்

சூரியன்
23-06-2007, 03:31 PM
நல்ல பாடம்

ஷீ-நிசி
23-06-2007, 04:55 PM
மிக அருமையாக இருந்தது... படித்து முடிக்கும்வரை பாரம் பயனித்துகொண்டேயிருந்தது.... மிக அருமை!

அக்னி
07-07-2007, 06:14 PM
நிகழ்வை தொகுத்தது அழகிய சுவை...

அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்...

Gobalan
10-07-2007, 04:15 PM
மனதை தொட்ட சம்பவம். அதை மிக அழகாக எதார்த்த நடையுடன் எழுதி நம் மனதை தொட வைத்த பென்ஸ்ஸுக்கு என் வாழ்த்துக்கள். மிக நன்றாக எழ்துகிறீர்கள், பென்ஸ். நன்றி.

மதி
10-07-2007, 04:22 PM
இவ்வளவு நாளாய் இதை விட்டு விட்டேனே பென்ஸ்..
அருமையான நடையில் சிக்கலான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்.
உங்கள் தோழியின் மனதைரியம் பாராட்டுக்குரியது...
அவர் மேலும் பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

இளசு
10-07-2007, 11:25 PM
மனங்களை மனிதத்தோடு படிக்கத் தெரிந்த பென்ஸால் மட்டுமே
இப்படி நெகிழ்வாய்ப் படைக்க முடியும்..

என் சிறப்பான பாராட்டுகள் இனிய பென்ஸ்!

வழக்கம்போல் நான் எழுத வேண்டிய விமர்சன வரிகளை
முகிலன் எழுதிவிட்டுப்போயிருக்கக் காண்கிறேன்..

முகில்ஸ் எங்கேப்பா?

ஓவியா
14-07-2007, 02:38 AM
ஆமாம் முகிலன் எங்கே???

செஸ்கடூன் ஆபிசர் எங்கோ காட்டுகுள்ளே இலை, கொடி, கனி என ஆராய்ச்சி செய்ய போயுள்ளாரோ???

mukilan
14-07-2007, 03:05 AM
அன்பு அண்ணா, சற்றே வேலைப் பளு. விரைவில் வருகிறேன்.

ஓவியா
14-07-2007, 03:11 AM
அன்பு அண்ணா, சற்றே வேலைப் பளு. விரைவில் வருகிறேன்.அண்ணா கூப்பிடால் மட்டும் வாரீங்களே!!
இப்படி சொல்லியே 2 வருடம் முடிந்து விட்டது. :D :D :D