PDA

View Full Version : அழகிருக்கு ஆடுகின்றாய்



thirukanaga
17-10-2005, 05:24 PM
அழகிருக்கு ஆடுகின்றாய்


நானழைக்க ஓடுகின்றாய்
தேடிவர நாணுகின்றாய்
திரும்பியதும் தேடுகின்றாய்
நானிருக்க எழும்புகின்றாய்
நானெழும்ப விலகுகின்றாய்
பார்த்திருக்க மறைகின்றாய்
மறைந்திருக்க பார்க்கின்றாய்
கூடல் கொள்ள மறுக்கின்றாய்
கூடிவரக் கேட்கின்றாய்
என் இதயம் அழிக்கின்றாய்
உன்னை அழகாக்குகின்றாய்
அழகிருக்கு ஆடுகின்றாய்

இளசு
17-10-2005, 08:40 PM
சமன் தேடும் சீசாப் பலகை ஆட்டம் இது...
சுவாரசியங்களுக்கு குறைவில்லை..

திருகனகா பாணியில் இன்னொரு கவிதை...
பாராட்டுகள் நண்பரே..

அறிஞர்
17-10-2005, 11:36 PM
வாவ் அருமை.... ஆடும் ஆட்டதிற்கு.. இப்படி பட்ட வரிகளா.. வெகு அருமை.... தொடருங்கள் தங்கள் பாணியில்

பென்ஸ்
18-10-2005, 07:09 AM
அருமையான வரிகள்... அக்காலம் முதல் இக்காலம் வரை ஒரே ஆட்டம் தான்........
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

thirukanaga
18-10-2005, 08:40 AM
கவிதை நடைகள் பிழையாக இருந்தால் தயவு செய்து எழுதுங்களெனக்கு படித்து வரவில்லை .நான் ஒரு வான்கோழி.மற்றவர்களைப் பார்த்து நானும் முயல்கிறேன்.உங்கள் ஒத்துழைப்பு என் முதுகெலும்பு

பிரியன்
18-10-2005, 09:16 AM
எல்லா கவிதைகளும் ஒரே விதமான வடிவத்தையே கொண்டிருக்கிறது. வடிவத்தை கட்டி எழுப்பி விட்டு வார்த்தைகளை அடுக்குவது போல இருக்கிறது. சிந்தனைகள் சிறப்பானவை என்றாலும் தாங்கி வரும் மொழி மிகப் பழைய வடிவமாகவே உங்கள் கவிதைகள் இருக்கிறது. நீங்கள் மன்றத்தில் புதிதாக எழுதுவதால் கவிதைகளை அவ்வளவாக விமர்சிக்கவில்லை..

நீங்கள் எழுதுவது திரைப்படங்களுக்கு, அதாவது மெட்டுக்கு பாட்டு எழுதுவதைப் போன்றது. அதுவும் ஒருவகையான கவிதை வடிவம்தான் என்றாலும் முழுமையான, நிறைவான கவிதை வடிவமாக அதை கருதுவதில்லை

thirukanaga
18-10-2005, 10:50 AM
மிகவும் நன்றி.நான் இங்கு தமிழர்களுடன் கலந்துரையாட முடியாது.அவர்களைக்காண்பது அரிது.அதிலும் படித்தவர் அரிது.என் சிந்தனைகள் என்னோடு எவரும் கேட்பதில்லை.தமிழ் நூல்கள் இங்கில்லை.எனக்கு கவிதை எப்படி எழுதுவது என்று ஒரு உதாரணம் தாருங்கள்
பழகுகிறேன்
நன்றி

அறிஞர்
18-10-2005, 02:49 PM
மிகவும் நன்றி.நான் இங்கு தமிழர்களுடன் கலந்துரையாட முடியாது.அவர்களைக்காண்பது அரிது.அதிலும் படித்தவர் அரிது.என் சிந்தனைகள் என்னோடு எவரும் கேட்பதில்லை.தமிழ் நூல்கள் இங்கில்லை.எனக்கு கவிதை எப்படி எழுதுவது என்று ஒரு உதாரணம் தாருங்கள்
பழகுகிறேன்
நன்றிஅன்பரே.. தமிழ் மன்றத்தில் மற்றவர்களின் கவிதை பாடல்களை படியுங்கள்.. சிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எல்லாவிதமான ரசனையும் பார்க்கலாம் நீங்கள்

பிரியன்
20-10-2005, 10:42 PM
அன்பு நண்பர் திருகங்காவிற்கு.

தங்களின் கவிதைகள் குறித்தான எனது கருத்துக்குப்பின் உங்களிடமிருந்து புதிய கவிதைகள் ஏதும் வராதது எனக்கு வருத்தத்தை தருகிறது. உங்களின் சுழலை சொன்ன பிறகு நான் தங்களை காயப்படுத்திவிட்டேனோ என எண்ணத் தோன்றுகிறது. வடிவத்தை பற்றி கவலை வேண்டாம். தொடர்ந்து எழுதும் போது தன்னால் வந்து விடும். மன்றத்தில் இருக்கும் பல தரப்பட்ட கவிதைகள் உங்களுக்கு உதவக்கூடும். கவலையை விட்டு தொடர்ந்து எழுதுங்கள். எழுதிக்கொண்டிருங்கள்..

வாழ்த்துகளுடன்
பிரியன்

thirukanaga
22-10-2005, 10:51 PM
எனக்கு நேரமிலாமையாலன்றி உங்கள் கருத்துக்களால் நான் எழுதாமல் விடவில்லை
தீட்டதீட்ட வரும் கூர்மை
திருத்ததிருத்த வரும் திறமை