PDA

View Full Version : என் தோட்டம்..



இளசு
23-10-2005, 11:05 AM
என் தோட்டம்..

மஞ்சள், சிவப்பில் வண்ண வண்ணப் பூக்கள்..
பார்க்க முடியவில்லை..
தூரத்தில் இருந்து பண் இசைக்கும் குயில்கள்...
கேட்க முடியவில்லை..
எதிரியிடம் ஒரு பிரச்னை..
இன்னும் தீரவில்லை..
ஏற்றிய தீபம் உன் கையில் சேர்ந்ததா?
எனக்கு விளங்கவில்லை...

என்னைப் புரிந்துகொள்..
எனது கோட்டைக்குக் காவல் நில்..
இடையில் நான் விட்ட பயணம் தொடர்ந்து
இலட்சிய எல்லையை நோக்கி செல்..
செய்யாவிட்டால்..?
நஷ்டம் ஒன்றுமில்லை..


பூக்களைப் பார்க்காமல்
புள்ளிசைக் கேட்காமல்
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருப்பேன்..
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில்

RRaja
02-11-2005, 10:14 AM
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருப்பேன்..
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில் உயிரோடு கல்லறைப்படுக்கை - அதிலும் தூக்கமின்றி பெரும் அவஸ்தை தான்! அமைதி இல்லாத வாழ்வில் எந்த லாபமும் இல்லை.

இளசு
02-11-2005, 08:53 PM
யாரும் கவனிக்காதிருந்த
இந்தத் தோட்டத்துக்கு
முதல் கருத்து அளித்துச் சிறப்பித்த
ராஜா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

வாரிசுகள் எப்படி நடத்தப்படவேண்டும்
என்று கலீல் கிப்ரன் எழுதிய அழகிய கவிதையை
தமிழில் நம் மன்றத்தில் இருவர் ஏற்கனவே
(பழைய திஸ்கி மன்றத்தில்) தந்துள்ளனர்.
ஒருவர் வந்தியத்தேவன்.
இன்னொருவர் செழியன்.
.
அது - எப்படி வாரிசுகள் வளர்க்கப்படவேண்டும் என்ற
பாடம்.

இந்தக் கவிதை - நிதர்சனம்..

தந்தையின் கனவுகள், கோட்டைகள்..
முடியாத யுத்தங்கள்..
இவற்றை எடுத்துச் சென்று அடுத்த கட்டம் காணும்படி
இறந்தும் அவன் ஆத்மா புலம்புவது...

அறிஞர்
02-11-2005, 09:05 PM
என் தோட்டம்..
என்னைப் புரிந்துகொள்..
எனது கோட்டைக்குக் காவல் நில்..
இடையில் நான் விட்ட பயணம் தொடர்ந்து
இலட்சிய எல்லையை நோக்கி செல்..
செய்யாவிட்டால்..?
நஷ்டம் ஒன்றுமில்லை..
இலட்சிய பயணத்தை அடையும் லாபங்கள் பல.... அடையாவிட்டால் நஷ்டங்கள் இல்லை.... என அழகான வரிகள்...

புவியில் பலரை போல் "தன்னை புரிந்துகொள்ள இங்கு ஒரு மனம் ஏங்குகிறது"

வாழ்த்துக்கள் இளசு

kavitha
03-11-2005, 10:12 AM
அண்ணா.... கவிதையின் விளக்கம் இன்னும் பாரத்தை ஏற்றிவிட்டு விட்டது.
எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் ஏமாற்றங்களும் இல்லைதான்.
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இருந்தால் எதிர்காலமே வீண் என்றே தோன்றுகிறது. சுமையா, சுகமா குடும்ப பாரம்? அத்தனை எளிதானதா தனியாளாய் இந்தத்தேரின் வடம் பிடிப்பது!

குழந்தைகளை எளிதாக வளைத்து உருவம் பிடித்து விடலாம் தான்(molding). ஆனால் அவர்களது ஆசைகள் என்ன என்பதை அறிந்து அதைத்தூண்டுவது தான் சிறந்தது என்பதே நான் பட்ட பாடம்.

சுவேதா
03-11-2005, 11:18 AM
சூப்பர் கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

பென்ஸ்
03-11-2005, 12:35 PM
குழந்தைகளை எளிதாக வளைத்து உருவம் பிடித்து விடலாம் தான்(molding). ஆனால் அவர்களது ஆசைகள் என்ன என்பதை அறிந்து அதைத்தூண்டுவது தான் சிறந்தது என்பதே நான் பட்ட பாடம்.

இளசு அவர்களே... நான் கவிதாவின் கருத்தை இதில் ஆதரிக்கிறேன்... கொல்லன் மகன் கொல்லன் என்றல்... ஒரு "மைக்கல் பெரடே" நமக்கு கிடத்திருக்க மாட்டார் அல்லவா???


காலவரையில்லாத
கனவுகள் என்னுள்ளே...
என் கனவுகளை கொன்று
உன் ஆசைகளுக்கான
என் பயணம்...

உன்னருகில்
நான் காத்திருப்பது
உனக்கான என் பயணத்தை
தொடரும் என்
மகனுக்காக..

பூக்களைப் பார்க்காமல்
புள்ளிசைக் கேட்காமல்
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருக்கிறேன்
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில்
முள்ளாய் என் முதுகில் .....
அவன் கனவுகள்....

கொஞ்சம் ஒவெரா இருக்கோ???

பிள்ளைகளை அவர்கள் கனவில் வாழ விடலாம் என்பது என் கருத்து....

இளசு
03-11-2005, 09:15 PM
மிக்க நன்றி கவீ...

எப்படி வாழவேண்டும்
எப்படி வளர்க்க வேண்டும்
என்பதெல்லாம் அறிவு வழி...

இப்படி ஆசைப்பட்டு
இத்தனை ஆதங்கப்படுவது
இதய மொழி..

(தகுதியற்ற வாரிசுகளை
தலைமைப்பதவியில் வைத்து
அழகு பார்ர்க்கும்
அப்பாக்கள் வழி!!!!??????)

இளசு
03-11-2005, 09:17 PM
சூப்பர் கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி சுவேதா..

இளசு
03-11-2005, 09:19 PM
... நான் கவிதாவின் கருத்தை இதில் ஆதரிக்கிறேன்... கொல்லன் மகன் கொல்லன் என்றல்... ஒரு "மைக்கல் பெரடே" நமக்கு கிடத்திருக்க மாட்டார் அல்லவா???


காலவரையில்லாத
கனவுகள் என்னுள்ளே...
என் கனவுகளை கொன்று
உன் ஆசைகளுக்கான
என் பயணம்...

உன்னருகில்
நான் காத்திருப்பது
உனக்கான என் பயணத்தை
தொடரும் என்
மகனுக்காக..

பூக்களைப் பார்க்காமல்
புள்ளிசைக் கேட்காமல்
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருக்கிறேன்
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில்
முள்ளாய் என் முதுகில் .....
அவன் கனவுகள்....

கொஞ்சம் ஒவெரா இருக்கோ???

பிள்ளைகளை அவர்கள் கனவில் வாழ விடலாம் என்பது என் கருத்து....


மிக்க நன்றி பெஞ்சமின்..

இது கொஞ்சமும் ஓவரில்லை.
சரியான பதில் கவிதை.

இது யதார்த்தம் என ஒரு பக்கம் கண்டு நான் சொல்ல
இது நிவாரணம் என ஒரு தீர்வை நீங்கள் சொல்ல...

எப்படிச் சொல்ல - என் உணர்வுகளை...

இதைத்தான் இதுபோன்ற இணையப்பதிவுகளின்
இதமான விளைவுகள் என்பேன்..

பென்ஸ்
04-11-2005, 07:19 AM
மிக்க நன்றி பெஞ்சமின்..

இது கொஞ்சமும் ஓவரில்லை.
சரியான பதில் கவிதை.

இது யதார்த்தம் என ஒரு பக்கம் கண்டு நான் சொல்ல
இது நிவாரணம் என ஒரு தீர்வை நீங்கள் சொல்ல...

எப்படிச் சொல்ல - என் உணர்வுகளை...

இதைத்தான் இதுபோன்ற இணையப்பதிவுகளின்
இதமான விளைவுகள் என்பேன்..

இந்த கவிதையை நிறைவெறாத கனவுகளுடன்
இறந்து போன ஒரு தந்தையின் நிலையில்
இருந்துதான் நான் முதலில் படித்தேன்...
நீங்கள் எழுதியுள்ளிர்கள்...மிக்க சரியே...

ஆனால் எனக்கு அவனது மகனின் கனவுகள் அழிக்க
படுமோ என்ற ஒரு எண்ணம் வந்ததால் நான் என்
கருத்தை சொன்னேன் ...

இன்னும் தயாராக இருக்கிறேன் உங்கள் அடுத்த கவிதைக்காக...

gans5001
24-01-2006, 10:12 AM
நான் விட்டு வந்த தோட்டம் என்னவாகுமோ என்ற கவலை கல்லறையிலும் தொடர்வதற்கு இருக்கும் போதே சரியான சந்ததியை நாம் வளர்க்காமல் போய்விடுவதால் இருக்குமோ?

ஆதவா
17-03-2007, 03:00 AM
என் தோட்டம்..

பூக்களைப் பார்க்காமல்
புள்ளிசைக் கேட்காமல்
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருப்பேன்..
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில்


முதலில் கவிதைக்கு ஒரு வந்தனம். கரு அருமையாக இருக்கிறது.

மகனிடமோ அல்லது மனைவியிடமோ சொல்லும் கவிதை.. சட்டென புரிந்துகொண்டாலும் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறதா என்று நோண்டுகிறது.. (சமீபகாலமாகவே இப்படித்தான்:icon_rollout: ) ஆனால் நேரடியாக கருத்து வாசிப்பவனின் இதயத்துக்குள் அமர்கிறது. ஒரு கல்லறைப் பிணத்தின் அழகிய புலம்பல் அதிலும் அவன் விட்டுச் சென்றவைகள் ஏராளம். பொதுவாக எந்த ஒரு மனிதனும் நிறைவாக இறப்பதில்லை. இறக்கும் அந்த ஒரு சில வினாடிகளில் முடிவில்லாத கோட்டைகளில் நிலையை எண்ணியவாறேதான் இருப்பான்.

கவிதை அழகாய் எடுத்துரைத்த பாங்கு மிக அருமை. :angel-smiley-026: . கடைசி பாராவில் காலம் மாறி இருக்கிற உணர்வு ஏற்படுகிறது. சரியா என்று தெரியவில்லை. புள்ளிசை என்றால் என்ன என்று தெரியவில்லை.

மேலும் எழுத வேண்டுகிறேன்..:icon_b:

இளசு
17-03-2007, 06:56 AM
விமர்சனத்திலகம் என் அன்பு நண்பன் கண்ஸ்.. எப்பவும் இப்படித்தான்..

ஒரு வரியில் மொத்த படைப்பின் உயிரை உருவி கொடுப்பார்..

நன்றி கண்ஸ்..

உங்களைக் காணாமல் ஏங்குபவர்களில் நானும் ஒருவன்..

---------------------------

நன்றி ஆதவா

புள்ளிசை - பறவைகளின் இசை..

''ஆத்மா'' இன்னும் உறங்காமல் அல்லல்படுகிறது..
எனவே இறந்தவனும் எதிர்காலத்தில் பேசுகிறான் -
புரண்டு படுப்பேன் என்று..

எல்லாம் ' இது நிறைவேறாம போறானே -இவன் கட்டை வேகாது' என நம் மக்கள் அங்கலாய்ப்பதைக் கேட்டதன் தாக்கம்!

--------------------------------

நூலாம்படை படர்ந்த திரியை விமர்சன நெய் ஊற்றி
ஏற்றி வைத்த பென்ஸ் &ஆதவாவுக்கு நன்றி மீண்டும்..

--------------------------------------------------

ஓவியா
17-03-2007, 03:17 PM
இளசு சாருக்கு பணிவான வணக்கம்.

கடமைகளுடன் சுடலை செல்லும் ஆன்மா உறக்கம் கொள்ளுமா???
கவிதை மிகவும் அருமை. வித்தியாசமான சிந்தனை.


பதிவுக்கு சம்பந்தம்/(மில்ல) ஒரு சம்பவம். (சும்மா சொல்லி வைக்கிறேன்)
இந்து முறைப்படி ஆன்மா தன் இறப்பை ஏற்றுக்கொள்ளுமா என்று பார்க்க நவதானியம் இட்டு காண்பார்கள். அதிகம் வளர்ச்சி இருந்தால், ஆன்மா சாந்தி கொள்கிறது என்று அர்த்தமாம். நான் கண்ட ஒரு வீட்டில் (ஒரு தாத்தா) மிகவும் அதிக வளர்ச்சி கொண்டு நவதானியம் இருந்தது. சந்தோஷமான இறப்பு என்று கூறினார்கள். அதே வீட்டில் ஒருரிரு வாரங்களிலே இன்னொரு இறப்பு, (6பருவ குழந்தைகளின் தாய்) நவதானியம் முளைக்கவே இல்லை. புழு பூத்து இருந்தது....ஆன்மா சாந்தி கொள்ளவில்லையாம்.....என்னமோ போங்க.......


பெஞசமீனின் கவிதையும் அருமை,

ஆதவாவின் குட்டி விமர்சனமும் அருமை.

இளசு
17-03-2007, 10:26 PM
சுவையான தகவலுடன் பின்னூட்ட ஊக்கம் தந்த ஓவியாவுக்கு நன்றி..

பென்ஸ், ஆதவா-வை சேர்த்து பாராட்டிய பாங்கு சிறப்பு..

பூமகள்
19-07-2008, 06:33 PM
வாவ்.... பெரியண்ணாவின் சிறந்த கவிதை...

மீண்டும் கண்டதில் திவ்ய திருப்தி..

தந்தை மகன் அர்த்தங்கள் பொதிந்ததாக என்னால் கொள்ளமுடியவில்லை..

ஒரு படைத்தளபதி.. தன் நாட்டு வீரர்களுக்கு உரைக்கும் இறுதி உரையாக எடுத்துக்கொள்ள முடிகிறது..

என் தேசத்தின் போராட்டம் இன்னும் ஓயவில்லை..
உன் உழைப்பும் போராட்டமும் நம் மண்ணைக் காக்க தேவை. - இப்படி சொல்வதாக எடுக்கலாமென நம்புகிறேன்..

பல கோணங்களில் எண்ணத் தூண்டும் மிகச் சிறந்த கவிதை..

பழரசம் குடித்த உணர்வு..

நன்றிகள் பெரியண்ணா.. :)

ஓவியா
19-07-2008, 10:33 PM
வாவ்.... பெரியண்ணாவின் சிறந்த கவிதை...

மீண்டும் கண்டதில் திவ்ய திருப்தி..

தந்தை மகன் அர்த்தங்கள் பொதிந்ததாக என்னால் கொள்ளமுடியவில்லை..

ஒரு படைத்தளபதி.. தன் நாட்டு வீரர்களுக்கு உரைக்கும் இறுதி உரையாக எடுத்துக்கொள்ள முடிகிறது..

என் தேசத்தின் போராட்டம் இன்னும் ஓயவில்லை..
உன் உழைப்பும் போராட்டமும் நம் மண்ணைக் காக்க தேவை. - இப்படி சொல்வதாக எடுக்கலாமென நம்புகிறேன்..

பல கோணங்களில் எண்ணத் தூண்டும் மிகச் சிறந்த கவிதை..

பழரசம் குடித்த உணர்வு..

நன்றிகள் பெரியண்ணா.. :)

ஆமாமாமா, இதான் ஐஸ் வைப்பது. :D:D:D

(சும்மா ஒரு கலாட்டாவிற்க்கு)

பென்ஸ்
19-07-2008, 11:51 PM
ஆமாமாமா, இதான் ஐஸ் வைப்பது. :D:D:D

(சும்மா ஒரு கலாட்டாவிற்க்கு)

குசும்பு அங்ங்....

(இதுவும் சும்மா ஒரு கலாட்டாவிற்க்கு)

இளசு...
இது நான் உங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டம்...
பலமுறை வாசித்து கொண்டிருக்கிறென்...
உங்கள் கவிதையையும்,, என் பின்னூட்டத்தையும்...
இன்றும்...

நாகரா
20-07-2008, 03:52 AM
என் தோட்டம்..

மஞ்சள், சிவப்பில் வண்ண வண்ணப் பூக்கள்..
பார்க்க முடியவில்லை..
தூரத்தில் இருந்து பண் இசைக்கும் குயில்கள்...
கேட்க முடியவில்லை..
எதிரியிடம் ஒரு பிரச்னை..
இன்னும் தீரவில்லை..
ஏற்றிய தீபம் உன் கையில் சேர்ந்ததா?
எனக்கு விளங்கவில்லை...

என்னைப் புரிந்துகொள்..
எனது கோட்டைக்குக் காவல் நில்..
இடையில் நான் விட்ட பயணம் தொடர்ந்து
இலட்சிய எல்லையை நோக்கி செல்..
செய்யாவிட்டால்..?
நஷ்டம் ஒன்றுமில்லை..


பூக்களைப் பார்க்காமல்
புள்ளிசைக் கேட்காமல்
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருப்பேன்..
நேற்றுமுதல் நான் வசிக்கும்
இந்தக் கல்லறைப் படுக்கையில்

ஈதேன் தோட்டம்

சிவப்பு முதல்
ஊதா வரை
ஏழு நிறப் பூக்கள்
என் மெய்க்குள்
எப்போதும்
ஒளிரும்
சக்கர தீபங்களாய்.
சப்த ஸ்வரங்கள்
எப்போதும்
ஒலிக்கும்
ஆன்ம கீதங்களாய்.
உயிர்ப்பில் ஓடும்
தீப வாசனை
கீதத் தீஞ்சுவை
உணர்வைத் தீண்ட
ஜீவ விருட்சமாய்
விழித்திருக்கிறேன்
நான்

உம் கவிதை என்னை உமிழச் செய்த கவிதை இது, நன்றியும் வாழ்த்துக்களும் இளசு.

ஷீ-நிசி
23-07-2008, 03:18 PM
கல்லறையில் மெளனம் மட்டுமே இருக்கும்.... கேட்க இயலாத இப்படியான சில ஆதங்கங்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் போலும்....

கடைசி வரியில்.. நீ செய்யாவிட்டாலும் நஷ்டம் ஒன்றுமில்லை.. என்று வெறுத்துபோய் விட்ட ஒரு தந்தையின் மனநிலையையே காண்கிறேன்..

முடிந்தால் செய்....இல்லைன்னாலும் பரவாயில்லை.. இந்த ரீதியில் பிள்ளையை வளர்த்திருக்கும் தந்தையை சொல்லியும் பலனில்லை... பிள்ளை ஊதாரியாவதும், ஊருக்கு உதவுபவனாய் வளர்வதும், பெற்றவர்களின் பங்கு 25%, மற்றவர்களின் பங்கு 75%. இதுவே என் கணக்கென்று கருதுகிறேன்.

இளசு ஜி யின் கவிதைகள் படிப்பதே அரிதாய் இருக்கிறது. புதியதாய் கவிதைகள் படைக்கவேண்டும் என்பதே என் ஆவல்!

இளசு
23-07-2008, 07:04 PM
பாமகள், நாகரா அவர்கள், ஷீ!

ஊக்க மொழிகளுக்கு நன்றி..

மனம் எதற்கோ எதனாலோ அலை(பா)யும்போதுதான்
அதிகம் கவிதைகள் எழுதியிருக்கிறேன்..

மனச்சலனங்கள் மீண்டும் வந்தால்
மறுபடி என்னை இப்பகுதியில் காணலாம்..