PDA

View Full Version : விமானப் பணிப்பெண், வெஜ் பர்கர், நான்



முத்து
17-10-2005, 07:58 PM
போன மாதம் ஊருக்குப்போய் இந்த மாதம் திரும்பி வந்தேன். இங்கிருந்து சென்னைக்கு நான் போய்வந்தது டெல்டா ஏர்லைன்ஸில். விமானப் பயணம் சவுகர்யமாகவே இருந்தது. போகும்போது அஜித் நடித்த "ஜி" படம் விமானத்தில் திரையிட்டார்கள். அறிவிப்புக்கள் தமிழிலும் சொல்லப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் தமிழிலும், டமிலிலும் பேசினார்கள், இரண்டுமே நன்றாக இருந்தது :).

ஒரு விஷயத்தைக் கட்டாயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அடுத்த நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தமிழ் சகஜமாய் இருக்கும்போது, சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் உள்நாட்டு விமானத்திலும் அதைவிட அதிகமாய்ப் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அறிவிப்புக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டில் மட்டுமே இருந்தன. அட.. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போகும் மக்கள் யாரும் தமிழ்பேசுபவர்கள் இல்லையோ என்று சந்தேகம்கூட வந்தது. இத்தனைக்கும் நான் வந்த விமானம் ஜெட் ஏர்வேஸ் என்ற தனியார் விமானம்தான். இதேபோன்ற ஏர்டெகான் உள்நாட்டு விமானத்திலும் இதே கதைதான். அவர்களுக்கு இதுபற்றி ஒரு வரி எழுதிப்போடலாம் என்று நினைத்தேன், இதுவரை எழுதவில்லை.

திரும்பி வரும்போது ஒரு சுவாரசியமான சம்பவம். டெல்டா விமானத்தில் நுழையும் முன்னர் பணிப்பெண்கள் பயணிகளிடம் புதிதாய் வாங்கிய பொருட்கள் பற்றி விசாரிக்கிறார்கள்.

என்னிடம் ஒரு பணிப்பெண் வந்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

"...நீங்கள் எதில் பேசுவீர்கள், தமிழா?, ஆங்கிலமா ?"

"..இரண்டும்..", இது நான்.

"..விமானநிலையத்தில் புதிதாய் இப்போது ஏதாவது வாங்கினீர்களா ?"

"..ஆமாம்.."

".... அதை நான் பார்க்கலாமா?, அதன் விலை என்ன?", கொஞ்சம் சீரியஸாகவே கேட்டார்.

"... விலை அதிகமில்லை, ஆனால் உங்களுக்கு அதை இப்போது உங்களிடம் காட்ட முடியாது..", நானும் சீரியஸாகவே.

இவன் கொஞ்சம் பிரச்சனை செய்யும் ஆளாக இருப்பான்போல என்று அவர் யூகிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஏதும் பிரச்சனை செய்யும் முன்னர் நாமே சொல்லிவிடுவது நல்லது என்று நான் வாங்கியதைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்ததும் டக் என்று சிரித்து, விமானத்துக்குள் அனுப்பிவிட்டார்.

அந்தச் சிரிப்பில் இவன் சரியான குறும்புக்கார ஆள்தான் என்று நினைப்பது தெளிவாய்த் தெரிந்தது. அப்படி என்னதான் வாங்கினாய் என்று கேட்கிறீர்களா?. அதுதான் தலைப்பிலேயே இருக்கிறது. தலைப்பில் முதலில் இருப்பது இல்லை :-), இரண்டாவதாக, வெஜ் பர்கர். அதுவும் சாப்பிட்டு முடித்தபின்னர் யாரிடம் மீண்டும் காட்ட முடியும் ?, நீங்களே சொல்லுங்கள்.

இளசு
17-10-2005, 08:31 PM
வா முத்து,
குசும்பு அதிகமான சுட்டித்தம்பிக்கு முதலில் என் அன்பான வரவேற்பு..
பின் உன் கன்னத்தில் ஒரு கிள்ளல்..

என்ன ஒரு ஜாலியான அனுபவம்....
நேரில் பார்த்தது போல் சட்டென சிரிக்க வைத்தது இறுதியில்...

பாரதி
18-10-2005, 01:09 AM
ஹஹஹா... முத்த இந்த மாதிரி பார்த்து எத்தன நாளாச்சு..! ஊருக்கு போன சந்தோசமா..? ஒவ்வொண்ணா எடுத்து விடுங்கப்பு...

அறிஞர்
18-10-2005, 02:45 AM
ஆஹா தம்பியை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி....

அனுபவமும், குறும்பும் அருமை....

எனக்கும் டெல்டா, மலேசியா, சிங்கப்பூர், தாய் விமானங்களில் செல்லும்போது.. தமிழ் கேட்க முயன்றது...

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸில் ஆங்கிலம்,ஹிந்தியை மட்டுமே கேட்கமுடிகிறது... நாம் அவர்களின் தளங்களுக்கு.... இதை தெரிவிக்கலாம்...

மன்மதன்
18-10-2005, 04:35 AM
ஊருக்கு சென்றீர்களா?? மன்றத்து உறவுகளில் யார் யாரை சந்தித்தீர்கள் . அதை சொல்லுங்க முதலில்........!!

pradeepkt
18-10-2005, 05:57 AM
முத்து வணக்கம்.
எப்படி இருக்கீங்க.
உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு.. கடைசி வரி வரைக்கும் நீங்களும் மன்மதன் மாதிரி ஏதாச்சும் சொல்லீருப்பீங்களோன்னு நினைச்சேன் :D

gragavan
18-10-2005, 06:26 AM
முத்தான நகைச்சுவைத் துணுக்கை முத்துப் பதித்தது போல முத்து பதித்திருக்கின்றீர்கள். அருமை.

மன்மதன்
18-10-2005, 06:32 AM
முத்து வணக்கம்.
எப்படி இருக்கீங்க.
உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு.. கடைசி வரி வரைக்கும் நீங்களும் மன்மதன் மாதிரி ஏதாச்சும் சொல்லீருப்பீங்களோன்னு நினைச்சேன் :D

ஏப்பூ..... ச்செத்த சும்மாயிருக்கியலா...:rolleyes: :rolleyes:

gragavan
18-10-2005, 06:43 AM
ஏப்பூ..... ச்செத்த சும்மாயிருக்கியலா...:rolleyes: :rolleyes:நாங்கூட அப்படித்தான் நெனச்சேன். ஆனா முத்து வேற மாதிரி முடிச்சிட்டாரு. ஹி ஹி.

rajasi13
19-10-2005, 11:00 AM
முத்து வணக்கம்.
எப்படி இருக்கீங்க.
உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு.. கடைசி வரி வரைக்கும் நீங்களும் மன்மதன் மாதிரி ஏதாச்சும் சொல்லீருப்பீங்களோன்னு நினைச்சேன் :D
ஆமா மன்மதன் என்ன சொன்னார்?

pradeepkt
19-10-2005, 11:02 AM
நாராயணா,
ராஜாசியை அதைக் கேக்க வேணாமின்னு சொல்லுங்க நாராயணா :D

சுவேதா
19-10-2005, 03:12 PM
:D:D:D:D:D கலக்கிட்டிங்க..... பாவம் அந்த பொண்ணு சிரிச்சு களைத்திருப்பார்!

முத்து
19-10-2005, 09:39 PM
இளசு அண்ணா, பாரதி, அறிஞர், மன்மதன், பிரதீப், ராகவன், ராஜாசி, சுவேதா அனைவருக்கும் நன்றி :).

முத்து
19-10-2005, 09:41 PM
மன்மதா,
ராஜாசி போலவே எனக்கும் சந்தேகம், அப்படி என்னதான் கேட்டீங்க?. பிரதீப், ராகவன் இரண்டு பேருக்கும் தெரிந்த அதை எங்களுக்கும்தான் சொல்லுங்களேன்.

மன்மதன்
20-10-2005, 05:07 AM
வேணாம்யா........ 'ஆங்கர் மேனேஜ்மெண்ட்' கிளாஸிலிருந்து இப்பத்தான் ரிலீஸ் ஆகியிருக்கேன்.......:D :D

rajasi13
20-10-2005, 05:10 AM
வேணாம்யா........ 'ஆங்கர் மேனேஜ்மெண்ட்' கிளாஸிலிருந்து இப்பத்தான் ரிலீஸ் ஆகியிருக்கேன்.......:D :D
ஆங்கர் மேனேஜ்மெண்டாஆஆஆஆஆ?

மன்மதன்
20-10-2005, 05:16 AM
ஆங்...... இல்ல..இல்ல. அது 'ஹேங்கர் மேனேஜ்மெண்ட்'.. :D அதாவது நீங்கள் விமானத்தில் போகும் போது ஏர் ஹோஸ்டஸ் உங்க ப்ளேஷரை கழட்டி ஒரு ஹேங்கரில் மாட்டி வைப்பாங்களே :rolleyes: :rolleyes: அது பற்றியது :D :D

rajasi13
20-10-2005, 10:31 AM
ஐயோ சொல்லுங்க மன்மதரே சொல்லுங்க. தனிமடலாவது அனுப்புங்க. ஹி ஹி ஹி

aren
27-10-2005, 02:41 PM
இந்த பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாவம் அந்த விமானப்பணிப்பெண்.

நண்பரே உங்கள் பயணம் நன்றாக அமைந்ததா? எங்கெல்லாம் சென்றீர்கள். கொஞ்சம் எழுதுங்களேன், நாங்களும் படித்து மகிழ்கிறோம்.

யாராவது நம் மன்ற நண்பர்களை சந்தித்தீர்களா?

ஓவியன்
26-10-2007, 05:21 PM
அருமையான கலக்கல் பதில்... :)

வாழ்க்கையிலே இப்படித்தான் பலர் சந்தர்பம் தெரியாமல் கேள்வி கேட்டுவிட்டுக் கிடைக்கும் இடக்கு முடக்கு பதில்களால் அவஸ்தைப் படுவார்கள்...

dohnb
26-10-2007, 06:18 PM
நல்ல ஜோக் நான் கூட என்னமோன்னு யோசிச்க்கிட்டிருந்தேன்..........

அமரன்
26-10-2007, 06:22 PM
நல்ல ஜோக் நான் கூட என்னமோன்னு யோசிச்க்கிட்டிருந்தேன்..........

அன்பரே...!
உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே..

மாதவர்
27-10-2007, 03:40 AM
தமிழை தமிழக நகரங்களில் பார்பதே அரிதாத உள்ளது.
செய்தி வியப்பாக உள்ளது.

தங்கவேல்
27-10-2007, 05:23 AM
மதுரைக்காரைங்கென்னா இப்படித்தானோ... பொன்னு புடிக்கிற கலையை முத்து விளக்கினால் பரவாயில்லை

சூரியன்
27-10-2007, 04:20 PM
நல்ல பதிவு..
அதைவிட உங்க காமெடி அருமை..

அக்னி
28-10-2007, 12:23 AM
சிரிக்க வைக்கும் நிகழ்வு,
தமிழ் புறக்கணிப்பு பற்றி சிந்திக்கவும் வைக்கிறது...

அதிருக்கட்டும்,
மன்மதன் அண்ணாச்சி அப்பிடி என்ன சொல்லியிருப்பாரு... :confused: :icon_hmm:

ஓவியன்
28-10-2007, 02:25 AM
அதிருக்கட்டும்,
மன்மதன் அண்ணாச்சி அப்பிடி என்ன சொல்லியிருப்பாரு... :confused: :icon_hmm:

இதனை மன்மிஜி வந்து தெளிவாக விளக்குவார்...!!! :icon_rollout:

alaguraj
28-10-2007, 09:43 AM
சுவராசியமன பதிவு...

பூமகள்
08-11-2007, 03:15 PM
முத்து அண்ணா...
தலைப்பு ருசியுடன் சுவைபட இருக்க.... படித்துக் கொஞ்சம் சுவைக்க வந்தால்... இங்கு ஏற்கனவே உள்ளே தள்ளிய பர்கர் பற்றிச் சொல்லி எங்களைப் பசியோடு விட்டுவிட்டீர்கள்.. :D நல்லவேலை... முதலிலேயே வாங்கியது பர்கர் என்று அப்பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டீர்கள்..! இல்லையேல்.... ஹிஹி....!! பர்கர்................. பஞ்சர் ஆக்கியிருக்கும் உங்க வயிற்றை...!! :D:D:D:D
சிரிக்க வைத்து இடையே மிக முக்கிய விசயத்தையும் சொல்லி சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்..! கவலை மேலோங்குகிறது...!
தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு போகும் விமானத்திலேயே இந்நிலை என்றால், மற்ற தமிழ் நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்..!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.. இப்பவும் இப்படித்தான் தமிழ் மொழி அரிதாகியுள்ளதா தமிழக விமானங்களில்????

விமானநிலையங்களின் மேல் ஆதங்கத்துடனும், முத்து அண்ணாவின் நகைப்பின் மேல் புன்னகையுடனும்,