PDA

View Full Version : தொந்தரவு



thirukanaga
16-10-2005, 04:39 PM
முன்னதைவிடப்பெரியதை தேடுபவர் பலருண்டு
முன்னதே பெரியதாய் கண்டவர் சிலருமுண்டு

கண்முன்னே கண்டதைச் சொன்னவர் பலருண்டு
காணாததைக் கண்டதாய் இயற்பவர் சிலருண்டு

வருமுன்னே தனைக்காத்து வாழ்ந்தவர் பலருண்டு
வந்ததைத் தாங்காமல் வீழ்ந்தவர் சிலருண்டு

இருப்பதே போதுமென்று இருப்பவர் பலருண்டு
இன்னும் தேடித்தேடி இருப்பிழந்தவர் சிலருண்டு

என்னையும் எழுதச்சொல்ல உங்களப்போல பலருண்டு
இவனுக்கு இது தேவையா எனநினைக்கவும் சிலருண்டு

பிரியன்
16-10-2005, 06:47 PM
சத்திய வார்த்தைகள் திருகங்கா....

தலைப்பை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் எழுதுவானேன். ( நான் அதை மாற்றி இருக்கிறேன் )

thirukanaga
16-10-2005, 06:50 PM
தலைப்பு இடத்தில் தமிழில் எழுத முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை

பிரியன்
16-10-2005, 06:52 PM
கீழே இருக்கும் யுனிகோடு மாற்றியை பயன்படுத்தி பாருங்களேன். ஏனென்றால் உங்கள் அனுமதி இல்லாமல் திருத்தம் செய்வது எனக்கு நெருடலாக இருக்கிறது.

பரஞ்சோதி
16-10-2005, 06:52 PM
ஹா! ஹா!

கடைசி வார்த்தைகள் சிரிப்பை உண்டாக்கியது, ரசித்து எழுதியிருக்கீங்க.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

thirukanaga
16-10-2005, 07:18 PM
நான் ஏதும் பிழையாக எழுதினால் அதை திருத்தம் செய்ய உங்களுக்கு உரிமையொண்டு அதில் எந்த நெருடலும் வேண்டாம்.

பிரியன்
16-10-2005, 07:21 PM
நன்றி திருகங்கா. கவிதைகளால் எங்களை மகிழ்விக்கும் நீங்கள் தங்களைப்பற்றி அறிமுகம் தந்தால் சிறப்பாக இருக்குமே

அறிஞர்
17-10-2005, 04:08 AM
வாழ்க்கையின் நடைமுறையை... அழகாய் வர்ணித்துள்ளீர் அன்பரே... இன்னும் தொடருங்கள்