PDA

View Full Version : என் டைரியிலிருந்துNarathar
21-10-2005, 02:35 PM
செப்டெம்பர் 6 வெள்ளிக்கிழமை

இன்றும் வழமை போலவே விடிந்தது, என் துயரங்களுக்கு விடிவு இல்லாமல். காலலயில் குளிக்கச்செல்லும் போது அம்மா கேட்டாள் நாளை சிவரூபியை பார்க்க வருவதாக சொல்லவா? என்று, நான் அவளை முறைத்த முறைப்பிலேயே அவளுக்கு பதில் கிடைத்திருக்கும் மௌனமானாள். காலை ஆகாரம் எடுக்ககமலேயே காரில் ஏறிப்போன என்னை, துயரத்துடன் நின்று மௌனமாக் அம்மா பார்த்தது என் மனதுக்குள் என்னவோ செய்தாலும். அதை தவிர்க்க வேறு வழி இல்லாதவனாக கலங்கி நின்றேன்...........

என்னவென்று மறப்பது என்னவள் சுணந்தாவை, என் பிஞ்சு சுதனை? அம்மாவின் கவலை அம்மாவுக்கு. தன் மகன் இப்படி தனியாய் நின்று கஷ்டப்படுகிறானே என்று. ஆனால் இது நான் கேட்டு வவங்கியதா? இல்லை இறைவன் எனக்களித்தது.

கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முழு ஊருமே புதுவருட கொண்டடட்டத்தில் திளைத்திருந்த வேள..... நான் அலுவலகத்துக்கு போகவில்லை, என் நண்பர் பஷீர் வந்திருந்தார், கதைத்துக்கொண்டிருந்தேன்.... அப்போது புத்தாடை அணிந்து புதுமலராய் எனக்கு காட்சியளித்தவள் அடுத்த பபதையிலிருக்கும் அம்மா வீடுவரை போய் வருகிறேன்.... வரும் வரை பஷீர் அண்ணாவோடு கதைத்துக்கொண்டிருங்கள்.... அவரை சாப்பிடக்கொடுக்காமல் அனுப்பி விடாதேயுங்கோ எல்லாம் சமைச்சு வச்சிருக்கிறன்.... அம்மா ஒருக்கா அத்தை வீட்டை போகனுமாம் அவவை ட்ரொப் பன்னிட்டு ஓடியாரன் என்று சுதனையும் எடுத்துக்கொண்டு போனவள் தான் ஓடியே போய் விட்டாள். இரவு முழுதும் குடித்துக்கும்மாளம் அடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவன் என்னவளையும் என் பாலகனையும் கடவுளிடம் அனுப்பிவிட்டான். என்னை தனிமை சிறையில் அடைத்து.

ஆபிஸில் எல்லாம் வழமை போலவே இருந்தது. சுமாவின் நடவடிக்கையை தவிர.

சுமா சுணந்தாவின் சிபாரிசில் என்னிடம் வேலையில் சேர்ந்தவள், சுணந்தாவின் நண்பி. சுணந்தாவின் மறைவுக்குப்பின்னால் என் மீது அதீத அக்கரை காட்டினாள். ஏனோ அந்த அக்கரை எனக்கு பிடிக்கவில்லை. அது அனுதாபத்தில் வரும் அக்கரையா இல்லை என் பதவி அந்தஸ்த்து மேல் வந்த அக்கரையா என்று அறியாமல் குழம்பிய நான் அவளை தவிர்க்கத்தொடங்கினேன்...

ஆனால் அதை புரிந்து கொண்டவளாக அவள் இல்லை. என் கவனத்தை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவதை அதிகரித்துக்கொண்டே வந்தாள். எனது எரிச்சலையும் அதிகரித்துக்கொண்டே வந்தாள். ஆனால் அவள் செய்கை அவளுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பிருப்பது போன்ற தோற்றத்தை ஆபிஸில் ஏற்படுத்தியிருந்ததையும் நான் அறிவேன். என்ன செய்ய? என் தனிப்பட்ட விடயத்துக்காக அவள் வேலைக்கு பங்கம் வருவதையும் என் மனம் விரும்பவில்லை.

அவள் ஏதாவது வெளிப்படையாக பேசினால் தானே என் விருப்பமின்மையை சொல்ல முடியும்? வெளிப்படையாகவும் அவள் பேசவும் இல்லை. இது எனக்கு பெரும் தலைவலியாக இருந்தது. நண்பர் பஷீரை இன்டர் கொம்மில் அழைத்தேன். வந்தார். சுமா விடயத்தைப்பற்றி அவரிடம் அலவலாவினேன்.. அவர் தன் தனிப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டு. அப்படியானால் சுமாவை எமது கண்டி கிளைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பிவிடுவோம் என்ற ஒரு உறுப்படியான ஆலோசணையை சொன்னார். அது சரி என்று எனக்குப்பட்டது.

முடிவை அவளிடம் இன்றே அறிவிக்கும் படி பஷீரிடம் சொன்னேன்........

அவர் அதை செய்திருக்க வேண்டும். மாற்றல் கடிதத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தாள் சுமா. வந்தவளை பேச விடாமல் வாழ்த்தி அனுப்பி வைக்கப்பார்த்தேன்... அவள் விடுவதாக இல்லை. என்னோடு தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றாள். என்ன வென்றேன்... என் மனதில் இருந்ததை அவள் ஒப்புவித்தாள். என்னோடு வாழ ஆசைப்படுவதாக கூறினாள். என்னோடு மீதி வாழ்க்கையில் துணைவர ஆசைப்படுவதாகவும் அதை தான் தோழிக்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் சொன்னாள். என்னால் அவளை அவள் உணர்ச்சிகளை இன்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் சுணந்தாவுக்குப்பிறகு யாரும் என் வாழ்க்கையில் வரக்க்கூடது என்ற என் முடிவு அவள் உணர்ச்சிகளைவிடவும் உறுதியானதாக எனக்குப்பட்டது.

அவளுக்கு ஒரு சொந்த சகோதரிக்கு புத்தி சொல்வதைப்போல புத்திசொல்லி அனுப்பிவைத்தேன் கண்ணீருடன் வெளியே சென்றாள். என் மனம் கணத்தது. என்றாலும் ஏதோ மனதிற்குள் நிம்மதி வந்தது போன்ற ஒரு உணர்வு.

பஷீருக்கு நன்றி சொன்னேன்.......... ஏதோ சொல்ல நினைத்தார் அவர் என்பது புரிந்தது, என்றாலும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதும் எனக்கு தெரிந்தது. எல்லோரும் சொல்வதைத்தான் அவரும் சொல்லப்போகிறார். கடைசிவரை இப்படியே இருக்க எண்ணமா? என்று ஆரம்பித்து வாழ்க்கையைப்பற்றிய ஒரு போதணையே நடத்தி முடிப்பார். இப்போதைக்கு அந்த போதணையை கேட்க விருப்பமில்லாததால் அவருடனும் பேச்சை சட்டென முறித்துக்கொண்டேன்

வீட்டுக்கு சென்றேன்...... அப்பா வந்திருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தோட்டம் தொரவுகளை பார்த்துக்கொண்டிருப்பதால் இங்கு அம்மாவுடன் இருக்க முடியாத சூழ்நிலை. அம்மாவும் மனைவியையும் குழந்தையையும் இழந்த என்னை விட்டு போக முடியாத சூழ் நிலை..... ஒரு வருடமாகியும், நான் எவ்வளவு சொல்லியும் அம்மா அப்பாவிடம் செல்லாமல் என்னோடு இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தாலும் ஏதோ அம்மா என்னோடிருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது.

என்னைப்பார்த்ததும் இருவரும் மௌனமானார்கள். இறுக்கத்தை தளர்த்த நான் அப்பாவிடம் குசலம் விசாரித்துவிட்டு மேலே எனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டேன்..........

செப்டெம்பர் 7 சனிக்கிழமை

காலையில் எழுந்திருக்க கொஞ்ச நேரமானது. நேற்று தூங்கப்போகும் போது மணி அதிகாலை மூன்றையும் தாண்டியிருக்க வேண்டும்...... என்ன யோசித்தேன் என்ன முடிவெடுத்தேன் என்பது எனக்கே ஞாபகம் இல்லை. என்றாலும் என் உணர்ச்சிகளையும் மீறி நான் நேற்றிரவு யோசித்ததாக என் மனது சொல்லியது...

நேற்று என் மேல் விருப்பம் கொண்ட சுமா அழுது கொண்டே போன காட்சி என் மனதை வாட்டியது. நேற்றிரவே அவளுடன் பேச வேண்டும் போல் பட்டாலும் பேசவில்லை. காலையில் எழுந்தவுடன் முதல் காரியமாக சுமாவின் கையடக்க தொலைபேசியில் அழைத்தேன்.....
என்னிடம் இருந்து அழைப்பை எதிர்பார்க்காத அவள் திகைத்தாள்.ளுங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும் வீட்டுக்கு வர முடியுமா என்றேன். இன்னும் ஒரு மணித்தியாலத்தில் வருவதாக சொன்னாள்.

நான் தொலைபேசியில் பேசியதை அம்மா வேடிக்கை பார்த்தாள். அவளைப்பார்த்து ஒரு மர்மப்புன்னகை வீசிவிட்டு பஷீருக்கும் அழைத்து வீட்டுக்கு வரும்படி கூறினேன். அம்மாவின் ஆச்சர்யம் இன்னும் அதிகமாகியது.

அம்மா இன்னைக்கு சமைக்காத....... சிவரூபி வீட்ட போறம். அம்மாவின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

சிவரூபி........ அம்மாவின் அண்ணன் மகள். என் முறைப்பெண். சின்ன வயதில் இருந்தே எனக்கு அவளை தெரியும். படித்தவள், அழகானவள், பண்பானவள். சின்னவயதிலிருந்தே அம்மாவின் ஆசை என்னை அவளுக்கு கட்டி வைக்கவேண்டும் என்பது. ஆனால் சுணந்தாவினது காதலை தெரிந்ததும் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பச்சை கொடி காடினாள்.

முதலில் நான் என் காதலைப்பறி சொன்னதே சிவரூபியிடம் தான். சிவரூபிக்கு அது கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்க வேண்டும் என்றாலும் பெருந்தன்மையோடு அம்மா அப்பாவிடம் பக்குவமாக என் கதலை எடுத்துச்சொல்லி அவர்கள் சம்மதத்தை வாங்கித்தத்ந்தவள் சிவரூபி.

சின்ன வயதிலிருந்தே என்னிடம் சண்டை போடுவதென்றால் சிவரூபிக்கு அல்வா சாப்பிடுவது போல். அப்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக யாழ்ப்பாணத்திலிருந்தோம்......

அந்த நினைவுக்ளே அனந்தமானவை, சிவரூபியின் அண்ணா ரூபனும் நானும் பள்ளித்தோழர்கள் ஒன்றாக வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கும் சென்றதுண்டு. படம் பார்க்கவும் சென்றதுண்டு. சிகரட்டை புகைத்துப்பார்க்க நாங்கள் இருவரும் உத்தேசித்து வீட்டு கொள்ளையில் எமது திட்டத்தை நிறைவேற்றும் போது சிவரூபியிடம் மாட்டிக்கொண்டு அவளை சமாளிக்க அவளுக்கு அப்பவுக்கு தெரியாமல் அவரின் பாக்கெட்டிலிருந்து திருடி பட்டுப்பாவாடை வாங்கிக்கிடுத்தது தனிக்கதை.

இவ்வாரான சின்னச்சின்ன நினைவலைகள் சிவரூபியையும் ரூபனையும் பார்க்கும் போது ஏற்படுவது உண்டு. என்னதான் முறைப்பெண்னாக இருந்தாலும் நானும் சிவரூபியும் அப்படிப்பழகவில்லை, அதற்கு முக்கிய காரணம் ரூபன். ரூபனோடு அவள் எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்ததால் நானும் அவளை ஒரு சகோதர மனப்பான்மையிலேயே பார்த்துப்பழகிவிட்டேன்.

இதை அம்மா புரிந்து கொள்கிறாள் இல்லை........ ஆனால் அவளுக்கு புரியவைக்க வேண்டும் அதுபோல் அம்மாவையும் அப்பாவையும் இந்த தள்ளாத வயதிலும் பிரித்து என்னிடம் அம்மாவும் யாழ்ப்பாணத்தில் அப்பாவும் தனித்திருப்பதிலும் எனக்கு உடண்பாடில்லை. அவர்கள் பிரிவுக்கும் ஒரு விடை கொடுத்தாக வேண்டும்

சுமாவும் பஷீரும் சொல்லி வைத்தாற்போல் ஒன்றாகவே வந்தார்கள். அவர்களுக்கு நான் ஏன் வரச்சொன்னேன் என்ற காரணம் தெரிந்திருக்கவில்லை. பஷீர் பொதுவாக வார இறுதி நாட்களில் பாதியை என் வீட்டில்தான் கழிப்பார். அவருக்கு சுமாவைப்பார்த்ததில் ஒரு சந்தேகம்.

ஏன் சுமா இங்கு வந்திருக்கின்றாள்? என்ற கேள்வி அவர்கேட்காமலேயே எனக்கு புரிந்தது. நானும் கொஞ்சம் சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று அவர்களை உட்காரவைத்துவிட்டு மேலே என் ரூமுக்கு வந்து உடைகளை மாற்றிக்கொள்ள வந்தேன். அம்மாவும் அப்பாவும் நான் சொன்னதுதான் தாமதம் தயாராகவே இருந்தார்கள். அவர்கள் முகத்தில் கல்யாணக்களை கட்டி இருப்பதைப்பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

உடை மாற்றிக்கொண்டு கீழே வந்த நான் சுமாவைப்பார்த்து ''சொன்னதும் வந்ததற்கு தாங்ஸ்....... அம்மா ஏதோ நல்ல காரியத்துக்கு போக வேண்டும்னு ஆசைப்படுறா... எனக்கு கூடப்பிறந்த சகோதரங்கள் யாரும் இல்லை. இருந்ததுகள் எல்லாம் லண்டன் ,கனடாவில் இருக்கின்றார்கள்..... அதுதான் என் சகோதரியாக நினைத்து உங்களை இங்கு வரச்சொன்னேன்..... உங்களுக்கு கஷ்டமில்லை தானே?'' என்றேன்.

அவள் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தாள். சரி போவோமா? பஷீர் நீங்க உங்க காரில சுமாவையும் அம்மா அப்பாவையும் கூட்டிகிட்டு சிவரூபி வீட்டுக்கு வரமுடியுமா? நான் ஒரு நண்பனை பார்த்துவிட்டு அப்படியே அங்கே வருகின்றேன் என்று சொல்லி தனியாக கிளம்பினேன்.

பஷீர் என்னை கேல்விக்குறியுடன் பார்த்தாலும், எங்கே போகிறேன் என்று கேட்கவில்லை ஆனால் அவர் குழம்பியது எனக்கு புரிந்தது. பஷீர் சொன்னதை செய்யுங்கோவன் நான் சீக்கிரம் வருகின்றேன் என்றேன் ஒரு மர்மப்புன்னகையோடு.

நான் நேராக ரூபனின் மெனேஜர் பாலமுரளி வீட்டுக்கு சென்று அவனை அழைத்துக்கொண்டு சிவரூபி வீட்டுக்கு சென்றேன்

அங்கு பஷீர் என் பெற்றோரையும் சுமாவையும் அழைத்துவந்திருந்தார். நாங்கள் வருவதை ஏற்கனவே ரூபனுக்கு சொல்லியிருந்ததால் அவனும் அவன் மனைவியும் வீட்டிலேயே இருந்தார்கள். அவனிடம் காலையில் பேசும் போது நல்லவிடயம் பேச வருகின்றோம் என்று மட்டுமே சொல்லியிருந்ததால் குழம்பிபோய் இருந்தான்.

ஏன் என்றால் அவனுக்குத்தெரியும். கடைசிவரை சிவரூபியை நான் மணக்கப்போவதில்லை என்று. பெரியவர்களின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச முடியாமல் அவன் வாயை மூடிக்கொண்டிருந்தாலும், நான் ஏதொ நல்ல விஷயம் பேசவருகின்றேன் என்பதை கேட்டதும் குழம்பிப்போன அவன் பால முரளியைக்கண்டதும் நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு விட்டான். பால்ய ஸ்னேகிதன் அல்லவா?

பாலமுரளி ரூபனிடம் மெனேஜராக வேலைசெய்கின்றவன். அவனுக்கும் சிவரூபிக்கும் காதல் இருப்பதை எதேச்சையாக புரிந்து கொண்ட நான் அது சம்பந்தமாக சிவரூபியிடம் கேட்ட போது அப்படி ஒன்றும் இல்லை என்று நாணத்தோடு சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.

அவள் முகத்தில் நான் முதன் முதலாக நாண ரேகையினைப்பார்த்துமே புரிந்து கொண்டேன் இருவருக்கும் காதல் இருப்பதை. ஒரு முறை ரூபனும் இதைப்பற்றி என்னிடம் பேசினான். ஆனால் அவனுக்கு பாலமுரளி சிவரூபி காதல் மேல் அவ்வளவாக விருப்பம் இல்லை. பாலமுரளி மலையகத்தை சேர்ந்த ஒரு சாதாரண வீட்டுப்பையன். நாங்கள் யாழ்ப்பாணத்தில் கொடி கட்டிபறந்த குடும்பம். எப்படி ஒத்துப்போகும் என்று கவலைப்பட்டான்.

நான் சிவரூபியின் அப்பாவைப்பார்த்து பேச்சை ஆரம்பித்தேன்...............

இங்க பாருங்க மாமா சிவரூபியை எனக்கு சின்னவயதிலிருந்தே தெரியும், அவளை நான் என் சகோதரியாப்பார்த்தேனே தவிர ஒரு நாளும் அவளை என் மச்சாளாக நான் பார்த்ததில்லை. நீங்களெல்லாம் அவளை எனக்கு கட்டிவைக்க ஆசைப்படுவது எனக்குத்தெரிந்தாலும். எனக்கு ஏனோ அவளை அப்படிப்பார்க்க மனசு வரவில்லை.
சுணந்தா இறந்த பிறகு மீண்டும் நீங்களும் அம்மவும் நாங்கள் கலயாணம் கட்டவேணும் என்று பிடிவாதம் பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்ல இல்லை. சிவரூபிக்கு என்ன குறைச்சல் அவள் ஏன் எனக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட வேணும்?

நான் காதலிச்ச போது அதை முதலில் சொன்ன்னது சிவரூபிக்கிட்டதான்.. ஆனால் அவள் காதலை அவள் ஏனோ என் கிட்ட சொல்லவில்லை. ஒரு வேளை சுணந்தாவை இளந்து தவிக்கும் என்னிடம் இதை எப்படி வந்து சொலவதென்று தயங்கினாளோ எனக்கு தெரியாது. ஆனால் அவள் சொல்லியிருக்கனும் ஏனோ சொல்லவில்லை என்று சொல்லி சிவரூபியைப்பார்த்தேன்......

என் பார்வையை தவிர்த்து தலை குனிந்தாள். நான் பேச்சை தொடர்ந்தேன்............... பாலமுரளியை எனக்கு நன்றாகத்தெரியும். நல்ல பையன். நம்பிக்கையானவன். அவனைப்பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகன் கம்பனி இன்னைக்கு கொடி கட்டிப்பறக்குதென்றால் அதற்கு முக்கிய காரணம் அவந்தான். நல்லதிறமைசாலி....

நான் பேசப்பேச அம்மாவின் முகம் கருத்துக்கொண்டு போனதை நான் கவனிக்கத்தவரவில்லை.............. நான் இவனுக்கு கல்யாணம் பேச வந்தால் இவன் யாருக்கோ கல்யாணம் பேசிக்கொண்டிருக்கின்றான் என்ற எரிச்சல் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. என்றாலும் மௌனமாகவே இருந்தாள்

மாமா, அம்மா, அப்பா போன்ற பழசுகளின் முகம் இருகிப்போயிருந்தாலும் ரூபனும் அவன் மனைவியும் சாதாரணமாகவே இருந்தார்கள். இப்போது ரூபன் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது போல நான் அவனை ப்பார்த்தேன். என் பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்ட அவன் பேச ஆரம்பித்தான்.

அப்பா இங்க பாருங்கோ..... சிவரூபியை முரளிக்கு கட்டிகொடுப்பதிலை எனக்கு சந்தோஷம் தான். நீங்கள் என்ன சொல்லப்போறிங்களோ என்ற பயத்திலதான் நான் இந்த பேச்சை இவ்வளவு காலமும் எடுக்காமல் இருந்தனான்.... என்றதும் சபையின் இருக்கம் சற்றே தளர்ந்தது.

மாமா சிவரூபியின் முகத்தைப்பார்த்தார்..... பின்னர் அம்மாவின் முகத்தைப்பார்த்தார்.... அப்பாவைப்பார்த்து அத்தான் நீங்கள் என்ன சொல்றியள் என்றார். அப்பா கொஞ்சம் இங்கிதமானவர். சின்னஞ்சிறுசுகள் ஆசைப்பட்டால் அதுக்கிடையில நாங்கள் குறுக்க நிக்கக்கூடாது. எங்கடை காலம் போல இல்லை இவங்கட காலம்.... நாங்கள் அப்ப வாழ்ந்த வாழ்க்கை இல்ல இப்ப...... அதுகளின்ற சந்தோசத்துக்கு குறுக்க நிக்கிறது அவ்வளவு நல்லா இருக்காது என்று அப்பா சொல்ல....

சிவரூபியினதும் பாலமுரளியினதும் முகம் மலர்ந்தது.............. சபையின் இருக்கம் முற்ருமுழுதாய் நீங்கி அங்கு சந்தோஷம் குடிகொண்டது.

இவர்களின் கல்யாணப்பெச்சுக்களுக்கிடையே அம்மா மீண்டும் முருங்கை மரம் ஏறினார்.....

அப்போ உன்ற கல்யாணம்? அப்பா கேள்விக்குறியோடு என் முகத்தைப்பார்த்தார்.

ரூபன் பஷீர் சிவரூபி முரளி எல்லோருமே நான் என்ன சொல்லப்போகின்றேன் என்பதை அறிய ஆவலாய் இருந்தார்கள்.
நான் ஒரு வெற்றுப்புன்னகையை உதிர்த்தேன்.........

அவர்கள் விடுவதாய் இல்லை. இப்போது ரூட் கிளியரான சந்தோஷத்தில் இருந்த சிவரூபி ஆரம்பித்தாள்
நீங்கள் கல்யாணம் ஒன்று செஞ்சுகொண்டதுக்கு பிறகுதான் நான் கல்யாணத்தைப்பற்ரி யோசிப்பேன்....... என்றாள்.

விளையாட்டாக சொல்கிறாளா இல்லை உண்மையாகவே சொல்கிறாளா எனக்கு புரியவில்லை.

அப்படின்னா நீ நாளைக்கே கல்யாணம் கட்ட தயாரா என்று கேட்டதும் எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

உங்கள் எல்லோருக்கும் ஒன்றா சொல்ல வேணும் என்டுதான் நான் இதை யாரிட்டயும் சொல்லவில்லை...
நாளைக்கு எனக்கு கல்யாணம் என்று சொல்லி விட்டு எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்தேன்.....

அவர்கள் முகத்தில் அதைர்ச்சியின் ரேகை, சந்தோஷத்தின்ரேகை என்று பரவலாகத்தெரிந்தது. நான் எனது பேச்சை தொடர்ந்தேன்......

எங்க கம்பனி ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அகதி முகாமுக்கு நாங்கள் எல்லோரும் நாளைக்கு போகப்போறோம். அங்க அனாதரவான பெண்பிள்ளைகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். அதில் ஒருத்தியை நான் கல்யாணம் முடிப்பதா முடிவு செஞ்சிருக்கேன்.....என்றதும் அம்மா ஏதோ சொல்ல வந்தா.... அம்மா இதுதான் என்ற முடிவு. இதை நீ தடுத்தா பிறகு நான் வேறு முடிவெடுக்க வேண்டிவரும் என்றவுடன் மௌனமானாள்..................

எல்லோரும் சந்தோஷமாக களைந்து சென்றார்கள்.

என் மனதிற்குள் சந்தோஷமில்லை....... வெறுமையாக இருந்தது. என் வெறுமையை சொல்லி சுணந்தாவுக்கு ஒரு மடல் வரைந்தேன்

அன்பின் சுணந்தா.......
நீ இல்லாமல் நான் வெற்றுயிராகத்தான் இவ்வளவு காலமும் இருந்தேன்...........
உன் நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு , நீ எனக்களித்த சந்தோஷங்கள், நீ எனக்கு கொடுத்த வாரிசு
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எங்கோ ஓடி மறைந்துவிட்டாய். ஆனால் உன் நினைவுகளை என்னிடம் இருந்து எப்போதும் நீ பிரிக்க முடியாது.... அது எனக்குள்ளே எனக்காக மட்டும் இருக்கும்
ஆனால் நான் நாளை முதல் வாழப்போகும் வாழ்க்கை என்னுடையதல்ல.................
அது என் பெற்றோருக்காக, இந்த சமூகத்துக்காக நான் வாழபோகும் வாழ்க்கை
எனக்கு நாளை யார் துணையாக வரப்போகிறாள் என்பதை நான் இன்னும் அறியேன்
ஆனால் உன் நினைவில் அவள் வாழ்க்கையை மட்டும் பாலாக்க மாட்டேன் என்பதை
உன்னிடம் உறுதியாக கூரிவிடுகிறேன். அதை நீயும் விரும்ப மாட்டாய். என்பதையும் நான்
அறிவேன்..............
உன் அன்பை என்றும் மறவாத உன் கணவன்

செப்டெம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை

நான் இன்று ஒரு புது மனிதனாக எழுந்திருந்தேன்.......... காலைப்பொழுது ஏனோ எனக்கு இனிமையானதாகப்பட்டது..... குளித்துவிடு சுணந்தா எனக்கு பரிசளித்த பட்டு வேடியை உடுத்திக்கொண்டேன்

இளசு
21-10-2005, 10:44 PM
அன்பு நாரதர்,
மெய்சிலிர்த்தேன்.
மனித உறவுகளின் இழப்புகள், வடுக்கள், சிக்கல் முடிச்சுகள், சங்கிலி இணைப்புகள்..
அத்தனையையும் நுட்பமாய்த் தொட்டுச் சென்ற கதை.
என் நெஞ்சையும்தான்.

பாராட்டுகள் நண்பா..
உங்கள் திறமைகளின் ஊர்வலம் தொடரட்டும்..

Narathar
22-10-2005, 10:35 PM
அன்பு நாரதர்,
மெய்சிலிர்த்தேன்.
மனித உறவுகளின் இழப்புகள், வடுக்கள், சிக்கல் முடிச்சுகள், சங்கிலி இணைப்புகள்..
அத்தனையையும் நுட்பமாய்த் தொட்டுச் சென்ற கதை.
என் நெஞ்சையும்தான்.

பாராட்டுகள் நண்பா..
உங்கள் திறமைகளின் ஊர்வலம் தொடரட்டும்..

நன்றி இளசு...............

என் கதைக்கு முதல் பாராட்டு உங்களீடமிருந்து வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.......

உங்கள் ஊக்கம் என்னை இனும் எழுத வைக்கும் என்று நம்புகிறேன்......................... ( வாசிப்பது நீங்கள் முற்பிரவியில் செய்த பாவத்தின் பலன் :D :D :D ...)

தமிழ் மன்றத்தில் இது எனது கன்னி முயற்சி

கதையிலுள்ள தவறுகளையும் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள்...
அது என் எதிர்கால (:eek: :eek: :eek: ) எழுத்தாற்றலை வளர்க்க உதவும்

பாரதி
23-10-2005, 01:44 PM
நன்றாக இருக்கிறது நாரதரே. அங்கங்கே தட்டுப்படும் சில எழுத்துப்பிழைகளை நீக்கி விட்டால் இன்னும் சிறப்பாகி விடும். பிரிவின் துன்பத்தில் உழழும் ஒரு மனிதனின் மனப்பான்மையை கதை நன்றாகவே தெளிவாக்குகிறது. பாராட்டுக்கள். உங்களின் தொடரப்போகும் முயற்சிகள் வெற்றிகரமாக, சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

gragavan
24-10-2005, 08:49 AM
நாரதர் இப்படி ஒரு புது அவதாரம் எடுப்பீர் என்று நினைக்கவில்லை. தமிழில் இது ஒரு இனிய வகை. ஈழத்தமிழைத்தான் சொன்னேன். அதை வைத்து ஒரு கதை. உணர்வுச் சிக்கலைச் சொல்லி அதை அவிழ்த்தும் விட்டிருக்கின்றீர்கள். பாரதியண்ணா சொன்னது போல ஒரு சில எழுத்துப்பிழைகளை நீக்கினால் மட்டுமே போதும். வாழ்த்துகள் நாரதரே.

Narathar
24-10-2005, 12:17 PM
நன்றி பாரதி மற்றும் ராகவன்...............
உங்கள் ஆலோசணைகளுக்கும் பாராட்டுக்களுக்கும்.

இந்த வாரம் கொஞம் வேலைப்பழு அதிகம்.......... நேரம் கிடைக்கும் போது கட்டாயமாக எழுத்து பிழைகளை சீர் செய்கிறேன்

aren
27-10-2005, 03:03 PM
நாரதரே, நீங்கள் கலகத்தில்தான் கில்லாடி என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். உங்களுக்கு இப்படி ஒரு திறமை இருப்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

ஒரு அருமையான கதையை எழுதி அதிலும் அந்த முடிவு நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. பாராட்டுக்கள்.

இன்னும் பல படைப்புகளை நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

poo
29-10-2005, 10:27 AM
நாரதரே... அருமை..

உண்மை நிகழ்வொன்றை நெகிழ்வாக அருகிலிருந்து உணர்ந்த உணர்வு வருகிறது!

நிறைய எழுதுங்கள்..

Narathar
19-01-2007, 01:08 AM
நன்றி அரேன் மற்றும் பூ அவர்களேஎ....
உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுத்ததூண்டுகிறது.....
எதிர்காலத்தில் இன்னும் எழுதுவேன்........
தண்டனைக்காக காத்திருங்கள்