PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே!பென்ஸ்
17-10-2005, 06:24 AM
வணக்கம் நண்பர்களே!
நான் உங்களில் ஓருவனாக இந்த சபையில் இணைவதில் மகிழ்ட்சி அடைகிறேன்
நன்றி! வணக்கம்
பெஞ்ஜமின்

பிரியன்
17-10-2005, 06:27 AM
வணக்கம் பெஞ்ஜமின் தங்கள் வரவு நல்வரவாகட்டும். படித்து பங்கு பெற்றூ பயனைடையுங்கள்.... கன்னியாகுமரியா கொடுத்து வைத்தவர்தான்....

pradeepkt
17-10-2005, 06:40 AM
வணக்கம் பெஞ்சமின்.
மன்றத்தில் பல தளங்களிலும் உலாவிப் பயன் பெற வாழ்த்துகள்.

பென்ஸ்
17-10-2005, 07:02 AM
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

காலம் மாறவில்லை!!!!! தமிழ் மனமும் மாறவில்லை!!!!! புல்லரித்து போகிறேன் நண்பா!!!!
நன்றி!
பெஞ்ஜமின்

thempavani
17-10-2005, 09:20 AM
வாருங்கள் பென்ஞமின் வாழ்த்துக்கள்..அன்பான வரவேற்பு உங்களுக்கு..கன்னியாகுமரியில் எந்த பக்கம்...

பென்ஸ்
17-10-2005, 10:14 AM
சேர மன்னன் நாண் பூட்டிய வில் அவன் தோள் பலத்தல் முறிந்தது, நடந்த இடம் என் ஊர், எனவே என் ஊரை வில்லுகீறி என்று கூறுவர்... இது குமரி முனையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில், 30 கி.மி. தொலைவில் உள்ளது...
குளமும், குளத்துக்கு அரணாய் வயலும், வயலுக்கு அரணாய் வாழையும், வழைக்கு அரணாய் தென்னையும் ...மலையும், மலை மோதும் மேகமும்... காடும், காட்டு அருவியும், பறவைகளும்... கடலும், கட்டு மரஙகளும்... பாலையும் பரந்த பூமியும் ....
இது தான் என் நிலம் :)

Narathar
17-10-2005, 10:25 AM
பெஞ்சமின்.................
உங்கள் ஊர் மனத்தை சொன்ன வித்மே சொல்லிட்டு
உங்களிடமிருந்து நல்ல பல ஆக்கங்களை இத்தமிழ் மன்றம் அடையும் என்று

வாழ்த்தி வரவேற்கின்றேன்......................

அறிஞர்
17-10-2005, 01:50 PM
வாருங்கள் பென்ஞமின் வாழ்த்துக்கள்..அன்பான வரவேற்பு உங்களுக்கு..கன்னியாகுமரியில் எந்த பக்கம்... என்ன ஊர் பாசமா... அடுத்த பாசமலர் ஒன்று இங்கே

பாரதி
17-10-2005, 01:56 PM
வணக்கம் பெஞ்சமின்,
தமிழ்மன்றத்திற்கு உங்களை வரவேற்பதில் மன்ற உறவுகளுடன் நானும் மகிழ்கிறேன்.
பச்சைப்பசேலென்ற பகுதியில் இருந்து வந்திருக்கும் உங்களின் பதிவுகளில் உலாவ நாங்கள் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

Narathar
17-10-2005, 01:57 PM
என்ன ஊர் பாசமா... அடுத்த பாசமலர் ஒன்று இங்கே

இதெல்லாம் பலவீனமாகிக்கொண்டிருக்கும் அணிக்கு ஆள் சேர்க்கும் முயற்ச்சி........ நாராயணா!!!!

அறிஞர்
17-10-2005, 01:57 PM
வாருங்கள் பெஞ்சமின்..

தமிழர்கள் உலாவும் தளத்தை அருமையாய் கண்டுபிடித்துவிட்டீர்கள். இனி தங்களின் படைப்புக்களும் எங்களை மகிழ்விக்கட்டும்

அறிஞர்
17-10-2005, 01:58 PM
இதெல்லாம் பலவீனமாகிக்கொண்டிருக்கும் அணிக்கு ஆள் சேர்க்கும் முயற்ச்சி........ நாராயணா!!!!நாங்க எல்லாம் எப்பவும் நிதானமாக செல்லும் பாசக்கூட்டம்.. .பாசமுள்ளவர்கள் தானாகவே வருவார்கள்.... கலகக்காரரே

இளசு
17-10-2005, 08:37 PM
வாருங்கள் பெஞ்சமின் அவர்களே,

ஐவகை நிலங்களின் வளங்களையும்
வீர வரலாற்றுப் பின்புலமும் கொண்ட
வில்லுகீறியில் இருந்து அம்பெனப் பாய்ந்து வந்த
உங்களை மன்றத்துக்கு மகிழ்வோடு வரவேற்கிறேன்...

சுவேதா
18-10-2005, 01:49 AM
வாருங்கள் பெஞ்சமின் அண்ணா உங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன்.

அறிஞர்
18-10-2005, 02:17 AM
வாருங்கள் பெஞ்சமின் அண்ணா உங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன். எல்லாருக்கும் ஒரு அண்ணா போட்டிடுறீயே... நல்ல பிள்ளை......

பென்ஸ்
18-10-2005, 03:41 AM
நாராயாணா!!!!! நாராயாணா!!!!!
நாரதா !!! பிரம்மனுக்கு பிள்ளையாக இருந்தாலும் சிவனுக்கு நண்பணாக ஆகி போனதால் படைப்பை விட பாதிப்பு என்னிடம் ஆதிகம்..... படைத்ததில்லை, ரசித்திருக்கிறேன். :)
முல்லை பூக்கழுக்கு இடையில் ஒரு கள்ளி பூ நான். மணம் ஊட்டவில்லை என்றாலும் நிச்சயம் ஆழகு சேர்ப்பேன்:)
குமரி என் தாய் மண் என்றாலும் , பிழைப்பு தேடி வந்தது பெங்களூர்.
தேம்பாவனி.. நீங்களும் குமரியா??? :eek:
அறிஞர்.. இளசு... மரியாதை கலந்த நன்றி.....:)

சுவேதா.....நன்றி தங்கையே....:D

பென்ஸ்
18-10-2005, 03:46 AM
பிரியன்.. உங்களுக்கு முதல் நன்றி :)

thempavani
18-10-2005, 04:03 AM
தேம்பாவனி.. நீங்களும் குமரியா??? :eek:


வள்ளியூர் பக்கம் நண்பரே..ஆமா அதற்கு ஏன் இப்படி அதிர்ச்சி முகம்..:angry: :angry:

பென்ஸ்
18-10-2005, 04:09 AM
இன்ப அதிர்ச்சி முகம் :D

thempavani
18-10-2005, 04:16 AM
மீசையில் மண் ஒட்டவில்லை

பென்ஸ்
18-10-2005, 05:43 AM
இதெல்லாம் பலவீனமாகிக்கொண்டிருக்கும் அணிக்கு ஆள் சேர்க்கும் முயற்ச்சி........ நாராயணா!!!!


இந்த அணிகளை நான் அறியலாமா?

thempavani
18-10-2005, 08:38 AM
அப்படியே ஐவர் அணி பக்கம் போங்க பென்சமின்...நிறைய சங்கதி தெரியவரும்

பரஞ்சோதி
18-10-2005, 09:09 AM
வாங்க பெஞ்சமின் எப்படி இருக்கீங்க.

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பரஞ்சோதி
18-10-2005, 09:23 AM
நாராயாணா!!!!! நாராயாணா!!!!!

தேம்பாவனி.. நீங்களும் குமரியா??? :eek:


பின்ன அவங்க என்ன கிழவியா?

சகோதரியை பார்த்து இத்தனை தைரியமாக கேட்ட உங்களை பாராட்டுகிறேன். :D :D

பரஞ்சோதி
18-10-2005, 09:24 AM
அப்படியே ஐவர் அணி பக்கம் போங்க பென்சமின்...நிறைய சங்கதி தெரியவரும்

ஆமாம் நண்பரே!

தப்பி தவறி தேம்பா அணியில் சேர்ந்தீங்கன்னா, அப்புறம் என் நண்பன் பெயர் தான் உங்களுக்கு கிடைக்கும், ஜாக்கிரதை. :eek:

pradeepkt
18-10-2005, 09:38 AM
பின்ன அவங்க என்ன கிழவியா?

சகோதரியை பார்த்து இத்தனை தைரியமாக கேட்ட உங்களை பாராட்டுகிறேன். :D :D
அண்ணா, அக்காவைப் போயி இப்படிச் சொல்லிட்டீங்களே...:mad:
உங்களை என்ன செய்யிறேன் பாருங்க...:mad: எனக்கு வர ஆத்திரத்துக்கு...........................:mad:
நேரா இப்பயே உங்க ஊருக்கு வந்து............:mad:
மாலை போட்டு மரியாதை செய்யணும் :D :D :D :D :D

ஆதவா
04-03-2007, 04:03 PM
வாருங்கள் பெஞ்சமின்... உங்களை மன்றத்தில் வரவேற்கிறேன்.. பதிவுகளை இட்டு தமிழுக்கு சேவை செய்யுங்கள்


ஆதவன்....

பென்ஸ்
04-03-2007, 05:29 PM
வாருங்கள் பெஞ்சமின்... உங்களை மன்றத்தில் வரவேற்கிறேன்.. பதிவுகளை இட்டு தமிழுக்கு சேவை செய்யுங்கள்


ஆதவன்....


இதுக்குதான் ராத்திரி ரொம்ப நேரம் கண்விழித்து இருக்காதிங்கன்னு சொன்னேன்.....

இளசு.. பாவம் ஆதவனுக்கு என்னாச்சுன்னு பாருங்க....

ஆதவா
04-03-2007, 06:40 PM
இதுக்குதான் ராத்திரி ரொம்ப நேரம் கண்விழித்து இருக்காதிங்கன்னு சொன்னேன்.....

இளசு.. பாவம் ஆதவனுக்கு என்னாச்சுன்னு பாருங்க....

(தூக்கத்தில எழுதுற வியாதின்னு நினைக்கிறேன்.. கன்னாபின்னாஃபோபியான்னு பேராமே!!! அப்படியா இளசு அவர்களே!? .)
அட நெஜமாகவே உங்க பதிவைத் தேடிப்புடிச்சு போட்டேனுங்க... கொஞ்சம் காலம் தாழ்ந்துபோச்சு... இருந்தா என்ன.... நம்ம மக்க வந்து உங்களை திரும்ப வரவேற்கப் போறாங்க..............:)

அமரன்
04-03-2007, 07:42 PM
என்ன நடக்குது இங்கே. எப்போதோ இணைந்த ஒருவருக்கு இப்போ வரவேற்பு.

மன்மதன்
05-03-2007, 05:47 AM
(தூக்கத்தில எழுதுற வியாதின்னு நினைக்கிறேன்.. கன்னாபின்னாஃபோபியான்னு பேராமே!!! அப்படியா இளசு அவர்களே!? .)
அட நெஜமாகவே உங்க பதிவைத் தேடிப்புடிச்சு போட்டேனுங்க... கொஞ்சம் காலம் தாழ்ந்துபோச்சு... இருந்தா என்ன.... நம்ம மக்க வந்து உங்களை திரும்ப வரவேற்கப் போறாங்க..............:)

நான் மாட்டேன்பா..:D :D

நல்லா சமாளிக்கிறாரு பாருங்க பென்ஸ்..:rolleyes:

பெஞ்சமின் என்று புதுசா யாரோ வந்திருக்காங்கன்னு நினைச்சிட்டாரு..:D :D

ஓவியா
06-03-2007, 03:15 PM
எனக்கு முன்னாடி வந்த பெஞ்சை,
இப்படி கால தாமதமாக வரவேர்ப்பதில் வருத்தப்படுகிறேன்

கொட்டு முரசு கொட்டி வரவேற்க்கிறேன்

அன்னாரின் வரவு நல்வரவாகுக


:D :D :D ஓகேவா

ஆதவா
06-03-2007, 04:01 PM
நான் மாட்டேன்பா..:D :D

நல்லா சமாளிக்கிறாரு பாருங்க பென்ஸ்..:rolleyes:

பெஞ்சமின் என்று புதுசா யாரோ வந்திருக்காங்கன்னு நினைச்சிட்டாரு..:D :D

:D :D :D ஹிஹி......