PDA

View Full Version : கங்குலி சதம்.



இளையவன்
22-10-2005, 02:45 AM
துலிப் கோப்பை கிரிக்கட் போட்டியில் கங்குலி அபாரமாக ஆடி சதத்தைப் பூர்த்தி செய்தார். 143 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 117 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார் இத்துடன் இப்போட்டியில் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இந்தச் சதத்தின் மூலம் தேர்வுக்குழுவினரின் பார்வையை கங்குலி தன்மீது திருப்பியுள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படாத கங்குலி ஏனைய போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நம்பப்படுகிறது.

மன்மதன்
22-10-2005, 05:45 AM
அடேங்கப்பா கங்குலி சதம் அடிப்பது ஹர்பஜன் சதமடிப்பது மாதிரி செய்தியாக்கப்படுகிறதே.. கங்குலி வெகுண்டு வா..........

பரஞ்சோதி
22-10-2005, 06:23 AM
சதம் அடித்த கங்குலிக்கு பாராட்டுகள்.

சதம் அடித்ததும் அரசியல்வாதி மாதிரி அறிக்கை/சவால் விடாத அவருக்கு மேலும் பாராட்டுகள்.

இந்திய அணியில் இடம் கிடைக்கும், இலங்கை அணியின் பந்து வீச்சை விளாசி ரன்கள் எடுக்க வேண்டும், அப்போ தான் ஒரு நாள் அணியில் நிரந்தரமான இடம் கிடைக்கும்.

இளையவன்
22-10-2005, 06:29 AM
கங்குலி மோசமாக விளையாடும் போது பக்கம் பக்கமாகத் தாக்கி எழுதியவர்கள் அவர் நன்றாக விளையாடும் போது அவரைப் பாராட்டி ஒரு பெட்டிச் செய்தியாவது போடாமல் விட்டால் தப்பில்லையா?

aren
22-10-2005, 06:48 AM
கங்குலி நிச்சயம் திரும்பவும் வருவார். ஆனால் அவரை எதிர்ப்பவர்கள் இப்பொழுது நமது இந்திய விளையாட்டு வீரர்களில் பலர். அவர் தூக்கிவிட்ட யுவராஜ்சிங், கைஃப் மற்றும் இர்பாஃன் பத்தான் ஆகியோரே அவருக்கு எதிராக பேசுகிறார்கள்.

இதற்குத்தான் டெண்டுல்கர் மாதிரி தன்னுடைய ஆட்டத்திலும் தன்னுடைய பணத்திலுமே குறியாக இருக்கவேண்டும் என்பது தெள்ளதெளிவாகிறது.

தஞ்சை தமிழன்
22-10-2005, 02:54 PM
கங்குலி இந்தியாவிற்குள் வேண்டுமானால் அடிக்கலாம். பெரிய அணிகளுடன் அவரது ஆட்டம் மோசமே> குறிப்பாக கடந்த ஓராண்டுகளாக.

அவர் அல்ல, யாராக இருந்தாலும் நன்றாக விளையாடுபவர்ளை மட்டுமே கொண்டதாக இந்திய அணி இருந்தால் அது வெல்லும் அணியாக இருக்கும்,

டெண்டுல்கராக இருந்தாலும் சரியாக ஆடவில்லை என்றால் தூக்க வேண்டியதுதான்.

rajasi13
23-10-2005, 06:18 AM
கங்குலி இந்தியாவிற்குள் வேண்டுமானால் அடிக்கலாம். பெரிய அணிகளுடன் அவரது ஆட்டம் மோசமே> குறிப்பாக கடந்த ஓராண்டுகளாக.

அவர் அல்ல, யாராக இருந்தாலும் நன்றாக விளையாடுபவர்ளை மட்டுமே கொண்டதாக இந்திய அணி இருந்தால் அது வெல்லும் அணியாக இருக்கும்,

டெண்டுல்கராக இருந்தாலும் சரியாக ஆடவில்லை என்றால் தூக்க வேண்டியதுதான்.
கங்குலியை பற்றி தப்புக்கணக்கு போடுகிரீர்கள்.இப்பொதைக்கு இந்தியாவில் அவரைப்போல் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப் உள்ள வீரர் சச்சின் மட்டுமே. அவரது சில ஷாட்கள் என்றுமே மறக்க முடியாதவை.அவருடைய அந்த வெறி இப்போது மழுங்கி இருக்கிறதே தவிர அழிந்து விடவில்லை. இதற்கு அவருடைய அரசியல் செல்வாக்கு காரணமாக இருக்கலாம். பந்து வீச்சையும் வீரர்களையும் சரியாக கையாள தெரியாமல் டிராவிட் தடுமாரியதை மறந்துவிட முடியாது. எனக்கு தெரிந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்க வேண்டியது அடுத்த உலககோப்பை வரையில் கங்குலி அல்லது டிராவிட் கேப்டன் என்பதை அறுதியிட்டு கூற வேண்டும்.அப்போதுதான் பதவியை பற்றி கவலைபடாமல் அவர்களால் போட்டிக்கு தயாராக முடியும்.

தஞ்சை தமிழன்
23-10-2005, 01:58 PM
என்னை பொறுத்தவரை இரண்டு பேருமே வீரர்களை கையாளுவதில் சிறந்தவர்களாக தோன்றவில்லை.

அதற்கு சிலவேளை கோச்சுகள் காரணமாக இருக்கலாம்.

சிறந்த கேப்டனால் அணி ஜெயித்தது என்பது இந்திய அணியில் சில ஆண்டுகளாகவே இல்லை. யாராவடு தனிப்பட்ட வீரரின் சதத்தாலோ அல்லது பவுலிங்கினாலோ மட்டுமே ஜெயிக்க முடிகிறது.

பிஃளாமிங்கினை போல திறமையாக அணியை நடத்த முடியாவிட்டாலும் ஓரளவு மானத்துடன் அணியை இவர்கள் கொண்டு செல்கிறார்களா?

இந்திய அணியின் வெற்றி பெரும்பாலும் நம்மைவிட குறைந்த தரத்தில் உள்ள அணிகளுடந்தான் அதிகமாக இருக்கிறது. நம்மால் இலங்கை அணியை கூட வெல்ல முடியவில்லை என்பது வெட்க கேடான விஷயம்.( நம்மிடம் உலகின் தரம் வாய்ந்த பேட்டிங் வர்டையும், பந்து வீச்சும் உள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது)

aren
23-10-2005, 11:42 PM
பிளமிங்க் கங்குலியைவிட திறமையானவர் என்பதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. இங்கிலாந்தின் மைக்கேல் வான் வேண்டுமானால் திறமமயான தலைவர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர் மற்ற ஆட்டக்காரர்களின் திறமையை அருமையாக வெளியே கொண்டுவந்தார். பிளிண்டாஃப் அவரே தமக்கு திறமையில்லை என்று நினைத்து தானாகவே ஓரம்கட்ட பார்த்தார். அதுபோல் மாத்யூ ஹாக்கார்டும் அதுமாதிரியே நினைத்தார். இவர்கள் இருவரையும் நன்றாக ஊக்கப்படுத்தியதால் அவர்கள் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றார்கள். இதற்கு முக்கியான பங்காற்றியது மைக்கேல் வான் அவர்களின் அபாரமான திறமையே.

பென்ஸ்
24-10-2005, 10:17 AM
Originally Posted by மன்மதன்
அடேங்கப்பா கங்குலி சதம் அடிப்பது ஹர்பஜன் சதமடிப்பது மாதிரி செய்தியாக்கப்படுகிறதே.. கங்குலி வெகுண்டு வா..........

மன்மதன், கங்குலி-நக்மா விவகாரதிர்க்கு பிறகு கங்குலி உருண்டு தான் போகிறர்...வெகுண்டு வர காணோம்


Originally Posted by aren
கங்குலி நிச்சயம் திரும்பவும் வருவார். ஆனால் அவரை எதிர்ப்பவர்கள் இப்பொழுது நமது இந்திய விளையாட்டு வீரர்களில் பலர். அவர் தூக்கிவிட்ட யுவராஜ்சிங், கைஃப் மற்றும் இர்பாஃன் பத்தான் ஆகியோரே அவருக்கு எதிராக பேசுகிறார்கள்.


வீரன் அதிகம் பேசமாட்டான், தலைவன் அளவோடு பேசுவான்..
தலைவர் கங்குலி அதிகம் பேசுவார், ஆதலால் வீரர்கள் கொஞ்சம் பேசுகிறர்கள்...இந்திய அணியில் அபாரமான வீரர்கள் இருக்கிறர்கள் (கங்குலி உட்பட), ஆனால் சரியான தலைமை இல்லை (கங்குலி உட்பட).... கங்குலியிடம் வேகம் இருக்கிறது .. விவேகம் இல்லை


Originally Posted by தஞ்சை தமிழன்
நம்மால் இலங்கை அணியை கூட வெல்ல முடியவில்லை என்பது வெட்க கேடான விஷயம்.

வெட்கப்படுவதர்க்கு இதில் என்ன இருக்கிறது... அவர்களும் உலக கோப்பை வென்றவர்கள்தானே... ஐந்து வருடங்களாக வெல்லமுடியாதவர்களாக இருந்தவர்கள்....:mad:

நல்ல தலைமை கிடைத்தால் உலக கோப்பை நமக்குதான்...:D