PDA

View Full Version : கிரிக்கெட் - இந்தியா-இலங்கைPages : [1] 2

அறிஞர்
18-10-2005, 10:31 PM
மீண்டும் கிரிக்கெட் விழா ஆரம்பிக்கிறது...

இந்தியாவில் 7 ஒருநாள் போட்டிகள் விளையாட இலங்கை அணி 20ந்தேதி வருகிறது.

இந்திய அணி பயிற்சியை ஆரம்பித்துள்ளது. போட்டிகளின் விவரம்

1. அக்டோபர் 25 நாக்பூர்
2. அக்டோபர் 28 மொகாலி (இரவு-பகல்)
3. அக்டோபர் 31 ஜெய்பூர்
4. நவம்பர் 03 பூனே
5. நவம்பர் 06 அகமதாபாத் (இரவு-பகல்)
6 நவம்பர் 09 ராஜ்கோட்
7 நவம்பர் 12 வதோரா

இந்திய அணி

ராகுல் டிராவிட் (தலைவர்), சேவாக் (துணை தலைவர்), டெண்டுல்கர், யுவராஜ் சிங், வேணுகோபால் ராவ், சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்பஜன்சிங், முரளி கார்த்திக், இர்பான் பதான், அகார்கர், ஜே.பி.யாதவ், ஸ்ரீசந்த், காம்பீர், ஆர்.பி.சிங்.

இலங்கை அணி
அட்டப்பட்டு (தலைவர்), மகிள ஜெயவர்த்தனே (துணைத்தலைவர்), ஜெயசூர்யா, சங்க காரா, தில்சான், தரங்கா, சமரவீரா, சமிந்தாவாஸ், சந்தானா, மகரூப், அர்னால்டு, தில்காரா பெர்னாண்டோ, முரளீதரன், லோகுகே திகே, சோய்ஷா.

அறிஞர்
18-10-2005, 10:44 PM
இந்திய அணி கண்ணோட்டம்

இது வரை நான் பார்த்த இந்திய அணியில் இதுவே இளமைப்பட்டாள்ம் நிறைந்த அணி என்று சொல்லலாம். அனுபவம் வாய்ந்தவர்கள் மிகக்குறைவு... டிராவிட், சேவாக், டெண்டுல்கர் மூன்று பேருக்கும் நல்ல அனுபவம். யுவராஜ், பதான், ஹர்பஜன் சிங்.. குறைந்த அனுபவம்.

கங்குலி இல்லாதது பரம திருப்தி... சில நேரங்களில் ஜொலிக்கும் லட்சுமணன் இந்த முறை சேலஞ்சர் போட்டியில் கேப்டன் பதவியுடன் நன்றாக விளையாடியும் வாய்ப்பு இல்லாதது.. வியப்பு அளிக்கிறது. ஜாகீர்கான் இல்லாததும் ஆச்சரியமே... அகர்கர் எப்படியோ அணியில் ஒட்டிவிட்டார்.

காய்ப் இல்லாதது.. குறையே... யுவராஜ்.. பஞ்சாப் கிரிக்கெட் போர்டின் தயவால் நீடிக்கிறார்.

ஹர்பஜனுக்கு கங்குலி சர்ச்சையால் கருப்பு முத்திரை விழுந்துள்ளது. இந்த முறை ஜொலிக்காவிட்டால் ஓரம் கட்டப்படுவார் என எண்ணத்தோன்றுகிறது.

முரளி கார்த்திக் என்ன நிரந்தர 14வது ஆளா என எண்ணத்தோன்றுகிறது. இந்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா என பார்க்கவேண்டும்.

பாலாஜி, கும்ப்ளேக்கு இனி வாய்ப்பு என்பது அருகில் இருப்பது தெரியவில்லை.

புதியவர்கள் (வேணுகோபால் ராவ், சுரேஷ் ரெய்னா, டோனி, ஸ்ரீசந்த், ஜே.பி. யாதவ், காம்பீர், ஆர்.பி.சிங்) ஜொலித்தால்.... உலக கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது...
----------
ஒட்டு மொத்த அணியும் பார்த்தால்.. சேப்பலின் அணுகுமுறையில் அமைந்த அணி என எண்ணத்தோன்றுகிறது.

உலக கோப்பையை கருத்தில் கொண்டாலும்... சொந்த ஊரில் அடிப்பட்டால்... கேவலமே...

இளமை பட்டாளம் என்ன செய்யப்போகிறது பார்க்கலாம்.

அறிஞர்
18-10-2005, 10:59 PM
இலங்கை அணி கண்ணோட்டம்

இலங்கை அணி பலம் பொருந்திய அணியாக வருகிறது. அட்டப்பட்டு தலைமை பணியை தற்போது சிறப்போடு செய்கிறார்.

உலக அணியில்.. சங்க காராவின் ஆட்டம் என்னை வியக்கவைத்தது. மிகவும் அழகாக அடித்து ஆடினார். ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, தில்சான் என அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.

வாஸ், முரளீதரன் இருவரும் நல்ல அனுபவங்களுடன் வருகிறார்கள்... அவர்களின் பந்துக்களை இந்திய வீரர்கள் எப்படி சந்திக்கிறார்கள் என பார்க்கவேண்டும். சோய்ஷா அணியில் ஒட்டியுள்ளார்.... என்ன செய்கிறார் எனப்பார்ப்போம்.

அர்னால்டும், சந்தானாவும் கடைசியில் அணியை காப்பாற்றும் வண்ணம் ஆடுபவர்கள்..... இது அணிக்கு பெரிய பலமே.

புதியவர் தரங்கா.. பேட்டிங்கில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம்.
---
இலங்கை அணியின் அனுபவம் இந்திய அணி வீரர்களை விட சிறந்தது. அவர்களின் பார்வையில் இது ஒரு வெற்றித்தொடர் (7 போட்டியில் 5-2 அல்லது 4-3) என்ற கனவுடன் வருகிறார்கள்..

அவர்கள் கனவு பலிக்குமா... காத்திருந்து பார்ப்போம்.....

aren
19-10-2005, 01:55 AM
எனக்குத் தெரிந்தவரை மிகவும் பலம் குறைந்த இந்திய அணி கடந்த பத்து ஆண்டுகளில் இதுதான். திராவிடால் ஜரூரான நடவடிக்கைகள் எடுக்கமுடியுமா என்று தெரியாது. உள்ளூர் போட்டியானதால் எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்து இந்த டீமை தேர்வு செய்துள்ளார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு பக்கம் சாமிண்டா வாஸ் மறுபுறம் முரளீதரன் பந்து வீசினால் நம் மக்கள் தாங்குவார்களா என்று தெரியவில்லை. இது தவிற பெர்னாண்டோவும் மிகவும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இந்தியாவிற்கு கொஞ்சம் கஷ்டம்தான் என்பது என் கருத்து.

கங்குலி கய்ஃப் இல்லாத பட்சத்தில் லஷ்மனை நிறுத்திகொண்டிருக்கலாம். கொஞ்சம் அனுபவம் தேவை.

ஹர்பஜனுக்கு இதுதான் கடைசி போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
19-10-2005, 03:09 AM
ஆரெனின் கருத்துக்களே என் கருத்துக்களும்..... டிராவிட் மட்டும் நினைத்தால் முடியாது... சேவாக், டெண்டுல்கர்.. சில புதியவர்களின் கையில் உள்ளது....

பரஞ்சோதி
19-10-2005, 06:05 AM
நன்றி அறிஞர். போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும்.

pradeepkt
19-10-2005, 06:23 AM
சென்னையில எதுவும் ஆட்டங்கள் இல்லையா?

இளையவன்
19-10-2005, 06:38 AM
கப்டன் திராவிட்டை விட சச்சினையே சாப்பல் பெரிதும் நம்புவதாகத் தெரிகிறது. பயிற்சியாளரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்பார் என நம்புகிறேன்..

mania
19-10-2005, 06:39 AM
சென்னையில எதுவும் ஆட்டங்கள் இல்லையா?

:D இல்லை எல்லா போட்டிகளும் B செண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாத கடைசியில் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு ஒரு நாள் பகலிரவு போட்டி சென்னையில் நடக்கும்.:)
அன்புடன்
மணியா
(நீ எதுக்கு கேக்குற...:rolleyes: ..??? ஸ்டால் போடவா....??):D :D

pradeepkt
19-10-2005, 06:47 AM
:D இல்லை எல்லா போட்டிகளும் B செண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாத கடைசியில் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு ஒரு நாள் பகலிரவு போட்டி சென்னையில் நடக்கும்.:)
அன்புடன்
மணியா
(நீ எதுக்கு கேக்குற...:rolleyes: ..??? ஸ்டால் போடவா....??):D :D
அட சும்மா தெரிஞ்சிக்கலாமின்னுதான்...
உங்களுக்கு என் ஜெனரல் நாலேஜ் வளந்திட்டா கண்டுபுடிக்கவாவில மார்க்கு போயிருமேன்னு ஒரே பொறாமை :angry:

Narathar
19-10-2005, 11:55 AM
இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!1

இளையவன்
19-10-2005, 01:29 PM
சச்சின் சதமடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தர வாழ்த்துக்கள்

அறிஞர்
19-10-2005, 01:49 PM
:D இல்லை எல்லா போட்டிகளும் B செண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாத கடைசியில் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு ஒரு நாள் பகலிரவு போட்டி சென்னையில் நடக்கும்.:)
அன்புடன்
மணியா
(நீ எதுக்கு கேக்குற...:rolleyes: ..??? ஸ்டால் போடவா....??):D :D சொல்லிட்டிங்கள.. யாராவது நம் நண்பர்கள்... இந்தியாவுக்கு வருவார்கள்.. அவர்களை.... போட்டிக்கு அழைத்துச்செல்லவேண்டியது தங்கள் பொறுப்பு

அறிஞர்
19-10-2005, 01:50 PM
அட சும்மா தெரிஞ்சிக்கலாமின்னுதான்...
உங்களுக்கு என் ஜெனரல் நாலேஜ் வளந்திட்டா கண்டுபுடிக்கவாவில மார்க்கு போயிருமேன்னு ஒரே பொறாமை :angry: செனரல் நாலேஜ் வளர்ந்து.. எல்லாரிடமும் பந்தா விடலாம் அல்லவா...

அறிஞர்
19-10-2005, 01:50 PM
இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!1 நாட்டு பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது....

அறிஞர்
19-10-2005, 01:52 PM
கப்டன் திராவிட்டை விட சச்சினையே சாப்பல் பெரிதும் நம்புவதாகத் தெரிகிறது. பயிற்சியாளரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்பார் என நம்புகிறேன்.. சேலஞ்சர் போட்டியில் டெண்டுல்கர் சாதிக்கவில்லை... வருகிற போட்டியில் கொஞ்சம் நிதானம் காட்டினால் சாதிப்பார். முதலிருவரின் ஆட்டமே.. மிக முக்கியம்

Narathar
19-10-2005, 02:24 PM
நாட்டு பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது....

நன்றி அது கூடவே ஒட்டிப்பிறந்தது....................

rajasi13
20-10-2005, 04:42 AM
:D இல்லை எல்லா போட்டிகளும் B செண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாத கடைசியில் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு ஒரு நாள் பகலிரவு போட்டி சென்னையில் நடக்கும்.:)
அன்புடன்
மணியா
(நீ எதுக்கு கேக்குற...:rolleyes: ..??? ஸ்டால் போடவா....??):D :D

அட சும்மா தெரிஞ்சிக்கலாமின்னுதான்...
உங்களுக்கு என் ஜெனரல் நாலேஜ் வளந்திட்டா கண்டுபுடிக்கவாவில மார்க்கு போயிருமேன்னு ஒரே பொறாமை :angry:

எல்லாஞ் சரி அவரு என்னமோ ஸ்டால் கதைய சொன்னாரே அது என்னா?

pradeepkt
20-10-2005, 05:33 AM
ஏன்யா உங்களுக்கு இந்த வேலை...???
நானே சும்மா இருக்கேன்... நீங்க உள்ளது போதாதுன்னு ஹி ஹி ஹி :D :D

அறிஞர்
24-10-2005, 09:37 PM
ஏன்யா உங்களுக்கு இந்த வேலை...???
நானே சும்மா இருக்கேன்... நீங்க உள்ளது போதாதுன்னு ஹி ஹி ஹி :D :D:) :) :) என்ன பிரதிப்பை வம்புக்கு இழுக்கிறார்கள் போல

அறிஞர்
24-10-2005, 09:41 PM
இன்று முதல் ஆட்டம்...

இந்திய அணியில் மூன்று வேக பந்து வீச்சாளர்கள் (பதான், அகார்கர், ஸ்ரீசந்த்), ஒரு சுழற்பந்து வீச்சாளர் (ஹர்பஜன் சிங்), 7 மட்டைவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என எண்ணுகிறேன்.

பயிற்சி ஆட்டத்தில் தோற்ற இலங்கை.. வலுவான அணியாக உள்ளது.

கடைசியாக விளையாண்ட 50 போட்டிகளில் இலங்கை 34 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது. குறிப்பாக கடைசி 25 ஆட்டங்களில் 19 முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா 47ல் 22 மட்டுமே வெற்றிக்கண்டுள்ளது.

இளைஞர் பட்டாளம்.. இலங்கையை சமாளிக்குமா என்று பார்ப்போம்

aren
25-10-2005, 01:28 AM
அடித்தால் ஷேவாக் மட்டுமே அடிப்பார் என்று தோன்றுகிறது. மற்றவர்களெல்லாம் வெறும் பேப்பர் ஸ்கோர் அதாவது 25 - 35க்குள் தான் அடிப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆகையால், வெற்றி ஸ்ரீலங்காவிற்குத்தான் என்று நினைக்கிறேன்.

இளையவன்
25-10-2005, 03:43 AM
இந்திய அணி ரொஸ் வென்று முதலில் Bat பண்ணத் தீர்மானித்துள்ளது.

இளையவன்
25-10-2005, 04:11 AM
சேவாக் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார். இந்தியா 48/1. சச்சினுடன் ஜோடி சேர்ந்து ஆடவந்துள்ளார் இர்பான்.

இளையவன்
25-10-2005, 04:44 AM
சச்சின் 50 பந்துகளை எதிர் கொண்டு 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தியா 15 ஓவர் முடிவில் 88/1. வாழ்த்துக்கள் சச்சின்.

mania
25-10-2005, 04:46 AM
:D சச்சினுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.....:D
அன்புடன்
மணியா...:D

rajasi13
25-10-2005, 04:51 AM
அடித்தால் ஷேவாக் மட்டுமே அடிப்பார் என்று தோன்றுகிறது. மற்றவர்களெல்லாம் வெறும் பேப்பர் ஸ்கோர் அதாவது 25 - 35க்குள் தான் அடிப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆகையால், வெற்றி ஸ்ரீலங்காவிற்குத்தான் என்று நினைக்கிறேன்.
அப்படில்லாம் சொல்லாதீங்க..... ஐயோ சேவாக் அவுட்.

பிரியன்
25-10-2005, 05:11 AM
இந்தியா 135/1.. (20)

சச்சின் டெண்டுல்கர் 64*(66) - 8*4 1*6
இர்பான் பதான் 43*(38) - 6*4 1*6

இளையவன்
25-10-2005, 05:17 AM
இர்பானும் அரைச்சதமடித்துள்ளார்(6பவுண்ரி, 2 சிக்சர்) . சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இது இவருடைய மூன்றாவது அரைச்சதமாகும். கலக்குங்கோ இர்பான்.

இந்தியா 145/1 (21.5ஓவர்)
சச்சின் 65* (68)
இர்பான் 50*(41)

mania
25-10-2005, 05:18 AM
பதான் அரை சதம்.... பாராட்டுக்கள்...:D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
25-10-2005, 05:22 AM
பதான் தான் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்

பிரியன்
25-10-2005, 05:24 AM
இர்பான் பதான் 69*(49) 7*4 4*6

இந்தியா 167-1 (24)

இளையவன்
25-10-2005, 05:29 AM
இந்தியா 171/1 (25 ஓவர்)
சச்சின் 70* (76)
இர்பான் 71*(52)

mania
25-10-2005, 05:32 AM
பதான் போல திறமை மிக்க இளைஞர்கள் நிறைய இருக்கின்றார்கள். அவர்களை ஊக்குவித்து நல்ல தருணத்தில் உபயோகிக்க வேண்டியது கேப்டனின் திறமை....கங்கூலி மாதிரி வீம்புக்காக வேணுகோபால் ராவை அனுப்பி :rolleyes: காவு கொடுப்பதில் என்ன பிரயோசனம்...???/சபாஷ் ட்ராவிடும் கூட்டாக வேலை செய்யும் டீம் மேனேஜ்மெண்ட்டும்....:D
அன்புடன்
மணியா.....:D

இளையவன்
25-10-2005, 05:34 AM
இந்திய அணிக்கு இன்னொரு அதிரடி ஆட்டக்காரர் கிடைச்சாச்சு. அவர்தான் இர்பான். வாய்ப்புக் கொடுத்தவர்களுக்கு நன்றிகள்

இளையவன்
25-10-2005, 05:50 AM
இந்தியா 201/1 (30 ஓவர்)
சச்சின் 89* (92)
இர்பான் 81*(66)

இளையவன்
25-10-2005, 06:01 AM
84 (70) ஓட்டங்கள் பெற்ற இர்பான் தில்சானின் பந்து வீச்சில் ஜெயவர்த்தனாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துள்ளார்

இளையவன்
25-10-2005, 06:04 AM
93(96) ஓட்டங்கள் பெற்ற சச்சினும் ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா 207/3 (31.2 ஓவர்)

பரஞ்சோதி
25-10-2005, 06:09 AM
நன்றி இளையவன்,

தலை லைவ் பார்க்காமல் இங்கே என்ன பண்ணுறீங்க.

பரஞ்சோதி
25-10-2005, 06:15 AM
கடந்த சில ஆண்டுகளாக சச்சின் 90+ ரன்களில் அவுட் ஆவது அதிகமாகி வருகிறது. அதை எல்லாம் 100 ஆக்கினால் அவர் இன்னேறம் 50, 100கள் அடித்திருப்பார்.

அடுத்த போட்டிகளில் 100 அடிக்க வாழ்த்துகள்.

mania
25-10-2005, 06:16 AM
நன்றி இளையவன்,

தலை லைவ் பார்க்காமல் இங்கே என்ன பண்ணுறீங்க.

:D :D காலை வேலைகளை முடித்துவிட்டு கசின் ரூமில் (என் ஆஃபீஸிலேயே)பார்க்க போகலாம் என்றிருந்தேன். சச்சினும் பதானும் அடிக்க ஆரம்பித்தவுடன் என் இடத்தை விட்டு நகரவேயில்லை.கடைசி 10 ஓவர்கள் பார்க்க போயிடுவேன்....ஹி......ஹி....ஹி...:D
அன்புடன்
மணியா..

இளையவன்
25-10-2005, 06:18 AM
சச்சின் இர்பான் இணை 2 ஆவது விக்கட்டுக்கு 164 ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

பரஞ்சோதி
25-10-2005, 06:19 AM
இப்போ டிராவிட், யுவராஜ் ஆடுகிறார்கள், ஓவருக்கு 7 ரன்களை கஷ்டம் இல்லாமல் எடுத்தால் போதும், பின்னர் தோனி, ராவ், அகர்கார் எல்லாம் காட்டு அடி அடிக்கலாம்.

பரஞ்சோதி
25-10-2005, 06:20 AM
இர்பானை முன்னால் அனுப்பியது நல்ல பலன் கொடுக்கிறது, இது போன்ற சோதனைகள் அடிக்க செய்ய வேண்டும், அகர்கார் கூட இவ்வாறு அனுப்பலாம்.

பரஞ்சோதி
25-10-2005, 06:26 AM
இன்னும் 12 ஓவர்கள் இருக்கின்றன, குறைந்தது 100 ரன்கள் எடுத்தால் 350க்கும் மேல் எடுக்கலாம்.

பிரியன்
25-10-2005, 06:26 AM
இர்பானை முன்னால் அனுப்பியது நல்ல பலன் கொடுக்கிறது, இது போன்ற சோதனைகள் அடிக்க செய்ய வேண்டும், அகர்கார் கூட இவ்வாறு அனுப்பலாம்.


மிகச் சரியான முடிவாகவே அது அமையும். அவர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர். ஸ்ரிகாந்த் பலமுறை சொல்லியிருக்கிறார் இது பற்றி. ஜூனியர் அணியில் அகார்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியதாக ஞாபகம்இது போன்ற சோதனை முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். சேஸிங் பன்ணும் போது கடைசி வீரர் வரை விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையே முன்னால் ஆடுபவர்களை தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும்

இளையவன்
25-10-2005, 06:26 AM
இர்பான் பந்து வீச்சிலும் கலக்குவாராய் இருந்தால் இன்றைய ஆட்டநாயகனாக அவர்தான் தெரிவு செய்யப்படுவார்.

இளையவன்
25-10-2005, 06:31 AM
யுவராஜ்14(18) ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா 247/4 (38.5 ஓவர்)
ராவிட் 26* (27)

ராவிட்டுடன் தோனி இணைந்துள்ளார்

இளையவன்
25-10-2005, 06:57 AM
இந்தியா 247/4 (46.3 ஓவர்)

ராவிட் 51* (48)
தோனி 25* (24)

இளையவன்
25-10-2005, 07:04 AM
தோனி 38(28) ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா 316/5 (47.2 ஓவர்)
ராவிட் 57* (49)

இளையவன்
25-10-2005, 07:11 AM
அகார்கார் 1 (1) ரண் அவுட்

இந்தியா 317/6 (48 ஓவர்)
ராவிட் 57* (49)

இளையவன்
25-10-2005, 07:20 AM
இந்திய அணியினர் 50 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்புக்கு 350 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அணி சார்பில் சச்சின் 93 (96), இர்பான் 84 (70), மற்றும் ராவிட் 85*(63) ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை அணியில் தில்சான் 2 விக்கட்டுக்களையும் வாஸ் பெர்னாண்டோ மற்றும் மகரூப் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

இலங்கைக்கு வெற்றி இலக்கு 351 ஓட்டங்கள்.

இளையவன்
25-10-2005, 08:32 AM
இலங்கை 74/1 (10ஓவர்)

சனத் 27* (26)
சங்கக்கார 42* (33)

இளையவன்
25-10-2005, 08:37 AM
ஹர்பஜனின் பந்து வீச்சில் ராவிட்டிடம் பிடிகொடுத்து சனத் 27 (28) ஆட்டமிழந்துள்ளார்.

இலங்கை 74/2 (10.2 ஓவர்)
சங்கக்கார 42* (33)

பிரியன்
25-10-2005, 08:43 AM
சங்ககாரா ஆட்டமிழந்தார். இலங்கை 76 - 3

இளையவன்
25-10-2005, 08:45 AM
சேவாக்கின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து சங்கக்கார 43 (37)ஆட்டமிழந்துள்ளார்.

இலங்கை 76/3 (11.2 ஓவர்)
சந்தன 01* (03)

mania
25-10-2005, 08:46 AM
இலங்கை 12 ஓவரில் 77/3. சேவாக் , ஹர்பச்சன் பதான் தலா ஒரு விக்கெட்
அன்புடன்
மணியா..

இளையவன்
25-10-2005, 08:54 AM
சந்தன 3 (7) ஆட்டமிழந்துள்ளார்.
இலங்கை 88/4 (14.1 ஓவர்)
ஜெயவர்த்தன 9*(12)

ஹர்பஜன் 2விக்கட்

mania
25-10-2005, 08:59 AM
இலங்கை 89/5. சிங் 3 விக்கெட்
மணியா

இளையவன்
25-10-2005, 09:02 AM
ஆர்னல்ட் 0 (3) ஆட்டமிழந்துள்ளார்.
இலங்கை 88/5 (14.4 ஓவர்)
ஜெயவர்த்தன 9*(12)

ஹர்பஜன் 3விக்கட்

பிரியன்
25-10-2005, 09:17 AM
இலங்கை 119 -6 முரளி கார்த்திக் ஒரு விக்கெட் வீழ்த்தினார்

இளையவன்
25-10-2005, 09:19 AM
இலங்கை 120/6 (20.3 ஓவர்)
தில்சான் 22* (24)

இளையவன்
25-10-2005, 09:24 AM
முரளி கார்த்திக் 2 விக்கட் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை 121/7 (21.2 ஓவர்)

mania
25-10-2005, 09:25 AM
இலங்கை 123/7
மணியா

பரஞ்சோதி
25-10-2005, 09:25 AM
இப்போ கேப்டன் மீண்டும் ஸ்ரீசந்தை பந்து வீச அழைக்க வேண்டும். முதல் போட்டி என்பதால் மேலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், பயம் விலகும்.

mania
25-10-2005, 09:28 AM
இப்போ கேப்டன் மீண்டும் ஸ்ரீசந்தை பந்து வீச அழைக்க வேண்டும். முதல் போட்டி என்பதால் மேலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், பயம் விலகும்.

:D மழை வரும் போல இருந்தது. அதனால்தான் 25 ஓவராவது போட்டாகவேண்டும் என ஸ்பின்னர்களை வேகமாக பந்து வீச சொல்லியிருக்கிறது.:D
அன்புடன்
மணியா...

இளையவன்
25-10-2005, 09:34 AM
இலங்கை 130/8 (24.4ஓவர்)
முரளிகார்த்திக் 3 விக்கட்

பரஞ்சோதி
25-10-2005, 10:05 AM
சந்த் விக்கெட் வீழ்த்தி விட்டார், வாழ்த்துங்கள்.

பரஞ்சோதி
25-10-2005, 10:07 AM
தில் தில்காரா

பரஞ்சோதி
25-10-2005, 10:08 AM
தில் தில்காரா பயம் காட்டி விட்டார். பாராட்டுகள்.

பரஞ்சோதி
25-10-2005, 10:36 AM
டிராவிட் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு.

ஸ்ரீசந்த் இரண்டு விக்கெட்களை விழ்த்தியிருக்கிறார், நல்ல அறிமுகம்.

aren
25-10-2005, 10:36 AM
நம் மக்கள் முதல் ஒரு நாள் போட்டியில் வென்றுவிட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் வரும் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வெற்றிபெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

mania
25-10-2005, 10:44 AM
இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!1

:D :D நாரதர் கலகம் :rolleyes: நன்மையில் (நமக்கு ) முடிந்தது......!!!!:D
அன்புடன்
மணியா...:D

rajasi13
25-10-2005, 11:03 AM
இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!1
எல்லா மேட்சிலேயும் இப்படியே வாழ்த்துங்க.. ஹா ஹா ஹா இந்தியாவா கொக்கா..

இளையவன்
25-10-2005, 11:27 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
25-10-2005, 01:49 PM
வாவ் இந்தியர்களின் ஆட்டத்தை வெகு நாட்களுக்கு பிறகு பார்த்தேன்.... வெகு அருமை.

டெண்டுல்கர், பதானின் சாட்டுகள் வெகு அருமை. டிராவிட் முதலிலேயே அதிரடி ஆட்டம் ஆரம்பித்து கலக்கி ஆட்ட நாயகன் விருதை வாங்கிவிட்டார்.

என்னுடைய தேர்வு... பதான். சிறப்பாக விளையாடினார்.

வாழ்த்துக்கள் நம் அணியினருக்கு.

இளையவன்
25-10-2005, 11:45 PM
"சச்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இவரது வருகை மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியுள்ளது. இவ்வளவு நாளும் இவரை இழந்திருந்திருந்த நாங்கள் இப்போது மீண்டும் பெற்றுள் ளோம். பதான் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கியது கூட "மாஸ்டர்' சச்சின் கொடுத்த ஐடியா தான். இது பற்றி பயிற்சியாளர், அணி வீரர்களிடம் ஆலோசித்த பிறகு தான் பதான் களமிறக்கப்பட்டார். இவரது அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கும். ஹர்பஜன், முரளிகார்த்திக் சிறப்பாக பந்துவீசினர். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இலங்கையை குறைவாக மதிப்பிட முடியாது. இன்னும் ஆறு போட்டிகள் இருப்பதால் இத்தொடர் கடும் சவாலானதாக இருக்கும்"

- ராகுல் டிராவிட் (இந்திய கேப்டன்)-

பரஞ்சோதி
26-10-2005, 05:42 AM
போட்டிக்கு முன்னர் கவாஸ்கர் சொன்னது நினைவுக்கு வருது, "டிராவிட் கிரிக்கெட் விளையாட வந்த போது அவருக்கு சச்சின் நிறைய ஆலோசனைகள் கொடுத்தார், தற்போது கேப்டனாக இருப்பவருக்கும் சச்சின் ஆலோசனைகள் கொடுப்பார், டிராவிட்டும் அதை கேட்டு நடப்பார் என்று நம்புகிறேன்".

இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்க வாழ்த்துகள்.

Narathar
26-10-2005, 11:28 PM
கிரிக்கட்டாஆஆஆஆஆஆ?
எங்கே நடக்கிறது?
அது சரி.......
அதை எப்படி விளையாடுவார்கள்........???

பரஞ்சோதி
27-10-2005, 05:49 AM
நாளைய போட்டி இரவு பகல் போட்டியாக நடக்க இருக்கிறது, இதிலும் டாஸ் வெல்வது மிக முக்கியம்.

நான் முழு போட்டியையும் பார்க்க முடியும், நாளை விடுமுறை.

இளையவன்
27-10-2005, 01:33 PM
நாளைய போட்டியில் மட்டுமல்ல அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்று இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வாழ்த்துகள்.

aren
27-10-2005, 01:40 PM
நாளைய போட்டியில் மட்டுமல்ல அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்று இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வாழ்த்துகள்.

மொத்தம் ஏழு போட்டிகளாயிற்றே. அப்படின்னா மற்ற இரண்டு போட்டிகளும் டையில் முடியுமா?

aren
27-10-2005, 01:42 PM
நாளைய போட்டி இரவு பகல் போட்டியாக நடக்க இருக்கிறது, இதிலும் டாஸ் வெல்வது மிக முக்கியம்.

நான் முழு போட்டியையும் பார்க்க முடியும், நாளை விடுமுறை.

இப்படி வயித்தெறிச்சலையெல்லாம் கொட்டக்கூடாது. ஏதோ மாட்சை பார்த்து இங்கே ரன்னிங்க் ஸ்கோர் சொல்வதைவிட்டு விட்டு இப்படி எங்களை கடுப்பேத்துகிறீர்களே, இது நியாயமா?

பென்ஸ்
27-10-2005, 01:50 PM
Aren,

பகல் இரவு போட்டியக இருந்தால் அது உஙளுக்கு நல்லது தானே... உங்கள் நேர படி மாலை ஆட்டம் துவங்கும்... முழு ஆட்டமும் பார்கலாமே!!!!

அறிஞர்
27-10-2005, 01:51 PM
Aren,

பகல் இரவு போட்டியக இருந்தால் அது உஙளுக்கு நல்லது தானே... உங்கள் நேர படி மாலை ஆட்டம் துவங்கும்... முழு ஆட்டமும் பார்கலாமே!!!! அப்ப எனக்கு.. அதிகாலையில் தொடங்கி.. காலை வரை மேட்ச்....

எப்படியிருந்தாலும் பார்க்க போகிறேன்./...

aren
27-10-2005, 01:57 PM
Aren,

பகல் இரவு போட்டியக இருந்தால் அது உஙளுக்கு நல்லது தானே... உங்கள் நேர படி மாலை ஆட்டம் துவங்கும்... முழு ஆட்டமும் பார்கலாமே!!!!

இங்கே காட்டினால்தானே பார்க்கமுடியும். கிரிக்கெட் மாட்சை சிங்கப்பூரில் காட்டவில்லையே. அதனால்தானே இந்த கடுப்பு.

பென்ஸ்
27-10-2005, 02:10 PM
கவலை படாதீர்கள் இளையவன் மன்றதில் ரன்னிங் கமாண்ட்ரி கொடுப்பார்... நீங்கள் அதை ரசிக்கலாம்.. :D :D :D

இளையவன்
27-10-2005, 02:20 PM
மொத்தம் ஏழு போட்டிகளாயிற்றே. அப்படின்னா மற்ற இரண்டு போட்டிகளும் டையில் முடியுமா?

தவறுக்கு வருந்துகிறேன். அதில் 7-0 என்று வரவேண்டியது 5-0 என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி

aren
27-10-2005, 02:35 PM
கவலை படாதீர்கள் இளையவன் மன்றதில் ரன்னிங் கமாண்ட்ரி கொடுப்பார்... நீங்கள் அதை ரசிக்கலாம்.. :D :D :D

நன்றி பெஞ்சமின் அவர்களே.

அறிஞர்
27-10-2005, 02:43 PM
இங்கே காட்டினால்தானே பார்க்கமுடியும். கிரிக்கெட் மாட்சை சிங்கப்பூரில் காட்டவில்லையே. அதனால்தானே இந்த கடுப்பு. அமெரிக்காவிலும் காட்டவில்லை. எல்லாம் இண்டர்நெட் மூலம் பணம் கட்டிதான் பார்க்கிறோம்

aren
27-10-2005, 03:06 PM
அமெரிக்காவிலும் காட்டவில்லை. எல்லாம் இண்டர்நெட் மூலம் பணம் கட்டிதான் பார்க்கிறோம்

இண்டெர்நெட்டில் வருகிறதா? இங்கேயில்லையே. கொஞ்சம் விளக்கமாக எழ்துங்களேன்.

இளையவன்
27-10-2005, 11:11 PM
இண்டெர்நெட்டில் வருகிறதா? இங்கேயில்லையே. கொஞ்சம் விளக்கமாக எழ்துங்களேன்.

http://www.cricketon.tv/ இதற்கு ஒரு முறை சென்று பாருங்கள்.

பென்ஸ்
28-10-2005, 09:10 AM
இலங்கை 1/1......... ஜெயசூரியா, பதான் பந்தில் விழ்ந்தார்

பரஞ்சோதி
28-10-2005, 09:38 AM
ஸ்ரீலங்கா 33/3 விக்கெட்களை இழந்துள்ளது.

பரஞ்சோதி
28-10-2005, 09:39 AM
டாஸ் வென்று, பவுலிங்க் தேர்வு செய்தது பலன் கொடுக்கிறது.

பரஞ்சோதி
28-10-2005, 09:39 AM
இலங்கை அணியை 200க்குள் சுருட்டுவார்களா?

பரஞ்சோதி
28-10-2005, 09:39 AM
வள்ளல் அகர்கார் நன்றாக பந்து வீசுகிறார்.

பரஞ்சோதி
28-10-2005, 09:40 AM
பதான் இரண்டு விக்கெட்கள், அகர்கார் ஒரு விக்கெட். இப்போ சங்ககாரா, மற்றும் அர்நால்ட் விளையாடுகிறார்கள்.

பிரியன்
28-10-2005, 09:48 AM
தகவல்களுக்கு நன்றி பரஞ்சோதி

mania
28-10-2005, 09:52 AM
தகவல்களுக்கு நன்றி பரஞ்சோதி

:D :D காலத்தின் கட்டாயம்.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....

பிரியன்
28-10-2005, 09:57 AM
:D :D காலத்தின் கட்டாயம்.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....

விடுமுறையிலும் அலுவலகத்தில உட்கார்ந்துகிட்டு இருக்கேன். நக்கல் பண்ணாதீங்க தலை:) :)

mania
28-10-2005, 10:04 AM
விடுமுறையிலும் அலுவலகத்தில உட்கார்ந்துகிட்டு இருக்கேன். நக்கல் பண்ணாதீங்க தலை:) :)

:D :D அய்யோ பிரியன் நான் நக்கல் பண்ணியது பரம்சை....:D .ராகவன் ஒரு முறை கேட்டானே :rolleyes: விஜிபி மாதிரி தவணை முறையில்.....!!!???:D
அந்த மாதிரி கேட்டுவிட்டு பிறகு போய் ஒவ்வொரு கமெண்ட்டா மாத்தியிருக்கிறான்...:D :D அதான் சொன்னேன்....:D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
28-10-2005, 10:15 AM
இலங்கை 65 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பு. பதான் 4 விக்கெட்களை அள்ளினார்.

mania
28-10-2005, 10:16 AM
15 ஓவரில் 65/5. பதான் 4 விக்கெட்டுகள்
அன்புடன்
மணியா..

பரஞ்சோதி
28-10-2005, 10:16 AM
:D :D அய்யோ பிரியன் நான் நக்கல் பண்ணியது பரம்சை....:D .ராகவன் ஒரு முறை கேட்டானே :rolleyes: விஜிபி மாதிரி தவணை முறையில்.....!!!???:D
அந்த மாதிரி கேட்டுவிட்டு பிறகு போய் ஒவ்வொரு கமெண்ட்டா மாத்தியிருக்கிறான்...:D :D அதான் சொன்னேன்....:D
அன்புடன்
மணியா..:D

தலை, ஹா ஹா!

நீங்க இருப்பதை பார்த்து, பயந்து தான் கமெண்டாக கொடுத்தேன், இல்லை என்றால் விட்டு போயிருப்பேன். :D :D

பிரியன்
28-10-2005, 10:17 AM
இலங்கை 65 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பு. பதான் 4 விக்கெட்களை அள்ளினார்.

அப்ப நிசமாவே இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவு காலம் பொறந்திட்டதா:) :) :)

தலை உங்கள் குறும்பை ரசித்தேன்:D :D :D

பரஞ்சோதி
28-10-2005, 10:18 AM
15 ஓவரில் 65/5. பதான் 4 விக்கெட்டுகள்
அன்புடன்
மணியா..

தலை, நான் உங்களுக்கு முன்பே 5 விக்கெட்களை அள்ளி விட்டேன். :D :D

பிரியன்
28-10-2005, 10:37 AM
இலங்கை 77/6 19 ஓவர் - ஹர்பஜன்சிங் - 1 விக்கெட்

பிரியன்
28-10-2005, 10:57 AM
இலங்கை 84 / 7 (25 ஓவர் )

சமிந்தா வாஸ் - ரன் அவுட் (அகார்கர்)

அறிஞர்
28-10-2005, 11:00 AM
இலங்கை நிலை பரிதாபம்... 150 ரன் எடுப்பதே சந்தேகமாக உள்ளது

அறிஞர்
28-10-2005, 11:19 AM
எட்டாவதும் காலி

அறிஞர்
28-10-2005, 11:20 AM
எட்டாவதும் காலி 104-8 யாதவின் பந்துவீச்சில் யுவராஜ் கேட்ச் பிடிக்க..... மகரூப் காலி

பரஞ்சோதி
28-10-2005, 11:21 AM
அறிஞரின் அசத்தல் கமெண்டரிக்கு நன்றி.

பரஞ்சோதி
28-10-2005, 11:22 AM
விக்கெட்கள் மாதிரி என்னுடைய பதிவுகள் விழுகிறதே!

தலை வேறு பார்க்கிறார்.

பரஞ்சோதி
28-10-2005, 11:22 AM
அறிஞரே!

அங்கே டிடி, ஃபாக்ஸ் ஸ்போர்ஸ் எல்லாம் வருகிறதா?

பரஞ்சோதி
28-10-2005, 11:22 AM
அடுத்த இரண்டு விக்கெட்களையும் சீக்கிரமாக எடுங்க அறிஞரே!

அறிஞர்
28-10-2005, 11:22 AM
அடுத்தும் எடுத்தாச்சு

104-9

இந்த ஆட்டத்தில் இரண்டாம் முறை ஹாட்ரிக் சான்ஸ் கிடைத்தது.... ஆனால் மூன்றாம் விக்கெட் கிடைக்கவில்லை

பரஞ்சோதி
28-10-2005, 11:27 AM
இரண்டு முறையும் ஹாட்ரிக் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது.

அறிஞர்
28-10-2005, 11:36 AM
எல்லா விக்கெட்டுகளும் வீழ்ந்தன....

இலங்கை மொத்தமாக... 122 ரன் எடுத்துள்ளது.

இந்தியாவிற்கு எளிதான இலக்கு..... விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டுவார்களா.

அணியில் அனைவரும் பிரகாசிக்கின்றார்கள். கங்குலி உள்ளே வரவேண்டுமென்றால் யாரை வெளியில் தள்ளுவது எனப்பிரச்சனை.

கங்குலி இன்றி.. அணியில் நல்ல ஒற்றுமை நிலவுகிறது. ஒரு புது தெம்பை அணி வீரர்களிடம் காணமுடிகிறது. குறிப்பாக டெண்டுல்கர் சுறு சுறுப்புடன் பவுலர்களுக்கு டிப்ஸ் தருகிறார்.

இளையவன்
28-10-2005, 11:39 AM
இலங்கை 122/10

mania
28-10-2005, 11:40 AM
எல்லா விக்கெட்டுகளும் வீழ்ந்தன....

இலங்கை மொத்தமாக... 120 ரன் எடுத்துள்ளது.

இந்தியாவிற்கு எளிதான இலக்கு..... விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டுவார்களா.

அணியில் அனைவரும் பிரகாசிக்கின்றார்கள். கங்குலி உள்ளே வரவேண்டுமென்றால் யாரை வெளியில் தள்ளுவது எனப்பிரச்சனை.

கங்குலி இன்றி.. அணியில் நல்ல ஒற்றுமை நிலவுகிறது. ஒரு புது தெம்பை அணி வீரர்களிடம் காணமுடிகிறது. குறிப்பாக டெண்டுல்கர் சுறு சுறுப்புடன் பவுலர்களுக்கு டிப்ஸ் தருகிறார்.

கங்கூலியை உள்ளே கொண்டுவர ரொம்பத்தான் கவலை படுறீங்க....?????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

பென்ஸ்
28-10-2005, 11:41 AM
கங்குலி உள்ளே வரவேண்டுமென்றால் யாரை வெளியில் தள்ளுவது எனப்பிரச்சனை.

கங்குலி இன்றி.. அணியில் நல்ல ஒற்றுமை நிலவுகிறது. ஒரு புது தெம்பை அணி வீரர்களிடம் காணமுடிகிறது

அறிஞர்... என்ன சொல்ல வருகிறீர்கள்... :D :D :D

அறிஞர்
28-10-2005, 11:41 AM
கங்கூலியை உள்ளே கொண்டுவர ரொம்பத்தான் கவலை படுறீங்க....?????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:Dயாருக்கு வேணும் கங்குலி... உலக கோப்பை வேண்டுமானால் கங்குலி வெளியே இருக்கவேண்டும்.

வீட்டில் இருக்கிற..... இரு வட இந்திய நண்பர்கள்... கங்குலி வரவேண்டுமென பிராதிக்கிறார்கள்

அறிஞர்
28-10-2005, 11:44 AM
அறிஞர்... என்ன சொல்ல வருகிறீர்கள்... :D :D :D கங்குலி கடினப்பட்டு உள்ளே வர முயற்சிக்கிறார். அவருடைய கடந்த மாட்ச் ரன்கள் அதை பறைசாற்றுகின்றன. வட இந்தியர்கள் அவர் வரவை விரும்புகின்றனர்... ஆனால் தென்னிந்தியர்கள் விரும்பவில்லை.

கங்குலி தேவையில்லை என்பதே என் எண்ணம்

பிரியன்
28-10-2005, 11:45 AM
கங்குலியை ரெம்பவும் போட்டு தாக்காதீங்க பாவம்...... விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பாதளத்துக்கு போவதும் பின்பு மீண்டு வருவதும் இயற்கையாக நடக்கும் ஒன்றே. ஒரு வீரராக கங்குலி அணிக்குள் தன்னை நிருபிக்க வேண்டியிருக்கிறது. இத்தைகய சூழலை எந்த ஒரு விளையாட்டு வீரனும் சவலாகவே எடுத்து கொள்வான்..... கங்குலியும் அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்........

பென்ஸ்
28-10-2005, 11:48 AM
கங்கூலி வரட்டும், தன் திறமையை நிருபித்து கொண்டு பின்னர் வரட்டும்... ஆனால் கேப்டனாக அல்ல B) ... அவர் ஒரு சிறந்த மட்டையர் தானே!!!??? :D :D :D

பிரியன்
28-10-2005, 11:51 AM
கங்கூலி வரட்டும், தன் திறமையை நிருபித்து கொண்டு பின்னர் வரட்டும்... ஆனால் கேப்டனாக அல்ல B) ... அவர் ஒரு சிறந்த மட்டையர் தானே!!!??? :D :D :D

அதைத்தான் நானும் சொல்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனியாளாக ஆட்டத்தின்போக்கை மாற்றும் வல்லமை உள்ள விளையாட்டு வீரர்களில் அவரும் ஒருவர்.
இனிமேல் கேப்டன் என்பது இதே பயிற்சியாளரின் கீழ் அவ்வளவு பொருத்தமாக இருக்காது.....அணியின் நலனுக்காக விளையாடலாமே.....

இளையவன்
28-10-2005, 12:16 PM
இந்தியா 50/0

பிரியன்
28-10-2005, 12:33 PM
இந்தியா 80/1 9.4 ( ஓவர் )

சேவாக் - 38
சச்சின் - 36*

அறிஞர்
28-10-2005, 01:22 PM
யாதவ் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது.....

87/1 (11 ஓவர்) டெண்டுல்கர் 50 வது ரன்னை நோக்கி பயணம்.

இளையவன்
28-10-2005, 01:31 PM
சச்சின் 51* (43)
இந்தியா 99/1

இளையவன்
28-10-2005, 01:32 PM
வாழ்த்துக்கள் சச்சின்.

அறிஞர்
28-10-2005, 01:32 PM
71 வது 50ஐ கடந்த டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள்...

இளையவன்
28-10-2005, 01:46 PM
இந்தியா 115/2
சச்சின் 61*

இளையவன்
28-10-2005, 01:58 PM
இந்தியா 8 விக்கற்றுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா 126/2
சச்சின் 70* (68)

அறிஞர்
28-10-2005, 01:58 PM
இந்தியா எளிதில் வெற்றியை ருசித்தது....

126/2 (20.2 ஓவர், டெண்டுல்கர் 70 அவுட் இல்லை)

அறிஞர்
28-10-2005, 01:59 PM
இந்தியா 8 விக்கற்றுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா 126/2
சச்சின் 70* (69) அது என்ன 126 ரன்

இளையவன்
28-10-2005, 01:59 PM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

இளையவன்
28-10-2005, 02:00 PM
அது என்ன 126 ரன்

சச்சின்ர கடைசி பந்து பவுண்ரி என நினைக்கிறேன்

அறிஞர்
28-10-2005, 02:04 PM
சச்சின்ர கடைசி பந்து பவுண்ரி என நினைக்கிறேன்ஆமாம் கிரிக் இன்போவில் தவறாக கொடுத்து மாற்றிவிட்டனர்

இளையவன்
28-10-2005, 02:17 PM
ஆட்டநாயகனாக இர்பான் தெரிவாகியுள்ளார். வாழ்த்துக்கள் இர்பான்.

அறிஞர்
28-10-2005, 02:46 PM
கங்குலிக்கு மீண்டும் இடம் இல்லை

பரஞ்சோதி
29-10-2005, 05:49 AM
ஜம்பவான் சச்சினின் அற்புத ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தேன்.

இளையவன்
30-10-2005, 11:39 PM
சேப்பலின் கருத்துப்படி, இன்றைய போட்டியில் சச்சினுக்குப் பதிலாக சுரேஸ் ரெய்னா அல்லது ராவ்வுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்போல் தெரிகிறது.

aren
31-10-2005, 01:18 AM
நிச்சயம் சச்சின் இந்த போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் சாப்பல் தேர்வுக்குழுவினரிடம் இந்த வெற்றி டீம் அப்படியே அடுத்த ஆட்டத்துக்கும் தொடர வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்.

நிச்சயம் சச்சின் இருப்பார். இல்லையென்றால் இது மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிடும்.

அறிஞர்
31-10-2005, 01:21 AM
தூக்கத்தை தொலைத்து.. மேட்ச் பார்க்க ரெடியாகிவிட்டேன்...

சச்சின் இன்று ஜொலிப்பாரா...... இரண்டு மேட்ச்சுகளில் தூள் கிளப்பிவிட்டார்..

aren
31-10-2005, 01:26 AM
இன்று சச்சின் கொலிப்பது கொஞ்சம் கஷ்டம். ஒவ்வொரு மாட்சிலும் அவர் அடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி. இந்த முறை ஷேவாக் அல்லது யுவராஜ் அடிக்கட்டும்.

அறிஞர்
31-10-2005, 02:35 AM
டிராவிடும் அதையே சொல்லியுள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சச்சினை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கை டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது 250 ரன்னுக்குள் சுருட்டினால் இந்தியாவுக்கு எளிது

இளையவன்
31-10-2005, 02:36 AM
சச்சின் அணியில் இருக்கிறார் என்பது நல்ல செய்தி. சிறி சாந்துக்குப் பதிலாக சுரேஸ் ரெய்ணா சூப்பர் சப்பாகியுள்ளார்.

அறிஞர்
31-10-2005, 02:39 AM
முதல் ஓவர் இலங்கை 8 ரன்கள்

இளையவன்
31-10-2005, 03:00 AM
இலங்கை 31/1

சங்கக்கார 12* (20)
சனத் 15 (15)

அகார்கர் 1 விக்கட்

இளையவன்
31-10-2005, 03:23 AM
இலங்கை 56/1 (11 ஓவர்)

சங்கக்கார 26* (31)
அத்தப்பத்து 10* (21)

இளையவன்
31-10-2005, 04:04 AM
இலங்கை 77/2

இளையவன்
31-10-2005, 04:28 AM
இலங்கை 109/2 (27.4 ஓவர்)

சங்கக்கார 50* (79)
ஜெயவர்த்தனே 18* (25)

இளையவன்
31-10-2005, 04:45 AM
சங்கக்கார அரைச்சதத்தை (62) கடந்து நிதானமாக ஆடிக் கொண்டிருப்பதால் இனி அவரை வீழ்த்துவது என்பது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சிரமமான விடயம்.

இளையவன்
31-10-2005, 05:07 AM
இலங்கை 174/2 (37.2 ஓவர்)

சங்கக்கார 80* (105)
ஜெயவர்த்தனே 50* (57)

இளையவன்
31-10-2005, 05:22 AM
சங்கக்கார சதமடித்துள்ளார் 100* (123). இலங்கை 200-2 (41.3 ஓவர்).வாழ்த்துக்கள் சங்கக்கார.

பிரியன்
31-10-2005, 05:26 AM
இன்றைய போட்டியை இலங்கை அணி விறுவிறுப்பாக்கி இருக்கிறது... ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை....

இளையவன்
31-10-2005, 05:36 AM
இலங்கை 228/3 (43.4 ஓவர்)

சங்கக்கார 109* (129)
ஜெயவர்த்தனே 71 (70)


அகார்கர் 2 விக்கட்

இளையவன்
31-10-2005, 05:58 AM
சச்சின் மற்றும் ராகுலுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இருவரில் ஒருவர் நிச்சயமாக சதமடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என நம்பலாம். சேவாக்கும் இன்று நிலைத்து நின்றாட முயற்சிக்கவேண்டும்.

இளையவன்
31-10-2005, 06:04 AM
இலங்கை 298-4 (50 ஓவர்)

சங்கக்கார 138* (146)

rajasi13
31-10-2005, 06:58 AM
சச்சின் அவுட் 2 ரன். முதல் ஓவர் 5 வது பந்து. வாஸ் விக்கெடெடுத்திருக்கிறார்.

இளையவன்
31-10-2005, 07:58 AM
இந்தியா 2-98 (14.5 ஓவர்)

சேவாக் 39 (37)
தோனி 56* (50)

பிரியன்
31-10-2005, 08:37 AM
தோனி சதம் 100*(85) 10*4 5*6

இந்தியா 168/2 (24.1)

இளையவன்
31-10-2005, 08:39 AM
தோனி சதம் 100* (85). இந்தியா 168/2 ( 24.1 ஓவர்). வாழ்த்துக்கள் தோனி.

பிரியன்
31-10-2005, 10:00 AM
தோனி 154*(130) 15*4 7*6

இந்தியா 265/4(41)

வாழ்த்துகள் தோனி

இளையவன்
31-10-2005, 10:02 AM
இந்தியா 270/4 ( 41.4 ஓவர்).
தோனி 154* (130)

பரஞ்சோதி
31-10-2005, 10:07 AM
அட்டகாசம் போங்க, பேச வார்த்தை இல்லை, ஆட்டம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

இளையவன்
31-10-2005, 10:24 AM
இந்தியா 303/4 (46.1).
தோனி 183* (145)
இந்தியா 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் தோனி.

பிரியன்
31-10-2005, 10:25 AM
மக்கா சிக்ஸர் மழை.....

இந்தியா அபார வெற்றி.....303(46.1)

தோனி 183* (145) 15*4 10*6

ஆட்ட நாயகன் - தோனி........

இளையவன்
31-10-2005, 10:30 AM
தோனியின் ஓட்ட எண்ணிக்கையானது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 6 ஆவது அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும். இந்திய வீரர்களுக்குள் இது இரண்டாவது அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். ஏற்கனவே சச்சின் ஆட்டமிழக்காமல் 186 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

thempavani
31-10-2005, 10:59 AM
எப்பா சூப்பர் ஆட்டம் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது..தோனி அபாரம்...மெகாலி களம் நமக்கு ராசியில்லை என்றது மாறியுள்ளது...வாழ்த்துக்கள் இந்திய அணியினருக்கு...

பென்ஸ்
31-10-2005, 11:00 AM
மேலும் ஒரு விக்கேட்கீப்பர் அடித்த அதிகபச்ச ரன் இது... கில்கிரிச்ட் அடித்த 172 ரன் இத்துவரை உலகசாதனையாக இருந்தது...

thempavani
31-10-2005, 11:05 AM
சின்னப்பசங்க கலக்குறாங்க...இப்படியே போனால் கங்குலிக்கு நாமம்தான்...ஏதோ இந்தியா சாதித்தால் சரி..

பென்ஸ்
31-10-2005, 11:07 AM
அடப்பாவிகளே...!!! கக்கூலியை இங்கேயும் விடமாட்டிங்களா??? :D :D :D :D ;) ;)

rajasi13
31-10-2005, 11:15 AM
என்னது கக்குலியா? என்னய்யா சேம் சைடு கோல் போடுரீங்கோ

பரஞ்சோதி
31-10-2005, 02:58 PM
இனிமேலாவது கில்கிறிஸ்ட் மாதிரி ஒரு கீப்பர் தேவை என்ற கோரிக்கை எழாது?

மற்ற அணிகிளில் இனிமேல் தோனி மாதிரி ஒரு கீப்பர் தேவை என்று சொல்வார்கள்.

பரஞ்சோதி
31-10-2005, 02:59 PM
முடிந்த ஆட்டத்தை மீண்டும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் பார்க்கிறேன்,

நன்றி டிடி ஸ்போர்ட்ஸ் (மறு ஒளிபரப்பு).

அறிஞர்
31-10-2005, 03:12 PM
நன்றி டிடி ஸ்போர்ட்ஸ் (மறு ஒளிபரப்பு). அது என்ன அன்பரே..... எப்ப காட்டுகிறார்கள்..
---
முழு மேட்சையும் தூங்காமல் பார்த்ததில் திருப்தி...

aren
01-11-2005, 01:52 AM
சன் டிவி செய்தியில் தம்மாத்தூண்டு தோனியின் ஆட்டத்தைக் காண்பித்தார்கள், அதை பார்த்தவுடன் முழு ஆட்டத்தை பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் ஏற்பட்டது.

இப்படியிருக்கையில் இரண்டாவதாக வேறு பரஞ்சோதி பார்க்கிறாராம். கொடுமைடா சாமி!!

பிரியன்
01-11-2005, 04:39 AM
அது என்ன அன்பரே..... எப்ப காட்டுகிறார்கள்..
---
முழு மேட்சையும் தூங்காமல் பார்த்ததில் திருப்தி...

அறிஞரி(களி)ன் விழிப்பில் அர்த்தம் இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்:) :) :) .

பரஞ்சோதி
01-11-2005, 07:49 AM
சன் டிவி செய்தியில் தம்மாத்தூண்டு தோனியின் ஆட்டத்தைக் காண்பித்தார்கள், அதை பார்த்தவுடன் முழு ஆட்டத்தை பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் ஏற்பட்டது.

இப்படியிருக்கையில் இரண்டாவதாக வேறு பரஞ்சோதி பார்க்கிறாராம். கொடுமைடா சாமி!!

அண்ணா,

அங்கே தான் டிடி ஸ்போர்ட்ஸ் இலவசமாக வருகிறதே, அதை ஏன் பிடிக்கக்கூடாது?

ஒரு டிஸ் வாங்கி மாட்டுங்க. அண்ணி சன் டீவியின் தொடர்களை சீக்கிரமாகவே பார்க்க முடியுமே.

பரஞ்சோதி
01-11-2005, 07:51 AM
அது என்ன அன்பரே..... எப்ப காட்டுகிறார்கள்..
---
முழு மேட்சையும் தூங்காமல் பார்த்ததில் திருப்தி...

போட்டி முடிந்ததும், மீண்டும் ஒளிபரப்பு செய்தார்கள்.

மேலும் இன்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு தோனியின் பட்டாசு வெடிகளை தொகுத்து போட இருக்காங்க. (டிடி ஸ்போர்ஸ், டிடி 1)

பிரியன்
01-11-2005, 07:52 AM
அண்ணா,

அங்கே தான் டிடி ஸ்போர்ட்ஸ் இலவசமாக வருகிறதே, அதை ஏன் பிடிக்கக்கூடாது?

ஒரு டிஸ் வாங்கி மாட்டுங்க. அண்ணி சன் டீவியின் தொடர்களை சீக்கிரமாகவே பார்க்க முடியுமே.
பத்த வச்சிட்டிங்களே பரஞ்சோதி:) :)

பரஞ்சோதி
01-11-2005, 07:58 AM
தீபாவளி அன்னைக்கு பத்தவைத்தால் அது பாவம் இல்லையாம், அதான்.

அறிஞர்
02-11-2005, 09:00 PM
4வது போட்டி புனேயில்.....

பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான களம்.

முதலில் இந்தியா டாஸ் ஜெயித்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டினால் நன்றாக இருக்கும்.

தொடரை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு. சச்சின் இன்று விளையாடுவார் என்று சாப்பல் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வாழ்வா, சாவா என்ற நிலை. இலங்கையில் ஜெயவர்த்தனே இன்று ஆடமாட்டார். திருமணத்திற்கு தாயகம் சென்றுள்ளார்.

பார்க்கலாம் இலங்கையின் பதிலடி எப்படி இருக்கிறது என்பதை...

aren
03-11-2005, 12:53 AM
இதுவரை ஜெயசூரியா ஒன்றுமே அடிக்கவில்லை. ஆகையால் இந்த ஆட்டத்தில் அவரிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கலாம். அதுபோல் வாஸ் மற்றும் முரளி ஆகியோர் சரியாக பந்து வீசவில்லை. ஆகையால் இவர்களில் ஒருவராவது இன்று ஜொலிப்பர் என்று தோன்றுகிறது.

இந்த மாட்சை தோற்றுவிட்டால் தொடரை தோற்றுவிடுவார்கள். ஆகையால் ஸ்ரீலங்கா இன்று உயிரை பணயம் வைத்து விளையாடும்.

இன்று மாட்ச் உனக்கா எனக்கா என்ற ரீதியில் இருக்கும்.

ஸ்ரீலங்காவிற்கு வெற்றிவாகை சூடும் வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

அறிஞர்
03-11-2005, 02:14 AM
இந்தியா முதலில் பேட் செய்கிறது...

திராவிட் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை...

பேட்டிற்கு சாதகமான இடம் இது

இளையவன்
03-11-2005, 02:47 AM
இலங்கை 1/17

சங்கக்கார 8 (10) அவுட் அகார்கர் 1 விக்கட்

இளையவன்
03-11-2005, 02:59 AM
இலங்கை 2/36 (5.5ஓவர்)

ஜெயசூர்யா 16 (17)

அகார்கர் 2 விக்கட்

இளையவன்
03-11-2005, 03:21 AM
இலங்கை 3/51 (10.4ஓவர்)

தரங்க 21 (27)

சிறீ சாந் 1 விக்கட்

இளையவன்
03-11-2005, 04:19 AM
இலங்கை 3/129 (25ஓவர்)

தில்சான் 47* (53)
அத்தப்பத்து 26* (43)

இளையவன்
03-11-2005, 04:36 AM
இலங்கை 4/148 (29.3ஓவர்)

தில்சான் 52 (68)
அத்தப்பத்து 39* (55)

பரஞ்சோதி
03-11-2005, 04:53 AM
இந்தியா முதலில் பேட் செய்கிறது...

திராவிட் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை...

பேட்டிற்கு சாதகமான இடம் இது

அறிஞரே! என்னாச்சு, ஏன் இந்த குழப்பம்.

தீபாவளி தீர்த்தம் வேலை செய்கிறதா? :D :D

பரஞ்சோதி
03-11-2005, 04:54 AM
அட்டபட்டு 50 அடித்து விட்டார். பாராட்டுகள். நீண்ட போட்டிகளுக்குப் பின்னர் ஜொலிக்கிறார். இனிமேல் அடித்து ஆட போவார்கள். பந்து வீச்சாளர்கள் திறமையாக வீசினால் விக்கெட்கள் கிடைக்கும்.

இளையவன்
03-11-2005, 05:35 AM
இலங்கை 5/231 (44ஓவர்)
அத்தப்பத்து 82* (92 )

இளையவன்
03-11-2005, 05:42 AM
இலங்கை 6/237 (45.4ஓவர்)

அத்தப்பத்து 85* (97 )

அகார்கர் 3 விக்கட்

இளையவன்
03-11-2005, 05:46 AM
இலங்கை 7/241 (46.3ஓவர்)

அத்தப்பத்து 87 (100 )

இளையவன்
03-11-2005, 05:51 AM
இலங்கை 8/252 (48ஓவர்)

இளையவன்
03-11-2005, 05:58 AM
இலங்கை 9/261 (49.4ஓவர்)

இளையவன்
03-11-2005, 06:00 AM
இலங்கை 10/261 (49.5ஓவர்)

அத்தப்பத்து 87
தில்சான் 52

அகார்கர் 5 விக்கட்

இளையவன்
03-11-2005, 07:16 AM
சச்சின் 11 (19) அவுட். இந்தியா 1/23 (6.2ஓவர்)

இளையவன்
03-11-2005, 07:26 AM
இந்தியா 2/34 (8.1ஓவர்)

சேவாக் 11* (19)
யுவராஜ் 10 (10)

அறிஞர்
03-11-2005, 08:59 AM
173-3 (30.1 ஓவர்கள்)

டிராவிட் 58
ராவ் 37

ராவின் மட்டை வீச்சு அருமையாக உள்ளது....

அறிஞர்
03-11-2005, 09:00 AM
176-4 ராவ் அவுட்

இளையவன்
03-11-2005, 09:42 AM
இந்தியா 6/208 (40.1ஓவர்)

தோனி 13* (25)
ரெய்னா 17* (15)

அறிஞர்
03-11-2005, 10:08 AM
இந்தியா தொடரை வென்றது

45.2 ஓவரில் இலக்கான 262 ஐ தொட்டது

இளையவன்
03-11-2005, 10:35 AM
ஆட்ட நாயகனாக 5 விக்கட் வீழ்த்திய அகார்கர் தெரிவாகியுள்ளார். இந்திய அணியினருக்கும் ஆட்ட நாயகன் அகார்கருக்கும் வாழ்த்துக்கள்.

இளசு
03-11-2005, 10:08 PM
இந்திய அணிக்கு வாழ்த்துகள்..
வெற்றி பெற்ற நிலையில்
இன்னும் உற்சாகமாய் ஞாயிறு ஆட்டம் இருக்கும்..

பரஞ்சோதி
09-11-2005, 03:31 AM
இன்று ஆட்டம் தொடங்கியாச்சு, இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள். ஸ்ரீசாந்த், பதான், சிங் தலா ஒரு விக்கெட்.

mania
09-11-2005, 03:53 AM
இலங்கை 79/4 . முதல் பந்தில் முரளி கார்த்திக்கு ஒரு விக்கெட்.
அன்புடன்
மணியா

mania
09-11-2005, 04:07 AM
இலங்கை 94/5 ஆர்.பி. சிங்க்குக்கு இரண்டாவது விக்கெட். 19 ஓவர்கள்

பரஞ்சோதி
09-11-2005, 04:30 AM
தலை, 200 ரன்கள் தாண்டுவாங்களா?

பரஞ்சோதி
09-11-2005, 04:33 AM
அடுத்த விக்கெட் அர்னால்ட் காலி, ரன் அவுட்.

mania
09-11-2005, 04:39 AM
தலை, 200 ரன்கள் தாண்டுவாங்களா?
இப்போ ஒரு பார்ட்னர்ஷிப் நல்லதா கிடைச்சா 230 ரன்கள் சாத்தியம். இல்லையென்றால் 180- 200 தான்

பரஞ்சோதி
09-11-2005, 04:43 AM
இப்போ ஒரு பார்ட்னர்ஷிப் நல்லதா கிடைச்சா 230 ரன்கள் சாத்தியம். இல்லையென்றால் 180- 200 தான்

தில்சானை விட்டால் வேற மட்டையாளர் கிடையாது. பார்க்கலாம் நம்ம பந்து வீச்சாளர்கள் என்ன செய்றாங்கன்னு. :D

mania
09-11-2005, 04:52 AM
142/7 ...வாஸ் விக்கெட் கார்த்திக்க்கு 33ஆவது ஓவர்

rajasi13
09-11-2005, 05:06 AM
151/7 தில்ஷான் அரைசதம் 58 ஓட்டங்கள் 61 பந்தில் 9 பவுண்டரியுடன்

mania
09-11-2005, 05:12 AM
தில்ஷன் ரன் அவுட் 37ஆவது ஓவர் இலங்கை 161/8

பரஞ்சோதி
09-11-2005, 05:32 AM
9வது விக்கெட் காலி.

mania
09-11-2005, 05:33 AM
41 ஆவது ஓவர் இலங்கை 182/9. பெரிய கூரை (மஹாரூஃப்) சிங்க்குக்கு அவுட்

பரஞ்சோதி
09-11-2005, 05:38 AM
சந்தானா மட்டுமே இருக்கிறார், அடிக்கவும் செய்கிறார். 210 அல்லது 220க்குள் முடிக்க வேண்டும்.

mania
09-11-2005, 05:44 AM
196 ஆல் அவுட் சிங் 4 விக்கெட்டுகள்.(பரம்ஸ் 200க்கு 4 குறைவு....ஹி...ஹி..ஹி..மேட்ச் ஃபிக்சிங்):rolleyes: :D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
09-11-2005, 07:49 AM
இந்தியா 71/2 விக்கெட்கள். சச்சின், கம்பீர் அவுட்.

mania
09-11-2005, 09:03 AM
இந்தியா 170/3 31 ஓவர்களில்.
யுவராஜ் 59 கைஃப் 34 ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
மணியா

mania
09-11-2005, 09:27 AM
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 34.5 ஓவர்களில் 197/3.
யுவ்ராஜ் 79 , கைஃப் 38 (இருவரும் ஆட்டமிழக்கவில்லை.)
பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மணியா....
(அப்பாடி ஒரு வழியா நல்லபடியா ஜெயித்துக்கொடுத்திட்டேன்.....தனி ஆளா...)

Mathu
09-11-2005, 10:20 AM
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 34.5 ஓவர்களில் 197/3.
யுவ்ராஜ் 79 , கைஃப் 38 (இருவரும் ஆட்டமிழக்கவில்லை.)
பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மணியா....
(அப்பாடி ஒரு வழியா நல்லபடியா ஜெயித்துக்கொடுத்திட்டேன்.....தனி ஆளா...)

இல்லையே தலை பரம்ஸும் அப்பபோ கைகொடுத்தாரே...! :cool: :eek:

mania
09-11-2005, 10:36 AM
இல்லையே தலை பரம்ஸும் அப்பபோ கைகொடுத்தாரே...! :cool: :eek:

:angry: :angry: பரம்ஸ் இன்னிக்கு சூப்பர் சப்......!!!!!?????:D :D
அன்புடன்
மணியா...:D

rajasi13
09-11-2005, 10:42 AM
எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி?, நான் மட்டும் இலங்கை காரங்களுக்கு அவுட் குடுக்கலன்னா!!!.

அறிஞர்
09-11-2005, 05:24 PM
யுவராஜ் டீமை விட்டு தூக்கப்படுவார் எனப்பார்த்தால்... நன்றாக விளையாண்டு இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

கைப்பின் பொறுமையான ஆட்டம் அருமை

அடுத்த போட்டியில் சேவாக்குக்கு ஓய்வு கொடுக்கலாம்.

கங்குலி கதி அதோகதிதான்....

பரஞ்சோதி
09-11-2005, 06:25 PM
:angry: :angry: பரம்ஸ் இன்னிக்கு சூப்பர் சப்......!!!!!?????:D :D
அன்புடன்
மணியா...:D

ஹா! ஹா!

தலை, ஒருவழியாக வெற்றி பெற்றாச்சு, அடுத்ததையும் நம்ம கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா?

இளசு
09-11-2005, 10:23 PM
பரம்ஸ் -- பெயர் சுருக்கம் -- பொருத்தம்...

அருமை பரம்ஸ்...

mania
10-11-2005, 03:09 AM
பரம்ஸ் -- பெயர் சுருக்கம் -- பொருத்தம்...

அருமை பரம்ஸ்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :rolleyes: மரியாதையா ராயல்டியை தள்ளு...:D அதுவரை உன்னை பரஞ்சோதி என்றுதான் கூப்பிடுவேன்......:rolleyes: :D
அன்புடன்
விடாக்கண்டன் மணியா:D :D

பரஞ்சோதி
10-11-2005, 03:19 AM
தலை,

இங்கே ராயல் பிராண்ட் டி/காப்பி எல்லாம் கிடைப்பது இல்லையே, அங்கே கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி தருகிறேன்.

- கொடா தொண்டன் பரம்ஸ்

mania
10-11-2005, 04:22 AM
தலை,

இங்கே ராயல் பிராண்ட் டி/காப்பி எல்லாம் கிடைப்பது இல்லையே, அங்கே கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி தருகிறேன்.

- கொடா தொண்டன் பரம்ஸ்

இங்கேயும் ராயல் ப்ராண்டில் டி/காபி கிடையாது.:D நீ ஏதாவது சேலஞ்ஜ் :rolleyes: எடுத்து முயற்சி பண்ணினால் கிடைக்கும்.....!!!!!:rolleyes: :D
விடாக்கண்டன் மணியா...:D

mania
12-11-2005, 04:26 AM
டாஸ் ஜெயித்து இலங்கை முதலில் ஆடுகிறார்கள். 24 ஓவர்களில் 80/3
பதான், அகர்க்கர், ஆர்பி சிங் தலா ஒரு விக்கெட்.
அன்புடன்
மணியா

mania
12-11-2005, 04:30 AM
80/4 ஆர்பி சிங்குக்கு இரண்டாவது விக்கெட்
மணியா

mania
12-11-2005, 04:34 AM
26 ஓவர்களில் 90/5. ஆர்பி சிங்குக்கு 3ஆவது விக்கெட்
மணியா

mania
12-11-2005, 04:39 AM
மணி மணியா எப்பிடி விக்கெட் எடுக்கறேன் பாருங்க....!!!!:D :D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
12-11-2005, 04:42 AM
தலை, போகிற போக்கைப் பார்த்தால் 30, 40 விக்கெட்களை சர்வசாதாரணமாக எடுப்பீங்க போலிருக்குதே.

mania
12-11-2005, 05:01 AM
சிங் பந்து வீச்சில் அட்டப்பட்டுக்கு ஒரு லைஃப். அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பதிலாக ஒரு வைட் கொடுத்துவிட்டார்.(எல்லாம் நம்ம ஊரு அம்பயர்தான் ). ஸ்னிக்கொமீட்டர் நன்றாக காமித்து கொடுத்தது.....???32 ஓவர்கள் ...109/5
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
12-11-2005, 06:09 AM
244/9 விக்கெட்கள்.

நல்ல ரன்கள் தான், நம்மவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்ப்போம்.

mania
12-11-2005, 06:14 AM
244/9 விக்கெட்கள்.

நல்ல ரன்கள் தான், நம்மவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்ப்போம்.

என்ன பரம்ஸ் இது....???:rolleyes: கொஞ்ச நேரம் மீட்டிங் போயிட்டு வரத்துக்குள்ளே இவ்வளவு ரன்கள் கொடுத்திட்டயே....:D .சரி பார்க்கலாம்....
அன்புடன்
மணியா:D

அறிஞர்
12-11-2005, 06:28 AM
உண்மையிலே ரன் ரொம்ப அதிகம் தான்..........

முன்பே கட்டுப்படுத்தியிருக்கலாம்.... இந்தியர்கள் அடிக்க ரன் தேவையல்லவா....

நம் ஆட்கள் சாதிப்பார்கள் என நம்புகிறேன்

6-1 என வெற்றித்தொடர் அமைய வாழ்த்துக்கள்

rajasi13
12-11-2005, 07:11 AM
சிங் பந்து வீச்சில் அட்டப்பட்டுக்கு ஒரு லைஃப். அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பதிலாக ஒரு வைட் கொடுத்துவிட்டார்.(எல்லாம் நம்ம ஊரு அம்பயர்தான் ). ஸ்னிக்கொமீட்டர் நன்றாக காமித்து கொடுத்தது.....???32 ஓவர்கள் ...109/5
அன்புடன்
மணியா
நன்றி தலை, நானும் ரொம்ப நாளா யோஜிச்சேன், இந்த மீட்டர் பேரு என்னான்னு. இன்னிக்கு கட்சுகிடிச்சு.

அறிஞர்
12-11-2005, 07:46 AM
இர்பான் பதான் வந்து தனது சொந்த ஊரில் கலக்குகிறார்.... அட்டப்பட்டு பாடு திண்டாட்டம்...

பரஞ்சோதி
12-11-2005, 08:31 AM
136/3 21வது ஓவரில்.

சச்சின், சேவாக், பதான் அவுட்.

அறிஞர்
12-11-2005, 08:03 PM
ஒரு வழியா இந்தியா என் பிறந்த நாளில் கோப்பையை வாங்கிவிட்டது....

ஆட்ட நாயகன் - இர்பான் பதான் (உள்ளூர் காரர்0

தொடர் நாயகன் - டோனி (டிராவிட் பொறுப்புடன் விளையாண்டார்)

வெற்றி - 6-1 இந்தியா

பரஞ்சோதி
13-11-2005, 03:29 AM
மிக அற்புதமான தொடர். வாழ்வில் மறக்க முடியாத தொடர்.

கேப்டன் டிராவிட் முதல் கடைசி வீரர் வரை அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, அனுபவித்து விளையாடிய தொடர்.

அணியின் பயிற்சியாளர் சேப்பல் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

இந்த வெற்றிக்கூட்டணி நமக்கு உலககோப்பையை பெற்று தர வேண்டும், தரவும் முடியும். வாழ்த்துகள்.

aren
13-11-2005, 08:36 AM
இந்தியா வெளிநாடுகளில் இந்த மாதிரி ஆடி வெற்றி பெறட்டும் பிறகு நாம் பாராட்டலாம். இந்தியால் இந்தியாவை வெல்வது அவ்வளவு சுலபமல்ல.