PDA

View Full Version : திருக்குறள் அறிவோம்thirunilavan
22-10-2005, 01:15 AM
திருக்குறள் அறிவோம்

இந்த தலைப்பில் உங்களை சந்திக்கின்றேன்.


முதலில்

சாதி ஒழிப்பும் திருக்குறளும்.

தன்னம்பிக்கையும் திருக்குறளும்

புத்தரும் திருக்குறளும்

ஏசுவும் திருக்குறளும்

காந்தியும் திருக்குறளும்

கடவுளும் திருக்குறளும்

அரசியல்வாதியும் திருக்குறளும்

திருடனும் திருக்குறளும்

உழவனும் திருக்குறளும்

நண்பனும் திருக்குறளும்

என பல தகவல் அளிக்க உள்ளேன்.

என்ன படிக்க நீங்க தயாரா?


திருநிலவன்
பட்டுக்கோட்டை.

pradeepkt
22-10-2005, 10:01 AM
தாராளமாகத் தாருங்கள் திருநிலவன்.
திருக்குறளைப் படிக்கக் கசக்குமா என்ன?

thirunilavan
22-10-2005, 03:57 PM
திருக்குறள் மந்திரம் பாடி தொடங்குவோம்.

1. அகர முதலாம் ஆதியே போற்றி
2. மலர்மிசை ஏகும் மாணடி போற்றி
3. தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி
4. எண்குணத் திலங்கும் இறையே போற்றி
5. அமிழ்த மழையாம் அருளே போற்றி
....தொடரும்.

திருக்குறள் - காந்தியடிகள்

" யான் தமிழ் கற்க விரும்பியதற்குக் காரணம் வள்ளுவரின் வாய் மொழியை அவருடைய தாய்மொழி மூலம் படித்தறிவதற்கேயாம்".
" நம்மில் சிலபேருக்கே திருவள்ளுவரின் பெயர் தெரியும். அந்த மாமுனிவரின் பெயரை வட இந்தியர்கள் அறியாமல் இருக்கிறர்கள். திருக்குறள் அறிவுக் கருவூலத்தை அவரைப் போன்று வழங்கியவர்கள் வேறு எவருமிலர்."

இது மகாத்மா காந்தியின் வார்த்தைகள்.

இனி காந்தி பின்பற்றிய குறள்களை காண்போம்.

அதிகாரம் : வாய்மை

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.

விளக்கம்
"வாய்மை" என்று சிறப்பித்துச்சொல்லப்படுவது யாதென்றல், பிற உயிர்களுக்குச் சிறிதளவும், எவ்விதத் தீங்கும் பயவாத சொற்களைச் சொல்லவேண்டும்.


அதிகாரம் : கொல்லாமை

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லந் தரும்.

விளக்கம்
அறச்செயல் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது ஓருயிரையும் கொல்லா நோன்பாகும். கொல்லுதல் பிற்ப் பாவச்செயல்கள் அனைத்தையும் தரும்.

ஆம் காந்திஜீயின் சத்தியம் அகிம்சை இதுவேயாகும்.

திருநிலவன்
பட்டுக்கோட்டை.

இளசு
22-10-2005, 06:10 PM
அரிய பணி திருநிலவன் அவர்களே.
அயராது தொடர்ந்து முடிக்க வாழ்த்துகள்.
குறட்பா, குறுஞ்செய்திகள் என்னும் சுவைக்கலவை - நல்ல வழி. தொடருங்கள்.
( எழுத்துகளில் சில வண்ணங்கள் அவ்வளவாய் பளிச்சிடவில்லை என நினைக்கிறேன்.)

பரஞ்சோதி
22-10-2005, 07:07 PM
நன்றி திருநிலவன், உங்கள் பணிக்கு என் பாராட்டுகள்.

பாரதி
28-10-2005, 11:53 AM
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் திருநிலவன்.

gragavan
28-10-2005, 11:55 AM
என்றென்னும் ஒலிக்கும் குரல் தீந்தமிழ்த் திருக்குறள். திருநிலவன் அதைத் திகட்டாமல் வட்டிலில் இட்டுத் தருகிறார். சுவையாக இருக்கிறது. திருக்குறள் எனக்கும் பிடித்த நூல். உங்கள் பார்வையை வைத்து எனது கருத்துகளையும் ஆங்காங்கே தெளிக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.

pgk53
28-10-2005, 05:37 PM
திரு நிலவன் அவர்களே-----குறளை எப்போது படித்தாலும், அதன் இனிமை ஒருபோதும் குறையாது. பழைய மன்றத்தில் குறள் பதிவு இருந்தது. ஆனால் இடையிலேயே தடைப்பட்டுவிட்டது.
இப்போது தாங்கள் குறள் நயம் கூறவந்தமைக்கு மிக்க மகிழ்கின்றேன்.
வாழ்த்துக்கள்.

pgk53
28-11-2005, 12:45 AM
நிலவன் அவர்களே-----என்ன ஆனது?

தொடருங்கள்!!!!!!

அறிஞர்
28-11-2005, 11:45 AM
நவம்பர் 3ந்தேதிக்கு பிறகு நிலவன் மன்றம் பக்கம் வரவில்லை.

வருவார்.. தருவார் என்ற நம்பிக்கையோடு

ராசராசன்
14-03-2006, 07:32 PM
திருக்குறள் பொழிப்புரையுடன் கூடிய குறுவட்டு (ஒலி/ஒளி வடிவில்) தற்போது 'சாப்ட் வியூ' நிறுவனத்தால் 'பிளாஷ்' மென்பொருள் வடிவில் வந்துள்ளது. இதில் பரிமேலழகர், மு.வ., மணக்குடவர் ஆகியோரின் தமிழ் உரைகளும், சுத்தானந்த பாரதியார் மற்றும் ஜி.யூ.போப் ஆகியோரின் ஆங்கில உரையுடனும் கூடிய பதிப்பு 93MB அளவில் இப்போது கிடைக்கிறது.

அன்பர்களுக்கு தேவைபட்டால் என்னால் தரவேற்றம் செய்ய முடியும்!

pradeepkt
15-03-2006, 08:29 AM
தேவைப் பட்டால் என்ன பட்டால்... :)
கண்டிப்பாக தரவேற்றம் செய்யுங்கள்.

sarcharan
15-03-2006, 08:33 AM
அட என்ன இப்படி கேட்டுக்கிட்டு...:confused:
தரவேற்றம் செய்யுங்கள்.
:D :D :D :D

ராசராசன்
15-03-2006, 09:14 AM
உத்தரவு அன்பர்களே..!
நான் இன்றே வீடு சென்றதும் தரவேற்றம் செய்து, உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

ராசராசன்
15-03-2006, 05:57 PM
http://www.chennaibest.com/discoverchennai/personalities/Img/valluvar.jpg
http://www.tamilnation.org/images/literature/valluvan.gif

திருக்குறள் அழுத்திய (winzip) Flash file 45MB அளவில் தரவேற்றம் செய்துள்ளேன். கள ஊறவுகள் தரவிறக்கம் செய்வதில் எதேனும் சிக்கல்கள் இருந்தால் தெரிவிக்கவும். மறுபடியும் தரவேற்றம் செய்கிறேன்.

இத்திருக்குறள் மென்பொருளை அவசியம் விரும்புவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

இங்கே செல்லவும்..
http://www.megaupload.com/?d=K1YGTGQ8 (http://www.megaupload.com/?d=K1YGTGQ8)

நன்றி..!

pradeepkt
16-03-2006, 03:43 AM
அருமையான மென்பொருள்
நன்றி தேனிசை ...

தேவிப்ரியா
11-12-2007, 10:35 AM
இத்திரி தொடரலாமா?

தேனிசை ஏற்றீய மென்பொருளை பெற்றவ்ர்கள் எல்லோரும் பெற தரவேற்ற வேண்டும். அவர் ஏற்றிய இடம் காலாவதியாகிவிட்டது.