PDA

View Full Version : உங்கள் அன்பின் திருகனகா



thirukanaga
16-10-2005, 08:35 PM
பிறந்தது வளமிகு கரவெட்டியில்
புனைந்தது கடவுளின் பெயரில்
இருந்தது அம்மாவின் அரவணைப்பில்
வாழ்ந்தது அப்பனையிழந்த வீட்டில்
வளர்ந்தது சகோதரர்களின் கனிவில்
புகுந்தது பணக்கார நோர்வே நாட்டில்
விட்டது பட்டப் படிப்புக்களை இடையில்
இருப்பது திறந்தவெளிக் கூண்டில்
விழுந்தது குடும்பமெனும் கூட்டில்
பார்ப்பது பிரச்சனைகளை நாட்டில்
ஏங்குவது எனக்குள்ளே என் பாட்டில்

இளசு
16-10-2005, 11:50 PM
அன்பின் திருகனகா அவர்களே

கவிதையாலே அறிமுகம் தந்து
கவர்ந்த நண்பரே..
ஆர்வமாய் பங்களிக்கும் உங்களை
வரவேற்று மகிழ்கிறேன்...

பாரதி
17-10-2005, 02:23 AM
அன்பின் திருகனகா,
உங்கள் கவிதைகள் போன்றே உங்கள் அறிமுகமும்..!
என் மனமார்ந்த வாழ்த்துக்களும், வரவேற்பும் நண்பரே.

அறிஞர்
17-10-2005, 05:23 AM
வாவ்..

வாழ்க்கையின் வித்தியாசமான
பரிமாணங்களை கண்டு
ஏங்கும் உங்கள் பாட்டிற்கு
ஏங்குவது நாங்களும்தான்

பரஞ்சோதி
17-10-2005, 07:07 AM
கங்கா அருமையான அறிமுகம்.

எந்த ஊர் என்றவனே என்ற பாடல் பாணியில் அருமையான அறிமுகம்.

Narathar
08-12-2005, 05:51 PM
உங்கள் அறிமுகத்திலேயே அசத்தி விட்டீர்கள்
வாழ்த்தி வரவேற்கின்றேன்........

ilanthirayan
09-12-2005, 11:18 PM
திறந்த வெளிக் கூண்டிலிருந்தாலும்
திறந்த மன நண்பர்களை அடைந்து விட்டீர்கள்... வாருங்கள் வரவேற்கின்றோம்.